Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர்.  ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியை பிடித்துள்ளது. 

அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால் தான் 69 இலட்ச மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக இருந்தவரை நாட்டை விட்டு துரத்தினர் 

அப்படி செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல்ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியின் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை  இழந்துள்ளோம்.

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை.

தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை  துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர். இதொரு குத்துக்கரணம். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும்  பாதிக்கப்பட்டனர். 

அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர். 

இவ்வாறாக மக்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது. 

ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும்  அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. 

என்பது தெளிவாக தெரியும். அதாவது  சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர். 

சமஸ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன் கொண்டு செல்ல நாடாளுமன்றுக்கு மிக பெரும் பலத்துடன் செல்ல வேண்டும். 

சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர் 

எனவே நாம் முன் வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். 

எனவே அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/197603

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை

large.IMG_7408.jpeg.e1be71608f3e3bc34434

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். 

 

2 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை  இழந்துள்ளோம்.

ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று அலம்பித்திரிந்தவர், இப்ப எப்படிப்பேசுகிறார் பாருங்கள்! அது சரி.... வெள்ளை வேட்டி சட்டையோடு வலம்வந்தவர், திடீரென்று ஜே .வி. நிறத்தில் திரியுறார், அதுவும் பேட்டிகளில். ம் .....மக்களிடம் ஒன்று, சிங்கள தலைவர்களோடு வேறொன்று பேசுகிறமாதிரி இப்போ, இரண்டையும் கலந்து நடமாடுகிறார், பேசுறார். ஆனால் அனுரா இதற்கெல்லாம் எடுபடப்போவதில்லை. தனது நம்பிக்கைக்குரியவராக ஆளுநரை தெரிவு செய்துள்ளார். அவர் வழியாகவே தமிழரின் பிரச்சனைகளை அணுகுவார்.

2 hours ago, ஏராளன் said:

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வடக்கின் வசந்தம் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் ஒன்று சொல்வார், அதாவது தான்தான் தீர்க்கதரிசனமாக பதின்மூன்றாம் அரசியல் சட்டத்தை அன்று முதல்  ஏற்றுக்கொண்டவர் என்றும் அதை அன்று எதிர்த்தவர்கள் இன்று அதை நிறைவேற்றும்படி கேட்கிறார்கள் என்றும் அடிக்கடி புகழுவார். அவரது தீர்க்கதரிசனம் இன்று வரை நிறைவேறவில்லை, இவரால் நிறைவேற்றுவிக்கவும் முடியவில்லை.  அதை அவர் தனது தீர்க்கதரிசனம் என்று சொல்லித்திரிகிறார். அவர்கள் என்றுமே எதையும் நிறைவேற்றப்போவதில்லை. சும்மா தங்களை பிரபல்யப்படுத்துவது. அன்று சமஷ்டி தீர்வை அளிக்க மஹிந்த முன்வந்தாராம், ஆனால் புலிகள் அதை ஏற்க மறுத்து விட்டனராம் என்று வேறு விளக்கம். அப்படி கொடுப்பவர்கள் போர் முடிவுக்கு வந்தவுடன் தாம் சொன்னதை நிறைவேற்றியிருக்கலாமே, புலிகளை அழித்த பின்னர் தமிழருக்கான தீர்வை வழங்குவேன் என்று சர்வதேசத்துக்கு வாக்களித்தார்களே அதற்கு என்ன நடந்தது? அவர்களே பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம், இனிமேல் , தமிழருக்கு தீர்வு என்று ஒன்றுமில்லை, அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், உரிமை எல்லாம் கோரமுடியாது சொன்னவர்கள், இன்று தம்மை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில இவர்கள் வேற உரிமை கோரிக்கொண்டு, நான் சொன்னேன், நீ சொன்னாய் என்று.   நாங்கள் கடந்த தேர்தலில்  இதை நிறைவேற்றுவதாக வாக்களித்தோம் அதை நிறைவேற்றியிருக்கிறோம், இனிமேல் என்ன சாதிக்கப்போகிறோம் என்று ஏதாவது சொல்கிறார்களா? திட்டம் ஏதும் இருக்கிறதா? ஒருவரை ஒருவர் சாடுவதற்கும், சேறடிப்பதற்கும், வீம்பு பேசுவதற்கும் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.      

  • கருத்துக்கள உறவுகள்

wtf-is.gif

நாக்கும், வாக்கும் சுத்தம் இல்லாத...
ஏமாற்று  கலப்பட வியாபாரி தான், சுத்துமாத்து சுமந்திரன். 😎

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி வயாவிளான் வீதியை யார் மீண்டும் திறந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

அச்சுவேலி வயாவிளான் வீதியை யார் மீண்டும் திறந்தது?

திறந்து வைச்சு ஆதாரமாக படமும் புடுச்சு போட்டிருக்கு

IMG-2822.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

திறந்து வைச்சு ஆதாரமாக படமும் புடுச்சு போட்டிருக்கு

IMG-2822.jpg

இது, நல்லூர் கோவிக்குப் போகின்ற ஒரு  வீதி மாதிரி உள்ளது. 😅
சுமந்திரனின் புலுடாக்கள் பல. அதில் இதுவும் ஒன்று. 😂
கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப் பிளேன் ஓட்டுமாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

மஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது

சமஸ்டி என்ன ஒரு சட்டி பானைகூட உங்களால் வாங்கி தர முடியாது,

தேர்தலில் தமிழ்கட்சிகள் படுதோல்வி அடைந்தால் கண்டிப்பா அநுர உங்களது சொத்து விபரங்களையும் கிண்டுவான்,  இப்போ பேசினா ஒருவேளை தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்களோ எண்ட பயத்துல விட்டு பிடிக்கிறான்.

இப்பவே முற்றவெளியில் சுண்டல் விக்க பழகுங்க தேர்தலுக்கப்புறம் பொழுது போகும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

வயாவிளானில் சுமந்திரன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிகால பிரதமரை இப்படிச் சொன்னதிற்கு எனதி கண்டனங்கள்...வசாவிளான்வீதியின் வள்ளல்.. மயிலிட்டி விகாரையை தூக்கி ரெயினில் அனுப்பும் செம்மல் சுமந்து நீ வாழ்க..🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

எதிகால பிரதமரை இப்படிச் சொன்னதிற்கு எனதி கண்டனங்கள்...வசாவிளான்வீதியின் வள்ளல்.. மயிலிட்டி விகாரையை தூக்கி ரெயினில் அனுப்பும் செம்மல் சுமந்து நீ வாழ்க..🤣

 

12 minutes ago, alvayan said:

எதிகால பிரதமரை இப்படிச் சொன்னதிற்கு எனதி கண்டனங்கள்...வசாவிளான்வீதியின் வள்ளல்.. மயிலிட்டி விகாரையை தூக்கி ரெயினில் அனுப்பும் செம்மல் சுமந்து நீ வாழ்க..🤣

நல்ல புலம்பெயர் ஏ.கே.டி தேசிய கூட்டமைப்பின் வருங்கால செய்ல் வீரனே வாழ்க‌😅

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

 

நல்ல புலம்பெயர் ஏ.கே.டி தேசிய கூட்டமைப்பின் வருங்கால செய்ல் வீரனே வாழ்க‌😅

வெயிட்டிங் சார்.... ஐ. நா..தூதுவராக...போக.😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.