Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • Replies 93
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம்

  • நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டு மக்கள் உங்களை எங்களைப் போல மலம் கழித்த பின் toilet paper பாவிப்பதில்லை. தவிர கை தான். எல்லோரும் ஒழுங்காக கை கழுவுவார்களா என்றும் தெரியாது. ஆகவே தான் கை எடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லும் பாரம்பரியம் தமிழர்களுக்கு வந்தது. கை கொடுக்கும் பழக்கம் வருகின்றது என்றால் அதோடு toilet paper பாவிக்கும் பழக்கமும் நன்றாக கைகள் கழுவும் பழக்கமும் வர வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இனி, ஒன்றில் விஜை திராவிடம் என் ஒரு கண்ணில்லை என சொல்ல வேண்டும். அல்லது சீமான்  திராவிட கொள்கையும் தனக்கு ஏற்பு என சொல்லி, திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். 

விஜய் இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார், 

தமிழக அரசியலில் 60 வீத வாக்கு வங்கி  திராவிட கட்சிகளிடமே உள்ளன, விஜய் எனும் நடிகனுக்கு அனைத்து கட்சிகளிலுமே ரசிகர்கள் உண்டு, ஆனால் அவர்களெல்லாம் விஜய் எனும் அரசியல்வாதிக்கு ரசிகனாக இருக்கபோவதில்லை.  எடுத்த எடுப்பில் திராவிடத்தை தூக்கியெறிந்து பேசினால், நிச்சயமாக திராவிட கட்சிகளில் இருக்கும் அவர் ரசிகர்கள் அதை ரசிக்கபோவதில்லை.

சீமான் நிலை அவ்வாறு இல்லை அதனால் அவர் எதையும் உணர்ச்சிவசப்பட்டு பேசலாம், ஒரு கட்சி வளர்ச்சி என்பது எத்தனை கட்டங்களை கொண்டது ஆரம்பத்தில் எத்தனையோ தில்லாலங்கடி செய்துதான் மேலே வருவார்கள் விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல, அவர் ஆரம்பத்திலேயே தன்னோட வாக்கு வங்கியை சிதைக்காமலிருக்கும் பணியை கச்சிதமாய் செய்கிறார் சீமான் வழமைபோல் புறசூழல் எதுபற்றியும் யோசிக்காமல் கொந்தளிக்கிறார்.

பகுத்தறிவு பெரியாரிசம் பேசிய திமுககூட ஒருகாலம் பாஜகவுடன் கூட்டு வைத்தது என்பது அரசியலின் தேவை கருதிய செயற்பாடுகள் என்பது சீமானுக்கு தெரியாமலா இருக்கும், அது என்னமோ அவர்கள் விருப்பம்

22 minutes ago, island said:

அப்படியானால் அப்படி முயன்று பார்த்து றிஸ்க் எடுத்தோம் அதனால் மக்கள் பேரழிவைச் சந்தித்தோம் என்பதை நேர்மையாக வெளிப்படையாக  கூற வேண்டும். அதை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு நன்றி.  அடுத்தவர் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்க கூடாது என்பதே எனது கருத்தின் சாராம்சம்.

Island,

முயன்றுபார்த்து பேரழிவை சந்தித்தோம் என்பதை நான் கூற வேண்டியதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவின்போதும், மாவீரர்நாட்களின்போதும் தாயகத்தில்கூட புலிகளை எந்த குற்றம் சொல்லாமல் நினைவுகூரும் லட்சக்கணக்கான எம் மக்களே அதற்கு சாட்சி.

இன்றும்கூட ''அவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா'' என்று மனசுக்குள் புழுங்கும் எம் மக்களே சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

முயன்றுபார்த்து பேரழிவை சந்தித்தோம் என்பதை நான் கூற வேண்டியதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவின்போதும், மாவீரர்நாட்களின்போதும் தாயகத்தில்கூட புலிகளை எந்த குற்றம் சொல்லாமல் நினைவுகூரும் லட்சக்கணக்கான எம் மக்களே அதற்கு சாட்சி.

இன்றும்கூட ''அவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா'' என்று மனசுக்குள் புழுங்கும் எம் மக்களே சாட்சி

நீங்கள் கூறுவது மக்களுக்கான அரசியல் விடுதலையை தமது தலைமை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தமது உயிரை தியாகம் செய்த அந்த மாவீரரின் மீது வைத்த கெளரவத்தினாலேயொழிய தவறான அரசியல் தீர்மானங்களை ஆதரித்து அல்ல. மக்களுடன் தனிபட பேசிப்பார்ததல் அது தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அந்த யுத்தத்தை நிறுத்த ஒரு மனிதனாக, சக தமிழனாக கருணாநிதி தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்க வேண்டும்.

அப்படி முடியாத பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த பழியை இவ்வளவு காலம் சுமக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

அவ்வாறு எதிர்பார்ததிலும் தவறு இல்லை. அவரை தூற்றியதிலும் தவறில்லை. அது கோபத்தில் இயல்பானது.  ஆனால்  அழிவுக்கு எமது பக்கம் உள்ள பாரிய பொறுப்பை,  அரசியல் தீர்மானங்களை மறைத்து,   அவர்கள் மட்டுமே முழுமையான காரணம் என்று முழு பழியையும் காலா காலமாக  சுமத்துவதும் அவர்களின் நாட்டின் அரசியலில் தலையிட்டு அங்கு  இன வெறிக்கு தூபம் போடும் செயலில் ஈடுபடுவது  நேர்மையானது அல்ல. அது எமது மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்கவும் இல்லை போவதில்லை. 

 யுத்தம் என்றாலும்,  சமாதானம் என்றாலும் எல்லா தீர்மானங்களையும் நாமே எடுத்தோம். அதன் விளைவுகளுக்கும் நாமே முதன்மைப் பொறுப்பை ஏற்கவேண்டும்.  தனது தீர்மானங்களின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்கள் மற்றயவர்களிடம் இருந்து அதை எதிர்பார்கக முடியாது.  அது தனிப்பட்ட வாழ்வுக்கும் பொருந்தும்,  கூட்டிணைந்து குழுவாக எடுக்கும் பொதுத் தீர்மானங்களுக்கும் பொருந்தும்.  

கருணாநிதியை விமர்சிப்பது = நாம் விட்ட பிழைகளை மறுப்பது/மறைப்பது என்ற சமன்பாடு,

இங்கே சிலர் எனக்கு

சீமானை எதிர்பது=திமுகவை ஆதரிப்பது என போடும் சமன்பாடு போல் தெரிகிறது எனக்கு.

———

இதற்காக அவர்கள் நாட்டு அரசியலில் நாச சக்கிதியை முன் தள்ளுவது பிழைதான்.

ஆனால் இந்த நாச சக்தி அங்கே ஒரு நாளும் வெல்லாது. ஆனால் இதை நம்மில் சிலர் ஆதரிப்பதால் அங்கே எமக்கு பெருவாரியான எதிரிகள் உருவாகி விட்டுள்ளார்கள்.

2009 க்கு பின் விசிலடிக்க ஆள் கிடைக்காமல் அலைந்த ஒரு மொக்கு கூட்டம், எமக்கு சொருகிய இன்னொரு ஆப்பு இது.

விஜை தமிழ் தேசிய அரசியல் என சொல்லும் அதே வேளை, மிக தெளிவாக அம்பேத்கரை உள்ளே கொண்டு வந்து, தலைவரை தேவையில்லாமல் இழுக்காமல் விட்டதன்  பின்னால் உள்ள தெளிவு - இவர்களுக்கு விளங்கும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

நீங்கள் சொல்லவருவது உண்மையாகவே எனக்கு புரியவில்லை கோஷான்,2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்ந்தபோது ஜெ ஒதுக்கிய 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வென்று திமுகவை ஓரம்கட்டி எதிர்கட்சி தலைவரானார் விஜயகாந்த்.

தலைவரானதும் கூட்டணி முறியவில்லை சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதங்களின்போது ஜெ முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை கடிச்சுக்கொண்டு அவர் கட்சிக்காரர்களை மிரட்டியதால் பகை ஆரம்பமானது,

குடிகாரன் என்று அவ சொல்ல, இவதான் எனக்கு ஊத்தி கொடுத்தாவா என்று வியஜயகாந்த் சொல்ல பெரும் மோதல் வெடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி சந்திரகுமார், அருண்பாண்டியன் உட்பட்ட  எம் எல் ஏக்கள் ஜெயை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்று விஜயகாந்த் கட்சியை பலவீன படுத்தினார்கள்,

பின்னாட்களில் திமுகவில் சேர்ந்து பதவியும் பெற்றார்கள்

அது ஒருபக்கமிருக்க, நான் சீமான் விஷயத்தில் இதை குறிப்பிட்டதுக்கு காரணம், முதலில் சட்டசபையில் ஒருசில உறுப்பினர்களையாவது கொண்டிருந்தாலே கட்சியின் பேச்சுக்கள் மாநிலத்தில் சபையேறும், எப்போதும் எந்த அங்கீகாரமும் பெறாமல் மேடைக்கு மேடையும், பத்திரிகையாளர் முன்னாடியும் எதிர்ப்பு விமர்சனம் பண்ணி ஏதும் ஆகபோவதில்லை, அதனால் முதலில் அங்கீகாரத்துக்காக சீமான் கொஞ்சம் சிந்தித்து செயற்படலாம் என்பதே.

இல்லை, என் நியாபகம் சரியானால் - எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கும் போதே தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்தாலும், இனி நாம் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தொடர்வோம் என அறிவித்துவிட்டார்.

அந்த அறிவிப்போடு கூட்டணி முறிந்து விட்டது.

தேர்தலுக்கு பின்னும் கூட்டணி தொடர்வது என்பது இப்போ திமுக+விசிக இருக்கும் நிலை போன்றது. அப்படி ஒரு உறவில் அதிமுக+தேமுதிக அன்றைய தேர்தலுக்கு பின் இருக்கவில்லை.

இதன் பின் பலவருடங்கள் அதிமுக - தேமுதிக உறவு மோசமான பின், அடுத்த தேர்தல் சமயம், தேர்தலுக்கு சில மாதம் முன்புதான் மநகூ ஐடியா கருக்கொண்டது.

இந்த தரவைத்தான் சொன்னேன்.

அதே போல், 4 வருடம் எதிர்கட்சியாக எதிர்த்த அதிமுகவுடன் அடுத்த தேர்தலில் தேமுதிக கூட்டு வைப்பதும் சரியாக இருந்திராது, ஆகவே அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முன்பு இருந்த தெரிவுகள்,

1. அவர் தலைமையில் கூட்டணி

2. திமுக கூட்டணி

ஆகவே வைகோ பேச்சை கேட்டு, விஜகாந்த் அதிமுக கூட்டை உடைக்கவில்லை. கூட்டு உடைந்த சில வருடங்களின் பின்பே மநகூ உருவானது.

சீமானும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. கூட்டணி முறிவு எப்போ நடந்தது என்ற தரவை மட்டுமே குறிப்பிட்டேன்.

இப்போ சீமான் கூட்டணி வைப்பது பற்றிய என் கருத்து.

ஊரில் சில ஆண்கள் பெயரை கெடுத்து கொண்டதால் எவரும் அவருக்கு பெண்கொடுக்காமல், கலியாணம் பண்ணாமல் இருப்பார்கள். ஆனால் கேட்டால் நான் கலியாணம் எல்லாம் கட்டமாட்டேன் எண்டு உதார் விடுவார்கள். சீமான் நிலையும் அதுவே.

அவருடன் சேரப் பலர் தயார் இல்லை என்பது விஜை அவரை வேணும் எண்டே வெட்டி விட்டதிலே தெரிகிறது.

இதுவரை எந்த கட்சியாவது நாம் சீமானுடன் கூட்டணி வைப்போம் என கூறியதுண்டா?

ஈழத்தில் எம் மக்களிடம் தலைவருக்கு இருக்கும் இடம் போன்றது தமிழகத்தில் பெரியாருக்கு மக்கள் மனதில் இருக்கும் இடம்.

ஈழத்தில் தலைவரை, தமிழக்கதில் பெரியாரை தூற்றி கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது.

தலைவரை, பெரியாரை எதிர்க்கும் ஒரு 10% குறுக்கு புத்தி கூட்டத்தின் வாக்கு மட்டும் கிடைக்கும்.

இலங்கை தேர்தல் முறை இது டக்லசுக்கு ஒரு சீட்டை தொடர்ந்து வழங்குகிறது. தமிழ்நாட்டு முறையில் சீமானுக்கு அதுவும் இல்லை.

ஆனால் ஈழத்தில் டக்லஸ் சோடு வேறு எந்த தமிழ் கட்சியும் கூட்டுக்கு ரெடி இல்லை. இதே நிலைதான் சீமான் விடயத்தில் தமிழகத்திலும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

1) திமுக வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் அதன் நிலை அதோகதி தான். 13 வருடங்கள் ஆட்சி போன பின்பும் மீண்டும் வர கட்சியில் இங்கு இன்னொரு கலைஞர் இல்லை. 

2) வரும் தேர்தலில் வெற்றி பெற்றால்த் தான் உதயநிதி விசுவாசிகளை அவர்கள் குடும்பங்களை தொடந்து திமுக தக்கவைக்க முடியும். உதய நிதி தான் ஒரு நல்ல தலைவர் என்று காண்பிக்க வரும் தேர்தல் வெற்றி அவசியம் 

3) சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை தி மு க வளரவிடுமா என்று கேட்க்கிறீர்கள். சிலர் அதற்கு ஓம் என்று சொல்லலாம் ஆனால் இன்னொரு பக்கம் இப்படியும் நோக்கலாம்.

சிந்தாந்தம் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட அந்த சிந்தாந்தம் இருக்கும் வரைக்கும் தான் தி மு க என்ற கட்சியே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் தி முக தனித்து போட்டி இட்டபொழுது அதற்கு 23% வாக்குகள் கிடைத்தது. ஆகவே அந்தக் கட்சிக்கு என்று தமிழ் நாட்டில் 20%+ வாக்குகள் தொடந்து இருக்கிறது. அதை தக்க வைத்தாலே ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆடசிக்கு வர முடியும். அந்த 20% வாக்குகளும் இவர்கள் நம்ப வைத்துள்ள தீவிர திராவிட அரசியல் கருத்தை ஆதரிக்கும் மக்கள் கூட்டம். இந்த வாக்குகள் தொடர்ந்து உதயநிதி பக்கம் செல்வதை உறுதிப் படுத்த இன்னும் ஒரு 5 ஆண்டு ஆட்சி தி மு க வுக்கு தேவை. 

இதை ஏற்கிறேன். இப்படி பார்த்தாலும் விஜையை வளர விடுவது திமுகவுக்கு ஆபத்தில்தானே முடியும்.

எம் ஜி ஆர் டம் பட்ட பாடம் மறக்குமா?

6 hours ago, valavan said:

விஜய் இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார், 

தமிழக அரசியலில் 60 வீத வாக்கு வங்கி  திராவிட கட்சிகளிடமே உள்ளன, விஜய் எனும் நடிகனுக்கு அனைத்து கட்சிகளிலுமே ரசிகர்கள் உண்டு, ஆனால் அவர்களெல்லாம் விஜய் எனும் அரசியல்வாதிக்கு ரசிகனாக இருக்கபோவதில்லை.  எடுத்த எடுப்பில் திராவிடத்தை தூக்கியெறிந்து பேசினால், நிச்சயமாக திராவிட கட்சிகளில் இருக்கும் அவர் ரசிகர்கள் அதை ரசிக்கபோவதில்லை.

சீமான் நிலை அவ்வாறு இல்லை அதனால் அவர் எதையும் உணர்ச்சிவசப்பட்டு பேசலாம், ஒரு கட்சி வளர்ச்சி என்பது எத்தனை கட்டங்களை கொண்டது ஆரம்பத்தில் எத்தனையோ தில்லாலங்கடி செய்துதான் மேலே வருவார்கள் விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல, அவர் ஆரம்பத்திலேயே தன்னோட வாக்கு வங்கியை சிதைக்காமலிருக்கும் பணியை கச்சிதமாய் செய்கிறார் சீமான் வழமைபோல் புறசூழல் எதுபற்றியும் யோசிக்காமல் கொந்தளிக்கிறார்.

பகுத்தறிவு பெரியாரிசம் பேசிய திமுககூட ஒருகாலம் பாஜகவுடன் கூட்டு வைத்தது என்பது அரசியலின் தேவை கருதிய செயற்பாடுகள் என்பது சீமானுக்கு தெரியாமலா இருக்கும், அது என்னமோ அவர்கள் விருப்பம்

7 hours ago, island said:

ஓம்…ஆனால் திமுக -பிஜேபி கூட்டணியால் இன்றும் திமுக பழியை சுமக்கிறது. அது சரிதான்.

விஜை எல்லோரையும் இழுக்கிறார். ஆகவே அவர் 60% திராவிட கொள்கை ஆதரவு வாக்கு வங்கியை ஏன் கைவிடப்போகிறார்?

இறங்கி வர வேண்டியது சீமான், என்ற நிலையை விஜை வலிந்து உருவாக்கியுள்ளார்.

5 hours ago, பகிடி said:

அப்படி முடியாத பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த பழியை இவ்வளவு காலம் சுமக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது 

100%

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் புதிதாக பாடம் சொல்லிக் கொண்டே போகிறார்கள். எழுத்தை பார்த்தால் எல்லாமே புரியும் இவர்கள் முயல் பிடிக்கும் நாய்கள் அல்ல என்பது. 

தமிழர்களுக்கான தாகத்தை நாம் மட்டுமே போராடிப் பெற வேண்டும் என்பது தான் கனவும் நிலைப்பாடும். யாருடைய தயவிலோ அல்லது தட்டில் வைத்து பெறுவதோ நோக்கமாக ஒரு போதும் இருந்ததில்லை. 

கருணாநிதி எம் இனத்தின் ஒரு பகுதியை ஆண்ட தமிழர் தலைவர் என்ற முறையில்,  கடமையில் தன்னால் முடிந்ததை செய்யவில்லை மாறாக அதை தனது மாகாணத்திற்காக கூட அல்ல தனது சுயநலத்திற்காக குடும்பத்திற்காக எம் இனத்தின் அழிவை பயன்படுத்தி கொண்டார். அதேநேரம் எம்மை கடைசிவரை காப்பாற்றுவதாக நாடகமாடினார். மறக்க முடியாத துரோகம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

இக்கருத்துடன் எள்ளளவும் மாறுபட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி @ரசோதரன் @வாலி

இந்த திரி திசை திருப்பபடும் முன், கஸ்தூரி. ஏன் தன்னை நாடார் என்றும், பிராமணர் என்றும் அடையாளப்படுத்துகிறார் என நாம் கதைத்தோம்.

இந்த பேட்டியில் ஏஸ் வி சேகரும் நாடார்…என எதுவோ சொல்ல வந்து விட்டு…பின்னர் அப்படியே விட்டு விடுகிறார்.

இந்த பேட்டியில் ஒன்று தெரிந்து கொண்டேன். இப்போ கஸ்தூரி தெலுங்கில் செம பிசியான நடிகையாம்🤣. இந்த பேச்சுக்கு பிறகு🤣🤣🤣.

லூசு கூ முட்டைன்னு கேள்விபட்டிருக்கேன்…இந்தளவுக்குன்னு தெரியல்ல🤣.

பிகு

ஆங்கிலத்தில் zeal of the convert என்பார்கள்.

கிறிஸ்தவ மதத்தில் பரம்பரையாக பிறந்தவன் சும்மா இருக்க, முந்தநாள் மதம் மாறியவன் -  ஆ..ஊ…பிரசாதம் பேய்க்கு படைத்தது என பேயோட்டுவார்கள். இதைத்தான் அப்படி சொல்வார்கள்.

இந்த சாதி, இன விடயத்திலும் இதை காணலாம்….

தமிழனாக பிறந்து, தமிழருக்கு போராடி, தமிழருக்காக குடும்பத்துடன் சாவடைந்த தலைவர் நான் தமிழண்டா என ஒரு போதும் இன இறுமாப்பு பூண்டதில்லை.

ஆனால் தெலுங்கு வம்சாவழி கருணாநிதி, மலையாள வம்சாவழி எம் ஜி ஆர், மலையாள வம்சாவழி சீமான் தமிழ் தமிழ் என கதறுவது மட்டும் இல்லாமல், ஏனையோருக்கும் இனத்தூய்மை டெஸ்ட் எடுப்பார்கள்.

கஸ்தூரியும் இப்படித்தான். அவரே நாயர், நாடார் என பலதும் கூறுகிறார்கள். தானே நாடார் என தொனிபட எழுதியுள்ளார், கணவன் தெலுங்கு வழி என்கிறார்.

ஆனால் நான் பிராமணண்டா என உதார் விடுகிறார்….அக்மார்க் பிராமணன் எஸ் வி சேகர் - எல்லோரும் மனிதர்தான் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2024 at 15:16, goshan_che said:

இது முழுக்க முழுக்க இப்போ நீங்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்காக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.

புலிகள்,

ஈழத்தில் தமிழ் தேசியம்.

தமிழகத்தில் திராவிடம்.

அவரவர் நிலத்தில் அந்தந்த கொள்கை என உணர்ந்து அந்த வரையறைக்குள்தான் நிண்டார்கள்.

தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும்  அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல்   கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட  என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம்  தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்) 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த  போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, புலவர் said:

நான் சொன்னதுக்கு இது பதில் இல்லையே புலவர்.

நான் சொன்னது புலிகள் காலத்தில் இருந்த திக, புலிகள், திராவிட, தமிழ் தேசிய சித்தாந்த ஒன்றியவாழ்தல் (symbiotic relationship) பற்றி.

இந்த வரலாற்றைத்தான் நீங்கள் நா.த.க நிலைப்பாட்டுக்கு ஏற்ப புனைய முனைந்தீர்கள் என்பது என் கூற்று.

அதை மறுத்துரைக்காமல்…சி.பா.ஆ…என்று புலிகளுக்கு முந்தியதையும், அம்மா மு.க. என புலிகளுக்கு பிந்தியதையிம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள்.

தவற விட்டிருந்தால் மீண்டும் என் கேள்வி கீழே.

On 9/11/2024 at 10:14, புலவர் said:

மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று  சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின்  கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.

👆இது உங்கள் கூற்று.

👇இது அதுக்கான என் கேள்வி. 

இதற்கான பதிலை அல்லவா நீங்கள் தரவேண்டும்.

On 9/11/2024 at 15:16, goshan_che said:

இது முழுக்க முழுக்க இப்போ நீங்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்காக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.

புலிகள்,

ஈழத்தில் தமிழ் தேசியம்.

தமிழகத்தில் திராவிடம்.

அவரவர் நிலத்தில் அந்தந்த கொள்கை என உணர்ந்து அந்த வரையறைக்குள்தான் நிண்டார்கள்.

தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் இனத்தவனை, எம் தலைவனை அடையாளப்படுத்துபவர்களைத்தான் நாம் ஆதரிக்க முடியும். வழிகாட்டியாக  இருந்த எம் தலைவனை அடையாளபடுத்தாதவர்களை  நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நான் சொன்னது புலிகள் காலத்தில் இருந்த திக, புலிகள், திராவிட, தமிழ் தேசிய சித்தாந்த ஒன்றியவாழ்தல் (symbiotic relationship) பற்றி.

இந்த வரலாற்றைத்தான் நீங்கள் நா.த.க நிலைப்பாட்டுக்கு ஏற்ப புனைய முனைந்தீர்கள் என்பது என் கூற்று.

புலிகள் காலத்தில்தான். ஐயா நெடுமாறன் அவர்கள் உலகத்தமிழர் தமிழர் இயக்கத்தை தலமையேற்று நடத்தினார். அது இன்றும் இருக்கிறது.. புலிகள். தமிழக கட்சிகளுடன் முரண்படாத ஒ நிலமையைுயே பேணிவந்தனர். அவர்களது ஆதரவாளர்கள் எல்லாக் கட்சிகளலும் இருந்தார்கள்.
புலிகள் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக இருந்தார்கள். அது தமிழக கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். புலிகளின் ஆரம்ப கால மாவீரர்நாள்  போன்ற நிகழ்வுகளுக்கு கி வீரமணி.வைுகோ  போன்ற திராவிடத்தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பிந்தைய காலங்களில் அவர்களை அழைப்பதைத் தவிர்த்திருந்தார்கள். பாலா அண்ணை கூட இதை ஒரு மேடையில் இதைச் சொல்லியிருந்தார். முந்தி இந்தியாவில் இருந்து சின்ன மேளங்களை இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டதாகவும் இப்பொழுதுதான் தான் உள்ளுர் தலைவர்களுக்கு  சந்தர்பம் கிடைப்பதாகவும் ஒரு மாவீரர்நாள் மேடையில் சொல்லியிருந்தார்.உண்மையில் திராவிட கழகத்தினர் பெரியாரின் கருத்துக்களை தமிழ்ஈழ விடுதலை இயக்கங்களுக்கூடாக பரப்பலாம் என்று பகற்களவு கணடனர். ஏனென்றால் வடுதலை இயக்கங்'களின் சோசலிச சமதர்ம தமிழீழம் என்ற கோட்பாட்டை ரஸ்ய சார்பான கொள்கையாகவே அவர்கள் நம்பினர். புலிகள் மதவழிபாட்டில் தலையிடவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையே பெரியாரின் பிரதான கொள்கை.அதை திராவிட இயக்கங்களே மதிப்பதில்லை. ஜெயயலலிதா கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டாலும். அவர் மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்.கடவுள்மறுப்புக் கொள்கைக்கு எதிரானவர். அவரால் அதிமுகவை இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்க முடிந்தது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர் தனிமனித  ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்துகிறார்களே தவிர கடவுள்பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையைுயோ பகுத்தறிவுக்கொள்கையையோ அஏற்று கொள்கை வழியில் தங்கள் தலைவர்களைத் தேடவில்லை. இப்பொழுது நாம்தமிழர் கட்சி மட்டும்தான் கொள்கை வழியில் மக்களை அணிதிரட்டுகிறது.பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற முக்கி கொள்கையைக்கூட தூக்க எறிந்து விட்டு பார்ப்பனரான ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.நடைமுறையில் இல்லாத பெயரளவில் இருக்கின்ற திராவிடத்தைப் பற்றி புலிகள் கருத்திற்கெடுக்கவில்லை. தங்கள் கொள்கைகளில் திராவிடம் இல்லாதவாறு கவனமாக இருந்தார்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எம் இனத்தவனை, எம் தலைவனை அடையாளப்படுத்துபவர்களைத்தான் நாம் ஆதரிக்க முடியும். வழிகாட்டியாக  இருந்த எம் தலைவனை அடையாளபடுத்தாதவர்களை  நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.

எங்களுக்கு தலைவர் பிரபாகரன்தான் வழிகாட்டி பெரியார் அல்ல. அந்தத் தலைவனை வழிகாட்டியாக கொண்டு கட்சி நடத்தும் சீமானை ஆதரிக்காமல் பெரியாரை ஏன்வழிகாட்டியாக கொள்கைத் தலைவனாக கொண்டவர்களை நாம் பின்பற்ற வேண்டும்?
விஜய் தன்கட்சிக்கு திராவிடத்தேசிய தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம். அதில் திராவிடம்>தமிழ்>மற்றும் தேசியம் என்ற சொற்கள் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.