Jump to content

2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?  


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, goshan_che said:

எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ…

அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது.

மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள்.

அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம்.

இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்…

ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம்.

இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.

கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை.  அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன்.  அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது  என்பது உங்கள் வேண்டுகோள். 

ஒற்றுமை என்பது neutral ஆக  தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை  உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால்  அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி  க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். 

வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே  நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 

  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந

ரஞ்சித்

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழ

Justin

நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Justin said:

இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂).

இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற  எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது.

எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.

 

உங்கள் பயம் நியாயமானதே.

கடந்த 15 வருடங்களில் இந்த வன் தேசியர்கள், மதவாதம், ரவுடித்தனம், பிரதேசவாதம், கூட்டங்களில் போய் குரங்கு சேட்டை விடுவது, வசைபாடல் என பலதையும் கையில் எடுத்து - நீங்கள் கூறியது போல் ஒரு அச்சத்தையும், அருவருப்பையும் உருவாக்கியே உள்ளனர்.

ஆனால் நான் சொன்ன பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் இவர்கள் அல்ல.

நான் சொல்லுபவர்கள்;

தம் இருப்பை தக்க வைக்க தாயக அரசியலை நம்பி இராதவர்கள்,

மாவீரர் நாளை கூட பிரிந்து நடத்துவதை கண்டு மனம் உடைபவர்கள்,

தமது வலுவுக்கு ஏற்ப எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இப்போதும் ஊரில் நல்ல விடயங்களை செய்பவர்கள்….

இவர்கள்தான் மேலே ஐலண்ட் சொன்ன சப்போர்டஸில் பெரும்பாலானவர்கள்.

அடுத்து…தாயக அரசியலில் நீங்கள் பயப்படும் வகையில் இவர்களுக்கு ஒரு சின்ன பங்கு கூட இல்லை.

கஜேஸ் கூட கொள்கைநிலை வரட்டுத்தனமாக இருந்தாலும் - இவர்கள் போல் கட்டுக்கோப்பு-அற்றோர் anarchist இல்லை.

ஆகவே ஒரு மாகாணசப தன்னும் கிடைத்தால் இந்த anarchists கையில் போய்விடும் என்ற  உங்கள் பயம் முகாந்திரமற்றது.

ஆனால் புலம்பெயர் சமூகத்தில் இவர்கள் தாக்கம் நிச்சயம் உள்ளது.

நான் அவதானித்த வகையில் அனுரவின் வரவின் பின் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலின் பின் இவர்களில் சிலர் தம் வன்மையை குறைத்துள்ளார்கள். இன்னும் சிலர் அப்படியே அனுரவிடம் சரண்டர் ஆகி விட்டார்கள், அல்லது அதை நோக்கி நகர்கிறார்கள்.

யூகே லேபர் பார்ட்டியை 2010 ற்கு பின் இப்படிதான் அதி இடதுசாரிகள் கைப்பற்றி இருந்தார்கள், ஆனால் கோர்பினின் இரெண்டாவது தோல்வியோடு அவர்களிடம் இருந்து லேபர்பார்ட்டி மீட்கப்பட்டு நடுநிலைக்கு வந்து ஆட்சியையும் பிடித்தது.

Lurching to the extremes தீவிர எல்லைகளுக்கு போதல் என்பது அரசியல் அமைப்புக்களுக்கு காலத்துக்கு காலம் நடப்பதுதான்

இந்த பாராளுமன்ற தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம், வன் தேசியத்திடம் இருந்து ஈழத்தமிழ்  தேசிய அரசியலை மீட்டெடுப்பதன் ஆரம்பமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

கஜனின் நெகிழ்வுபோக்கும் இதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, island said:

கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை.  அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன்.  அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது  என்பது உங்கள் வேண்டுகோள். 

ஒற்றுமை என்பது neutral ஆக  தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை  உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால்  அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி  க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். 

வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே  நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். 

அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை.

பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்….

இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா?

அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும்.

எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை.

ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது.

எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன்.

அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣.

இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன்.

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

ஏன் முடியாது?

முரளிதரன் கட்டளை தளபதியாக இருந்து விட்டு….இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நழுவ முடியும் எண்டால்….

கொடி பிடித்தவர்கள் அதை ஈசியாக விலத்தி நடக்கலாம்.

கூடவே என்போன்ற கொடிபிடிக்காதோரும் அந்த இடங்களில் நிண்டோம் அல்லாவா. 

ஆகவே அதில் ஈடுபட்ட அனைவரும் புலி ஆதரவாளர் அல்ல.

புலிகளின் ஆதரவாளர் கூட போர் ஓய்வின் பின் நாம் வேறு பதாகையின் கீழ், சமஸ்டி நோக்கி போராடுகிறோம் என சொல்லி, நிலைப்பாட்டை மாற்றலாம்.

இது ஒன்றும் பெரிய விடயமல்ல. உலகில் பல இடங்களில் நடப்பதுதான்.

ஐ ஆர் ஏ செய்த அத்தனைக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என் சின்பெயின் கூறவில்லையா? அதுதான் எடுபடவில்லையா?

 கோசான், இது வரை காலமும் சிங்களவர்களாகிய நீங்கள் செய்ததும் பிழை. தமிழராகிய நாங்கள் செய்ததும் பிழை . இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்..
ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி  பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்tw_lol:😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே!

கருணா செய்த படுகொலைகளுக்கு  [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.]  தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்..

நானும் எல்லாத்தையும் மறக்க தயார்…ஆனால் 13 ஐயாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

செய்வார்களா?

1 hour ago, ரதி said:

ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி  பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்tw_lol:😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே!

கருணா செய்த படுகொலைகளுக்கு  [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.]  தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1

மேலே உங்களுக்கு ஐ ஆர் ஏ, சின்பெயின் உதாரணம் தந்தது இதை விளக்கவே.

புலிகளின் முடிவின் பின் புதிய ஒரு புலிகள் சம்பந்தபடா சிவில் அமைப்பை ஸ்தாபித்து இருக்கலாம்.

ஒரு காலத்தில் புலிக்கொடி பிடித்தார்கள் என்பதல்லாம் பெரிய விடயமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

 

 

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

சிறப்பு ..மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.

தமிழாவது தேசியமாவது எதையும் தூக்கி எறிவோம் கடாசுவோம். ஒரு கண் போனால் காணும் அவர்களுக்கு.,...




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.