Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]


"நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் 
நவீன உலகில் புத்தன் அழுகிறான் 
நலிந்த மக்கள் விடிவை நோக்கினம்   
நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!"


"வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது 
வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது   
வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது 
வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" 


"அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் 
அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் 
[அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] 
அன்பு கொண்ட உலகம் கண்டேன்  
அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!"


"அயராது உழைக்கும் தந்தை உடன் 
அனைவரையும் அணைக்கும் தாய் உடன்
அண்ணன் அக்கா துணை உடன் 
அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!"


"விளையாட ஒரு துணை வந்தது 
விழுந்தால் கைகொடுக்க கை வந்தது 
விவேகம் படைத்த தம்பி பிறந்தான் 
விழிப்பு அடைந்து பொய்களை எறிந்தேன்!"


"யாழ்மத்திய கல்லூரி என்னை வரவேற்றது 
யானை முகத்தானின் உண்மை அறிந்தேன் 
யாகத்தீயில் சமயம்சாதி போட்டு எரித்தேன் 
யார் என்பதின் விளக்கம் அறிந்தேன்!"


"அறிவிற்கு பத்தொன்பதில் பேராதனை சென்றேன் 
அயராது படித்து பொறியியல் கற்றேன்
அறுபது ஆயிரம் கனவு கண்டேன் 
அடையாளம் மறுக்கும் அரசை வெறுத்தேன்!"


"ஆக்கம் கொண்ட சமூகம் வேண்டும் 
ஆசை அடக்கம் இரண்டும் வேண்டும் 
ஆதிரனாக என்றும் வாழ வேண்டும் 
ஆராய்ந்து எடுக்கும் திறன் வேண்டும்!"


"இறுமாப்பு என்னுடன் பிறந்த ஒன்று 
இதயங்கள் என்றும் உண்மை ஒளி 
இகழ்ச்சி புகழ்ச்சி கடந்து வாழபவன்
இன்பம் துன்பம் சமமாக மதிப்பவன்!"


"ஈரம் இல்லா உலகமும் பார்த்தேன்   
ஈவிரக்கம் அற்ற அரசையும் கண்டேன்   
ஈன்றவளும் இல்லை இணைந்தவளும் இல்லை 
ஈசனைக் கேள்விகேட்க நெஞ்சம் துடிக்குதே!"


"உலகத்தை கட்ட பொறியியல் படித்தேன்
உண்மையைக் காண பகுத்தறிவு கொண்டேன் 
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உணர்ந்து நடந்தால் மனிதம் வாழுமே!"


"ஊரை விட்டு ஊரு போனேன் 
ஊசி முனையில் உயிரைப் பிடித்தேன் 
ஊதிக் கெடுக்கும் கொடியவர் முன்னே 
ஊமையாய் இருந்து கடந்து சென்றேன்!"


"எறும்புகள் போல் சுமை தாங்கினேன்
எண்ணங்கள் வளர்த்து அறிவைக் கூட்டினேன்
எச்சில் இலை நக்குவான் அல்ல 
எரிவனம் கண்டு அஞ்சுபவனும் அல்ல!"


"ஏற்றம் இறக்கம் என்னை வாட்டவில்லை,
ஏழை பணக்காரன் என்னிடம் இல்லை
ஏசி எவரையும் திட்டுவதும் இல்லை 
ஏமாற்று பேர்வழியை நம்புவதும் இல்லை!"


"ஐயம் அற்ற வாலிப பருவத்தில் 
ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தேன்
ஐதிகம் மதம் சடங்குகள் அறியேன் 
ஐயன் என்னை வாழ விடுங்கள்!"


"ஒருவராய் இருவராய் பலராய் திரிந்தேன்
ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தேன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒதுங்கிப் போனால் இருப்பதும் போகும்!"


"ஓடும் உலகில் நானும் ஓடினேன்  
ஓதி எவரையும் கெடுக்க மாட்டேன்
ஓசைநயம் கொண்ட வாழ்க்கை வாழு   
ஓரமாய் பதுங்கும் வாழ்வைத் துற!"


"ஒளவையார் உரைத்த அறிவுரை ஆகினும் 
ஒளதடமாய் ஏற்றத்தை மட்டும் எடுப்பேன்
ஔவியம் என்னும் அழுக்காறு இல்லை  
ஔரப்பிரகம் என்னும் ஆட்டுமந்தை நானல்ல!"


"எளிமை வாழ்வு தூய்மை தர 
எதிலும் பற்றற்ற தனிமை வர 
எனக்குள் நானே எதையும் அலச 
என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!”


"பச்சிளம் குழந்தையாய் தவழ்ந்து வளர      
பருவ வாலிபனாய் முரடாய் நடக்க 
படிப்பு கொஞ்சம் திமிராய் மாற   
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!”  


"நானாய் வாழ அமைதி தேடினேன் 
நாலும் தெரியாதவன் என்று திட்டினர்  
நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் 
நாயாய் அலைகிறான் என்று கூறினர்!”


"உறங்கி கிடைக்கா நெஞ்சு ஒருபக்கம் 
உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம்
உருவம் மாற்றும் வயது ஒருபக்கம்
உறவை நினைக்கும் மனது ஒருபக்கம்!”


"என்னை நினைக்க சிரிப்பு வருகுது
என்னவளை நினைக்க அழுகை வருகுது
எழுதுகோல் எடுத்து ஆத்திரம் தீர்க்கிறேன் 
எழுச்சி கொண்ட தேசம் தேடுகிறேன்!"


"பேச்சு மூச்சு நிற்க முன்பு 
பேயென என்னை விரட்ட முன்பு 
பேரப் பிள்ளைகள் சூழ்ந்து நிற்க  
பேரானந்தம் தரும் மரணம் தழுவட்டும்!”


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be an image of 1 person and flower 464975216_10226838990903602_3165215408379171361_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=0n39qBeQrXwQ7kNvgGEuFos&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AhmAb19WgfO5Riy_l1o06b8&oh=00_AYCbVZ0MxpGMrRHsoehuH8Wk4qW-Dl2Ju1ibyX4m9IGOoA&oe=6729ED26

  • கருத்துக்கள உறவுகள்

உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தில்லை. 💐
வாழ்க வளமுடன். 🙏
சுய சரிதை போல் எழுதிய கவிதை மிக அழகு. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா, வளத்துடன் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை மூலம் உங்கள் சிறு வயதில் தொடங்கி நிகழ்காலம் வரை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

இன்னும் பல ஆண்டுகள் சுகமாகவும் வளமாகவும் வாழ்ந்து பூட்டப் பிள்ளைகளுடனும் நீங்க விளையாட வேண்டி வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை.

நீங்கள் யாழுக்கு கிடைத்த பொக்கிசம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-7414.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா.✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.