Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.என்.எம்.சுஹைல்

ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர்.

கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்­துள்­ளனர். குறிப்­பாக குரு­நாகல் யுகத்­தின்­போது அர­ச­னா­கவும் குராசான் மன்­னரின் கதையும் இருக்­கி­றது. இருப்­பினும் பிரித்­தா­னியர் 1833 இல் அறி­மு­கப்­ப­டுத்­திய கோல்­புறூக் அர­சியல் யாப்பின் படி ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் இலங்கை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர்.

இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சியின் தந்­தை­யான எம்.சி.சித்­தி­லெப்பை போன்­றோரின் போராட்­டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்­புறூக் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு பிர­தி­நி­தித்­துவம் எட்­டப்பட்டது. இதன்­போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூ­பன சபையின் உத்­தி­யோகப்பற்­றற்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார். 1910 ஆம் ஆண்டு குரு­மக்­கலம் யாப்­பிலும் 1921 தற்­கா­லிக மெனிங் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டது. எனினும், 1924 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மனிங் டெவொன்­சயர் அர­சியல் சீர்­தி­ருத்தம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை மூன்­றாக உறுதி செய்­தது. இவ்­வாறே 1931 இல் டொனமூர் சீர்­தி­ருத்தம் முன்­வைத்த நிர்­வாக முறையில் மந்­திரி சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருந்­தது.

இத­னி­டையே, 1947 சோல்­பரி யாப்பு, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான அமைச்­ச­ர­வையில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­து­வந்­துள்­ளனர். எந்­த­வித அழுத்­தங்­களும் இன்றி நாட்டின் இன பல்­வ­கை­மையை கருத்­திற்­கொண்டு ஒவ்­வொரு அர­சாங்­கமும் நாட்டின் நிர்­வா­கத்­து­றையின் பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யொன்றை உள்­ளீர்க்கும் நடை­முறை இருந்து வந்­துள்­ளது.

எனினும், முதன் முறை­யாக இலங்கை சோச­லிச ஜன­நா­யக குடி­ய­ரசின் பத்­தா­வது பொதுத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்டின் ஒன்­ப­தா­வது ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட 22 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், தேசிய மக்கள் சக்­தியை 61 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்குப் பலத்­துடன் மூன்றில் இரண்டு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைப் பெற்று வலு­வான ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்கு பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை பல்­வேறு வகை­யிலும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

வாக்­க­ளித்த, வாக்­க­ளிக்­காத, ஆத­ர­வ­ளித்த, ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்கும் நிலையில் அர­சாங்கம் இதற்கு பதி­ல­ளிக்கும் விதம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரை­யின்­போது தனது உரையின் ஆரம்­பத்­தி­லேயே இன­வாதம், மத­வாதம் பற்­றி­யெல்லாம் பேசி­யி­ருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்­கிய அமைச்­ச­ரவை நிய­மனம் குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கத்தான் இந்த பதிலை குறிப்­பிட்­டாரா என்ற கேள்­வியும் எழுந்­தது.

இதை­விட கடந்த வார இறு­தியில் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திடம் இது விட­ய­மாக முஸ்­லிம்கள் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்­டு­மென கேட்­கா­தீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்­ச­ராக இருந்­த­போது, முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு ஹிஜாப் அணி­வ­தற்­கான துணியை வழங்க வேண்­டு­மென அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தேன். நான் சிங்­கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்­லவே?அம்­பா­றையில் எங்­க­ளுக்கு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­க­வில்லை. ஆனால் நாங்கள் ஆதம்­பா­வாவை தேசி­யப்­பட்­டி­யலில் நிய­மித்தோம்.மேல்­மா­காண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இலை­யென்று, அந்த விட­யத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்டாம்” என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது இப்­ப­டி­யி­ருக்க கடந்த திங்­க­ளன்று சபா­நா­யகர் அசோக்க ரன்­வல அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்­வாக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­தி­ருந்தார்.

இதன்­போது, நாட்டில் சகல இன மக்­களும் தங்கள் மத, கலா­சார அடை­யா­ளங்­களை பேணி வாழும் உரிமை பெற்­றுள்­ளனர். ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற அக்­கி­ரா­சன உரையை மேற்­கோ­ளிட்டு, நாட்டில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும். இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை தூண்டி மக்­களை பிரிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினார்.

எனினும், அவர் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாமை குறித்து எந்த கருத்­தையும் நேர­டி­யாக குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.

இத­னி­டையே, இது­வி­ட­ய­மாக நேற்­றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் நலிந்த ஜய­திஸ்­ஸ­வினால் சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டது.

ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நிதி இல்­லாமை தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பப்­பட்­டது.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்­லது சாதி அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வில்லை. அமைச்சு அதி­கா­ரங்­களை கையாள்­வதில் மிகவும் திற­மை­யான நபர்­களை நாங்கள் தேர்ந்­தெ­டுத்தோம். மேல் மாகாண ஆளு­ந­ராக முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிரதி சபா­நா­யகர், பிரதி அமைச்சர் போன்ற பத­வி­களை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் வகிக்­கின்­றனர். மேலும், முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒருவர் தேசியப்பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்டார். குறிப்­பிட்ட இனங்கள், மதங்கள் அல்­லது சாதிகள் அன்றி ஒட்­டு­மொத்த இலங்கை தேசத்­துக்கும் சேவை செய்­வ­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்” என்றார்.

அத்­துடன், தற்­போ­தைய நிலை­மையை இனம் அல்­லது மதத்தின் கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்­றி­ணைந்த இலங்கை தேசம் என்ற தொலை­நோக்கு பார்­வை­யுடன் புதிய அர­சாங்­கத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் நாங்கள் நிறு­வி­யுள்ளோம். இந்த அணு­கு­மு­றை­யா­னது பிரச்­சி­னை­களை மிகவும் திறம்­பட கையாள்­வ­தற்கு எமக்கு இட­ம­ளிக்கும்” என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தாரம் மற்றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ கூறினார்.

இங்கு அமைச்­சர்­க­ளான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜய­திஸ்ஸ ஆகியோர் ஒரே மாதி­ரி­யான பதில்­க­ளையே குறிப்­பிட்­டுள்­ளனர். எனவே, இந்த விவ­கா­ரத்­திற்கு இப்­ப­டித்தான் பதி­ல­ளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்­தி­யினால் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்ற வினா எழு­கி­றது.

இத­னி­டையே, மிகவும் தகு­தி­யு­டைய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அமைச்சுப் பத­வி­களும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­கினர். இவர்­களில் ஒருவர் மாத்­திரம் பிர­தி­ய­மைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­ன­வ­ராக இருந்­துள்ளார். அத்­தோடு, பிரதி சபா­நா­யகர் பத­வியே இன்­னொரு முஸ்லிம் பிர­தி­நி­தியின் தகு­திக்கு பொருத்­த­மா­ன­தாக இருந்­துள்­ளது. எனினும், இலங்கை நிர்­வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதி­கா­ரிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இம்­முறை பொதுத் தேர்தல் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. இந்த மாற்­றத்தை விரும்­பியே பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களும் தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். இந்­நி­லையில், அவர்கள் பாராம்­ப­ரி­ய­மாக ஆத­ரித்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது அந்த கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த ஐக்­கிய மக்கள் சக்­தி­யையும் முஸ்­லிம்­ கட்­சி­க­ளையும் விட்டு வெளி­யேறி புதிய அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். ஜனா­தி­பதி அநுர மீதான நம்­பிக்கை மற்றும் முஸ்லிம் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யினால் மக்கள் இந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­பட்­டனர். மோச­மான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டு­களை பிழை என்று கருதி தமது பாதையை மாற்­றிக்­கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது.

முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொட­ர்ந்தும் தக்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli

https://www.vidivelli.lk/article/18149

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து இருந்தால் இந்தப்பெரிய கட்டுரை வந்திருக்காது.
ஏன் கடந்த அரசுகளில் இப்படியான கட்டுரைகள் வரவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, colomban said:

முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி

அப்படியென்றால் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதியில் எப்படி ரிஷாத் பதியுதீனும், மஸ்தானும் வெற்றி பெற்றனர்? 

31 minutes ago, colomban said:

எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது

எது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்களா? அப்போ முஸ்லீம்களால்தான் தற்போதைய அரசு ஆட்சியை கைப்பற்றியதா?

76 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள ஆளும் கட்சியொன்று வடபகுதியில் பெரும்பான்மையாக வென்றதாக சரித்திரமேயில்லை, ஆனால் எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் எமது பகுதியில் இருந்து ஏன் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று கொந்தளிக்கவில்லை பக்கம் பக்கமாக கட்டுரையெழுதவில்லை.

முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் முஸ்லீம்களுக்காக மட்டும் செயல்பட முடியாது, முஸ்லீம்கள் சொல்வதை மட்டுமே நடைமுறைபடுத்த முடியாது.

எந்த அமைச்சரும் அரச தலைவரின் கட்டுப்பாட்டிலிருப்பவர், அரச தலைவர் சொல்வதையே  நடைமுறைப்படுத்தும் ஒரு பதவியே அமைச்சு என்று இருக்கும்போது அவர் தமிழராகவோ சிங்களவராகவோ முஸ்லீமாகவோ இருப்பதில் என்ன பெரும் பாதிப்பு வந்துவிட போகிறது?

உங்கள் அடி மனதில் இருப்பதெல்லாம் முஸ்லீம்களுக்கும்  அரசாங்கத்தில் அதிகாரம் இருந்தால் தமிழர் நில ஆக்கிரமிப்பு , பொருளாதார சுரண்டலில் ஈடுபடலாம் என்பதே. ஏற்கனவே அரச செல்வாக்கு பெற்ற ஹிஸ்புல்லா,நசீர், பதியுதீன்  துணையுடன் அதை செய்திருக்கிறீர்கள் 

கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை  எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள்  தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்?

முன்பும் ஒருதடவை எழுதியிருக்கிறேன், முஸ்லீம் எனும் இனம் எக்காலமும் எவருடனும் ஒற்றுமையாகவோ உளப்பூர்வமாகவோ சேர்ந்து வாழாது, அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள்.

ஒருவன் எதற்கெடுத்தாலும் தகராறு பண்ணிக்கொண்டிருந்தால் அவனை தங்க தாம்பாளத்தில் இந்த உலகம் தாங்காது, மாறாக அவனை தள்ளி வைக்கும்.

அதுதான் உள்ளூரிலும் உலக அளவிலும் முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும்,  மன்னாரை சேர்ந்த  முஸ்லீம்  பெருமகன்.
ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.

அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும்,  மன்னாரை சேர்ந்த  முஸ்லீம்  பெருமகன்.
ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.

அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.

நன்றி சிறியர்...இந்தக் காணொளியைத்தான் ..ச்ப்ப்ரின் திரியில் யாராவது இணைக்கும்படி கேட்டேன்

தமிழருக்கு எவ்வள்வு அநியாயம் செய்துவிட்டு ...அல்லா  எல்லாமே பார்ப்பார் என கோசமிடும் கும்பலை 

இனம்காட்டும் காணொளீ...இங்கு அந்தகூட்டத்துகு வெள்ளை அடிப்போருக்கும் ..இது படிப்பினை

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

நன்றி சிறியர்...இந்தக் காணொளியைத்தான் ..ச்ப்ப்ரின் திரியில் யாராவது இணைக்கும்படி கேட்டேன்

தமிழருக்கு எவ்வள்வு அநியாயம் செய்துவிட்டு ...அல்லா  எல்லாமே பார்ப்பார் என கோசமிடும் கும்பலை 

இனம்காட்டும் காணொளீ...இங்கு அந்தகூட்டத்துகு வெள்ளை அடிப்போருக்கும் ..இது படிப்பினை

அலி சப்ரியின் திரியிலும் இணைத்துள்ளேன் அல்வாயன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அலி சப்ரியின் திரியிலும் இணைத்துள்ளேன் அல்வாயன். 

மிகவும் நன்றி சிறியர்...அப்பவித் தமிழருக்கு அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவி பெற்று...செய்த அனியாயங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்..... அதுவும் அவருடைய இனத்தவரால்....

இங்கும் அனுரவுக்கு கண்சிமிட்டி சிரித்ததின்மூலம் தப்பி விடுவாரோ தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம்  இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே.

முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. 

இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பகிடி said:

இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம்  இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே.

முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. 

இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.

 

சரியான கருத்து 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை  எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள்  தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்?

தமிழ்பேசும் மக்களில் தங்களது மதத்தால் தங்களை அடையாளபடுத்தி முஸ்­லிம் என்று மதத்தை  சொல்லி முழங்குவது அவர்கள் தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.