Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

26 NOV, 2024 | 09:16 PM

image

காரைதீவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குழந்தைகளுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் தற்போது காணவில்லை. இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/199782

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை

காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196461

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரைநகர் கிழக்குமாகணத்தின் காரைநகரா?தீவகத்தில் உள்ள காரைதீவு எனப்படும் காரைநகரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, புலவர் said:

காரைநகர் கிழக்குமாகணத்தின் காரைநகரா?தீவகத்தில் உள்ள காரைதீவு எனப்படும் காரைநகரா?

கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு.

நிந்தாவூரிலிருந்து சம்மாந்துறைக்கு போய்க் கொண்டிருந்த போது காரைதீவிற்கு அருகேயுள்ள பாலத்தடியில் இந்த விபத்து நடந்துள்ளது என்று செய்திகளில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

காரைநகர் கிழக்குமாகணத்தின் காரைநகரா?தீவகத்தில் உள்ள காரைதீவு எனப்படும் காரைநகரா?

கிழக்குமாகாணம் அம்பாறையில் இருப்பதுதான் இப்போ காரைதீவு.

யாழ்ப்பாண காரைதீவை பாலம் போட்டதுடன் காரைநகர் ஆக்கிவிட்டார்கள்.

இப்போ நீங்கள் காரைதீவா என அவர்களிடம் கேட்டால் - எதோ கெட்டவார்த்தை பேசியது போல் ரியாக்ட் பண்ணுவார்கள்🤣.

2 hours ago, ரசோதரன் said:

நிந்தாவூரிலிருந்து சம்மாந்துறைக்கு போய்க் கொண்டிருந்த போது காரைதீவிற்கு அருகேயுள்ள பாலத்தடியில் இந்த விபத்து நடந்துள்ளது என்று செய்திகளில் இருக்கின்றது.

தகவலுக்கு நன்றி. காரைதீவில் மதரசா பாடசாலை என்றதும் ஒரு தரம் ஜெர்க் ஆகி விட்டேன்.

அனைவரும் உயிருடன் திரும்ப வேண்டும்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@தனிக்காட்டு ராஜா இது உங்களின் ஏரியாவாச்சே மேலதிக செய்திகள் ஏதாவது தெரியுமா?

எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை - காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், 

இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196492

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் மனவேதனையான செய்தி . ........எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் . .......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

update - உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவம் - காணாமல்போன மற்றுமொரு மாணவனின் சடலம் கண்டுபிடிப்பு 

27 NOV, 2024 | 02:06 PM
image

காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் காணாமல்போனவர்களில் மற்றுமொரு மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டார். 

இதனையடுத்து, மாணவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

அத்தோடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நிந்தவூர் மதரஸா பள்ளியிலிருந்து 11 மாணவர்கள் உழவு இயந்திரத்தின் மூலம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோதே உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காணாமல்போனோர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் ஆவர். 

மேலும், இந்த விபத்தில் உழவு இயந்திர சாரதியும் உடன் பயணித்த மற்றுமொருவரும் கூட இதுவரை மீட்கப்படவில்லை. 

https://www.virakesari.lk/article/199821

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பாறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் காணாமல்போன மாணவர்களில் நால்வர் சடலங்களாக மீட்பு

28 NOV, 2024 | 09:34 AM
image
 

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 6 மாணவர்களில் 4 மாணவனின் சடலங்கள் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி உதவியாளரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் பிரதேசத்தில் இருந்த மதுரசா ஒன்றிலிருந்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (26)  மாலை சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்ட விபத்திற்குள்ளானதையடுத்து வெள்ள நீரில் மூழ்கியதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களைக் கடற்படையினரின் உதவியுடன் புதன்கிழமை (27) தேடும் நடவடிக்கையின் போது 4 மாணவர்களை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர்

இருந்தபோதும் காணாமல் போன இரு மாணவர்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரையும் சீரற்ற கால நிலைக்கும் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/199889

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, ஏராளன் said:

 புதன்கிழமை (27) தேடும் நடவடிக்கையின் போது 4 மாணவர்களை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர்

இருந்தபோதும் காணாமல் போன இரு மாணவர்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரையும் சீரற்ற கால நிலைக்கும் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/199889

உழவு இயந்திரத்தின் சாரதியின் உடல் இன்று காலை கண்டு எடுக்கப்பட்டதாக முகநூலில்  குறிப்பிட்டு இருந்தார்கள்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உழவு இயந்திரம் விபத்து சம்பவம் ; 06 சடலங்கள் மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (27) மாலை வரை  04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார்  பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.தற்போது  வரை 04 ஜனாசாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டிருந்தன. பின்னர் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக மறுநாள் மீட்புப்பணியினை மேற்கொள்ள தயார் செய்யப்பட்டிருந்தது.

image_fc3615f743.jpg
மேலும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன், ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.மேலும்     சம்மாந்துறை  நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட்  அவர்களின்   கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர்  குறித்த சடலங்கள் மீதான  மரண விசாரணை மேற்கொண்ட  பின்னர்   உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் சென்ற தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப் பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

image_efb9091fdb.jpg
செவ்வாய்க்கிழமை (26) அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே  விபத்திற்குள்ளானது.இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த  உழவு இயந்திம் வெள்ள  நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.

குறித்த மீட்புப்பணியில் போது அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.மேலும் இந்த விபத்தில் 06  சிறுவர்கள்  உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.எஞ்சிய  நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.

image_f68f066ddc.jpg
பின்னர் புதன்கிழமை (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2   சடலங்கள்   வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளன.குறித்த மீட்புப்பணிகள் புதன்கிழமை (27)  இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) அதிகாலை மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.

இதன்போது எஞ்சிய இரு சடலங்களும் ஆங்காங்கே கிடந்த நிலையில் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டன.அத்துடன் குறித்த சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

 நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் 
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உழவு-இயந்திரம்-விபத்து-சம்பவம்-06-சடலங்கள்-மீட்பு/150-347912

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக வேதனையான செய்தி!ஆழ்ந்த இரங்கல்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, புலவர் said:

மிக வேதனையான செய்தி!ஆழ்ந்த இரங்கல்!

அந்த மாணவர்களை பாடசாலையில் தங்க வைத்து, வெள்ளம் வடிந்த பின் அனுப்பி இருக்கலாம்.
நிலைமையின் தீவிரத்தை ஒருவரும் சரியாக கணிக்கவில்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் வேதனையான சம்பவம் ... இந்த மழை இன்னும் எத்தனை பேரை காவுகொள்ள இப்படி பெய்கின்றது . ஆனால் வேதனையான விடயம் வடிகால் அமைப்பு என்பது எங்கள் நாட்டில் சீராக இல்லை.

வெளிநாடுகளில் உள்ளமாதிரி அமைத்து மிகையான நீரை நீரேரி செல்லும் படி அமைத்து மிகையானதை கடலுக்கு செல்கின்றமாதிரி அமைக்க வேண்டும் ... எத்தனை பொறியியலாளர்கள் உள்ள எமது நாட்டில் அரசாங்கங்கள் சரியாக இல்லாததால் சரிவர அமைக்க முடியவில்லை.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உழவு இயந்திர விபத்து - காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை

உழவு இயந்திர விபத்த- காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை

அம்பாறை, கரைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் உதவியாளர் காரைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (28) காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்த அவர், வெள்ளச் சூழ்நிலையின் போது பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலை மீறி உழவு இயந்திரத்தில் பணத்திற்காக ஆட்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக காரைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன 4 பாடசாலை மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இரண்டு மாணவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின் போது வவுனியாவில் ஏரி ஒன்றில் நீர் வெளியேற்றத்தை பார்வையிடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், திருகோணமலை யான் ஓயா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நபரும் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மக்கள் ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொள்ளாததன் காரணமாகவே அனர்த்தத்தினால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196552

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பாறை உழவு இயந்திர விபத்து - அதிபர் மற்றும் 4 பேர் கைது

அம்பாறை உழவு இயந்திர விபத்து - அதிபர் மற்றும் 4 பேர் கைது

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாததால், தலைமையாசிரியர் குறித்த உழவு இயந்திரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் பணமும் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.

11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்டதே 6 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196562

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!

சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு உதவியாளர்களையும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மதரசா ஒன்றில் கல்வி கற்றி, மாணவர்கள் சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால், உழவு இயந்திரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, மாணவர்கள் பயணம் செய்யவுள்ள குறித்த வீதியானது மோசமான வானிலையால் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஊழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும் அறிவுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது ஐந்து மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மாணவர்களில் இதுவரை 05 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்காக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மாணவரை தேடும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

New-Project-6-22.jpg?resize=600%2C338&ssl=1

New-Project-5-26.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2024/1410343

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பி வைத்ததன் காரணம் என்ன?

Gayan AbeykoonNovember 29, 2024
Untitled-23-4.jpg

ம்பாறை மாவட்டத்திலுள்ள மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் அகப்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள – மாவடிப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உழவு இயந்திரமொன்று வெள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கிய சம்பவத்தில் உழவு இயந்திர சாரதி, அவரது உதவியாளர் மற்றும் மத்ரஸா மாணவர்கள் 8 பேர் பலியாகியிருந்தனர்.

இந்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி, உதவியாளர் அடங்கலாக 13 பேர் பயணம் செய்திருந்தனர்.

அவர்களில் ஆறு மாணவர்கள், உழவு இயந்திர சாரதி, உதவியாளர் ஆகிய 8 பேர் மரணமடைந்திருந்தனர். உயிரிழந்தோரின் உடல்களில் எட்டாவது உடல் நேற்றுக்காலை மீட்கப்பட்டது.

முழுநாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் ஊடகங்களுக்கான விபரங்களைத் தெரிவித்துள்ளது.

நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாவது:

“எங்களுடைய மத்ரசா நிர்வாகத்தினரும், அதிபர் உட்பட அனைவரும் தீர்மானித்ததற்கு அமைய, அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய போதிய வசதிகள் எமது மத்ரசாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருந்து பராமரிப்பது என முடிவு செய்திருந்தோம்.

ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக எமது காஸிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் விடுதி, வகுப்பறைகள், தொழுகை அறைகள் என்பன மழைநீரினால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் இரண்டு மாணவர்கள் இந்நிலைமை காரணமாக விபத்தை அங்கு சந்திக்க வேண்டி ஏற்பட்டது. மலசலகூட குழிகள் கூட நிரம்பிக் காணப்பட்டன.

இதனால் அடிப்படை வசதிகளைக் கூட மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலைமை எமக்கு ஏற்பட்டது. அதனால் மீண்டும் எங்களுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கூடி முடிவுகளை எடுத்தோம். மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரிக்கு விடுமுறை வழங்கி, மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம்.

இதற்காக பிரத்தியேகமாக ஒரு பஸ்வண்டியினை வாடகைக்கு அமர்த்தி மாணவர்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால் சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற போது, காரைதீவில் இருந்த பாதுகாப்புப் படையினர், பஸ்வண்டியில் அப்பாதையூடாக செல்ல முடியாதுள்ளதாகவும், உழவு இயந்திரத்தின் ஊடாகவே மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் கூறினர்.

அதனையடுத்து மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்புவதற்கு நாங்கள் சம்மதித்தோம். இதனை மாணவர்களுடைய பெற்றோருக்கும் அறிவித்தோம்.

தாங்கள் மறுமுனையில் நிற்பதாகவும், மாணவர்களை அனுப்புமாறும் பெற்றோர் கூறியதன் பின்னரே நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பிவைத்தோம். ஆனால் அந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும்”.

இவ்வாறு நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

Untitled-26-6.jpg

மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னதாக, மத்ரஸா மாணவர்கள் 13 பேரும், உழவு இயந்திர சாரதி, நடத்துனர் ஆகிய இருவர் உட்பட 15 பேர் உழவு இயந்திரத்தில் பயணித்ததாக மத்ரஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்றதும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 7 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து உடனடியாக உயிருடன் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

எஞ்சியோரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நேற்றும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 8 ஆவது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்ட உடல்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆற்றுப் பகுதியானது முதலைகள் அதிகம் நடமாடும் இடமாகும். எனினும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்துமே மீட்கப்பட்டு விட்டன.

இதேவேளை மாவடிப்பள்ளியில் நீரில் மூழ்கியோரைத் தேடும் பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.

அஷ்ரப் கான்…

 

https://www.thinakaran.lk/2024/11/29/featured/99129/மாணவர்களை-உழவு-இயந்திரத்/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் - இதுவரை 08 சடலங்கள் மீட்பு

30 NOV, 2024 | 09:36 AM
image

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட சிலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில்  மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.   

மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது.     

அதன்போது இதுவரை மொத்தமாக 08 பேரின் சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும், சாரதியின் சடலமும், மற்றுமொரு இளைஞரின் சடலமாக மொத்தம் 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 

மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று சனிக்கிழமை (30)  காலை இறுதியாக ஒரு சடலங்கள் மீட்கப்பட்டது.  

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றது. 

மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத  நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன.  

திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டு வருகின்றன. 

https://www.virakesari.lk/article/200054

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்ரஸா மாணவர்கள் மரணத்துக்கு முப்படையினரே காரணம் – ஹக்கீம்

November 30, 2024
04-15-696x323.jpg
 

“காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் வெள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி (மத்ரஸா) மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்தது”- இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுடன் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்புகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்ததாக ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாலத்துக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் பாதையை மூடாமல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தமையானது பொறுப்பற்ற செயல்பாடாகும்.

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தாம் சென்றபோது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து விசனம் வெளியிட்டதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த பாதிப்புகளை நிவர்த்தி செய்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் ஹக்கீம் வலியுறுத்தினார்.
 

https://eelanadu.lk/மத்ரஸா-மாணவர்கள்-மரணத்து/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உழவு இயந்திர விபத்து - மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

உழவு இயந்திர விபத்து - மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை, கார்த்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றுமொரு பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று (30) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

இதன்படி, சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196663

  • கருத்துக்கள உறவுகள்
Posted
காலங்கள் சிலரை கண்முன்னே அடையாளப்படுத்தும் .அது அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்து
தம்பி லவன் தவராஜா சிறு வயதில் இருந்து என்னுடன் மிக நெருங்கிய நண்பர், சகோதரர் . சமூக செயல் எது என்றாலும் முன்னின்று செய்பவர்
சுனாமி நினைவேந்தலாகட்டும்,கதிர்காம பாதயாத்திரையில் யாத்திரீகர்களுக்கு குடிநீர் வழங்கியது முதல் இன்னும் பல சமூக சேவைகளை தாராளமனதுடன் செய்திருந்தார்
,தற்போது காரைதீவில் ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் எமது சகோதர சிறார்கள் தண்ணீரில் அள்ளுண்டு போனார்கள் என கேள்வியுற்றதும் களத்தில் நின்று எமது ஊரில் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது அவர்களுக்கு நாம் உதவ வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம் என படகுகளை தயார் செய்து தண்ணீரில் அள்ளுண்டு போன அம்மாணவர்களை தேட தொடங்கினார்
ஏனென்றால் சுனாமி அனர்த்தத்தின் போது தண்ணீரில் தத்தளித்து சென்ற எமது ஊர் மக்களுக்காக சாப்பாடு ,குடிநீர் உடை என அள்ளி வழங்கிய ஊரல்லவா என சொன்னார்.
இதுதான் மனிதநேயம்
செய்யும் உதவியை மறுகணமே மறக்கும் மனித வாழ்க்கையில் களத்தில் நின்று மக்களுக்காக சேவை செய்யும் இவர்களை ஊர் மக்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியாது
வாழ்த்துக்கள் தம்பி Lavan Thavaraj
468401367_9474667762562200_3640503699444
 
 
468714827_9474668135895496_3145411188820
 
 
468092997_9474668655895444_6470303913482
 
 
468153138_9474669082562068_7230769741498
 
 
 
All reactions:
93Jeyrajan Rajan, Vic Jeyathevan and 91 others
 

முகநுhல்

தனிக்காட்டு ராஜாவின் முகநுhலில் இருந்து.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2024 at 08:24, ஈழப்பிரியன் said:

@தனிக்காட்டு ராஜா இது உங்களின் ஏரியாவாச்சே மேலதிக செய்திகள் ஏதாவது தெரியுமா?

எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது 

வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன்  அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக  இருந்திருக்கும் .
வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம்  மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்  

செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள்  அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் .

புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும் 

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது 

வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன்  அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக  இருந்திருக்கும் .
வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம்  மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்  

செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள்  அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் .

புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும் 

தகவல்களுக்கு நன்றி தனி.

நீங்களும் உங்களில் கவனமெடுக்க வேண்டும்.

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.