Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

James Waterhouse

bbc

தமிழில் ரஜீபன்

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும்.

கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.

ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர்  குறிப்பிடுகின்றார்.

போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு  அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது.

இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது, ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது.

எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது.

ukraine_damage_house.png

நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன. உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.

ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவ உதவி தொடர்வது கடினம் .

எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார்.

உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றார்.

இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால், ரஸ்யா  உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.

மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.

ukraine_forces_june_.jpg

அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான  கவசவாகன பிரிவின் தளபதி.

நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம், ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர்.

அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது. மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது.

உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.

எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி. 

உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது.

ukraine_war_octo_23.jpg

ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம். அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது.

போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம்.

அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார். 1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் , அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.

கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார். அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர்.

இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர்.

ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம்.

ரஸ்யா தனது பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/197866

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளையில் இருந்து… ட்ரம்பு தான், அமெரிக்க ஜனாதிபதி என்று உக்ரைன் காரருக்கு சொல்லி விடுங்கோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நாளையில் இருந்து… ட்ரம்பு தான், அமெரிக்க ஜனாதிபதி என்று உக்ரைன் காரருக்கு சொல்லி விடுங்கோ. 😂

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, குமாரசாமி said:

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

நான் ரம்ப் வெற்றிய இப்பவே கொண்டாட தொடங்கீட்டன். அடுத்த பஸ்ச பிடிச்சு பக்கெண்டு வாங்கோ....😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, குமாரசாமி said:

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

 

7 hours ago, தமிழ் சிறி said:

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

உங்க‌ட‌ பார்ட்டில‌ நானும் வாறேன் ஒட்டு மொத்த‌ யாழ்க‌ள‌மே எங்க‌ட‌ பார்ட்டிய‌ பார்த்து அதிர்ந்து போகும் அள‌வுக்கு இருக்கனும்

மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து.....................................

தென் ஆபிரிக்காவில் இருந்து மொட‌ல் அழ‌கிய‌லை வ‌ர‌ வைப்போம் அவேன்ட‌ ஆட்ட‌த்தை பார்த்து பாட்டிக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் அச‌ந்து போக‌னும் ஓக்கே தாத்தா

செய்யிறோம் அச‌த்துகிறோம்😁👍...........................

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

 

கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.

 

சர்வதேசத்தை நம்பி ஏமாறுவதற்கென்றே பல தேசங்களும் வரிசையில் நிற்கின்றன போல. நாங்கள் எங்களை சர்வதேசம் காப்பற்றும் என்றிருக்க, அது கைவிட, பலமாகவே ஏமாந்தோம். ஆனாலும் அதன் பின்னரும் இப்பவும் சர்வதேசத்திற்கு குரல்  கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

உக்ரேன், பாலஸ்தீனம்,........... என்று இந்த வரிசையில் எப்பவும் நாடுகள் நின்றபடியே இருக்கின்றன.

அமெரிக்கா என்பது இந்த இரு வேட்பாளர்களை விட அல்ல, எந்த வேட்பாளர்களை விடவும் மிகவும் பெரியது.

எவராலும், கமலா ஹாரிஸ் என்றால் என்ன, ட்ரம்ப் என்றால் என்ன, அமெரிக்காவின் நலனுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியாது.

  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து...........................

அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣
ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃

50 Cent explains why he never went to Diddy's parties

ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, குமாரசாமி said:

அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣
ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃

50 Cent explains why he never went to Diddy's parties

ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣

அப்ப‌டியா

2002 ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்லா தானே இருந்தார் பாட‌லில் க‌ல‌க்கிறார் நிறைய‌ ப‌ண‌ ம‌ழையில் ந‌னைந்தார் இப்போது சிறையா இவ‌ர்  2pacக்க‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ர் 2Pacக்கின் இழ‌ப்பு த‌ன‌க்கு வேத‌னை அளிப்ப‌தாக‌ 2002க‌ளில் சொல்லி இருந்தார்............................

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ரசோதரன் said:

எவராலும், கமலா ஹாரிஸ் என்றால் என்ன, ட்ரம்ப் என்றால் என்ன, அமெரிக்காவின் நலனுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியாது.

அங்கே அதாவது அமெரிக்காவில் ஒரு இருண்ட உலகம் இருக்கின்றது என சொல்கின்றீகள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

அங்கே அதாவது அமெரிக்காவில் ஒரு இருண்ட உலகம் இருக்கின்றது என சொல்கின்றீகள்.😎

வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை............... 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரசோதரன் said:

வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை............... 

குருநாதா

உங்க‌ட‌ நாட்டில் பிரிவினைவாத‌ம் இருக்கா

30வ‌ருட‌த்துக்கு முத‌ல் Oklahoma மானில‌ம் நாங்க‌ள் அமெரிக்கா கூட‌ இருக்க‌ விரும்ப‌ல‌ எங்க‌ளை  த‌னி நாடாக‌ இருக்க‌ போகிறோம் என்று சொன்னார்க‌ளா.....................அல்ல‌து வேறு மானில‌ம் ஏதும் த‌னி நாடு கோரிக்கைய‌ முன் வைத்த‌வையா...........................இந்தியாவை விட‌ அமெரிக்கா மானில‌ங்க‌ளுக்கு அவை சுய‌மாய் முடிவெடுக்கும் அதிகார‌ங்க‌ள் அதிக‌ம் இருக்க‌ த‌க்க‌ ஏன் த‌னி நாட்டு கோரிக்கைய‌ முன் வைத்த‌வை அந்த‌க் கால‌த்தில்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

நான் ரம்ப் வெற்றிய இப்பவே கொண்டாட தொடங்கீட்டன். அடுத்த பஸ்ச பிடிச்சு பக்கெண்டு வாங்கோ....😂

அவர் பஸ்சில் வரமாட்டார் ....... நண்பர் பாஞ்ச்சுடன் காரில் வருவார் . ......கொண்டுவருவது தூள் தூளா பறக்கும் வெடிப் பக்கட்டுடன் ........கொண்டு போவது பலகாரப் பெட்டியுடன் . ........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியாவை விட‌ அமெரிக்கா மானில‌ங்க‌ளுக்கு அவை சுய‌மாய் முடிவெடுக்கும் அதிகார‌ங்க‌ள் அதிக‌ம் இருக்க‌ த‌க்க‌ ஏன் த‌னி நாட்டு கோரிக்கைய‌ முன் வைத்த‌வை அந்த‌க் கால‌த்தில்.........................

பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது..............

தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. 

இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........

 

 

Edited by ரசோதரன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்

அப்பிடி ஒண்டும் நடக்காது.  ட்ரம்ப் சொல்லுறதை செத்தகிளி கேட்காவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு ஆப்பு. அதோட இஸ்ரேலோட செத்தகிளி முண்டினால் தெரியும் நம்மாள் யாரெண்டு!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது..............

தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. 

இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........

 

 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி குநாதா👍..........................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.