Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள சுதந்திர கருத்தாளர் சங்கம்.........

Featured Replies

அன்புடையீர்,

யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது.

நோக்கம்

1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோரு கருத்தாளரின் கருத்துகளுக்கும் வாசகர்களே நீதிபதிகள் என்ற கோட்பாடே பொருத்தமானது.

2) அரசியல், தமிழ் தேசியம், இந்துவம், திராவிடம், மனிதாபிமானம் என்ற தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டுள்ள கருப்பொருட்களில் தன்னிச்சையான முடிவுகளை மட்டுறுத்துனர் எனும் தனிமனிதர்கள் மேற்கொள்ளுவது பொருத்தமானதல்ல.

3) கட்டுப்பாடுகள் அச்சுறுத்தல்கள் என்பன ஏற்கனவே உள்ள கருத்தாளர்களையும், புதியவர்களையும் கருத்துப்பகிர ஊக்குவிக்காது.

மேற்குறித்த கருத்துகளுக்கு அமைவாக நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.

செயற்பாடு

இதன் மூலம் யாராவது ஒரு தனிநபர் பாதிக்கப்படும்போது,

1) அவருக்கு கொள்கை ரீதியாக ஆதரவை தெரிவித்து அவர் மனவலிமைக்கு துணைநிற்பது.

2) குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடுவது.

3) பாதிக்கப்படுபவருக்கு ஆலோசனை மற்றும் முடியுமான உதவிகள் வழங்குவது.

போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உறுப்பினர்கள்

1) குறைந்தது 50 கருத்துக்களை பதிந்திருக்க வேண்டும்(இந்த செயற்பாடு கள்ள ஜடிகளிள் உருவாக்கி கொண்டு வந்து சில கருத்துகளை சொல்ல அது மேலும் பிரச்சினையை வளர்க்கும் என்ற காரணதிற்காகவே :lol: )

2) அமைப்பின் மேற்கண்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3) பக்கச்சார்பின்றி நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.

4) பொறுப்புக்கள் ஒவ்வோரு மாதமும் சுழற்சி முறையில் தீர்மாணிக்கப்படும்.

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம்.

  • Replies 57
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல யோசனை போல் தான் உள்ளது. இதை நிர்வாகம் அனுமதிக்குமா???

நாங்களும் உந்த சங்கத்தில இணையலாமா??? இணைய என்ன செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டீர்கள் என்றால் களத்தை கொண்டு நடத்தவது என்பது மிக மிக கடினமான விடயம் சில சமயஙகளில் நிர்வாகத்தின் தலையீடுகள் தவிக்க முடியாதது ஆகி விடுகின்றன...ஆனால் எங்கள் கருத்தை நிர்வாகத்திடம் சொல்வதற்காக எமது சார்பில் சிலரை நியமிப்பது என்பதனை ஏற்று கொள்கின்றேன்..பட் முடிவு நிர்வாகம் எடுப்பதற்கு முழு உரிமையும் அவைக்கு இருக்குசோ யாழ்இனைய நிர்வாகிகளே முடியு உங்கள் கையில்...நீங்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்று கொள்கின்றேன்...இன்னிசை பாட்டி நீங்க்ள இனையலாம் பட் members fee செலுத்தனும்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்

இன்னிசை தங்கா இணைவதிற்கு ஒன்றும் செய்ய தேவையில்லை நாங்கள் கூறிய காரணங்கள் பிடித்திருந்தா சேரலாம் இந்த சங்கத்தில். :lol: ...........நிர்வாகம் ஏன் அனுமதிக்காது இது சுமூகமான முடிவுகளை எடுக்க உருவாக்கபட்ட சங்கம் தானே இதனால் பல பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதுடன் யாழை வெற்றி பாதையில் கொண்டு செல்லவும் உதவும்..... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சுண்டல் அண்ணா உங்கள் கருத்து தான் என்னுடைய கருத்தும் இதனை கொண்டு நடத்துவது சிரமமான காரியமாகவே இருக்கிறது அதற்கு நிர்வாகதிற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம் :lol: ........இந்த சங்கம் நிர்வாகத்தை எதிர்க்க உருவாக்கபட்ட சங்கம் என்பது இல்லை என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன் யாழிணையதளம் 10 அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் பல வெற்றி செயற்பாடுகளை இதன் மூலம் கொண்டு செல்வதோடு கள உறவுகள் கொண்டு இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறப்பதோடு நிர்வாகதிற்கும் உறுப்பினர்களிடையும் சுமூகமான நிலையை கொண்டுவர உருவாக்கபட்டது :D ......சுண்டல் அண்ணா மெம்பர்சிப் பீஸ் எல்லாம் வேண்டாம்!! :lol:

தற்போது இந்த சங்கத்தில் உள்ள உறவுகள்!!

சாணக்கியன் அண்ணா

தயா அண்ணா

யாழ்கவி ஆண்டி

இன்னிசை தங்கா

சுண்டல் அண்ணா

ஜம்மு பேபி

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்னிசை தங்கா ஆக்கியாச்சா?

இன்னிசைக்கு வர வர வயது குறைஞ்சிட்டு போதே...

எனிவே

கள நிர்வாகிகள் முதலில் கருத்த சொல்லட்டும்...

அவர்க்ள அணுமதியுடன் எதுவும் நடப்பது நல்லது..

  • தொடங்கியவர்

ஆமாம் இன்னிசை தங்கா தானே எப்பவும் இது தெரியாதோ :lol: .....ம்ம்ம் கள நிர்வாகிகள் இதற்கு ஒரு பதிலை கட்டாயம் சொல்ல வேண்டும் சொல்லுவார்களா அல்லது இதற்கு மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு என்ற மாதிரி அமைதியா பார்போம்..... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜெனரல் வணக்கம்..

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆனால்..

எனக்கு இந்த சுதந்திர கருத்தாளர் சங்கத்துடன் உடன்பாடு இல்லை, மற்றும் ஆதரவும் தரப்போவதில்லை.

இங்கு யாழ் கள குடும்பம் என்று கூறுகின்றீர்கள். ஆனால், யாதார்த்தத்தில் எத்தனை பேர் இதனை குடும்பமாக நினைக்கின்றார்கள், குடும்பம் போல் செயற்படுகின்றார்கள் என்று பார்த்தால் அது நகைப்பிற்கு இடமானது. உண்மையில் ஒரிஜினல் குடும்பங்களே அண்ணையை தம்பி ஏமாற்றுவதும், அக்காவை அண்ணா ஏமாற்றுவதும்... சொத்துக்களுக்காக பிடிபடுவதும் என இவ்வாறு குழப்பகரமானது. சும்மா ஒரு பொழுதுபோக்கு, மற்றும் கருத்தாடல் இணையமான யாழ் களத்தில் இப்படி குடும்பம் சொந்தங்கள் என்று கூறுவதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட மனச்சாட்சிகளுக்குத்தான் தெரியும்.

யாரோ இந்த இணையத்தை ஆரம்பித்தார்கள், நடத்துகின்றார்கள். நாமும் தற்செயலாக இங்கு வந்து இணைந்து கொண்டோம்.

இங்கு நடப்பவை பிடிக்காவிட்டால் இதை நடத்துபவர்களிற்கு உங்கள் ஆலோசனைகளை சொல்லலாம். அவர்கள் கேட்காவிட்டால் இதில் இருந்து விலகிக்கொள்ளலாம். அல்லது நீங்கள் ஒரு இணையத்தை ஆரம்பிக்கலாம். இப்போது கருத்தாடல் தளம் ஒன்றை ஆரம்பிப்பது மிகவும் இலகுவானது. சில நூறு டொலர்கள் இருந்தாலே போதும்.

போறபோக்கை பார்த்தால் இது யாழ் இணணயம் மக்களின் சொத்து, எனவே இதை யாராவது அரசியல் கட்சிகள் அல்லது இயக்கம் பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என்று விரைவில் கூறுவீங்கள் போல இருக்கு.

யாழ் களத்தில் நான் பல உள்ளங்களை கண்டுகொண்டுள்ளேன், பல நல்ல உறவுகளை பெற்றுள்ளேன். அதற்காக இங்கு வருபவர்கள் கருத்து எழுதுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றோ அல்லது உறவு பாராட்டக்கூடியவர்களோ என்றோ அர்த்தம் அல்ல. ஒரு சின்னப் பிரச்சனை வந்தாலும், எப்போது என்னமாதிரி இங்கு இருப்பவர்கள் ரியக் ஷன் செய்வார்கள் என்று தெரியாது. மற்றும் பலர் முகமூடிகள்.

கண்டதுக்கெல்லாம் நிருவாகத்தை திட்டுவதும், நிருவாகத்திற்கெதிராக தலைப்புக்கள் ஆரம்பிப்பதும் சிறுபிள்ளைத்தனமானது. எனது கருத்துக்கள் பலவும் முன்பு வெட்டப்பட்டுள்ளன. ஆனால், நான் அவற்றை பெரிதுபடுத்துவதில்லை. எதிர்காலத்தில் பிடிக்காவிட்டால் விலகிவிடுவேன். அதற்காக நிருவாகத்துடன் மல்லுக்கட்டுவதில் பிரயோசனம் இல்லை.

முதலில் மட்டறுத்துனர்களிற்கு என்ன தகமை உள்ளது, என்னை விட அவர்களிற்கு என்ன அதிகப்படியாக தெரியும்.. இப்படி எல்லாம் பார்த்தால் நாம் கருத்தாடலே செய்யமுடியாது.

நீங்கள் விசயங்களை பெரிதுபடுத்துகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். சிம்பிளாக எடுத்தால் எல்லாம் சுமுகமாக முடியும்.

அண்மையில் ஒருவர் நான் எழுதிய ஆக்கங்கள் எல்லாவற்றுக்கும் சென்று அதன் கீழ் பதில் கருத்தாக நான் ஒரு சைகோ என்றும், எனது ஆக்கங்கள் மட்டறுத்துனர்களின் பார்வையின் பின்பே பிரசுரிக்கப்படவேண்டும் என்றும், என்னைப் போன்ற சைக்கோக்கள் இருப்பதால் தான் இனி யாழுக்கு வரப்போவதில்லை என்றும் கருத்து எழுதி ஒட்டி இருந்தார்.

இப்படி, கண்டவர்கள், போபவர்கள், வருபவர்கள் எல்லாம் நையாண்டி செய்யும்போதும், மற்றவர்களின் மனதை திட்டமிட்ட வகையில் புண்படுத்தும்போதும், இவர்களை எல்லாம் கள உறவுகள் என்று கட்டிபிடித்துக்கொண்டு இதற்கு என்று ஒரு சங்கம் வேறு அமைப்பது சிரிப்பிற்கு இடமானது.

நீங்கள் யாரோ சிலர் பாதிக்கப்படுகின்றார்கள் என்று இப்படி சுதந்திர கருத்தாளர் சங்கம் என்று கூக்குரல் இடுகின்றீர்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களையே இங்குள்ள எத்தனைபேர் ஒரு உதவாக்கறை, அரட்டைப்பெட்டி, கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே கருத்தாடல் செய்கின்றீர்கள், போற, வாற இடம் எல்லாம் மலசலம் கழிக்கின்றீர்கள் என்றெல்லாம் கிண்டல் அடித்து உள்ளார்கள்? நாளைக்கு கூட உங்களை தடை செய்யவேண்டும் என்று புதிய ஒரு தலைப்பில் ஒரு கருத்தாடல் கூட ஆரம்பிக்கக்கூடியவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள். எனவே இவர்களை நம்பி, இவர்களிற்காக இப்படி சங்கங்கள் எல்லாம் ஆரம்பிப்பது சுத்தவேஸ்ட்.

நான் பொய் சொல்லவில்லை. கற்பனையில் கதைக்கவில்லை. யாதார்த்த நிலமைகளை உள்வாங்கி கூறுகின்றேன். பல தடவைகள் கருத்தாடல் செய்தபோது, நான் சொன்ன கருத்துக்கள் பிடிக்காதபோது, நன்கு என்னுடன் பழகியவர்களே கள்ள ஐடியில் வந்து மிகக்கீழ்த்தரமாக எல்லாம் என்னைத் திட்டி உள்ளார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும்போது கள உறவுகள் என்று சொல்லி போலியான வேசங்கள் போடுவது பயனற்றது.

இப்படியான நிலமைகளில், நிஜ வாழ்க்கையில் கூட இங்கு உள்ளவர்கள் ஒரு பிரச்சனை என்று வந்தால் எப்படி எப்படி மாறுவார்கள், நைசாக எஸ்கேப் ஆவார்கள் என்று தெரியாது.

எனவே, சுருக்கமாக, யாழை சிம்பிளாக எடுங்கள். சும்மா வேசங்கள், கோசங்கள் எல்லாம் எமக்கு வேண்டாம்.

நன்றி!

Edited by கலைஞன்

***********

Edited by harikalan

நான் புதிய உறுப்பினர். ஆனால் யாழில் கருத்துக்களை கடந்த 4 வருடங்களாக வாசித்து வருபவன். யாழ் நிற்வாகிகள் எவ்வளவோ வேலைப் பளுக்களின் மத்தியில் எமக்காக, உலகத்தின் மூலை முடுக்கில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக தங்களது சொந்த செலவில் யாழிலை திறம்பட நடாத்தி வருகிறார்கள். ஆனால் சிலர் எதுக்கெடுத்தாலும் குற்றமும் குறைகளும் , தேவையில்லாத விடயங்களை பெரிது படுத்துவதுமாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை தான் நானும் சொல்கின்றேன்

உங்கள் கருத்துக்கள் ஏதாவது வெட்டபட்டால் அதை நாங்கள் தனிப்பட்ட ரீதியில் கள நிர்வாகத்திடம் எதிர்பு தெரிவிப்போம்

எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் இதை அவர்கள் கொண்டு நடத்தகின்றபோது நாங்கள் கூட்டமாக சேர்ந்து அவர்களை எதிப்பது நியாயம் அல்ல என்பதே நாட்டான்மை தீர்பு.

அனைவருக்கும் வணக்கம்,

அவரவர்க்கு தனிப்பட்ட கருத்துகள் இருக்கும், அதை வெளியிட சுதந்திரம் வேண்டும், மேலும் அதை அது தொடர்பானவர்களுடன் விவாதித்து அதில் தெளிவு பெற வாய்ப்பு அவசியம்.

கருத்துக்கள் கருத்துக்களால் மாற்றப்பட வேண்டுமே ஒழிய, விசேட அனுமதி பெற்ற தனிநபர்களால் அல்ல!

யாழ்களம் தனிநபர் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் சாதனை அல்ல. இது அவர்களுக்கு மட்டும் உரித்துடையது என்பதாக இல்லாமல் பலருடைய எண்ணங்கள், முயற்சிகள், படைப்புகள், கருத்துகள் என்பவற்றினாலேயே இன்று இந்த உயர் நிலையை அடைந்துள்ளது.

காலத்திற்கு காலம் கருத்தாளர்கள் பலர் தன்னந்தனியாக தங்கள் நிலைப்பாடு தொடர்பில் அதிகாரங்கள் வாய்க்கப் பெற்ற தனி நபர்களுடன் (மட்டுறுத்துனர்) தங்கள் கருத்துகளுக்காக மோதி தோற்று மனமுடைவதும் வெளியேறுவதும், அச்சமடைவதும் ஆரோக்கியமானது அல்ல.

விவாதத்திற்குரிய கருப்பொருட்களில் வெவ்வேறு கருத்துகளை கொண்டிருந்தாலும் மேலே குறித்த பொதுவான நோக்கங்களுக்கமைய அச்சமின்றி கருத்துப்பகிர கூடிய ஒரு சூழலை உருவாக்கும் நோக்கிலேயே நாங்கள் இங்கே ஒன்றாக இணைகிறோம்.

நாங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள யாழ்கள விதிகளை மதிக்க முயற்சிக்கிறோம் அவ்வாறே செய்ய அனைவரையும் வேண்டுகின்றோம்.

நாங்கள் எவ்வித விசேட அதிகாரங்களும் இல்லாத சாதாரண கருத்தாளர்களாக இருந்தபோதும் உண்மையான சக (நேர் மற்றம் எதிர்) கருத்தாளர்கள், கருத்துகளால் அன்றி வேறு அழுத்தங்களால் (மட்டுறுத்துதல், தடை செய்தல்) பாதிப்படையும் போது அவர்களுக்கு ஆறுதலாக எமது ஆதரவையும், ஆலோசனைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்க விரும்புகின்றோம்.

அவ்வாறு எதிர்காலத்தில் பாதிப்படைபவர்கள் அல்லது ஏற்கனவே விரக்தியடைந்து விலகியிருப்பவர்கள் எங்களை அணுகலாம். அவர்களது பிரச்சனைகளை வெளிப்படையாகவே எங்களுக்குள் விவாதித்து நாங்கள் ஒரு பொதுத்தீர்மானத்தை அல்லது வேண்டுகோளை அல்லது கண்டனத்தை நாம் தெரிவிக்க முடியும்.

இந்த வகையில் கருத்தாளர்களின் உளவுரண் அதிகரிக்கவும், கருத்தெழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் விளைகிறோம்.

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//உங்கள் கருத்துக்கள் ஏதாவது வெட்டபட்டால் அதை நாங்கள் தனிப்பட்ட ரீதியில் கள நிர்வாகத்திடம் எதிர்பு தெரிவிப்போம்//

சுண்டு அண்ணே, எங்கண்ட கருத்து வெட்டபட்டால் நீங்கள்எதிர்ப்பு தெரிவிப்பிங்களொ , நிர்வாகத்தை எதிர்க்கவோ இந்த சங்கம்? என்னவோ போங்கோ ஜொம்மு இந்த சங்கத்தில் இருப்பதால நானும் சேர்லாண்டு இருகென்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் கலைஞனையும், இங்கிலாந்தில் வாழும் நாரதரையும், சுவிஸில் வாழும் சின்னப்புவையும், பிரான்சில் வாழும் சாத்திரியையும் சிட்னியில் வாழும் என்னையும் பேசவைத்தது யாழ்களம்.எதாவது பிரச்சனை என்றால் நிற்வாகிகளுக்கு தனிமடலில் தெரியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே Sub forum எல்லாம் திறந்து சீரியஸான மனிசர சீரியஸாகவும்.. கல கல மனிசர கல கலவாகவும் எழுத விடினம். அப்புறம் என்ன.. வேண்டிக் கிடக்கு சுதந்திரம்...??!

நான் முடிவெடுத்திருக்கிறன் என்ற சுதந்திரப்படி.. நானா எந்த உப களத்துக்கும் அனுமதிப் பிச்சை கேட்டுப் போறதில்லை என்று. அவையா தந்தால் எழுதிறன் இல்லாட்டிப் போங்கடா..என்றிட்டுப் போயிட்டிருப்பன். :o

கருத்துச் சுதந்திரம் அவசியம் அதில உலகில யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தக் கருத்துச் சுதந்திரம் என்பது கூட உலகில் ஒரு எல்லைக்குள்ள தான் இருக்குது. உலகில் சுதந்திரம் என்ற வார்த்தை கவர்சியா பாவிக்கப்பட்டு.. மக்கள் அந்த பதத்தின் மூலம் அதிகார வலயங்களுக்குள் இழுக்கப்பட்டு அடக்கப்படுவதுதான் நடக்கிறது. அதுதான் சுதந்திரமாகவும் இன்றைய உலகில் இருக்குது.

அமெரிக்க இராணுவத்தின் ரகசியத்தை அதை அறிஞ்ச ஒரு தளபதி தன்ர கருத்துச் சுதந்திரம் என்று உலகுக்குச் சொன்னா.. அது துரோகம். ஒரு பெரிய நிறுவனத்தின் உற்பத்தி தொழில்நுட்ப ரகசியங்களை வெளிட விடுறது.. குற்றம்.. இப்படி.. சுதந்திரத்துக்கு பல... கட்டுப்பாடுகள்.. அதையெல்லாம் தாண்டினா.. இந்த உலக ஒழுங்கு புதிய ஒரு வடிவத்தில இருக்கும். ஆனா அது நம்மலால இயலுற காரியமா..??!

சுதந்திரம் என்ற பதத்தை ஜனநாயகம் அளித்தது என்று காட்டிறதே சுதந்திரமல்ல. இயற்கையா உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தக் கூட கட்டுப்பாடு.. சட்ட விதிகளால் அடக்குமுறை.. சிவில் நிர்வாக நடைமுறை என்று பொலீஸ் மற்றும் இதர ஆயுதப்படைகள் கொண்டு ஆயுதத்தால் சட்டத்தால் தடுப்புச் சுவர்களால் அச்சுறுத்தி அடக்கல்.. என்று எல்லாமே ஜனநாயக "சுதந்திரத்துக்க" நடக்குது.

கருத்துச் சுதந்திரம் என்பதைக் கூட இன்று நாடுகளும் அரசுகளும் அவரவர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தீர்மானித்தே மக்களுக்கு சுதந்திரத்தை அடையாளம் காட்டி அதை அனுபவிக்க அனுமதி அளிக்கினம். யாழ் களம் அதுக்கு விதிவிலக்காகி நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் உள்ளவன் அடக்கிதான் வைப்பான்.. அதுதான் நியதியா வளர்ந்திட்டு வருகுது.

நாங்கள் தான் கொஞ்சம் கொஞ்சமா எம்மைச் சுற்றி அநாவசியமாப் போடப்படுற ஆனால் நாம் விலகி இருந்து செயற்படக் கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கின்ற அதிகார வலயங்கள விட்டு விலகிப் போக ஆரம்பிக்க வேண்டும். இந்த களத்தில் முக்கியமான சில பட்டன்களை பார்க்கவும் கிளிக் பண்ணவும் ஒருவருக்கு உள்ள அதிகார மையம் என்பதுதான் நிர்வாகம் என்பது. அதுதான் எமது கருத்துக்களின் தன்மையை தீர்மானிக்கிறது என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கும் நாமும் தான்.. சிந்திக்கனும்.. ஏனெமக்கு.. இந்த பட்டன் கிளிக்கர்களும் அவர்களும் அவர்களை உருவாக்கும் செயற்பாடுகள் அவசியமா என்று..!

யாழ் களம் சொல்கிறது என்னால் இந்தளவுக்கு மேல "கருத்துச் சுதந்திரம்" தரமுடியாதுன்னு. யாழ் ஒரு தனிநபரின் சொத்து. பல திக்குகளில் இருந்து வந்து தமிழ்.. தமிழ் தேசியம்.. தமிழீழம் என்ற அடிப்படையில் நாம் தான் இதற்கு பொதுத் தன்மையை அளிச்சுக் கொண்டிருக்கிறம். அதை விட நாம் இங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பது அநாவசியமானது.

மற்றும் படி..சுதந்திரத்தைக் கேட்டுப் பெற முடியும் என்று நான் நினைக்கல்ல. கேட்டுப் பெறுகிற அளவுக்கு அது ஒன்றும் போடப்படுற பிச்சையல்ல. அது எமக்கென்று இயற்கை அளிச்சது. அதை நாங்க மற்றவையை பாதிக்காத வகையில் பாவிக்கிறது சிறப்பு. அடுத்தவனின்ர சுதந்திரத்தில தலைப்போடுறதும் தப்பானது. அடுத்தவனை தவறா வழிநடத்திச் செல்லுறதும் தப்பானது. :lol::wub:

Edited by nedukkalapoovan

எங்களின் கருத்து இன்னொருவனைப் பாதிக்காது இருக்குமாயின் அதுவே கருத்துச் சுதந்திரம். எனவே கருத்துச் சுதந்திரத்தை நாங்களே கேட்டுப் பெற வேண்டியதில்லை. நாங்கள் எழுதும் போது என்ன எழுதுறம் எப்படி எழுதுறம் அக்கருத்து யாரையாவது பாதிக்குமா என சிந்தித்து எழுதினாலே போதுமானது என நினைக்கிறேன். இவ்வாறு எழுதும் பட்சத்தில் நிர்வாகிகள் ந,மது கருத்தை வெட்டமாட்டார்கள் என நினைக்கிறேன்.

சாணக்கியன், நெடுக்காலபோவான்,

நல்லாத்தான் இருக்கு உங்கள் வியாக்கியானங்கள்.

நம்மட ஆள் நிருவாகி என்றால், தமிழர்கள் நிருவாகம் என்றதும் எவ்வளவு உங்களுக்கு எவ்வளவு நக்கலாக இருக்கின்றது என்பது உங்கள் கருத்துக்களைப் பார்க்க தெரிகின்றது.

இதே கருத்தை யூரியூப்பில் போய் சொல்லுவீங்களா? யூரியூப் இணையம் ஒரு தனி ஆளின் முயற்சியினால் வந்த வெற்றி அல்ல, அது மில்லியன் கணக்கில் வாழும் மக்கள் பலரது கூட்டு முயற்சியினால் கிடைத்த முன்னேற்றம். எனவே, யூரியூப் பொது உடமையாக்கப்பட வேண்டும் என்று உங்களால் கேட்க முடியுமா? இப்படிச்சொன்னால் உங்கள் எக்கவுண்டையே தூக்கிப்போடுவாங்கள்.

வெளைக்காரன் செய்தால் வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருப்பீங்கள். தமிழன் என்றால் அடியடா, பிடியடா என்று வெளிக்கிட்டுடுவீங்கள்.

யாழ்களம் தனிநபர் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் சாதனை அல்ல. இது அவர்களுக்கு மட்டும் உரித்துடையது என்பதாக இல்லாமல் பலருடைய எண்ணங்கள், முயற்சிகள், படைப்புகள், கருத்துகள் என்பவற்றினாலேயே இன்று இந்த உயர் நிலையை அடைந்துள்ளது.

இவ்வாறு கூறுவதற்கு உங்கள் ஒருவருக்கும் உரிமை இல்லை. சட்டத்தில் கூட சொத்துப் பற்றிய சட்டம் இருக்கின்றது. யாழ் இணையம் உங்கள் சொத்து என்று கூறுவது பொருத்தம் அற்றது.

மேலும், கருத்தாடல் தளத்தை விடுங்கள். ஒளித்தடம் பகுதியில் தினமும் பல காணொளிகள் இணைக்கப்படுகின்றன. இவற்றை எத்தனை ஆயிரம்பேர் வந்து பார்வை இடுகின்றார்கள் என்று தெரியுமா?

நாளை கருத்தாடல்தளம் முற்றாக நீக்கப்பட்டால் கூட ஒளித்தடம் பகுதியில் உள்ள காணொளிகளை பார்ப்பதற்கு பல நூறு விருந்தினர்கள் தினமும் வருவார்கள்.

நாளைக்கு யாழ் கள நிருவாகம் மீது ஏதாவது சட்டப்பிரச்சனைகள் வந்தால், கள நிருவாகியை போலிஸ் பிடித்தால் நீங்களும் அவருக்கு வரும் பாதிப்புக்களை ஏற்றுக்கொள்ள, பகிர்ந்துகொள்ள தயாராய் இருக்கின்றீர்களா?

நீங்கள் உங்கள் வீட்டு கணணிகளின் முன்னால் ஜாலியாக இருந்து ஏதாவது எழுதிவிட்டு போவீங்கள். நாளைக்கு ஒரு பிரச்சனை வந்தால், தற்செயலாக போலிசு வரை அது போகிது என்று வையுங்கள், அவங்கள் கள நிருவாகியின் வீட்டு கதவைதான் போய் தட்டுவாங்கள். உங்கள் வீடுகளுக்கு வரப்போவதில்லை.

சும்மா, கருத்துச்சுதந்திரம் கத்தரிக்காய் என்று சொல்லி கூத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை. சிம்பிளாக விசயங்களை புரிந்துகொண்டால் இந்த ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லை.

உங்கள் வீரவசனங்களை நீங்கள் இங்கு மட்டுமே காட்ட முடியும். இதுவே உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இங்கு கிடைத்துள்ளது என்பதற்கு சாட்சி. வேறு இணையங்களில் போய் நீங்கள் இதே விளையாட்டுக்களை விடுவீங்களா?

கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும் எண்று சொல்வார்கள்... இங்கை பார்க்கிற போது அடிச்சாட்டூளியம்தான் பெருகி போய் இருக்கு... அதுக்காக ஓடிபோய் இன்னும் ஒரு களத்தை ஆரம்பிக்க வேணும் என்பதில்லை.. சரியாக சொன்னால் அதை யாழுக்குள் செய்வதுதான் சிறந்தது, யாழ்களத்தை அடுத்த கட்ட வழர்ச்சிக்கு இட்டு செல்லும் எண்டும் சொல்ல முடியும்...

யாழ்களத்துக்குள், மட்டுறுத்துனர், பிறகு உதவி சபைகள் எல்லாம் இருக்கும் போது ஏன் வாசகர் கள உறுப்பினர் கூட்டாக சேரக்கூடாது..? இதற்குள் இணைகிறோம் என்பவர்கள் பிரச்சினைகளை களைந்து உள்ளே வருகிறார்கள் என்பதுதான் அர்த்தமே தவிர ..... பிரச்சினைகளை, அதிகரிக்க வரவேண்டியது இல்லை...!

இங்கை யாரும் கள நிர்வாகத்தை எதிர்க்க போவது இல்லை... மோகன் அண்ணா இதனால் கவலை கொள்ளவும் தேவை இல்லை... வரும் சிக்கல்களை ஒண்றாக சந்திப்பது என்பது பலமான களத்தை உருவாக்கும் ... நாங்கள் ஒரு இடத்தில் வேலை செய்யும் போதுசம்பளம் தரும் முதலாளிக்கு எதிராக யூனியன் அமைக்கிறார்கள், அதை சமத்துவம் என்னும் போது, யாழ்களத்தில் நிகழும் சிறிய அளவான கருத்து சுறண்டல்களை ஏன் எதிர்க்க கூடாது...??

யாழிலை கருத்தை எத்தினை பேர் எழுதுறார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் மட்டுறுத்தூனர் தொகை மட்டும் பத்து பதினைஞ்சு பேர் இருக்கும்... ஏன் எதை எப்படி செய்கிறார்கள் எனும் தெளிவு யாருக்கும் இல்லை என்பது தெளிவு...

சங்கம் அமைந்தால் மட்டுறுத்துனர் ஒருவரும் களவுற்றவை பார்த்து நீங்கள் இருப்பதனால் இருங்கள், இல்லை போக வேணும் எண்டால் போங்கள் எண்று ஏகத்தாளம் இட வளி இல்லாமல் போய்விடும்..!

எங்க தயா பதினைந்து மட்டறுத்துனர்கள் யாழில் இருக்கின்றார்கள்? நீங்கள் இதுவரை காலமும் யாழில் இருந்த மட்டறுத்துனர்களை கணக்கெடுத்து சொல்லுறீங்களா?

யாழ்பிரியா

இணையவன்

யாழ்பாடி

எழுவான்

இவர்கள் தானே மட்டறுத்துனர்கள்? மற்றவர்கள் வலைஞன், மோகன் கருத்துக்கள பொறுப்பாளர்கள். எங்கே உங்கள் 15 பேர்?

யாழில் அண்மையில் டன் பயனுள்ள ஒரு அமைப்பை உருவாக்கினார். மேலும், இப்படி யாழில் குழுக்கள் உருவாக்குவது, ஒன்றுகூடல் செய்வது அவரவர் விருப்பம்.

ஆனால், உங்கள் யாழ்கள சுதந்திர கருத்தாளர் சங்கம் பற்றிய பிரச்சனை என்ன என்றால், நீங்கள் ஒரு சிலர் விடப்போகும் கிண்டலான அறிக்கைகள் கள உறவுகள் அனைவரினதும் கருத்தை பிரதிபலிக்க போவதில்லை.

நீங்கள் ஒரு சிலர் ஒரு தலைப்பட்டசமாக யாழ் பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி விட்டு பின், அறிக்கைகள் விடுவது எப்படி இருக்கும் என்றால் ராஜன் கூல் என்பவர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் என்று துவங்கி யாழ் பல்கலைக்கழகத்தை தான் பிரதிநிதித்துவம் செய்கின்றேன் என்று சொல்லி அறிக்கை விடுவது மாதிரித்தான் இருக்கும்.

யாழ் களத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியா? அது எப்படி இருக்கும் என்று உங்களால் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

பெண் விபச்சாரிகள் என்று ஒருவர் எழுதுவார், பிறகு இன்னொருவர் வந்து கைலாய மலையில் தொங்கிக்கொண்டு இருந்த அதிசயமான கோவணம் என்று சொல்லி ஏதோ தத்துவ ஆராய்ச்சி செய்வார். இங்கு எழுதப்படுவவை என்ன என்று முக்கால்வாசிப்பேருக்கு அர்த்தமே தெரியாமல் இருக்கும். இந்த நிலையில் வலைஞன் கருத்துத்திணிப்பு என்று ஒரு கருத்தை வெட்டுவார். பின் உடனடியாக உங்கள் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து வலைஞனின் ரவுடீசம் என்ற பெயரில் ஒரு ஆக்கிரோசமாக அறிக்கை விடப்போறீங்கள். இதுதானே உங்கள் யாழின் அடுத்தகட்ட வளர்ச்சி?

யாழ் களத்தில் எங்கே உதவி சபைகள் உள்ளன? நான் அறிந்த வரையில் சில குழுமங்கள் உள்ளன: செய்திக்குழுமம், அவுஸ்திரேலியா குழுமம், நேசக்கர குழுமம்.. அவ்வளவே.

நெடுக்கால் போவான், கலைஞன்,

உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்!

இப்போது இந்தச் சங்கத்தின் தேவை இல்லாதவர்கள், தேவையேற்படும் போது தொடர்பு கொள்ளுங்கள்! உதவ காத்திருக்கிறோம்.

"பறக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மனிதன் தன் முயற்சியை கைவிடவில்லை! மீண்டும் மீண்டும் விழுந்து ஒரு நாள் எழுந்து பறந்தான்"

அன்புடன்

சாணக்கியன்.

சாணக்கியன் அண்ணா உங்களின் தனி மடல் பெட்டி நிரம்பி விட்டுது எண்டு நினைக்கிறன்... என்னால் அனுப்ப முடியவில்லை...!!

நீங்கள் ஒரு சிலர் ஒரு தலைப்பட்டசமாக யாழ் பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி விட்டு பின், அறிக்கைகள் விடுவது எப்படி இருக்கும் என்றால் ராஜன் கூல் என்பவர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் என்று துவங்கி யாழ் பல்கலைக்கழகத்தை தான் பிரதிநிதித்துவம் செய்கின்றேன் என்று சொல்லி அறிக்கை விடுவது மாதிரித்தான் இருக்கும்.

யாழ் களத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியா? அது எப்படி இருக்கும் என்று உங்களால் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

பெண் விபச்சாரிகள் என்று ஒருவர் எழுதுவார், பிறகு இன்னொருவர் வந்து கைலாய மலையில் தொங்கிக்கொண்டு இருந்த அதிசயமான கோவணம் என்று சொல்லி ஏதோ தத்துவ ஆராய்ச்சி செய்வார். இங்கு எழுதப்படுவவை என்ன என்று முக்கால்வாசிப்பேருக்கு அர்த்தமே தெரியாமல் இருக்கும். இந்த நிலையில் வலைஞன் கருத்துத்திணிப்பு என்று ஒரு கருத்தை வெட்டுவார். பின் உடனடியாக உங்கள் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து வலைஞனின் ரவுடீசம் என்ற பெயரில் ஒரு ஆக்கிரோசமாக அறிக்கை விடப்போறீங்கள். இதுதானே உங்கள் யாழின் அடுத்தகட்ட வளர்ச்சி?

யாழ் களத்தில் எங்கே உதவி சபைகள் உள்ளன? நான் அறிந்த வரையில் சில குழுமங்கள் உள்ளன: செய்திக்குழுமம், அவுஸ்திரேலியா குழுமம், நேசக்கர குழுமம்.. அவ்வளவே.

இப்படி நீங்கள் சொல்வது போல எழுதுவதை வெட்டுவது உரிமை எண்டால் தவறு நடக்கும் எல்லா இடங்களிலும் அந்த தவறு நடை பெறாமல் தவிர்க்க வேண்டும்.. யாழில் இருக்கும் பிரச்சினையே அதுதானே... நீங்கள் வேறு பெயரில் வரும் மட்டுறுத்துனர் எண்று வைத்து கொள்ளுங்கள்... உங்களின் கொள்கைகள் எப்படி இருக்கும் ?? நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எப்போதும் சரியான்னதாகவும், உங்களை ஆதரிப்போர் மட்டுமே இங்கே சரியான்னவர்களால இருப்பதுதான் இங்கு பிரச்சினையே....!

உங்களுக்கு தெரியுமோ தெரியாது... முத்துகுமார் எனும் தமிழ் பற்றாளர்... பிரபலமான திரை பாடலாசிரியர் இங்கு களத்தில் உறவாக இருந்தார்... அவர் களத்தில் சிலரின் தொல்லைகளை சகிக்க முடியாதுதான் விலகினார்... அவருக்கு கிடைத்து இருக்க வேண்டிய தார்மீக ஆதரவு (முழுமையான உறுப்பினர்களால்) கிடைக்கவில்லை...

அது போலதான் பலர் விலகவும் வந்து சேர்வத்தை தடுக்கும் செயப்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுக்கு தடையை உடைக்க ஒரு சங்கம்... அவ்வளவுதான்....

நீங்கள் சங்கத்தினர் இப்படித்தான் செய்யற்பட போகிறார்கள் என்னும் கற்பனையை தட்டி விடாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது... செயற்பாடுகளை பார்த்து விமர்சித்து கொள்ளலாம்...

மற்றது மட்டுறுத்துனர் பழையவரோ புதியவர்ரோ எல்லாருமே அக்டீவ் உறுப்பினர்கள்தான்... அவர்களின் மட்டுறுத்தல் செயற்பாட்டுகள் தடை செய்யபட வில்லை....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இவள் ஆண்டி அது உங்கட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களத்தில சேர்ரதும் சேராததும் இந்த களத்துக்கென்று விதி முறை இருக்கு ஆண்டி அதை நீங்ன மீருகின்ற போது அதில் நிர்வாகத்தின செயல் பாட்டில் நியாயம் இருந்தால் கண்டிப்பாக நிர்வாகத்தின் பக்கம் தான் என் நிலைபாடு

மற்றது நீங்கள் என்ன தான் தலைகீழ நிண்டு 10 பேர சேர்த்து எதிப்பு தெரிவித்தாலும் நிர்வாகம் வெட்ட வேண்டிய கருத்துகள ;வெட்டும் இப்படியான மிரட்டல்களுக்கு எல்லாம் என்றும் யாழ் கள நிர்வாகம் பயப்பிட போவதில்லை இவள் ஆண்டி அத புரின்சுகோங்க...

கலைஞன்,

முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பதட்டமடைந்து காணப்படுகின்றீர்கள்! ஏன்?

ஆரோக்சமாக எதிர்கிறீர்கள்! ஏன்?

சார்பாக சிந்திக்க மறுக்கிறீர்கள்! ஏன்?

நீங்களே ஒரு காலகட்டத்தில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் விரக்தியுற்றும், பின்னர் சமரசமடைந்தும் கொண்டவர்! இன்று உங்களிற்கிருக்கம் புரிந்துணர்வின் படி பழையவற்றை எண்ணிப் பார்க்க மறக்கிறீர்கள்.

தனிநபர்களின் கருத்துத் திணிப்பை வெளிக்கொணர எடுக்கப்படும் இம் முயற்சிக்கு தனிமடலில் தொடர்பு கொள், புதிய இணையத்தளம் ஆரம்பித்து பிரிந்து செல், யூடியூப், வெள்ளைக்காரன் - தமிழன், சொத்துச் சட்டம், பொலிஸ் பிடிக்கும் என்று கூறி தாழ்ப்பாள் இடுகிறீர்கள்?

எனக்கு அண்மைக்காலமாக களத்தில் மனஸ்தாபம் ஒன்றுமில்லை. காரணம் சுயதணிக்கை! களத்தில் அங்கீகரிக்கப்படும் கருத்துகளை மாத்திரம் பதிவது, ஏனையவற்றை தவிர்த்து விடுவது. இதனை ஆரோக்கியமானதாக நான் உணரவில்லை. இதைப் போல எத்தனை பேர்?

செய்திப்பிரிவுக்குள் செய்திகள் இட தானியங்கிச் சாதனம், பெரும்பாலான தலைப்புகளில் கருத்துகளின் எண்ணிக்கை 0 (பூச்சியம்)

ஏன் உங்களில் கூட முன்பு கருத்தெழுதுவதில் இருந்த ஆர்வம் இன்றில்லை ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் தங்களின் ஆதங்கங்களை வெளியிடுவதில் ஒரு குழுவை அமைத்து அதன் வழியில் செயற்பட முனைவதில் தவறோ குறையோ காண முடியாது. ஆளாளுக்கு அவரவர் நிலைக்கே ஏற்ப பாதிப்புக்களை உணர்ந்து பிரச்சனைகள் சிக்கலாக்கப்படுகின்ற ஆபத்தான நிலை தோன்றுவதிலும்.. தங்கள் ஆதங்கங்களை குழு ரீதியா முன் வைத்து அந்த ஆதங்கங்களின் நிலை சரியா தவறா என்று நட்புரீதியா அவர்களே தங்களுக்குள் பகுத்தாய்ந்து நோக்கி கள நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டுதல் என்பது தவறன்று.

ஒருவர் தானே எல்லாம் அறிஞ்சனான் என்ற நிலைல நின்று.. திணிப்பதிலும்.. இது எவ்வளவோ சிறப்பானது.

ஆனால் கள நிர்வாகம் என்பது அதையெல்லாம் கருத்தில் எடுத்து பதிலளித்து தனது நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுப்புகளையும் விளக்கங்களையும் அளிக்கும் என்று 100% எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆனால் கள உறவுகளில் குரல் ஒருங்கிணைந்து ஒலிப்பதில் தவறுகாண இடமில்லை. அதுமட்டுமன்றி இந்த ஒருங்கிணைவு ஆளாளுக்கு இஸ்டத்துக்கு கருத்தெழுதிட்டுப் போறதையும் கட்டுப்படுத்த அவர்களே அவர்களுக்கு வழிகாட்டிட உதவிடலாம். :wub:

மற்றும்படி.. கருத்துச் சுதந்திரம்.. நடுவுநிலை.. பக்கச்சார்பின்மை..இதையெல்லாம

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.