Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ…

அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது.

மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள்.

அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம்.

இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்…

ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம்.

இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.

கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை.  அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன்.  அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது  என்பது உங்கள் வேண்டுகோள். 

ஒற்றுமை என்பது neutral ஆக  தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை  உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால்  அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி  க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். 

வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே  நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 

  • Replies 76
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந

  • நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு,

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழ

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂).

இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற  எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது.

எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.

உங்கள் பயம் நியாயமானதே.

கடந்த 15 வருடங்களில் இந்த வன் தேசியர்கள், மதவாதம், ரவுடித்தனம், பிரதேசவாதம், கூட்டங்களில் போய் குரங்கு சேட்டை விடுவது, வசைபாடல் என பலதையும் கையில் எடுத்து - நீங்கள் கூறியது போல் ஒரு அச்சத்தையும், அருவருப்பையும் உருவாக்கியே உள்ளனர்.

ஆனால் நான் சொன்ன பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் இவர்கள் அல்ல.

நான் சொல்லுபவர்கள்;

தம் இருப்பை தக்க வைக்க தாயக அரசியலை நம்பி இராதவர்கள்,

மாவீரர் நாளை கூட பிரிந்து நடத்துவதை கண்டு மனம் உடைபவர்கள்,

தமது வலுவுக்கு ஏற்ப எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இப்போதும் ஊரில் நல்ல விடயங்களை செய்பவர்கள்….

இவர்கள்தான் மேலே ஐலண்ட் சொன்ன சப்போர்டஸில் பெரும்பாலானவர்கள்.

அடுத்து…தாயக அரசியலில் நீங்கள் பயப்படும் வகையில் இவர்களுக்கு ஒரு சின்ன பங்கு கூட இல்லை.

கஜேஸ் கூட கொள்கைநிலை வரட்டுத்தனமாக இருந்தாலும் - இவர்கள் போல் கட்டுக்கோப்பு-அற்றோர் anarchist இல்லை.

ஆகவே ஒரு மாகாணசப தன்னும் கிடைத்தால் இந்த anarchists கையில் போய்விடும் என்ற  உங்கள் பயம் முகாந்திரமற்றது.

ஆனால் புலம்பெயர் சமூகத்தில் இவர்கள் தாக்கம் நிச்சயம் உள்ளது.

நான் அவதானித்த வகையில் அனுரவின் வரவின் பின் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலின் பின் இவர்களில் சிலர் தம் வன்மையை குறைத்துள்ளார்கள். இன்னும் சிலர் அப்படியே அனுரவிடம் சரண்டர் ஆகி விட்டார்கள், அல்லது அதை நோக்கி நகர்கிறார்கள்.

யூகே லேபர் பார்ட்டியை 2010 ற்கு பின் இப்படிதான் அதி இடதுசாரிகள் கைப்பற்றி இருந்தார்கள், ஆனால் கோர்பினின் இரெண்டாவது தோல்வியோடு அவர்களிடம் இருந்து லேபர்பார்ட்டி மீட்கப்பட்டு நடுநிலைக்கு வந்து ஆட்சியையும் பிடித்தது.

Lurching to the extremes தீவிர எல்லைகளுக்கு போதல் என்பது அரசியல் அமைப்புக்களுக்கு காலத்துக்கு காலம் நடப்பதுதான்

இந்த பாராளுமன்ற தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம், வன் தேசியத்திடம் இருந்து ஈழத்தமிழ்  தேசிய அரசியலை மீட்டெடுப்பதன் ஆரம்பமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

கஜனின் நெகிழ்வுபோக்கும் இதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, island said:

கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை.  அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன்.  அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது  என்பது உங்கள் வேண்டுகோள். 

ஒற்றுமை என்பது neutral ஆக  தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை  உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால்  அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி  க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். 

வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே  நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 

அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை.

பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்….

இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா?

அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும்.

எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை.

ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது.

எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன்.

அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣.

இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன்.

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஏன் முடியாது?

முரளிதரன் கட்டளை தளபதியாக இருந்து விட்டு….இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நழுவ முடியும் எண்டால்….

கொடி பிடித்தவர்கள் அதை ஈசியாக விலத்தி நடக்கலாம்.

கூடவே என்போன்ற கொடிபிடிக்காதோரும் அந்த இடங்களில் நிண்டோம் அல்லாவா. 

ஆகவே அதில் ஈடுபட்ட அனைவரும் புலி ஆதரவாளர் அல்ல.

புலிகளின் ஆதரவாளர் கூட போர் ஓய்வின் பின் நாம் வேறு பதாகையின் கீழ், சமஸ்டி நோக்கி போராடுகிறோம் என சொல்லி, நிலைப்பாட்டை மாற்றலாம்.

இது ஒன்றும் பெரிய விடயமல்ல. உலகில் பல இடங்களில் நடப்பதுதான்.

ஐ ஆர் ஏ செய்த அத்தனைக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என் சின்பெயின் கூறவில்லையா? அதுதான் எடுபடவில்லையா?

 கோசான், இது வரை காலமும் சிங்களவர்களாகிய நீங்கள் செய்ததும் பிழை. தமிழராகிய நாங்கள் செய்ததும் பிழை . இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்..
ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி  பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்tw_lol:😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே!

கருணா செய்த படுகொலைகளுக்கு  [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.]  தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்..

நானும் எல்லாத்தையும் மறக்க தயார்…ஆனால் 13 ஐயாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

செய்வார்களா?

1 hour ago, ரதி said:

ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி  பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்tw_lol:😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே!

கருணா செய்த படுகொலைகளுக்கு  [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.]  தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1

மேலே உங்களுக்கு ஐ ஆர் ஏ, சின்பெயின் உதாரணம் தந்தது இதை விளக்கவே.

புலிகளின் முடிவின் பின் புதிய ஒரு புலிகள் சம்பந்தபடா சிவில் அமைப்பை ஸ்தாபித்து இருக்கலாம்.

ஒரு காலத்தில் புலிக்கொடி பிடித்தார்கள் என்பதல்லாம் பெரிய விடயமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

சிறப்பு ..மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

தமிழாவது தேசியமாவது எதையும் தூக்கி எறிவோம் கடாசுவோம். ஒரு கண் போனால் காணும் அவர்களுக்கு.,...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமக்கு நடந்த அனைத்தையும் மறந்து, மன்னித்து, சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும், பழைய விடயங்களைத் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்காது இலங்கையராக முன்னேறவேண்டும் என்று கோரிவரும்  தமிழ்த் தேசியத்தை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் "தீவைக் காதலிக்கும்" ஒருவரும், தமிழரசுக் கட்சியின் பிரமுகரை ஆதரிக்க வேண்டும் இதுவரை பேசிவந்து திடீரென்று அநுரவின் பக்தனாக மாறியவரும், கூடவே இதுவரை காலமும் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து இன்று அநுரவிற்காக காவடி தூக்கும் முன்னாள் தேசியவாதிகளும் கட்டாயம் இக்காணொளியைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கசப்பாக இருக்கலாம் என்கிற முன்னெச்சரிக்கையோடு இணைக்கிறேன். 

தமிழ்த் தேசியத்தை இப்போதும் நேசிக்கும் ஏனையவர்களை இக்காணொளியை விரும்புவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐய்யமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

புலிகள் போராட ஆட்கள் இல்லை என்ற

உண்மை தெரிந்த பின்னும்,

போராடப் போகாமல்

சிங்கள பேராசிரியர் களிடம் 

படித்து

பட்டம் பெற்று

அதைக் கொண்டு

Migration process மூலம்

அவுஸ் கனேடா போய்

அங்கு நல்ல வாழ்க்கை அமைத்து வாழுகின்ற

உம்மைப் போன்ற

நான் இந்த காணொளியை

பார்கலாமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 19:14, goshan_che said:

நானும் எல்லாத்தையும் மறக்க தயார்…ஆனால் 13 ஐயாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

செய்வார்களா?

மேலே உங்களுக்கு ஐ ஆர் ஏ, சின்பெயின் உதாரணம் தந்தது இதை விளக்கவே.

புலிகளின் முடிவின் பின் புதிய ஒரு புலிகள் சம்பந்தபடா சிவில் அமைப்பை ஸ்தாபித்து இருக்கலாம்.

ஒரு காலத்தில் புலிக்கொடி பிடித்தார்கள் என்பதல்லாம் பெரிய விடயமல்ல. 

ஏன் புலிகள் சாரா அமைப்பை தொடங்க வேண்டும்?...அரசு தொடங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?...ஒரு யுத்தத்தில் இப்படித் தான் நடக்கும், மக்கள் அழிய போகிறார்கள் என்று தெரிந்தும்,மக்களை அழித்து விட்டு, ,அனைத்தையும் இழந்த பின் அரசு அப்படி செய்து இருக்க வேண்டும், இப்படி செய்து இருக்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்கள்.
அரசை பொறுத்த வரை ஒரே நாடு,ஓரே மக்கள் ...தீவிரவாதத்தை அழித்த பின் [புலிகள் வேறு ,மக்கள் வேறு நீங்கள் மேலே சொன்னது தான்.] ஒரே நாட்டை கட்டி எழுப்புவதே அரசின் நோக்கம் ...அதை தான் செய்யுது 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2024 at 08:13, goshan_che said:

இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.

அதுசரி, இந்தக் கருத்தை (உண்மையை) பகிர ஏன் இத்தனை கால தாமதம் எடுத்தீர்கள், தயங்கினீர்கள் என்பதை அறியலாமா? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஏன் புலிகள் சாரா அமைப்பை தொடங்க வேண்டும்?...அரசு தொடங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?...ஒரு யுத்தத்தில் இப்படித் தான் நடக்கும், மக்கள் அழிய போகிறார்கள் என்று தெரிந்தும்,மக்களை அழித்து விட்டு, ,அனைத்தையும் இழந்த பின் அரசு அப்படி செய்து இருக்க வேண்டும், இப்படி செய்து இருக்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்கள்.
அரசை பொறுத்த வரை ஒரே நாடு,ஓரே மக்கள் ...தீவிரவாதத்தை அழித்த பின் [புலிகள் வேறு ,மக்கள் வேறு நீங்கள் மேலே சொன்னது தான்.] ஒரே நாட்டை கட்டி எழுப்புவதே அரசின் நோக்கம் ...அதை தான் செய்யுது 

கிழிஞ்சுது கிருஸ்ணகிரி….

1. நான் புலிகள் சாரா அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும் என சொன்னது எஞ்சிய தமிழர்களை.

நாம் ஒரு நெடிய வரலாற்றை கொண்ட இனம். எமக்கு ஒரு இனமாக எமக்கு சுயநிர்ணய அபிலாசை இருக்கிறது. அதை அடையும் எம் முயற்சி புலிகள் கண்டு பிடித்ததல்ல. புலிகளுக்கு 30 வருடம் முன்பே இதற்கான குரல் எழும்பி விட்டது.

புலிகள் இடையில் வந்தார்கள், தமக்கு தெரிந்த வகையில் முயன்றார்கள். அவர்கள் முடியும் போது - அவர்கள் முறையையோ, பெயரையோ இனி தொடரமுடியாத அளவுக்கு ஆகி விட்டிருந்தது.

ஆனால் அவர்களின் பின்னும் நாம் ஒரு இனமாக இருக்கிறோம். எமது சுயநிர்ணயத்துக்கான தேவை அப்படியே இருக்கிறது.

ஆகவே நாம் ஒரு புலிகள் சாரா அமைப்பை நிறுவி இருக்க வேண்டும்.

இது புலிகளை மறுதலிப்பதோ, அவமதிப்பதோ அல்ல…நாம் இருக்கும் நிலை பற்றிய யதார்த்தத்தை உணர்ந்து செயல்படல் மட்டுமே.

இதுநான் 2013 இல் யாழில் எழுத தொடங்கியதில் இருந்து எழுதி வருவது.

2. அரசு புலிகளை அழித்த போது என்ன சொன்னது? அமிரை கொண்டார்கள், நீலனை கொண்டார்கள் - இவர்கள்தான் தீர்வுக்கு தடை. இவர்களை அழிக்க சர்வதேசமும் தமிழ் மக்களும் உதவினால் - நாம் ஒன்றுபட்ட இலங்கைக்கு 13 plus plus ஐ தருவோம். இது மன்மோகனை வைத்து கொண்டு மகிந்த சொன்னது.

நான் இப்போ கேட்பது 13 ++ வர 15 வருடம் ஆகியும் முடியவில்லையா? என்பதையே.

ஆகவே இது வழமைபோல ஏமாற்று என்பதையே.

1 hour ago, satan said:

அதுசரி, இந்தக் கருத்தை (உண்மையை) பகிர ஏன் இத்தனை கால தாமதம் எடுத்தீர்கள், தயங்கினீர்கள் என்பதை அறியலாமா? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு? 

எத்தனை காலம் எடுத்தேன்?

இந்த நிலைப்பாட்டை நான் அவர் இதை சொன்னார் என செய்தி வந்த திரியிலேயே எழுதினேன். 2015 என நினைக்கிறேன்.

அப்போ நான் இவரின் அரசியலை ஆதரித்தாலும் - இந்த விடயத்தை இவர் இப்படி பேசி இருக்க கூடாது, சட்ட வரைவிலக்கணப்படி சுமந்திரன் சொல்வது சரி என்றே வைத்தாலும், எமது பிரதிநிதியாக இவர் இப்படி சொன்னது அதிகபிரச்ங்கிதனம் என எழுதினேன்.

அதன் பின் படிப்படியாக இவரின் போக்கை,  இவரோடு வேலை செய்து வெறுத்துப்போனவர்களின் அனுபவங்களை கேட்டு, குறிப்பாக இவரும் விக்கியும் ஆடிய ஈகோ ஆட்டம் என்பவற்றை பார்த்து, இவர் மீதான ஆதரவை 2017 இல் இருந்து விலக்கிகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போல்…..

அனுர முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடிக்க சொன்ன ஜேவிபியின் தூணாக இருந்தார்….

சமாதான பேச்சை குழப்பிய ஜேவியின் தூணாக இருந்தார்…

சந்திரிக்கா அரசில் கபினெட் அமைச்சராக இருந்து தமிழருக்கு ரணில் ஒரு இஞ்சியும் கொடுக்க விடக்கூடாது என வலியுறுத்தினார்….

வடக்கு-கிழக்கை வழக்கு போட்டு பிரித்த ஜேவிபியின் தூணாக இருந்தார் …

இதுவரை இந்த பிழைகள் எதற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, பிழை எனவும் ஏற்கவில்லை,

என தெரிந்தும் அனுரவுக்கு காவடி எடுக்கும், வெள்ளை அடிக்கும் ஆள் அல்ல நான்.

@satan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அனுரவுக்கு காவடி எடுக்கும், வெள்ளை அடிக்கும் ஆள் அல்ல நான்.

நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும்.

பொறுமை அவசியம் சாத்தானுக்கு. ஐந்து வருடங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும்.

பொறுமை அவசியம் சாத்தானுக்கு. ஐந்து வருடங்கள்! 

என்னை பொறுத்த வரை….நான் மேலே சொன்ன காரணங்கள் ஏனைய சிங்கள தலைவர்கள் போலவே அனுர என்பதை காட்டி நிற்கிறது.

இதுதான் அனுர பற்றிய தமிழரின் starting point ஆக இருக்க முடியும்.

அவர் நாட்டில் சட்டதின் ஆளுமையை உருவாக்குவார், ஊழலை ஒழிப்பார், நல்லாட்ட்சி செய்வார் என்பதல்லாம் நல்ல விடயங்களே ஆனால் இவை இலங்கை தேசியம் சம்பந்தபட்டது.

தமிழரை பொறுத்தமட்டில் 13 ஐ முழுமையாக அமல் செய்வதே ஆக குறைந்த படி.

காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர மறுக்கு எந்த சிங்கள தலைவரும் அடிப்படையில் இனவாதிதான்.

அடுத்த நாலு வருடத்தில் அனுர காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர்ந்தால் - அவரை வரவேற்க நானும் தயார்.

அதுவரை அவரின் கடந்தகால நடவடிக்கை அடிப்படையில் அவரை அணுகுவதே அறிவார்ந்த செயல்.

Talk is cheap, actions speak louder than words.

தன்னை ஒரு இனவாதி என காட்டி கொண்ட அனுரவை அவர் செயலால் இதை மறுதலிக்கும் வரை வெள்ளை அடிக்க, காவடி தூக்க நான் தயார் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலாளர்கள் தங்கள் இருப்புக்காக இனவாதத்தை தோற்றுவித்தனர்,வளர்த்தனர், அதற்கு அப்பப்போ தூபம் காட்டி சலுகை அளித்து போஷித்தனர். அதை விட்டால் அரசியல் செய்வதற்கு  அங்கொன்றுமில்லை. இதை களைந்து அரசியல் செய்ய முடியாது. அனுர  சில நடவடிக்கைகளை நேரடியாக, உடனடியாக எடுக்க முடியாது, அவர்கள் பாதையில் போய்த்தான் வேறொரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குமுன் இனவாதிகளை, இனவாத கருத்துக்களை, தூண்டுதல்களை, கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு தேவையானது. அதை எடுத்துவிட்டால் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாது போய்விடும். பழையபடி தீ வைப்புகள், கொலைகள், கொள்ளைகள், குண்டுகள் வெடிப்புகள் தமிழருக்கெதிராக நடக்கும். அது தற்போதைய அரசுமேலே விழும். அதை தவிர்ப்பதற்கு பயங்கரவாத சட்டம் நடைமுறையில் இருப்பதே நல்லது. இனவாதிகளே பயங்கரவாத சட்டத்தை இயற்றியவர்கள், அதில் நீதி நிஞாயங்களை இழுத்து மூடியவர்கள். அதன் தாக்கம் என்ன என்பதை அவர்களும் உணரவேண்டும். அதை எடுங்கள் என்று அவர்களால் கூற முடியாது, அதை வைத்திருங்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே இனவாதம் சிங்களத்திடமிருந்து  களையப்படும்வரை அது இருப்பது நல்லதே.  நம்ம அரசியல் தலைவர்கள் அர்ச்சுனா போன்றவர்கள் சிங்களமக்களிடம் பேச வேண்டும், எமது தேவைகள் என்ன, அது எப்படி உருவானது,  அடக்கப்ட்டன என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். இப்போ, மஹிந்தவே வந்து இனவாதம் வேண்டாமென்றால், யாரும் கேட்கப்போவதில்லை. காரணம் அது அவர்கள் கையை மீறிப்போய்விட்டது. ஆனால் அனுர  எடுக்கும் நடவடிக்கையினால் அது தானாகவே கருக வாய்ப்பிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அரசியலாளர்கள் தங்கள் இருப்புக்காக இனவாதத்தை தோற்றுவித்தனர்,வளர்த்தனர், அதற்கு அப்பப்போ தூபம் காட்டி சலுகை அளித்து போஷித்தனர். அதை விட்டால் அரசியல் செய்வதற்கு  அங்கொன்றுமில்லை. இதை களைந்து அரசியல் செய்ய முடியாது. அனுர  சில நடவடிக்கைகளை நேரடியாக, உடனடியாக எடுக்க முடியாது, அவர்கள் பாதையில் போய்த்தான் வேறொரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குமுன் இனவாதிகளை, இனவாத கருத்துக்களை, தூண்டுதல்களை, கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு தேவையானது. அதை எடுத்துவிட்டால் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாது போய்விடும். பழையபடி தீ வைப்புகள், கொலைகள், கொள்ளைகள், குண்டுகள் வெடிப்புகள் தமிழருக்கெதிராக நடக்கும். அது தற்போதைய அரசுமேலே விழும். அதை தவிர்ப்பதற்கு பயங்கரவாத சட்டம் நடைமுறையில் இருப்பதே நல்லது. 

அதாவது இனவாதிகளிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க பயங்கரவாத தடை சட்டம் அவசியமாகிறது🤣🤣🤣.

சாத்ஸ் உங்கள் அக்கவுண்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா🤣.

ப.வா.த.ச வுக்கு இப்படி ஒரு முட்டு கொடுப்பை சரத் வீரசேகரா கூட கொடுத்ததில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்

@satan இதுவரை இனவாதத்தை தூண்டியதால் ப.வா.த.ச எத்தனை சிங்களவர் மீது பாய்ந்துள்ளது?

லிஸ்ட் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

அதாவது இனவாதிகளிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க பயங்கரவாத தடை சட்டம் அவசியமாகிறது🤣🤣🤣.

சாத்ஸ் உங்கள் அக்கவுண்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா🤣.

ப.வா.த.ச வுக்கு இப்படி ஒரு முட்டு கொடுப்பை சரத் வீரசேகரா கூட கொடுத்ததில்லை🤣.

பயங்கரவாத சட்டம்  தமிழரை காப்பாற்றும் என்று நான் சொல்லவரவில்லை, அனுராவின் அரசையும் எடுக்கும் திட்டங்களையும், கலைக்கும் இனவாதிகளின் மேல் பாயும். அது எவ்வளவு கடுமையானதென இயற்றியவர்களுக்கும் தெரியும். அதனாலேயே மாவீரர் தினத்திற்கு எழும்பிய எதிர்ப்பு, எழும்பிய வேகத்திலேயே அடங்கியது. சிலர் அடக்கியும் வாசித்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தை அளவுக்கதிகமாக கற்பனை செய்து செயற்பட்ட நம்மவர்களும் பாதிக்கப்பட்டனர். நினைவு கூர இடமளித்த போது, அதற்குமேல் எடுத்த எடுப்பிலேயே பிரபல்யம் ஆக்கவேண்டுமென்ற பேராசை மதிமயங்க வைத்து, தாமே மாட்டிக்கொண்டனர். காலம் கனியும்வரை பொறுமை வேண்டும். இடையில தட்டிக்கொட்ட நினைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

பயங்கரவாத தடைசட்டம் நீங்கள் சொல்வது போல் எந்த இனவாதி மேல் அனுர அரசால் பாவிக்க பட்டது என்பதை சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

பயங்கரவாத தடைசட்டம் நீங்கள் சொல்வது போல் எந்த இனவாதி மேல் அனுர அரசால் பாவிக்க பட்டது என்பதை சொல்ல முடியுமா?

இனவாதத்தை யார் கக்குகிறார்களோ, அவர்கள்மேல் பாயும். பொறுத்திருந்து பாப்போம். பொறுமை அவசியம்!  எல்லோரும் முனகிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார்களே, என்ன செய்வது? பொறியை வைத்துவிட்டு, எலி விழுகுதா என பரிதவிப்பவர் போலிருக்கிறீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இனவாதத்தை யார் கக்குகிறார்களோ, அவர்கள்மேல் பாயும். பொறுத்திருந்து பாப்போம். பொறுமை அவசியம்!  எல்லோரும் முனகிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார்களே, என்ன செய்வது? பொறியை வைத்துவிட்டு, எலி விழுகுதா என பரிதவிப்பவர் போலிருக்கிறீர்களே.

அனுர பதவிக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது.

 ஒருவர் கூடவா இந்த காலத்தில் இனவாதம் கக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

கிழிஞ்சுது கிருஸ்ணகிரி….

1. நான் புலிகள் சாரா அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும் என சொன்னது எஞ்சிய தமிழர்களை.

நாம் ஒரு நெடிய வரலாற்றை கொண்ட இனம். எமக்கு ஒரு இனமாக எமக்கு சுயநிர்ணய அபிலாசை இருக்கிறது. அதை அடையும் எம் முயற்சி புலிகள் கண்டு பிடித்ததல்ல. புலிகளுக்கு 30 வருடம் முன்பே இதற்கான குரல் எழும்பி விட்டது.

புலிகள் இடையில் வந்தார்கள், தமக்கு தெரிந்த வகையில் முயன்றார்கள். அவர்கள் முடியும் போது - அவர்கள் முறையையோ, பெயரையோ இனி தொடரமுடியாத அளவுக்கு ஆகி விட்டிருந்தது.

ஆனால் அவர்களின் பின்னும் நாம் ஒரு இனமாக இருக்கிறோம். எமது சுயநிர்ணயத்துக்கான தேவை அப்படியே இருக்கிறது.

ஆகவே நாம் ஒரு புலிகள் சாரா அமைப்பை நிறுவி இருக்க வேண்டும்.

இது புலிகளை மறுதலிப்பதோ, அவமதிப்பதோ அல்ல…நாம் இருக்கும் நிலை பற்றிய யதார்த்தத்தை உணர்ந்து செயல்படல் மட்டுமே.

இதுநான் 2013 இல் யாழில் எழுத தொடங்கியதில் இருந்து எழுதி வருவது.

2. அரசு புலிகளை அழித்த போது என்ன சொன்னது? அமிரை கொண்டார்கள், நீலனை கொண்டார்கள் - இவர்கள்தான் தீர்வுக்கு தடை. இவர்களை அழிக்க சர்வதேசமும் தமிழ் மக்களும் உதவினால் - நாம் ஒன்றுபட்ட இலங்கைக்கு 13 plus plus ஐ தருவோம். இது மன்மோகனை வைத்து கொண்டு மகிந்த சொன்னது.

நான் இப்போ கேட்பது 13 ++ வர 15 வருடம் ஆகியும் முடியவில்லையா? என்பதையே.

ஆகவே இது வழமைபோல ஏமாற்று என்பதையே.

எத்தனை காலம் எடுத்தேன்?

இந்த நிலைப்பாட்டை நான் அவர் இதை சொன்னார் என செய்தி வந்த திரியிலேயே எழுதினேன். 2015 என நினைக்கிறேன்.

அப்போ நான் இவரின் அரசியலை ஆதரித்தாலும் - இந்த விடயத்தை இவர் இப்படி பேசி இருக்க கூடாது, சட்ட வரைவிலக்கணப்படி சுமந்திரன் சொல்வது சரி என்றே வைத்தாலும், எமது பிரதிநிதியாக இவர் இப்படி சொன்னது அதிகபிரச்ங்கிதனம் என எழுதினேன்.

அதன் பின் படிப்படியாக இவரின் போக்கை,  இவரோடு வேலை செய்து வெறுத்துப்போனவர்களின் அனுபவங்களை கேட்டு, குறிப்பாக இவரும் விக்கியும் ஆடிய ஈகோ ஆட்டம் என்பவற்றை பார்த்து, இவர் மீதான ஆதரவை 2017 இல் இருந்து விலக்கிகொண்டேன்.

ஏன் உருவாக்கி இருக்க வேண்டும் ?...நான் பெரிசா ?,நீ பெரிசா என்று அடித்திகிட்டு சாவதற்கா ...அரைவாசி தமிழ் சனம் ஏற்கனவே இல்லை .மிச்சம் இருக்கும் தமிழ் சனத்தையும் நாட்டை விட்டு துரத்துவது தான் உங்கள் திட்டம் என்று நினைக்கிறேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அனுர பதவிக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது.

 ஒருவர் கூடவா இந்த காலத்தில் இனவாதம் கக்கவில்லை?

கக்கியிருக்க கூடும், ரேணுக பெரேரா கைது, முக நூலில் தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை இணைத்தவர் கைது, என்பவை அவர்களை அடக்கியிருக்கும். முன்பு மாவீரர் தின வாரம் புலிகளின் கொடியை இராணுவமே ஏற்றி அதை தமிழர் மீது திணித்தது, போலீசார் தடையுத்தரவு வாங்க நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பினம். இந்தமுறை அப்படியொன்றும் நடக்கவில்லை. ரேணுக பழக்க தோஷத்தில வெளிக்கிட்டு எச்சரிக்கப்படுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதோடு அடங்கிவிட்டனர். தெரியும், தொடர்ந்தால் தலைமைக்கு ஆபத்து வருமென்று அதனால் அடங்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஏன் உருவாக்கி இருக்க வேண்டும் ?...நான் பெரிசா ?,நீ பெரிசா என்று அடித்திகிட்டு சாவதற்கா ...அரைவாசி தமிழ் சனம் ஏற்கனவே இல்லை .மிச்சம் இருக்கும் தமிழ் சனத்தையும் நாட்டை விட்டு துரத்துவது தான் உங்கள் திட்டம் என்று நினைக்கிறேன் 
 
அப்படி அடிச்சி கொண்டு சாகாமல் ஒற்றுமையாக இருந்துவிட்டால்….

என்ற நப்பாசை எனக்கு….

பயம்…..யாருக்கு என்பதை வாசகளிடம் விட்டு விடுகிறேன்🤣

1 hour ago, satan said:

கக்கியிருக்க கூடும், ரேணுக பெரேரா கைது, முக நூலில் தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை இணைத்தவர் கைது, என்பவை அவர்களை அடக்கியிருக்கும். முன்பு மாவீரர் தின வாரம் புலிகளின் கொடியை இராணுவமே ஏற்றி அதை தமிழர் மீது திணித்தது, போலீசார் தடையுத்தரவு வாங்க நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பினம். இந்தமுறை அப்படியொன்றும் நடக்கவில்லை. ரேணுக பழக்க தோஷத்தில வெளிக்கிட்டு எச்சரிக்கப்படுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதோடு அடங்கிவிட்டனர். தெரியும், தொடர்ந்தால் தலைமைக்கு ஆபத்து வருமென்று அதனால் அடங்கி விட்டார்கள்.

ரேணுக எந்த சட்டத்தில் கைதானார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.