Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன்

அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று  கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ...

எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள்,  இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன்

பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள்.

மா

எலுமிச்சை 

அவகாடோ

தக்காளி & கத்தரி ஒட்டுமுறை 

பப்பாசி 

கொய்யா

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 hours ago, valavan said:

எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள்,  இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன்

மிகவும் அழகாக இருக்கின்றது........... அதனாலேயே நம்ப முடியாமல் இருக்கின்றது.

ஒட்டு நாவல் மரம் ஒன்று இங்கு வீட்டில் வைத்திருக்கின்றோம். முதல் வருடத்திலிருந்தே நன்றாகவே காய்க்கின்றது, தாய் மரம் வேறொரு வீட்டில் காய்த்துக் கொண்டு நின்றதே. ஆனாலும் வீட்டில் மரத்தின் புதிய கிளைகள் சவண்டு சவண்டு விழுகின்றன. அந்த மரத்தை ஓரளவு தான் எங்களால் ஏமாற்ற முடிந்துள்ளது போல...............🤣

Edited by ரசோதரன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, யாயினி said:

உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️

எது யாயினி என்னோடதா?

நானெல்லாம் வைச்சா ஒரு நக காளான்கூட முளைக்காது அவ்வளவு ராசி.

அந்த யூடியூப் தளக்காரர் ஏராளமான பதிய முறை மற்றும் ஒட்டுமுறையை தரவேற்றியிருக்கிறார். பிரமிப்பாகவும் அனைத்தையும் பார்வையிடவேண்டுமென்ற ஆவலையும் தூண்டியது.

19 minutes ago, ரசோதரன் said:

ஒட்டு நாவல் மரம் ஒன்று இங்கு வீட்டில் வைத்திருக்கின்றோம். முதல் வருடத்திலிருந்தே நன்றாகவே காய்க்கின்றது, தாய் மரம் வேறொரு வீட்டில் காய்த்துக் கொண்டு நின்றதே. ஆனாலும் வீட்டில் மரத்தின் புதிய கிளைகள் சவண்டு சவண்டு விழுகின்றன

அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, valavan said:

அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.

என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே.

இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன.

பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............  

Edited by ரசோதரன்
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ரசோதரன் said:

பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன..........

சொல்லவே இல்லை.

இதுக்காகவே வரணும்.

  • Haha 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எத்தனையோ பயிரிடு முறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்

ஆனால் கொக்கோகோலாவிற்குள் வைத்து அதிவேகமாக எலுமிச்சை மரத்தை உருவாக்கலாம் என்று இவர் சொல்கிறார் , புதுசா இருக்கு. 

கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது  தப்பென்பதால் இணைக்கிறேன். 

இது வாழை மரம்

Edited by valavan
மேலும் ஒரு காணொலி சேர்ப்புக்காக.,,
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல பலனுள்ள பதிவுகள் சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது, முன்பு சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி அது சரிவரவில்லை, இந்த காணொளிகளை பார்த்துவிட்டு தற்போது முதற்தடவையாக இந்த ஒட்டு வேலை செய்வதற்கான கத்தியினை இணையத்தில் வாங்கியுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, vasee said:

சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது

நீங்கள் சொல்வது உண்மைதான் வசீ ,

சில செடிகள்  பயன்தரு மரங்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் இறுதிவரை பயன் தராமலே கருகி போய்விடுகின்றன ,இவர்கள் தகவல்கள் முயற்சிகள் வேறு தரத்திலுள்ளன. முயன்றுதான் பார்ப்போமே என்று எண்ண தோன்றுகிறது.

நாமெல்லாம் தண்டுகள் விதைகளை  வைத்தே சில செடிகளை உருவாக்குவோம், ஆனால் இலைகளை வைத்தே மாமரம் கொக்கோகோலா உதவியுடன் மிகவும் குள்ளமாக உருவாக்கலாமென்று இவர் கூறுகின்றார் 

இது இன்னொருமுறை

குள்ளமான செடிகளென்பதால் குளிர்காலங்களில் வெயில் படும்படியா வீட்டினுள்ளே வைத்தும் பரமரிக்கலாம் போல இருக்கிறது

இது வேகமாக ஆரோக்கியமான ரோஜாக்களை உருவாக்கும்முறை, வீடியோவின் இறுதியில் அவர் தனது குழந்தைகளை அணைத்தபடி நின்றபோது எது ரோஜா எது குழந்தைகள்  என்று குழப்பமா போனது 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

பூவரசு மரமும் கத்தரியும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைகள் அல்ல, சுண்டைக்காய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் Solanaceae family குடும்பத்தினை சேர்ந்தது, சும்மா நீங்கள் என்னைக்கலாய்க்க இவ்வாறு கூறுகிறீர்கள் என கருதுகிறேன், நான் உங்களவிற்கு படித்த நபர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/11/2024 at 05:41, valavan said:

கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது  தப்பென்பதால் இணைக்கிறேன். 

பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣.

குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது.

இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக்  கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன.

சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்..............

இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............             

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/11/2024 at 01:49, ஈழப்பிரியன் said:

சொல்லவே இல்லை.

இதுக்காகவே வரணும்.

துலைஞ்சான் ரசோதரன்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

பூவரசு மரமும் கத்தரியும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைகள் அல்ல, சுண்டைக்காய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் Solanaceae family குடும்பத்தினை சேர்ந்தது, சும்மா நீங்கள் என்னைக்கலாய்க்க இவ்வாறு கூறுகிறீர்கள் என கருதுகிறேன், நான் உங்களவிற்கு படித்த நபர் அல்ல.

சுண்டைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டுவதன் நோக்கம் ஒட்டுக்கத்தரி சுண்டைங்காய் மரம் போல பெரிதாக வளர்ந்து 3 அல்லது 4 வருடங்கள் வரை பயன் தரும், அதே போல தக்காளியினையும் ஒட்டலாம்.

3 hours ago, குமாரசாமி said:

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

பூவரசினை ஒட்ட முடியாது எனவே கருதுகிறேன், நீங்கள் விளையாட்டாக கூறுவதாக முதலில் நினைத்தேன் ஆனால் உண்மையாக நீங்கள் முயன்றிருக்ககூடுமோ என  தற்போது கருதுகிறேன், எந்த முயற்சியும் தவறல்ல ஒரு அனுபவம் மட்டுமே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, vasee said:

நீங்கள் விளையாட்டாக கூறுவதாக முதலில் நினைத்தேன் ஆனால் உண்மையாக நீங்கள் முயன்றிருக்ககூடுமோ என  தற்போது கருதுகிறேன்,

உவன் செய்தாலும் செய்யக்கூடிய ஆள் எண்ட பீலிங்...😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/12/2024 at 07:24, ரசோதரன் said:

பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣.

குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது.

இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக்  கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன.

சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்..............

இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............             

வாழை பொத்தி வெளி வரும் போது, சாம்பல் அல்லது பொட்டாசியம், தேயிலை சாயாம் இவற்றை  வாழைக்கு ஊத்திவிடுங்கள் நன்றாக குலை தள்ளும்👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, உடையார் said:

வாழை பொத்தி வெளி வரும் போது, சாம்பல் அல்லது பொட்டாசியம், தேயிலை சாயாம் இவற்றை  வாழைக்கு ஊத்திவிடுங்கள் நன்றாக குலை தள்ளும்👍

👍...............

பயன்படுத்திய தேயிலையை ஒரு சின்ன மலையாக வீட்டில் குவித்து வைத்திருக்கின்றார் பொறுப்பாளர்...... இப்பொழுது தான் காரணம் புரிகின்றது...............🤣.  

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.