Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20241121-185709-Chrome.jpg

 

  • Replies 55
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • வைரவன்
    வைரவன்

    சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    கன  பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது.   😂 🤣 

  • கருத்துக்கள உறவுகள்

கன  பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது.   😂 🤣 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலவு காத்த கிளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கன  பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது.   😂 🤣 

அதென்டால் உண்மை தான் த‌மிழ்சிறி அண்ணா...................Twitter அதிரும் போது  யாழ்த‌ள‌மும் அதிர‌க் கூடும்😁............................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

அதென்டால் உண்மை தான் த‌மிழ்சிறி அண்ணா...................Twitter அதிரும் போது  யாழ்த‌ள‌மும் அதிர‌க் கூடும்😁............................

பையா… படத்தைப் பார்த்த ஆட்கள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள் போலுள்ளது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை… “போட்டோ ஷொப்” என்று சொல்லி  ஒரு குறூப் உருட்டிக் கொண்டு வருவார்கள், பையன். 😂

உருட்டுபவர்கள்…. “கை”  உழையும் மட்டும், நல்லாய் உருட்டட்டும். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்தை… “போட்டோ ஷொப்” என்று சொல்லிக் கொண்டும் ஒரு குறூப் உருட்டிக் கொண்டு வருவார்கள், பையன். 😂

உருட்டுபவர்கள்…. கை உழையும் மட்டும், நல்லாய் உருட்டட்டும். 🤣

போட்டோ ஷொப் அவ‌தூறு எடுப‌டாது அண்ணா................முன்ன‌னி ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ உண்மை த‌க‌வ‌ல் ஆன‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் க‌ம்ம‌ன்னு இருப்பார்க‌ள்

என்ன‌ இனி வேறு மாதிரி ப‌ழைய‌ க‌தைய‌ அவுட்டு விடுவின‌ம்

சீமான் ர‌ஜ‌னியின் அர‌சிய‌ல் வ‌ருகைய‌ எதிர்த்தார் இப்போது ர‌ஜ‌னி கூட‌ ச‌ந்திப்பா என‌ ஹா ஹா 

ஒரு வ‌ரி போய் ஓர‌மாய் நின்று குரையுங்கோ என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்

 

வைக்கோ திருமாள‌வ‌னை விட‌ சீமான் கேடு கெட்ட‌ அர‌சிய‌ல் செய்ய‌ வில்லை😁...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நந்தன் said:

இலவு காத்த கிளி

ஐயா! சொல்ல வருவது என்ன?

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல திரிகளில் கொமெமெண்ட் போட்டு கதறடிப்போம்…….

அந்த அடியின் தாக்கம்…..

சில திரிகளில் நாம் ஏதும் எழுதாமலே அவர்களாகவே திரி திறந்து கதற வைக்கும்.

——————

சீமான் சந்தித்தது யாரை? ஒரு அரசியல் அநாதையை, துக்கடா பீசை.

ஒரு வெற்றிபட நடிகரும், ஒரு தோல்விபட இயக்குனரும் சந்தித்துள்ளனர். 

இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கத்தேவையில்லை.

———————

சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்து, சந்திப்பில் கூட இருந்தவர் ரவீந்திரன் துரைசாமி.

இவர் ஒரு சங்கி.

2024 இல் ரஜனியை மோடிக்கு ஆதரவாக பேசும்படி கேட்டேன் என அவரே கூறுகிறார்.

ஏ டீமிற்கு முன்பு வரவிருந்த பிளேயரை, பி டீம் கேப்டனுடன் பேச வைத்துள்ளார்.

இதன் எதிர்கால திட்டம் என்ன என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன்.

அமித்ஷா ஏ டீமை, பி டீமுடன் இணைக்கும் முடிவுக்கு வந்து விட்டார் போல இருக்கு.

 

23 hours ago, நந்தன் said:

இலவு காத்த கிளி

செத்த கிளிகள் இரெண்டு

இனி

சிங்காரிச்சா என்னா

சிங்காரிக்காட்டி என்ன 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ரஜனியைச் சந்தித்தது அரசியல் ரீதியானது ரஜனி சுpமானை சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழத்துச் சால்ல விரும்பியதாகவும் அப்போது  தடைப்பட்ட சந்திப்பு காரணமாக ஒரு புகழ்பெற்ற கலஞைன் தானே சந்திக்க வருவதாக வீரும்பியிருந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் அது குறித்து கவலைப்பட்த் தேவையில்லை. கமலகாசன் கட்சி துவங்கி வாழத்துப்பெற சீமான் வீட்டுக்கு வருவதாகச் சொன பொழுதும் நீங்கள் வரு வேண்டாம் நானே வருகிறேன் என் நேரில் போய் வாழ்த்து தெரிவித்த மாதிரி என்று எடுத்து கொள்கிறேன். மற்றும் படி ரஜனியோடு அரசியல் தொடர்பாக ரஜனியுடன் நேரடியாகஇணைந்து செயற்படுவது தொடர்பாக பேசியிருந்தால்  அதை நான் விரும்பவில்லை. அது சீமானின் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று எச்சரிக்கிறேன். ரஜனி மறைமுகமான ஆதரவைத் தெரிவிப்பது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2024 at 13:14, நந்தன் said:

இலவு காத்த கிளி

கிளி அல்ல, கிளிகள். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சீமான் ரஜனியைச் சந்தித்தது அரசியல் ரீதியானது ரஜனி சுpமானை சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழத்துச் சால்ல விரும்பியதாகவும் அப்போது  தடைப்பட்ட சந்திப்பு காரணமாக ஒரு புகழ்பெற்ற கலஞைன் தானே சந்திக்க வருவதாக வீரும்பியிருந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் அது குறித்து கவலைப்பட்த் தேவையில்லை. கமலகாசன் கட்சி துவங்கி வாழத்துப்பெற சீமான் வீட்டுக்கு வருவதாகச் சொன பொழுதும் நீங்கள் வரு வேண்டாம் நானே வருகிறேன் என் நேரில் போய் வாழ்த்து தெரிவித்த மாதிரி என்று எடுத்து கொள்கிறேன். மற்றும் படி ரஜனியோடு அரசியல் தொடர்பாக ரஜனியுடன் நேரடியாகஇணைந்து செயற்படுவது தொடர்பாக பேசியிருந்தால்  அதை நான் விரும்பவில்லை. அது சீமானின் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று எச்சரிக்கிறேன். ரஜனி மறைமுகமான ஆதரவைத் தெரிவிப்பது வேறு விடயம்.

“ரஜினியை நான் சந்தித்து பேசியதும் அரசியலே!” - சீமான் விவரிப்பு.

https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1340666-it-was-all-about-politics-seeman-about-rajinikanth-meeting.html

  • கருத்துக்கள உறவுகள்

————————-

2 மணிநேரம் நடந்த சந்திப்பு.. ரஜினி வைத்த விருந்து.. சீமான் பேசியது என்ன? ரவீந்திரன் விளக்கம்

Kadar KarayUpdated: Friday, November 22, 2024, 16:41 [IST]
 

rajinikanth seeman

தமிழக அரசியல் வட்டாரத்தில் சீமான் நேற்று ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியதுதான் ஹாட் டாப்பிக் ஆக வலம் வர தொடங்கி இருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிக்க இருந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சித்தார் சீமான். அவர் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், எங்களை ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது. அப்படி அவர் அரசியல் கட்சி தொடங்கினால் கடுமையாக அவரை எதிர்ப்போம் என்று சீமான் பேசி இருந்தார். ரஜினி அரசியலை எதிர்த்த சீமான், நடிகர் கமல் கட்சி தொடங்கிய போது அவரை ஆதரித்தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞன் என்றும் கூறியிருந்தார்.

இப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சு எழுந்த நிலையில், திடீரென்று மோடி ஆதரவாளரான ரஜினியை சீமான் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஆகவே, அது பற்றிப் பல வியூகங்கள் வெளியே கசியத் தொடங்கி உள்ளன. இந்தச் சந்திப்பில் ரவீந்திரன் துரைசாமியும் உடன் இருந்துள்ளார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் ரஜினி சந்திப்பின் போது சீமான் என்ன பேசினார்? அங்கே நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் மூத்த நடிகர் ரஜினியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற வேண்டும் என்பது சீமானின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது பிறந்தநாள் போது ரஜினி படப்பிடிப்பிலிருந்தார். அதேபோல் சீமான் அப்போது பயணத்திலிருந்தார். அந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காமல் போய்விட்டது. நேற்று ரஜினியும் சீமானும் சந்திப்பதற்காகக் கால அவகாசம் இருந்தது. ஆகவே, ரஜினி அழைத்தார். அதனடிப்படையில் சீமான் சந்திப்பு நடந்தது.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். சுமார் இரண்டரை மணிநேரம் பேசினார்கள். அதில் பல விசயங்கள் இருந்தன. நானும் அவர்கள் கூடவே இருந்தேன். அதில் முக்கால் மணி நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர். ரஜினி முற்றாக அரசியல் வாழ்க்கையிலிருந்து 2022இல் விலகினார். அதன்பின் பலரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எந்த அணியை ஆதரிக்கவேண்டும்? என ஒரு அறிக்கை வெளியிடச் சொல்லி பலரும் ரஜினியை வற்புறுத்தினார்கள். அப்போது நான் அவரிடம், "நீங்கள் இப்போது பொதுவான மனிதர். எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவது நல்லது அல்ல" என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றார்.

 

rajinikanth seeman

கடந்த 2024இல் மோடியை ஆதரித்து மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுங்கள் என அவர் தாதா சாஹேப் பால்கே விருது விழா பெற வந்த போது கேட்டுக் கொண்டேன். அப்போது, '2021இல் அனைவருக்கும் பொதுவானவராக இருங்கள் என்று சொன்னீர்கள். இப்போது மோடிக்கு ஆதரவாக அறிக்கை விடச் சொல்கிறீர்கள். நான் பொதுவான நபராக இருந்து விடுகிறேன். என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்'என்றார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன்.

சீமானின் சந்திப்பில் விஜய் அரசியல் பற்றி எதையும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வராததால், அவரது முகத்தில் ஒரு பொலிவும் தெளிவும் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அது உங்கள் முகத்தில் வெளிப்படுகிறது. அரசியலுக்கு வந்திருந்தால் தாக்குப்பிடிப்பது கஷ்டம். நாங்கள் அரசியல் களத்தில் காட்டான் போலக் கிடந்து கஷ்டப்படுகிறோம். நீங்கள் விலகியது நல்லது என்று சொல்லி ரஜினியை சீமான் பாராட்டிப் பேசினார்.

அதற்கு ரஜினி, 'என்னைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை. அதைப்போல் உங்களைத் தூக்கிவிட யாரும் இல்லை. அதை எல்லாம் கடந்து நீங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டீர்கள்'என்று சீமானிடம் ரஜினி சொன்னார். அப்போது வரும் 2026 தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக சீமான் சொன்னார். ரஜினி அதிகம் அரசியல் பேசவில்லை. அவர் சீமான் சொன்னதை முழுக்க அப்படியே பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்.

ரஜினிக்கும் சீமானுக்கு பொதுவான நண்பர்களான பாரதிராஜா, சீமான், இளையராஜா எனப் பலரைப் பற்றி பொதுவான விசயங்களை சீமான் பேசினார். ரஜினி நடிப்பில் வெளியான 'முள்ளும் மலரும்' படத்தில் தனக்குப் பிடித்த பல காட்சிகளை சீமான் இந்தச் சந்திப்பில் சொன்னார். பாட்சா படத்தில் 'உண்மையைச் சொன்னேன்' என ரஜினி பேசிய வசனத்தைச் சீமான் தனக்குப் பிடித்த வசனம் என்றும் சொன்னார்.

கூடவே ரஜினியின் உடல்மொழி, வசன உச்சரிப்பு எனப் பல நுட்பமான விசயங்களைச் சுட்டிக்காட்டி சீமான் ரசித்துப் பேசினார். அதை ரஜினி அவ்வளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 'வேட்டையன்' படத்தின் கான்செப்ட் தனது கொள்கைக்கு நெருக்கமானதாக இருந்ததைச் சீமான் சொன்னார். இந்தச் சந்திப்புக்கு முன்பு ரஜினி ஒரு விருந்து கொடுத்தார். அந்த உபசரிப்புக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே தொடர்ந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/the-meeting-that-lasted-2-hours-the-party-hosted-by-rajini-what-did-seeman-say-ravindran-durais-656425.html

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இந்தச் சந்திப்பில் ரவீந்திரன் துரைசாமியும் உடன் இருந்துள்ளார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ரவீந்திரன் யார் 👆👇

 

4 minutes ago, goshan_che said:

கடந்த 2024இல் மோடியை ஆதரித்து மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுங்கள் என அவர் தாதா சாஹேப் பால்கே விருது விழா பெற வந்த போது கேட்டுக் கொண்டேன்

 

6 minutes ago, goshan_che said:

நானும் அவர்கள் கூடவே இருந்தேன். அதில் முக்கால் மணி நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர்.

@புலவர் இன்னும் கொஞ்ச காலம்தான் பொறுமையாக இருந்து விட்டு….பின்னர் கோசான் பல வருடங்கள் முன்பு சொன்னது பலித்து விட்டது என ஒத்து கொள்ளலாம்.

👇

1 hour ago, புலவர் said:

அதை நான் விரும்பவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ரஜினி நடிப்பில் வெளியான 'முள்ளும் மலரும்' படத்தில் தனக்குப் பிடித்த பல காட்சிகளை சீமான் இந்தச் சந்திப்பில் சொன்னார்

large.IMG_7808.jpeg.442de46760185bc0855f

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7808.jpeg.442de46760185bc0855f

இப்படி ஒன்று இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கின்றது:

சங்கி என்றால் சகதோழன், நண்பன் என்று தான் அர்த்தம் --- சீமான்.

வாராய்............நீ வாராய்........... --- சரத்குமார்.

 

விஜய் மட்டும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு அரசியலுக்கு வரவில்லை. தானும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்ததாகவும் சொல்லியிருக்கின்றார் சரத்குமார்...................😮.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7808.jpeg.442de46760185bc0855f

 மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே…

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

@புலவர் இன்னும் கொஞ்ச காலம்தான் பொறுமையாக இருந்து விட்டு….பின்னர் கோசான் பல வருடங்கள் முன்பு சொன்னது பலித்து விட்டது என ஒத்து கொள்ளலாம்.

👇

காலம் பதில் சொல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி

ஒரு வரியில் சொல்ல முடியுமா?

ஓம்

சங்கியை சந்தித்த monkey

நன்றி சாரே.

 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புலவர் said:

 

என்ன புலவர் இது….

சங்கி இல்லை எண்டு ஒரு பிறவி சங்கி ரங்கராஜ் பாண்டே சொல்லியதை தூக்கி  கொண்டு வர வேண்டிய அளவுக்கு நம்மளை ஆக்கி விட்டதே காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்ன புலவர் இது….

சங்கி இல்லை எண்டு ஒரு பிறவி சங்கி ரங்கராஜ் பாண்டே சொல்லியதை தூக்கி  கொண்டு வர வேண்டிய அளவுக்கு நம்மளை ஆக்கி விட்டதே காலம்.

நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சீமான் ரஜனியைச் சந்தித்தது எனக்கு உடன்பாடில்லை என்பது.ரவீந்திரன் துரைச்சாமி ஒரு பாஜக இ ரஜனி ஆதரவாளர். நாம்தமிழரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர். ஆனால் ரஜனியை அரசியல்ரீதியாக சீமானுடன் இணைக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.