Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிகு2

இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. 

ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை.

ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது.

இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன்.

ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.

  • Thanks 1
  • Replies 88
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

தமிழ் சிறி

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

ரஞ்சித்

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

பிகு2

இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. 

ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை.

ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது.

இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன்.

ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.

நானும் முரண்பட்டு ஆறு ஏழு மாதங்கள் வெளியே நின்றேன். பல பேச்சுவார்த்தைகள் விளக்கங்களுடன் தமிழர்களுக்கு ஒரு பலமான இயக்கத்தின் தேவை குறையவே இல்லாத தாயக நிலை. பலமான மீனை இன்னும் பலமாக்குவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை. மீண்டும் இணைந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎

மொழிபெயர்ப்பு:

பின்னேரம் கோசானுக்கு ராகுகாலம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலர் 

வாங்கிய காசுக்கு  மறக்காமல்  அதுக்கு ஒரு குத்து ❤️ , உன்னிடம் வாங்கிய காசுக்கு இதுக்கு ஒரு குத்து ❤️  

பின்னர், இதுக்கு ஒரு குத்து 🏆 என்கிற நகைச்சுவை போல இருக்கிறது சிலரின் Likes.  

சொந்தமாக யோசியுங்களேன். 😏 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப்படைகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்கும் மேற்கிற்கெதிரான ஆனால் மேற்குலகில் வசிக்கும் ஒரு சிலர், தாம் ஒற்றைக்காலில் நின்று ஆதரிக்கும் அதி மேன்மை தங்கிய, மனிதருள் மாணிக்கம் ஐயா புட்டின் அவர்கள் அப்கானிஸ்த்தானில் ஆட்சிபுரியும்  அடிப்படைவாதிகளான தலிபான்கள் மீதான தடையினை நீக்கி பரஸ்பரம் உறவுகளை மேற்கொள்ளப்போகிறாரே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? 

தலிபான்கள் நல்லவர்கள் என்று இனி எழுதிக்கொண்டு வருவார்கள். புட்டின் செய்தால் அது சரியாகத்தானே இருக்கும், என்ன நான் சொல்லுறது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/12/2024 at 04:59, Kadancha said:

சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம்.

அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும்.

சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால்.

அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட)

மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.  

(அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?)

ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.

அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள்.

"புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு  Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎.   

குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/12/2024 at 01:22, ரஞ்சித் said:

புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா?

ஏனைய இயக்கங்களை மக்கள் தண்டிக்க 30 வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது ...கடந்த தேர்தலில் தான் அதை செய்தாகள்...🤔

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/12/2024 at 07:56, ரசோதரன் said:

அப்படியும் இருக்கலாம்..........

சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே..........

தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌.

அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   

அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம்  செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, விசுகு said:

எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா 

நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு  இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ... 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, putthan said:

 இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...

👍................

ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

👍................

ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌

மனித வாழ்வின் நிஜம் இது தான் ....அரசியல் ,ஆத்மீகம்,உத்தியோகம் என எத்தனை புறக்காரணிகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது ..பழமையவர்களின் தனிமனித கருத்தாதிக்க தொடர்ச்சிகள்,புதியவர்களின் கருத்தாதிக்க சிந்தனைகள் ...தாங்காதடா சாமி ...புத்தரை மாதிரி துறவறம் சென்று ஒழித்து வாழ நான் புத்தன் அல்ல மனிதன் 😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, putthan said:

🤣...............

உங்களுக்கும், எனக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று நினக்கின்றேன். நாங்களும் இருவரும் தேவைக்கு அதிகமாகவே கதைகள், கவிதைகள் வாசிக்கின்றோம் போல..................😜

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, putthan said:

நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு  இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ... 

சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம் 

காலம் செல்லும் அதுவரை தொடரட்டும் தமிழ் தேசிய பணி...வரலாறு தானே பாடம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.