Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா

15 DEC, 2024 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது.

உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும்.

அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும்.

https://www.virakesari.lk/article/201358

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

ரசோதரன்

🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

ரசோதரன்

பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்தியா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய துடுப்பாட்டக்காரர்களினால் Gabba போன்ற உயிர்ப்பான ஆடுகளங்களில் பெரிதாக சாதிக்கமுடியாது. மட்டையான ஆடுகளங்களில் வெளுத்து வாங்குவார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 4/12/2024 at 23:20, vasee said:

இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

Expand  

இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கடும் நெருக்கடியில் இந்தியா

16 DEC, 2024 | 02:28 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா, மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1612__josh_hazlewood.png

முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க, இந்தியா 394 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (4), ஷுப்மான் கில் (1), விராத் கோஹ்லி (3), ரிஷாப் பான்ட் (9) ஆகிய நால்வரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் நடையைக் கட்டினர்.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

1612__mitchell_starc.png

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது.

தனது துடுப்பாட்டத்தை 45 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

1612__alex_carey.png

ட்ரவிஸ் ஹெட் (156), ஸ்டீவன் ஸ்மித் (101) ஆகிய இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தில் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

43ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா இப் போட்டியில் தனது 12ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். 

https://www.virakesari.lk/article/201416

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிப் பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்தது.

pumra-kapildeve.jpg

இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்தனர். மேலும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களுடனும் ஸ்டார்க் 7 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12வது முறையாகும். அதே சமயம் அவர் ஆசிய கண்டத்துக்கு வெளியே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய பவுலர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

https://thinakkural.lk/article/313804

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா

17 DEC, 2024 | 04:52 PM
image
 

 (நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது.

பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து  இந்தியா  தொடர்ந்தது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார்.

ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது.

ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1712_kl_rahul__ind_vs_aus_3rd_test.png

1712_akash_deep_and_jasprit_bumrah_save_

https://www.virakesari.lk/article/201530

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினம் கொண்ட சிங்கத்த சாய்த்து போட்டீர்களே...

mnb.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா?

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரிஸ்பேனில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

கடைசி நாளான இன்று பிற்பகலுக்கு பின் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 3வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்டின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர் பும்ரா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

கடைசி நாளில் என்ன நடந்தது?

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 260 ரன்கள் சேர்த்து பாலோ-ஆனைத் தவிர்த்தது. 185 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், 2.1 ஓவர்களில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்டநேரமாகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. மைதானத்தில் வெளிச்சமும் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை முடிப்பதாக நடுவர்கள் அறிவித்தனர்.

கடைசி நாளான இன்று வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 8 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவின் வியூகம் என்ன?

இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய பின், விரைவாக ஒரு பெரிய ஸ்கோரை அடித்து பெரிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். கடைசி நாளில் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதிரடியாக பேட் செய்து, ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ஆடினர்.

புதிய பந்தில் ஆடுகளம் வேறுவிதமாக செயல்படும் என்பதைத் தெரிந்தும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் பேட் செய்தனர். 18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மீதமுள்ள 54 ஓவர்களில் 275 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்திய அணியை சுருட்ட ஆஸ்திரேலிய அணி வியூகம் அமைத்தது. ஆனால், மழை காரணமாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது.

அடுத்ததாக வரும் 26-ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பாக்ஸிங் டே டெஸ்டை எதிர்பார்க்கிறோம்'

போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "போட்டியின் இடையே மழையின் இடையூறுகள் இருந்தன. மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் மெல்போர்ன் டெஸ்டை எதிர்கொள்வோம். அணியில் ஏதாவது ஒருவீரர் நிலைத்து நின்று, ஆட்டத்தை கொண்டு செல்ல விரும்பினோம்.

ஜடேஜா, ராகுல் இருவரும் பொறுப்புடன் பேட் செய்தனர். பந்துவீச்சில் பும்ரா, ஆகாஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆகாஷ் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் என்றாலும், பல விஷயங்களை ஆகாஷ் கற்றுக்கொடுத்தார். மற்ற 2 பந்துவீச்சாளர்கள் அவருக்கு துணையாக இருந்து அவருக்கு உதவி செய்தனர்" எனத் தெரிவித்தார்

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இரு அணிகளின் நிலையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இந்திய அணி 17 போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி ,2 டிராவுடன் 114 புள்ளிகளுடன் 55.89 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 106 புள்ளிகளுடன், 58.89 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் 76 புள்ளிகளுடன், 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி 3-வது முறையாக தகுதி பெறுமா?

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 3வது முறையாக விளையாட அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60க்கு மேல் உயரும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அந்த அணியால் பைனலுக்கு தகுதி பெற இயலாது.

இந்திய அணி அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். அதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை இலங்கை டிரா செய்தால் இந்திய அணி பைனலுக்குச் செல்லும். இந்திய அணி கடைசி இரு டெஸ்ட்களிலும் தோற்றால் பைனல் வாய்ப்பு சாத்தியமில்லை.

ஒருவேளை கடைசி இரு டெஸ்ட்களில் இந்திய அணி ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோல்வி அடைந்தால். இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை 2-0 என தோற்கடிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால், இந்திய அணி பைனலுக்குச் செல்லும்.

தென் ஆப்பிரிக்க அணி பைனலுக்குள் செல்ல ஒரு வெற்றி மட்டுமே தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் தென் ஆப்பிரிக்கா பைனலுக்குச் சென்றுவிடும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை இழந்தால், இந்திய அணி பைனலுக்குள் செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டும் பெற்றால் போதுமானது. இலங்கை-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு பைனலில் ஆடும் 2வது அணி யார் என்பதை முடிவு செய்யும்.

ஆதலால், இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால்கூட பைனலுக்கு முன்னேறலாம். ஆனால், அதற்கு பிற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியிருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரத் அணிக்கு வாய்ப்பே இல்லை! பொக்ஸிங் டே மட்சில் பாரத் அணியை காடாத்துறம் இருந்து பாருங்கோ!😂




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.