Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

08 Dec, 2024 | 03:29 PM

image

ஆர்.ராம்

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்றும், மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தப்படுகின்றபோது அச்செயற்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுவடையும் சவாலான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளவுள்ளீர்கள் என்றும் வினவியவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், 

2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம்.

இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம்.

எவ்வாறாக இருந்தாலும் 22திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தினை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை.

எமது முன்மொழிவுகள் தீர்வினை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும். சிலதரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வினை அடையலாம் என்ற குறிப்பிடுகின்றார்கள். 

நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடன் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் என்பது தான் இலக்காக உள்ளது. அதனை அனைவரினதும் பங்களிப்புடன் அடைந்து கொள்வது தான் நோக்கமாக உள்ளது.

இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. 

அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. 

பல தசாப்தங்களாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோசங்கள் ஓயப்போவதில்லை.

எனவே எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம்.

அதேநேரம், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இனவாதம், மதவாதத்தை பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கு இடமளிக்கவும் இல்லை. வழக்கமாக ஆளும் தரப்பு தான் அவ்விதமான மனோநிலையில் செயற்படும். 

ஆனால் இம்முறை அவ்விதமான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இந்த மாற்றமானது, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சவால்களை அளிக்காது என்றே கருதுகின்றேன். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/200735

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பை உருவாக்கி சமர்ப்பிக்க... 
மூன்று வருடங்களை எடுக்கும் என்று எங்கோ ஒரு செய்தியில் வாசித்தேன். 
அதன் பின் இரண்டு வருடத்தில்... அடுத்த தேர்தல் வந்து விடும்.

நமது நாட்டில்.... வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.
மகிந்த, ரணில், அனுர... ஆட்சி எதுவாக இருந்தாலும், 
புத்திரிகைகள் தினமும்  வாக்குறுதிகளால் நிரம்பி வழியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனுர பிரிகேட் அப்போ எதிர்த்த “சுமந்திரன் வரைபின்” அடிப்படையில்தான் அனுரவும் தீர்வை அணுகுவார்?

@satan போன்ற சுமன் எதிர்ப்பு ஆனால் ஆனுர ஆதரவு ஆட்களுக்கு டெலிக்கேட் பொசிசன்🤣.

1 hour ago, கிருபன் said:

இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம்

அதில் இருந்த கொஞ்ச நஞ்ச அதிகார பகிர்வும் கந்தல்?

1 hour ago, கிருபன் said:

அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம்.

ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்கும் தீர்வு - இதில் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு பகிரபடின் - நானே என்பிபி ஆதரவுக்கு மாறுவேன்🤣

1 hour ago, கிருபன் said:

மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார்

வெறும் வார்த்தை ஜாலம்.

தமிழ் மக்கள்,

சிங்கள மக்கள்,

முஸ்லிம் மக்கள்,

மூவரதும் எதிர்பார்ப்பும் ஒன்றல்ல.

இவர் ஒன்றே என நடிக்கிறார்.

50 minutes ago, தமிழ் சிறி said:

புதிய அரசியலமைப்பை உருவாக்கி சமர்ப்பிக்க... 
மூன்று வருடங்களை எடுக்கும் என்று எங்கோ ஒரு செய்தியில் வாசித்தேன். 
அதன் பின் இரண்டு வருடத்தில்... அடுத்த தேர்தல் வந்து விடும்.

நமது நாட்டில்.... வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.
மகிந்த, ரணில், அனுர... ஆட்சி எதுவாக இருந்தாலும், 
புத்திரிகைகள் தினமும்  வாக்குறுதிகளால் நிரம்பி வழியும்.

அனுரவுக்கு அவகாசம் கேட்கும் குரூப்பில் நீங்கள் இல்லையா?

உங்கட தோஸ்த்து - பயங்கரவாத தடை சட்டம் அவசியம் எண்ட ரேஞ்சுக்கு இறங்கீட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அனுரவுக்கு அவகாசம் கேட்கும் குரூப்பில் நீங்கள் இல்லையா?

நீங்கள்... எல்லா, முட்டையையும் ஒரே கூடையில் வைக்கின்கிறீர்கள். அது... தப்புங்க. animiertes-gefuehl-smilies-bild-0091
கூடை, கீழே விழுந்தால்.... "ஆம்லெட்"  போடக்  கூட... ஒரு முட்டையும், மிஞ்சாதுங்க. animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்... எல்லா, முட்டையையும் ஒரே கூடையில் வைக்கின்கிறீர்கள். அது... தப்புங்க. animiertes-gefuehl-smilies-bild-0091
கூடை, கீழே விழுந்தால்.... "ஆம்லெட்"  போடக்  கூட... ஒரு முட்டையும், மிஞ்சாதுங்க. animiertes-gefuehl-smilies-bild-0090

ஏன்னா எல்லா கூடையும் ஓட்டை கூடை என்பது பட்டறிவுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனுர பிரிகேட் அப்போ எதிர்த்த “சுமந்திரன் வரைபின்” அடிப்படையில்தான் அனுரவும் தீர்வை அணுகுவார்?

@satan போன்ற சுமன் எதிர்ப்பு ஆனால் ஆனுர ஆதரவு ஆட்களுக்கு டெலிக்கேட் பொசிசன்🤣.

அதில் இருந்த கொஞ்ச நஞ்ச அதிகார பகிர்வும் கந்தல்?

ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்கும் தீர்வு - இதில் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு பகிரபடின் - நானே என்பிபி ஆதரவுக்கு மாறுவேன்🤣

வெறும் வார்த்தை ஜாலம்.

தமிழ் மக்கள்,

சிங்கள மக்கள்,

முஸ்லிம் மக்கள்,

மூவரதும் எதிர்பார்ப்பும் ஒன்றல்ல.

இவர் ஒன்றே என நடிக்கிறார்.

அனுரவுக்கு அவகாசம் கேட்கும் குரூப்பில் நீங்கள் இல்லையா?

உங்கட தோஸ்த்து - பயங்கரவாத தடை சட்டம் அவசியம் எண்ட ரேஞ்சுக்கு இறங்கீட்டார்.

உண்மையில் இனப் பிரச்சினையின் தாக்கம் மற்றும் இன்றைய இலங்கையின் பொருளாதார மற்றும் எதிர்கால நிலை சார்ந்த தூர நோக்கோடு சிந்திக்கும் திறன் தற்போதைய அரசுக்கு மற்றும் கட்சிக்கு இருக்குமானால் அத்தனை அதிகாரமும் பாராளுமன்ற வாக்களிப்பு பலமும் வசதிகளும் தாராளமாகவே இருக்கிறது. மனம் மட்டுமே வேண்டும். இருக்கா? கிடைக்குமா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கடவுள் பற்றி கமல் சொன்னதுதான்.

இல்லை எண்டு சொல்லவில்லை….

இருந்தா நல்லா இருக்கும் எண்டுதான் சொல்றேன்….

ஆனா இதுவரைக்கும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடு அறுக்க முதல் அதை அறுக்க துடிப்பவர்கள் இருந்தும் தமிழினத்திற்கு விடிவு வராமல் போனது ஒரு தொயரம். :475: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே இலவு பழுக்கும் எண்டு பாத்திருந்த கிளிபோலவும், காளை மாட்டில பால்கறக்கக் காத்திருந்த சோணகிரிகள் போலவும் 76 வருடங்களைக் காத்துக் காத்தே கடந்துவிட்டோம். கண்ணைமூடிக்கொண்டு காலில் விழுந்து வணங்கமுன் சிந்தியுங்கள் எண்டு சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும்

அப்ப தமிழரு கேட்கிற தீர்வைத் தரப்போறதில்லை எண்டு ஒரு தமிழ் பேசும் ஆளை வைத்தே அநுர சொல்லிப்போட்டார் எண்டு நினைக்கிறன்.

தமிழ்ச்சனம் 1987 இல வேண்டாம் எண்டு தூக்கியெறிஞ்ச‌ அதே 13 ஆம் திருத்தத்தை அடிப்படையா வைச்சாவது ஏதாவது தீர்வு வருமா என்று பார்த்தால், "அந்தக் கதையே வேண்டாம், ஆனால் தமிழ் மக்கள் விரும்புகிற தீர்வை சிங்கள மக்களின்ர ஆதரவோடு" தருவாராம். 

ஒரே குழப்பமாக் கிடக்கு. 13 ஐத் தர ஏலாது ஏனெண்டால் அது நாட்டைப் பிரிக்கிறதாப் போகும், தமிழருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறதாப் போகும் எண்டதுதான் உவையின்ர ஒரே நிலை. 

ஆனால் 13 இலேயே ஒண்டுமில்லை எண்டு தமிழ்ச் சனம் கைய்யை விரிச்சிருக்கிற நிலையில, அதையே தரமாட்டம், சிங்களச் சனம் ஓமெண்டு குடுக்கிறதைத்தான் தருவம் எண்டால், அப்படியொரு தீர்வு இருக்கிறதா என்ன? 

13 ஐ விடக் குறைஞ்ச, தமிழ்ச்சனம் விரும்புகிற, சிங்களச்சனம் ஓமெண்டு அனுமதியளிக்கிற தீர்வு என்னவெண்டு இங்கை இருக்கிற அநுர பிரிகேட் தளபதிகள் தங்களின்ர தலைவரிட்டைக் கேட்டுச் சொன்னால் எங்களுக்கு விளங்கிக்கொள்ள வசதியாய் இருக்கும் எண்டுறது என்ர தாழ்மையான அபிப்பிராயம். 

என்ன நான் சொல்லுறது? 

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் பேசி, தமிழருக்கு தீர்வு இல்லை, அதிகாரம் இல்லை, நாடு இல்லை என்று சிங்களமக்களை உசுப்பேத்தி வாக்கு சேர்த்த தேர்தல்கள் நடந்த இலங்கை வரலாற்றில்,  முதன்முதலாக இனவாதம், மதவாதம், வாக்குறுதி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையோடு ஜெயித்தவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரா அவர்கள்! அவர் போராட்டத்தின் இழப்பு, வலி தெரிந்தவர், அரச கொடூரம் அனுபவித்தவர், உறவுகளை இழந்தவர், நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர், எதை அரசு செய்திருந்தால் இழப்புகளை தவித்திருக்கலாம் என்கிற கொள்கை உடையவர். தமிழரை பற்றி சிந்திக்காத நாட்டில், தமிழர் படும் அவலங்களை உணர்ந்தவர், அதை வெளியில் சொன்னவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களும் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என எடுத்துச்சொன்னவர். இனவாதம் பேசி, தம்மை ஏமாற்றி, நாட்டை சூறையாடிய வெறுப்பு, விரக்தியினால் மட்டும் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் இவ்வளவு பெரும்பான்மையோடு வென்றிருக்க முடியாது. மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள். குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது. ஆகவே பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுக்கலாம். அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்? மக்களே மாற்றத்தை கொண்டு வந்தவர்கள், ஆகவே சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது, இனவாதிகளும் ஊடகங்களும் பொய்களையே பரப்பின, பொய்யான  காரணங்களை கூறினர், திரித்த வரலாறுகளை கற்பித்தனர். அவை எல்லாவற்றையும் இங்கு எழுதிக்கொண்டிருக்க முடியாது. சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம். டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும். நாட்டுக்கு எப்போ பயங்கரவாத சட்டம் தேவையில்லையோ, அப்போ அது தானாக தேவையற்று போகும். முன்னைய அரசுகளில் இந்த சட்டம் தமிழருக்கெதிராக இயற்றி செயற்படுத்தப்பட்டது. இனிமேல் அது இயற்றியவர்களுக்கெதிராகவும் பாய இடமுண்டு. வாழ்க அனுர.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆடு அறுக்க முதல் அதை அறுக்க துடிப்பவர்கள் இருந்தும் தமிழினத்திற்கு விடிவு வராமல் போனது ஒரு தொயரம். :475: 🤣

நீங்கள் இன்னொரு திரியில் ஆடு அறுக்கப்படாது என்பதை ஏற்று கொண்டீர்கள்.

அப்போ எதுக்கு காத்து கிடக்கிறீர்கள்? அது தானாக அறுந்து விழும் தூக்கி கொண்டு போகலாம் எண்டா🤣

1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்ச்சனம் 1987 இல வேண்டாம் எண்டு தூக்கியெறிஞ்ச‌ அதே 13 ஆம் திருத்தத்தை அடிப்படையா வைச்சாவது ஏதாவது தீர்வு வருமா என்று பார்த்தால், "அந்தக் கதையே வேண்டாம், ஆனால் தமிழ் மக்கள் விரும்புகிற தீர்வை சிங்கள மக்களின்ர ஆதரவோடு" தருவாராம். 

நான் நினைக்கிரன் அருணும் அனுரவும் சேர்ந்து தமிழ் ஈழம் தர பிளான் போடுறார்கள் என 🤣

1 hour ago, ரஞ்சித் said:

ஆனால் 13 இலேயே ஒண்டுமில்லை எண்டு தமிழ்ச் சனம் கைய்யை விரிச்சிருக்கிற நிலையில, அதையே தரமாட்டம், சிங்களச் சனம் ஓமெண்டு குடுக்கிறதைத்தான் தருவம் எண்டால், அப்படியொரு தீர்வு இருக்கிறதா என்ன? 

1 hour ago, ரஞ்சித் said:

13 ஐ விடக் குறைஞ்ச, தமிழ்ச்சனம் விரும்புகிற, சிங்களச்சனம் ஓமெண்டு அனுமதியளிக்கிற தீர்வு என்னவெண்டு இங்கை இருக்கிற அநுர பிரிகேட் தளபதிகள் தங்களின்ர தலைவரிட்டைக் கேட்டுச் சொன்னால் எங்களுக்கு விளங்கிக்கொள்ள வசதியாய் இருக்கும் எண்டுறது என்ர தாழ்மையான அபிப்பிராயம்

3 minutes ago, satan said:

நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர்,

அந்த நியாயமான கோரிக்கை - இணைந்த வடக்கு கிழக்கில், தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரம் உள்ள மாகாணசபையை கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள்.

சிங்களமக்கள் காணி, பொலிஸ் அதிகாரத்தை லாபாய், லாபாய், தாயட்ட ஹத்தராய் என கூவி கூவி விற்பதாகத்தான் கேள்விபடுகிறேன்.

9 minutes ago, satan said:

குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது.

இனி எல்லாரும் சகோதரயா…தையிட்டி, கந்தரோடை, வெடுக்குநாறி, பு….பூநாறி எல்லாம் இனி நாறி அல்ல, மாறி🤣.

13 minutes ago, satan said:

தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது,

பாவங்கள் முக்காவாசி சிங்கள சனத்துக்கு கண்தெரியாது, காதும் கேட்காது.

14 minutes ago, satan said:

சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

முகநூலில் போய் ஒரு பக்கம் திறந்து எழுதுங்கோ சாத்ஸ் - சிங்களவர் வந்து தாம் யார் என்பதை காட்டுவார்கள் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

மாண்புமிகு ஜனாதிபதி அனுரா

15 minutes ago, satan said:

வாழ்க அனுர

இதெல்லாம் ஸ்கீரீன் ஷொட் எடுத்து வைக்க வேண்டிய வரலாற்று பதிவு 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

அந்த நியாயமான கோரிக்கை - இணைந்த வடக்கு கிழக்கில், தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரம் உள்ள மாகாணசபையை கொடுக்க கூடாது.

சுமந்திரனின் புலி எதிர்ப்புக்கொள்கையோடு இணைந்திருந்த தமிழரசுக்கட்சி போல், இது என்றுங்கொள்ளலாம். எல்லாம் மாறும், மனித மனங்களும் மாறும். கொடிய போரில்  மக்களை கொன்றொழித்த அசோக சக்கரவர்த்தி, புத்த தர்மத்தை போதிக்க தன் மகளை இலங்கைக்கு அனுப்பவில்லையா? காலம் வரும்போது அதுவும் தானாக மாறும். அனுராவின் ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதியடைய வேண்டும்.

8 minutes ago, goshan_che said:

பாவங்கள் முக்காவாசி சிங்கள சனத்துக்கு கண்தெரியாது, காதும் கேட்காது.

நீங்கள் அவர்களோடு பேசிப்பாருங்கள், உண்மை புரியும். அந்த நேரம் அவர்கள் கிறிக்கெற் பாத்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். புலிகள் விடுதலை செய்த இராணுவத்தினரையே பத்திரிகைகள் பேட்டி எடுக்கவோ, மக்கள் சந்திக்கவோ அனுமதியளிக்காமல் மீண்டும் போர்முனைக்கு அனுப்பியவர்கள். தப்பியோடும் அல்லது போராட மறுத்த இராணுவத்தினரை கொன்றுவிட்டு புலிகள் மேல் பழி போட்டதும், தப்பியோடிவிட்டனர் என்றும் கதை சொன்னனர்.

6 minutes ago, goshan_che said:

இதெல்லாம் ஸ்கீரீன் ஷொட் எடுத்து வைக்க வேண்டிய வரலாற்று பதிவு 🤣.

ம், தெரியும். நீங்கள் அதை செய்வீர்கள் என்று. அதனாலேயே உங்களுக்கு மட்டும் சமர்ப்பணம்! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

சுமந்திரனின் புலி எதிர்ப்புக்கொள்கையோடு இணைந்திருந்த தமிழரசுக்கட்சி போல், இது என்றுங்கொள்ளலாம். எல்லாம் மாறும், மனித மனங்களும் மாறும். கொடிய போரில்  மக்களை கொன்றொழித்த அசோக சக்கரவர்த்தி, புத்த தர்மத்தை போதிக்க தன் மகளை இலங்கைக்கு அனுப்பவில்லையா? காலம் வரும்போது அதுவும் தானாக மாறும். அனுராவின் ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதியடைய வேண்டும்.

நீங்கள் அவர்களோடு பேசிப்பாருங்கள், உண்மை புரியும். அந்த நேரம் அவர்கள் கிறிக்கெற் பாத்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். புலிகள் விடுதலை செய்த இராணுவத்தினரையே பத்திரிகைகள் பேட்டி எடுக்கவோ, மக்கள் சந்திக்கவோ அனுமதியளிக்காமல் மீண்டும் போர்முனைக்கு அனுப்பியவர்கள். தப்பியோடும் அல்லது போராட மறுத்த இராணுவத்தினரை கொன்றுவிட்டு புலிகள் மேல் பழி போட்டதும், தப்பியோடிவிட்டனர் என்றும் கதை சொன்னனர்.

ம், தெரியும். நீங்கள் அதை செய்வீர்கள் என்று. அதனாலேயே உங்களுக்கு மட்டும் சமர்ப்பணம்! 

நீங்கள் பாவிக்கும் வஸ்து எது என்பதை அறியத்தந்தால் நானும் இந்த சுகானுபவத்தை பெறலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முகநூலில் போய் ஒரு பக்கம் திறந்து எழுதுங்கோ சாத்ஸ் - சிங்களவர் வந்து தாம் யார் என்பதை காட்டுவார்கள்

ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.    

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.    

சிங்களம் தெரியாது. எனவே, தற்போது கூட சமூக வலை ஊடகங்களிலும், செய்திகளின் பின்னூட்டமாகவும் சிங்கள மக்கள் எழுதுவதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. பின்னர் எப்படி பெரும்பாலான சிங்களவர்களின் "அப்பாவித் தனத்திற்கு" அத்தாட்சி கொடுக்கிறீர்கள்? குறைந்த பட்சம் இலங்கையில் இருந்த போது சிங்களப் பகுதிகளில் வசித்தாவது அனுபவம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன்.

பின்னர் எப்படி ஐயா இப்படி பந்தி பந்தியாக அளக்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்?

சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். 

டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும்.

வாழ்க அனுர.  

ஒரேயடியாக 'வாழ்க அநுர...........' என்று சுத்தியலால் உச்சி மண்டையில் அடித்தது போல சொல்லிவிட்டீர்கள்...........................🤣.

அநுர இல்லாமல் சஜித்தோ அல்லது ரணிலோ வந்திருந்தாலும் எதுவுமே கிடைக்காது. அதே பனாட்டு காயப் போட்ட கதையைத்தான், காயட்டும் காயட்டும் என்று எப்பவும் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பை மாற்றும் போல, அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் போல........... ஆனால் மாகாணங்களுக்கு காணி, போலீஸ் அதிகாரம் கொடுக்கப் போகின்றோம் என்று ஆரம்பித்தால், அப்படியே அந்த புதிய அரசியலமைப்பை தூக்கிப் பாராளுமன்றக் குளத்துக்குள் போட்டுவிடலாம். இந்த யோசனை சர்வசன வாக்கெடுப்பில் தெளிவாக நிராகரிக்கப்படும்.

'மச்சான், உங்களுக்கு என்ன தான்டா பிரச்சனை................' என்று தான் சிங்கள் நண்பர்கள் அன்று அங்கலாய்த்தார்கள்.  இன்றும் அதையே தான் கேட்பார்கள். அவர்களால் இதை உணர்ந்து கொள்ளமுடியாது. பெரும்பான்மை சமூகங்களால் இதை உணர்ந்து கொள்வது கடினம். விதிவிலக்காக, அவர்களில் ஓரிருவருக்கு புரியலாம், அந்த ஓரிருவரும் நோபல் பரிசுக்கு தகுதியானவர்கள் போன்று அரிதானவர்கள்.

அர்ச்சுனா இதைச் செய்யமுடியாது. அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அனுப்பி எடுக்கலாம். அதுதான் அவரின் துறை. சமூகத்திற்கு மிகவும் நல்லது.

ஆனால் பாராளுமன்றில் இருக்கும் மற்றைய தமிழ் பிரதிநிதிகள் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய, இருக்க வேண்டிய  உரிமைகள் பற்றி தொடர்ந்து சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

👍

4 hours ago, ரசோதரன் said:

ஆனால் பாராளுமன்றில் இருக்கும் மற்றைய தமிழ் பிரதிநிதிகள் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய, இருக்க வேண்டிய  உரிமைகள் பற்றி தொடர்ந்து சொல்லவேண்டும்.

அனுரகுமார திசநாயக்கவின் தமிழ்  பொம்மைகள் ஒன்றும் சொல்லாது அர்ச்சுனாவால் முடியாது.

தமிழ் கட்சி எம்பிக்கள் தான் சொல்ல வேண்டும்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

பின்னர் எப்படி ஐயா இப்படி பந்தி பந்தியாக அளக்கிறீர்கள்

நான், பந்தி பந்தியாக எழுதுவதுதான் உங்கள் பிரச்சனையா? கடந்து போங்கள். உங்களை நான் வாசிக்கும்படி வற்புறுத்தவில்லையே? நான் கொழும்பில் சிறிது காலம் வசித்தேன். அப்போ அங்கிருந்த தமிழ் மக்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த போது, சில சிங்களவர் இவ்வளவு புலிகள் இங்கே பதுங்கியிருந்தார்கள் என்று குதூகலித்தார்கள். அப்போ அங்கே இருந்த எனது உறவினர் உண்மையை விளக்கியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. போர்முடிவடைந்தபின், மஹிந்தா ஒவ்வொரு பௌத்த சங்க குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் கொடுத்து வடக்கை தனது வெற்றியை பார்வையிட சுற்றுலா அனுப்பி வைத்தார். அங்கே போய் வந்த ஒரு குடும்பம் சொன்னது, மஹிந்த மாத்தையா அப்பாவி தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்டார், இடிந்து போன வீடுகளை திரும்ப அமைத்துக்கொடுக்கிறார், கடைகள் இன்னும் இராணுவம் நடத்துகிறது, வெகு விரைவில் திருப்பி உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள் என கூறினார். அதை விட யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார தடை ஏற்படுத்திய போது, அங்குள்ள வியாபார நிலையங்கள் கேள்வி எழுப்பிய போது, மஹிந்த சொன்ன காரணம், புலிகள் உங்கள் பொருட்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வரி அறவிடுகிறார்கள், உங்கள் பொருட்களை மக்களிடம் சேர அனுமதிக்கிறார்கள் இல்லை, தாங்களே எடுக்கிறார்கள்,  கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், புலிகளை முறியடித்தபின் உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார். இவைகளெல்லாம் பத்திரிகைகளில் வந்தன. அதைவிட ஊடகவியலாளர் அந்த பிரதேசத்துக்கு செல்ல மறுக்கப்பட்டனர், உண்மையை கூறக்கூடிய, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வந்த இராணுவத்தினரை யாரும் சந்திக்க முடியாதவாறு தடுக்கப்பட்டனர், சணல் நான்கை பார்ப்பதற்கு தடை விதித்தனர், இவையெல்லாம் எதை கூறுகின்றன? மக்களிடம் உண்மை போய்ச்சேராதவாறு தடுத்தனர்,  உண்மையை கூறியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்,  கொலை செய்யப்பட்டனர். உதாரணம், பா .உ. ரவிராஜ். பொது அமைப்புகளை ஏன் பலவந்தமாக விரட்டினர்? நான் சொல்லும் கூற்றுக்களுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும். அதனாலேயே எனது கருத்துக்கள் பந்தியாக வருகின்றன. சும்மா ஓரிரண்டு வார்த்தைகளில் சொல்வதால் அது உண்மையாகாது. எனது பதிவுகள் உங்களுக்கு மட்டுமானதாலல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்படி குற்றம் சாட்டுவது இயல்பு. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நிர்வாகம் எச்சரித்தால் பரிசீலிப்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பலத்த ஆதாரம். மஹிந்த இன்றுவரை சொல்லிவருகிறார், புலிகளிடமிருந்து அப்பாவி தமிழ் மக்களை மீட்க மனித நேயப்போர் செய்து, மக்களை மீட்டதாக. அப்படியென்றால்; அவரது வெற்றி விழாவை தமிழ் பிரதேசங்களில், தமிழ் மக்களல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்? தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு வகைதொகையின்றி வீழ்ந்திருக்க வேண்டுமே? மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மக்கள் தடைகளையும் தாண்டி முண்டியடிக்க தேவையில்லையே? அதை கட்டுப்படுத்த அரசாங்கம் படைகளை திரட்டி தடுக்க தேவையில்லையே? இங்கு இனப்பிரச்சனையில்லை, பயங்கரவாதம் என பொய் சொல்லத்தேவையில்லையே? தமிழரின் தலைவரை கொன்றதுதான் நான் செய்த தவறு என மனஸ்தாபப்படத்தேவையில்லையே? இன்னும் இராணுவம் தமிழர் பிரதேசங்களில் சுற்றி  இருப்பதற்கான காரணம் என்ன என விளக்குவீர்களா? அவர்களை வெளியேறும்படி மக்கள் வற்புறுத்துவது ஏன்? மாவீரர் வாரத்தை பெரிய விவகாரமாக சிங்கள மக்களிடம் தோற்றுவிப்பது ஏன்? ஏன் அந்த சிங்கள மக்கள் கேள்வி கேட்கவில்லை? எதற்காக தங்களை வருத்தியவர்களின் நினைவை தமிழ் மக்கள் அனுசரிக்கிறார்கள்? ஏன் தடை போடுகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வேண்டுமே? முன்பு யூட், கற்பகத்தின் பெயர்கள் மாறி கருத்துக்கள் இன்னொரு பெயரில் எதிரொலிக்கிறது.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.