Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil-and-mahindha-e1729321472612.webp?r

ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1404815

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்….
இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

சகல அதிகாரங்கள் கொண்ட அனுரா மாத்தையா ஏன் இதை உடனே செய்ய முடியவில்லை....சும்மா வாகனத்தை பறிமுதல் செய்வேன் கோவணத்தை பறிமுதல் செய்வேன் என அறிக்கை விடுயினம் ஆனால் நடவடிக்கை எடுக்கிற மாதிரி  தெரியவில்லை...

அடுத்த யூடியுப் தலையங்கம்...

முன்னாள் ஜனாதிபதிகள் 1000 கோவணம் பாவித்தன்ர் ....ஒரு ஜனாதிபதிக்கு 50 கோவணம் காணும்....முகுதி கோவணங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் எனும் உத்தரவுக்கு, மஹிந்த பயங்கரவாதத்தை முறியடித்தபடியால் அவருக்கு உயிர் ஆபத்து இருக்கென்றும் அதை மீளப்பெற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்ததாக செய்தி ஒன்று சொல்கிறது. எல்லா இடமும் போகிறார்கள், விழா எடுக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம் இனி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்கிறார்கள், உலகிலேயே சிறந்த இராணுவ, புலனாய்வு பிரிவு தம்மிடம் இருப்பதாக பீற்றிக்கொள்கிறார்கள், பிறகு பாதுகாப்பு வேண்டுமாம். இதெல்லாம் சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர முடியாத நிலை.

3 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் பணம் வீணடிக்கப்படும் விதம். பதின்மூன்று வாகனங்களில் எப்படி பயணம் செய்கிறார்கள்? அதற்கு எரிபொருள், சாரதி. ஒரு கார் காணாதா? சந்ததிக்கு வாகனம் சேர்க்கிறார்களோ? ரணிலுக்கு எதற்கு பதின்மூன்று?           

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு வங்குரோத்தாகியிருக்கும் நிலையில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய தலைவர்கள் எவ்வளவு ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த நாடு எப்படி உருப்படும்?

இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

சகல அதிகாரங்கள் கொண்ட அனுரா மாத்தையா ஏன் இதை உடனே செய்ய முடியவில்லை....சும்மா வாகனத்தை பறிமுதல் செய்வேன் கோவணத்தை பறிமுதல் செய்வேன் என அறிக்கை விடுயினம் ஆனால் நடவடிக்கை எடுக்கிற மாதிரி  தெரியவில்லை...

அடுத்த யூடியுப் தலையங்கம்...

முன்னாள் ஜனாதிபதிகள் 1000 கோவணம் பாவித்தன்ர் ....ஒரு ஜனாதிபதிக்கு 50 கோவணம் காணும்....முகுதி கோவணங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்..

இதனைப் படமாக்க ...தமிழ் யூடுயூப்பர்...வீணி வடிந்தபடி காத்திருக்கினம் ...புத்தரே...வெயிட்டிங் கால்...அந்த கோவணங்களை துக்கிக்காட்ட ..அல்லக்கை  ஒன்றும் கூடத்திரியும்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்….
இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣

எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.

மிகுதி பத்தும், வாடகைக்கு விட்டு உழைப்பதற்கு, பின்னாளில் அவர்களின்  வாழ்வாதாரத்திற்கு.

13 hours ago, alvayan said:

இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்..

ம்...... இந்த காவியள் அடிக்கடி சொல்லி பயமுறுத்துதுகள், கடந்தகாலத்தை மறந்து போச்சினம் தமிழர், ரத்த ஆறு ஓடும், நாடு பற்றி எரியுமென்று. தொண்ணூறொன்பது வீதந்தை  நாசமாக்கி போட்டுதுகள், இருக்கிற மிச்சத்தையும் வம்புக்கிழுத்து, போகலையென்றால் இழுத்துவந்து முடிச்சுப்போடுங்கள். சிங்களவரோடு இருப்பது அதிஸ்ரம் என்று அறிக்கை விட்டதுகள், சங்கமமானதுகள் எல்லாம் கொழும்போடு வாழப்போய் விடுங்கள், போவதென்ன? வாழுவதே அங்கேதான். வாக்கு சுற்றுலா மட்டும் வடகிழக்கில். அவர்கள் போட்ட பிச்சைதான் அவர்களது சுக வாழ்க்கை. அதை விடுங்க ......  பிறகு லங்கா சிங்கள பௌத்த நாடு கோசந்தான். யாரும் கேள்வி கேட்கமுடியாது. கொழும்புகாரருக்கும் வேறு நாதியில்லை ஏமாற்றி இருப்பை தக்க வைத்துக்கொள்ள. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..

யாழ்/கிளி மாவட்டத்திலிருந்து இம்முறை முஸ்லீம் பிரதிநிதி வந்தாலும் வரலாம் ...தமிழினம் அழிந்தாலும் முஸ்லீம் இனம் சிங்களவருக்கு ஆப்பு அடிக்க காத்திருக்கின்றது ...நாங்கள் கேட்டது வடக்கு கிழக்கு அவர்கள் கேட்பது சிறிலங்கா முழுவதும்

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் கோரிக்கையை மறுத்தார் அநுர

image_05ef045faa.jpg

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகள் கோரியதை தாம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என ஜனாதிபதி பொது பேரணியில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என மேலும் கூறினார்.

மேலும், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளர் காவு வண்டிகளை மீளப்பெற்றுக்கொண்ட திஸாநாயக்க, இந்த வசதிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

https://akkinikkunchu.com/?p=296063

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.