Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது.

ஆனால் 

1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். 

  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக

  • குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே  ஜனாதிபதி தெளிவுபடுத்தட்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு.  சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியைய

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது.

ஆனால் 

1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். 

நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில்  சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

எங்கட தமிழ் அரசியல்..?
சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன.
அது என்னவென்றால்,
''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன.
சிவன் அவர்களிடம் சென்னார்,
'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன.
அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம்,
'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் கதைப்பம்' என்றார்.
நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன.
'சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சாப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார்.
'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி  விட்டது' என்றன.
'இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை
தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன்.
(கதை முடிஞ்சிது)

அவர்கள்  சிவபக்தர்கள்   அவர்களுக்கு இறைச்சி கறியுடன் சோறு கொடுத்தால் எப்படி சாப்பிடுவார்கள்? அவ்ர்கள் விரும்பிய சாம்பாரும் சோறும் கொடுத்திருந்தால் டிசன்டா சாப்பிட்டு வந்திருப்பார்கள் ...

இது அந்த சிவனுக்கு நல்லாவே தெரியும்.. இருந்தும் சிவன் வேணுமென்றே இப்படி செய்துள்ளார்...விரும்பாத அசைவத்தை கொடுத்துள்ளார் ....அந்த நாய்கள் சிவனுக்கே பாடம் எடுத்துவிட்டு வந்துவிட்டன.😅😅

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில்  சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம்

கவனம் 

இவர்களின் நோக்கம் தமிழர்களை மேலும் மேலும் பிரித்து சிதைப்பது. 

இன்னொன்றையும் கவனித்தீர்களோ தெரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றும் அவர்களுக்கு துரோகி தான். யார் மன்னித்தாலும்......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில்  சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம்

அண்ணை,

இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும்.

கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர்.

கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான்.

அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

யாழிணையத்திலே ஏற்கனவே பல்வேறு திரிகளில் சும் வெளிநாட்டமைச்சர் பதவியை இலக்குவைத்து இன்னொரு கதிர்காமராவோ அல்லது நீலனகாவோ சிங்களத்துக்குத் தொண்டாற்ற ஆவலோடு திரிவதாக எழுதப்பட்டவையே. ஆனால், அனுராவைச் சந்தித்து அதைதான் ஆள் கேட்டிருக்குமோ. யாரறிவார்.

யாரெல்லாம் பதவியேறுகின்றனரோ அவர்களை வாழ்த்துவது என்கிற பெயரில் ஓடோடுவது  தாங்கள் சிங்களத்துக்கு செய்த சேவையினை, தம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகத்தினை எடுத்து வைத்து பதவி பெறுவதற்கே. அனுரவுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கவேண்டுமென்று. முதலில் ஓடிய சிங்கத்துக்கு நல்ல விடை கிடைக்கவில்லை. கட்சியை நொறுக்கினார், அதுவே அவரது திறமைக்கு நல்ல சிறப்பு சான்றிதழ், கடந்த அரசுகளில் இவர்கள் அடைந்த சலுகைகள் அடுத்த முக்கிய சிறப்பு, இவர்களுக்கு பதவியளித்தால் என்ன நடக்குமென்று கடந்த அரசுகளின் வங்குரோத்து நிலை தெளிவாக்கியுள்ளது. இவற்றை சந்திக்க சென்ற யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அடுத்து வடக்கின் வசந்தம், காத்திருந்து  காத்திருந்து காலங்கள் போகுதென்று ஓடிப்போய் விழுந்தார் காலில். விரட்டிவிட்டார், பாராளுமன்றம் வாங்கோ அங்கே வந்து காட்டுங்கள் உங்கள் திறமையை என்று. கோத்த பாய விரட்டப்பட்டபின் ஒரு குழப்பமான நிலையில், தான் பிரதம மந்திரி பதவியை ஏற்க தயார் என்றவர் ஒரு செயல்வீரன். சிங்களத்தை அவர் அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். தேர்தலில் தோற்றார் என்றால் அவரது வாழ்வே கேள்விக்குறியாகும். இவரை யார் சட்டத்தரணியாக நியமிப்பார்? அதுதான் அவரது பொய், பிரட்டல் எல்லாம் சர்வதேச தூதுவர்கள் அறிந்த விடயமாச்சே. திறமையிருந்தால் பதவி தானாக தேடி வரும், பதவியை தேடி அலைந்தால் அவமானப்பட நேரிடும்.    

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி

நீலன் துரோகி 

ரட்ன ஜீவன் கூல் துரோகி 

சம்பந்தன் துரோகி 

கருணாநிதி துரோகி 

ப சிதம்பரம் துரோகி 

இப்போது சுமந்திரனும் துரோகி 

ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி 

ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. 

இவர்களை துரோகிகள் என்ற வார்த்தையால் அழைத்தால் ....துரோகி என்ற சாதாரண வார்த்தை மிக கெட்டதாக பொருள் படும் .....இவர்களை நல்ல தமிழில் அழைத்தால் பாவம் உண்டாகும் ....உயிரோட எண்ணெயில் எரிக்க பட வேண்டியவர்கள் ......

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது.

ஆனால் 

1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். 

சுமத்திரன்.  இந்த தகவல்கள் அல்லது செய்தியை  பற்றி என்ன சொல்லி உள்ளார்   ??? [உண்மை அல்லது பொய் ]

On 25/10/2024 at 12:25, Kapithan said:

கம்மன்பில கூறுவது உண்மையான தகவல் என்றால் 

1) சமஸ்டி அரசமைப்புப் பணியும் 

2) UN  தீர்மானம் 30/1 நடைமுறைப் படுத்துதல் 

என இரண்டு முக்கிய விடயங்கள் நடைமுறைக்கு வருவது நன்மையான விடயங்களே.

கமன்பிலவை வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி சார்பாகப் பிரச்சாரத்திற்கு அழைக்கலாம்  🤣

ஒம்.  ஆனால் சுமத்திரன்.  உண்மையில் இப்படி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளாரா???  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகிடி said:

ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி

நீலன் துரோகி 

ரட்ன ஜீவன் கூல் துரோகி 

சம்பந்தன் துரோகி 

கருணாநிதி துரோகி 

ப சிதம்பரம் துரோகி 

இப்போது சுமந்திரனும் துரோகி 

ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி 

ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. 

இவர்கள் துரோகிகள் இல்லை 

தியாகிகள்.  என்று நீங்கள்   காரணங்கள்.  அவர்களின் சாதனைகளை  எடுத்து அடுக்கிக்கொண்டே போகலாம்”   நாங்கள் வாசிக்கிறோம். 

குறிப்பு,..ஒருவர் அல்லது பலர்   சொல்வதன் மூலம்  எவரையும் துரோகிகள் ஆகிவிட முடியாது     ஆக்கி விடவும் முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பகிடி said:

ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி

நீலன் துரோகி 

ரட்ன ஜீவன் கூல் துரோகி 

சம்பந்தன் துரோகி 

கருணாநிதி துரோகி 

ப சிதம்பரம் துரோகி 

இப்போது சுமந்திரனும் துரோகி 

ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி 

ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. 

இதில் கதிர்காமர் இலங்கை அரசின் அமைச்சர்.  அவரின் செயற்பாடு  இலங்கை அரசுக்கு சார்பாக தான் இருக்கும்.   அது இயல்பானதே. 

மற்றவர்களில் எவரும் துரோகிகள் இல்லை.  இதில் சிலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களைப் படுகொலை செய்த பயங்கரவாதத்தால் தமிழர் போராட்டம் பின்னடைவையே சந்தித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும்.

கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர்.

கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான்.

அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள். 

கதிர்காமர் குடும்பம் பிரித்தானியா ஆட்சி காலத்திலிருந்து அரச சார்பாக வேலை செய்பவர்கள்...இவரது ச்கோதரர்கள் மற்றும் உறவினர்கள் கடற்படையில் உயர் அதிகாரிகளாக கடைமை புரிந்துள்ளார்கள் .. அமைச்சர் என்ற வகையில் தனது கடமையை செய்தார் ..அதை பாராட்ட வேண்டும் இனமத பேத‌மின்றி நாட்டுக்காக செயல் பட்டார்...மகிந்தா,பிள்ளையான் போன்றவர்கலுடன் ஒப்பிடும் பொழுது கதிர் உச்சத்தில் இருக்கின்றார்...

நீங்கள் கூறுவது போல புலிக்காச்சல் பிடித்து இன்னும் மாறாமல் உச்சத்தில் இருப்பவர்களை விட கதிர்காமர் போன்ற நேரடி கடமை வீரர்கள் திறம்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இன்னொன்றையும் கவனித்தீர்களோ தெரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றும் அவர்களுக்கு துரோகி தான். யார் மன்னித்தாலும்......

கோபம் வராமல் இருக்குமா...சுரேஸ் பிரேமச்சத்திரன் தொடர்ந்து சிறிலங்கா தேசியம் பேசாமல்  த்மிழ்தேசியம் பேசிக்கொண்டிருந்தால்கோபம் வராமல் இருக்குமா

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2024 at 16:49, விசுகு said:

இன்னொன்றையும் கவனித்தீர்களோ தெரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றும் அவர்களுக்கு துரோகி தான். யார் மன்னித்தாலும்......

17 hours ago, putthan said:

கோபம் வராமல் இருக்குமா...சுரேஸ் பிரேமச்சத்திரன் தொடர்ந்து சிறிலங்கா தேசியம் பேசாமல்  த்மிழ்தேசியம் பேசிக்கொண்டிருந்தால்கோபம் வராமல் இருக்குமா

சுரேஷ் துரோகியென்று யாரும் எழுதினார்களா தெரியவில்லை. ஆனால், சுரேஷ் அப்பாவித் தமிழர்களைக் கொன்று வயிறு வளர்த்த ஒரு கொலைக்குழுத் தலைவர். இது வரை அவர் தன் கொலை பாதகங்களுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி" காரணம். ஏனையோருக்கு அவரை மன்னித்துப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அதீத பக்தியாகவும் இருக்கலாம் ... காலத்துக்கு காலம் மாற்றங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றது ... ...சாதாரண் தமிழ் மக்களை 70 வருடங்களாக இனவாத செயல்களை தூண்டி கொலை செய்யும் சிங்கள பேரினவாதிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட‌ சிலர்  இருக்கும் பொழுது ...ஏன் சுரேசை மட்டும் பிழை சொல்லவேண்டும் ..

எனக்கு இருக்கும் இறை பக்தி,தல வழிபாடு போன்று... உங்களுக்கும் வேறு இறையுடன் ,அல்லது  தல அல்லது கருத்து மையங்களில் சிக்குப்பட்டவராக  இருக்கலாம் அது தப்பே இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி"

2௦௦9 க்கு முதல் அந்த இறைவன் உங்களுக்கும் இறைவனாகத்தான் இருந்தார் வேணுமென்றால் உங்களின் பழைய கருத்துக்களை நீங்களே தேடி படித்து பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

சுரேஷ் துரோகியென்று யாரும் எழுதினார்களா தெரியவில்லை. ஆனால், சுரேஷ் அப்பாவித் தமிழர்களைக் கொன்று வயிறு வளர்த்த ஒரு கொலைக்குழுத் தலைவர். இது வரை அவர் தன் கொலை பாதகங்களுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி" காரணம். ஏனையோருக்கு அவரை மன்னித்துப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை!

அவரை நல்லம் என்று சொல்லி மன்னிப்பு வழங்கவில்லையே .... தேவை கருதி அவரை கூட்டமைப்பில் இணைத்ததே வரலாறு . உங்கள் கருத்தினை பார்த்தால் பக்க சார்பாக சொல்வதாக தெரிகிறது ....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

2௦௦9 க்கு முதல் அந்த இறைவன் உங்களுக்கும் இறைவனாகத்தான் இருந்தார் வேணுமென்றால் உங்களின் பழைய கருத்துக்களை நீங்களே தேடி படித்து பாருங்க .

சிறு திருத்தம்: 2009 வரை அல்ல, 2012 வரை. உங்களைப் போல பிறக்கும் போது "தப்பா எழுதினாத் தானே அழிறப்பர் தேவை?"😎 என்றி அழி றப்பரை நான் தூக்கியெறிந்து விடாததால், "எவரும் பக்திக்குரியவர்கள் அல்ல" என்று உணர்ந்து கொண்டேன்.

3 hours ago, தமிழன்பன் said:

அவரை நல்லம் என்று சொல்லி மன்னிப்பு வழங்கவில்லையே .... தேவை கருதி அவரை கூட்டமைப்பில் இணைத்ததே வரலாறு . உங்கள் கருத்தினை பார்த்தால் பக்க சார்பாக சொல்வதாக தெரிகிறது ....

இதை "அவர் மன்னிக்கப் பட்டார்" என்று எழுதி வரும் தேசியத் தூண்களிடம் அல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்😂? என்னிடம் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

சிறு திருத்தம்: 2009 வரை அல்ல, 2012 வரை. உங்களைப் போல பிறக்கும் போது "தப்பா எழுதினாத் தானே அழிறப்பர் தேவை?"😎

இல்லை இயக்கம் அழிந்த பின் சிலர் இயக்க காசுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உடனேயே தமிழ் தேசியத்துக்கு எதிராக மாறினார்கள் சிலர் ஊர் போய் உண்மையிலே இயக்கம் அழிந்து போனதை உறுதி படுத்திய பின் ஆறுதலாக இயக்கம் தமிழ் தேசியத்துக்கு எதிராக மாறினார்கள் இப்ப எனக்கு புரியுது நீங்க எந்த வகைஎன்று .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2024 at 14:19, Justin said:

சுரேஷ் துரோகியென்று யாரும் எழுதினார்களா தெரியவில்லை. ஆனால், சுரேஷ் அப்பாவித் தமிழர்களைக் கொன்று வயிறு வளர்த்த ஒரு கொலைக்குழுத் தலைவர். இது வரை அவர் தன் கொலை பாதகங்களுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி" காரணம். ஏனையோருக்கு அவரை மன்னித்துப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை!

. சுற்றி வளைத்து கடவுள் மறுப்பு வரை கிளறி பதில் சொல்ல வேண்டிய எந்த தேவையுமற்ற  ரொம்ப ரொம்ப சுலபமான கேள்வி. சூழ்நிலை கருதி மறந்து மன்னித்து இனத்தையே காவு கொண்ட பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியும் என்றால்  என்றுமே தீர்வுகளை குழப்பி அடித்த.ஜேவிபிக்கு வாக்களிக்க முடியும் என்றால் ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வாக்களிக்க கூடாது?? அவர் தமிழர் அல்லது தமிழ்த் தேசியம் பேசுகிறார் என்பதாலா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிங்களவன் அப்பாவித் தமிழரைக் கொல்வதற்கும், தமிழ் தேசிய மூலாம் இப்போது பூசிக் கொண்டிருக்கும் மண்டையன் குழுவும், சித்தார்த்தனின் ப்ளொட்டும் அப்பாவித் தமிழரைக் கொல்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் கடவுள் பக்தி தான் உங்கள் கண்ணை மறைக்கிறதா? இதெல்லாம் உங்களிடம் இருந்து வராவிட்டால் தான் அது செய்தி😂

பல ஆண்டுகள் முன்பு பரிஸ் கூட்டத்தில் புகைக் குண்டெறிந்த லாசப்பல் றௌடிகள் முதல், மண்டையன் குழுத்தலைவர் வரை "தமிழ் தேசிய விக்கிரகத்தை" தலையில் சுமந்தால் நீங்கள் "கூல்". ஆனால் ஒரு கல்லைக் கூட யாருக்கும் எறியாத தமிழ் அரசியல்வாதிகள், விக்கிரகத்தைக் காவ மறுத்தால் உடனே அவர்கள் இந்த றௌடிகளை விடக் கீழானோர் என்பீர்கள்!

தாயக வாக்காளர்களிடம் இன்னும் இரு வாரங்களில் கிடைக்கும் வாக்குச் செருப்படி கூட உங்களை மாற்றாது என நினைக்கிறேன்😂

3 hours ago, பெருமாள் said:

இல்லை இயக்கம் அழிந்த பின் சிலர் இயக்க காசுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உடனேயே தமிழ் தேசியத்துக்கு எதிராக மாறினார்கள் சிலர் ஊர் போய் உண்மையிலே இயக்கம் அழிந்து போனதை உறுதி படுத்திய பின் ஆறுதலாக இயக்கம் தமிழ் தேசியத்துக்கு எதிராக மாறினார்கள் இப்ப எனக்கு புரியுது நீங்க எந்த வகைஎன்று .

 "தலைவர் வந்தால் காசைக் கொடுக்கிறேன், அது வரை சோக்குக் காட்டுகிறேன்" என்ற மூன்றாவது கிளாசா Sir நீங்க😎?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

சிங்களவன் அப்பாவித் தமிழரைக் கொல்வதற்கும், தமிழ் தேசிய மூலாம் இப்போது பூசிக் கொண்டிருக்கும் மண்டையன் குழுவும், சித்தார்த்தனின் ப்ளொட்டும் அப்பாவித் தமிழரைக் கொல்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் கடவுள் பக்தி தான் உங்கள் கண்ணை மறைக்கிறதா? இதெல்லாம் உங்களிடம் இருந்து வராவிட்டால் தான் அது செய்தி😂

பல ஆண்டுகள் முன்பு பரிஸ் கூட்டத்தில் புகைக் குண்டெறிந்த லாசப்பல் றௌடிகள் முதல், மண்டையன் குழுத்தலைவர் வரை "தமிழ் தேசிய விக்கிரகத்தை" தலையில் சுமந்தால் நீங்கள் "கூல்". ஆனால் ஒரு கல்லைக் கூட யாருக்கும் எறியாத தமிழ் அரசியல்வாதிகள், விக்கிரகத்தைக் காவ மறுத்தால் உடனே அவர்கள் இந்த றௌடிகளை விடக் கீழானோர் என்பீர்கள்!

தாயக வாக்காளர்களிடம் இன்னும் இரு வாரங்களில் கிடைக்கும் வாக்குச் செருப்படி கூட உங்களை மாற்றாது என நினைக்கிறேன்😂

நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் தாங்கள். அவனையும் உங்களையும் சேர்ந்தால் மட்டுமே இலக்கு என்று நான் கடந்து வந்தாச்சு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் தாங்கள். அவனையும் உங்களையும் சேர்ந்தால் மட்டுமே இலக்கு என்று நான் கடந்து வந்தாச்சு.

இங்கே யாரும் நீங்கள் 20 வருடங்கள் முன்பு இருந்தது போல இல்லை. மேலும், இந்த தீவிர தேசிக்காய் குழுவில் நான் மட்டுமல்ல, மௌனமாக இருக்கும் தாயக மக்கள் கூட சேரப் போவதில்லை. எனவே, முட்டாள் தனமான ஆட்டு மந்தைக்கூட்ட ஒற்றுமையென்பது தமிழர்களிடையே வராதென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இங்கே யாரும் நீங்கள் 20 வருடங்கள் முன்பு இருந்தது போல இல்லை. மேலும், இந்த தீவிர தேசிக்காய் குழுவில் நான் மட்டுமல்ல, மௌனமாக இருக்கும் தாயக மக்கள் கூட சேரப் போவதில்லை. எனவே, முட்டாள் தனமான ஆட்டு மந்தைக்கூட்ட ஒற்றுமையென்பது தமிழர்களிடையே வராதென நம்புகிறேன்.

இது தான் முட்டாள் தனம். அதிலும் படித்த முட்டாள்தனம்.. எவ்வளவு மரியாதை கொடுத்து எழுதினாலும் உங்களால் இந்த முட்டாள்தன எழுத்தில் இருந்து மீளமுடியாது. டொட்..

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இது தான் முட்டாள் தனம். அதிலும் படித்த முட்டாள்தனம்.. எவ்வளவு மரியாதை கொடுத்து எழுதினாலும் உங்களால் இந்த முட்டாள்தன எழுத்தில் இருந்து மீளமுடியாது. டொட்..

முட்டாள் தனம் என்பது ஒரே காரியத்தை  மீள மீள செய்த படியே வெவ்வேறான விளைவுகள் வரும் என்று எதிர்பார்ப்பது! மிதவாதத்தை அனுமதிக்காமல், முன்னாள் ஆயுததாரிகளை "ஒற்றுமை" என்ற பெயரில் முன்னிறுத்துவது மேலும் மேலும் தாயக மக்களை அவமானம் செய்யும் செயல். அதிர்ஷட வசமாக, தாயக மக்கள் இந்த புலத்தில் இருந்து இயக்கப் படும் முட்டாள் தனத்தை நிராகரித்திருக்கின்றனர், இனியும் அதுவே நடக்கும்!

 (உங்களுக்கு முன்னால் என் கருத்தை மட்டும் தான் வைக்கிறேன், ஆனால் என் சான்றிதழ் நான் முன்னிறுத்தாமலே உங்கள் கண்ணுக்குள் குத்தினால் அது என் தவறல்ல😂)

இப்போது, டொட்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வாக்களிக்க கூடாது??

முரளிதரனும் பிள்ளையானும் இதற்குள் அடங்குமா  அல்லது பிரேமச்சந்திரன் + சித்தார்த்தன்+அடைக்கலநாதன் மட்டுமா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.