Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், கப்பம் வசூலித்தலில்  கூட ஈடுபட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒரு நபரை கடத்திட்டு ஆதாரமாக அவரது அடையாள அட்டையுடன் ஒருவர் சைக்கிளில் வந்து குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு போவார். அங்கே போனால் அவர்கள் வசம் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலும், வந்திருக்கும் குடும்ப உறுப்பினரிடம் வசூலிக்க வேண்டிய கப்பத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இனி காலில் விழாத குறையாக அழுது புலம்பி அந்த தொகையை குறைக்க பகீரதப்பிரயத்தனம் பண்ணி குடும்ப உறுப்பினர்களை காப்பற்றிய, தாலிக்கொடியை கழற்றிக்கொடுத்து விட்டு வந்த கதைகள் என் குடும்பத்திலேயே உண்டு. இப்படி கப்பம் வசூலித்த மாவீரன் ஒருவனை STF உயிருடன் பிடித்து அவனது வயிற்றை இரும்புக்கம்பியால் துளைத்து அவர்களது ஜீப்பில் கட்டி குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்து சென்றதை பார்த்து ஊரே ஆரவாரித்து மகிழ்ந்து "ஜெயவெவா" போட்ட வரலாற்று பதிவுக்கு வாழும் கண்கண்ட சாட்சி நானே. உண்மைக்கு எப்போதும் இரண்டு கெட்ட குணங்கள்  உண்டு. ஒன்று சுடும், மற்றையது என்றுமே உறங்காது  

வழவனுக்கு இன்னொரு திரியில் புலிகளின் கட்டாய ஆட்சேர்பு பற்றி எழுதிய பதிலை கண்டிருப்பீர்கள்.

அந்தளவுக்கு உறவினருக்கு நடந்தது வரைக்கும் போக தேவை இல்லை…

என் தந்தைக்கு சொந்தமான மிக விலை உயர்ந்த வாகனத்தை எடுத்து போனார்கள்.

நாங்கள் பாஸ் எடுத்து வந்த பின்னும், குடும்பத்தில் ஒருவரும் தமது பகுதியில் இல்லை என கூறி மிக பெறுமதியான எமது வீட்டை எடுத்து கொண்டனர்.

இரண்டையும் மீட்க போன எனது பெற்றாரை அலைகழித்து, அவர்கள் முகாமில் இருக்கும் போது அது வான் தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இதனால் என் தாயார் உயிரை கூட இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த இரு விடயங்களும் அதி உச்ச தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் பயனிருக்கவில்லை.

இத்தனைக்கும் பின் சமாதான காலத்தில் ஊருக்கு போன போது, அலுவலகம் அழைக்கப்பட்டு, வெளிநாட்டு விலாசம் தமது பங்களிப்பு ரெஜிஸ்டரோடு சரிபார்க்கப்பட்டே விடப்பட்டேன்.

இப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும்.

ஆனால் இவற்றால் அவர்கள் மீது கோவம் வந்தாலும் வன்மம் வரவில்லை - பின்னாளில் சட்டத்துக்கு உட்பட்ட உதவிகள் கேட்டபோதும் மறுக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இதை என்ன குறிக்கோளுக்காக செய்கிறார்கள் என்ற தெளிவு இருந்தபடியால்.

இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கும் அசாத்துக்கும் உள்ள வித்தியாசம்.

அசாத் புலிகள் செய்ததை போல் நூறு மடங்கு அநியாயத்தை தன் குடும்ப நலனுக்காக செய்தார். புலிகள் செய்த அநியாயங்கள் அநேகம் இன நலனை நோக்கியே இருந்தது. 

இதை தவிர்த்து விட்டு ஒத்த கோடு கீற முடியாது.

தலைவர் இறந்த போது உலகம் தமிழர் அத்தனை பேரும் (சிலர் நீங்கலாக) துக்கித்தானர். அசாத்? அவரது அலவி சமூகமே ஆர்பரித்து வரவேற்கிறது.

இதுதான் வித்தியாசம்.

 

  • Thanks 1
  • Replies 137
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

கிருபன்

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

ரஞ்சித்

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

அட... அது நீங்கள் இல்லையா? நீங்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!

👆மாரடைப்பு கேஸ் இலக்கம் 1 🤣.

நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

எனது புலி விமர்சனம் அவரையும் என்னையும் முரண்பட வைத்தது.

ஐடி மாறினாலும் மனிசன் என்மேல் வைத்த பார்வை மாறவில்லை.

மாற வேண்டிய அவசியமும் இல்லை.

 

31 minutes ago, goshan_che said:

நான் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை கொடுக்கிறேன் என நீங்கள் எழுதியதை வாசித்து பல பழைய காய்களுக்கு மாரடைப்பு வராத குறை🤣.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, goshan_che said:

உங்கள் கோடு வரைதல் பிழை என பலர் எழுதிய பின்

 

1. நான்  சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்)  - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு -  வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள்  இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்பொது தெளிவாக  இருக்கிறது தானே. 

2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, goshan_che said:

நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

காலம் பதில் சொல்லும்! அதுவரை மௌனம் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

 

1. நான்  சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்)  - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு -  வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள்  இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்பொது தெளிவாக  இருக்கிறது தானே. 

2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
 

ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்….

அல்லது….

You are moving the goal post as the game unfolds…..

இதை முன்பும் நான் உட்பட பலர் அயர்சி தரும் தர்க்கம் என யாழில் குறிப்பிட்டுள்ளோம்.

 

1 hour ago, satan said:

காலம் பதில் சொல்லும்! அதுவரை மௌனம் நலம்.

மெளனம் சம்மதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

மெளனம் சம்மதம்.

இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை  என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை  என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.

இந்த திரியில் என்ன கருத்தை எழுதினீர்கள் அது எடுபடாமல் போக?

நான் ஒரு ஐந்தாம்படை என எழுதினீர்கள். அதை விளக்கி நான் பதில் எழுதியுள்ளேன்.

இதில் எங்கே சாத்ஸ் கருத்து எழுதினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, satan said:

 

நான் சொன்னது உண்மை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

மெளனம் சம்மதம்.

இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடக்குது? 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/12/2024 at 23:23, குமாரசாமி said:

விசுகர்! இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும்,போர் அழிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தது யார் யார்?

வரலாறு தெரிந்தவர் நீங்கள்.

நாம் மேற்கை நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை.

எமது கனவும் அரவணைப்பும் இந்திய ரசிய சீன கியூபா மற்றும் வியட்நாம் சார்ந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கதவையும் காதையும் முற்றிலுமாக மூடிய பின்னரே நாம் அடுத்தவரை நாடினோம். 

போர்க்குற்றங்கள் மற்றும் பேரளிவுகளுக்கு எல்லோரும் தான் காரணம். அதில் இந்திய ரசிய சீன பங்கு மிக மிக அதிகம். மேற்குலகம் சில தடைகள் எச்சரிக்கைகளை யாவது செய்தது. அதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டுப்பாடற்ற இந்திய ரசிய சீன ஆதரவுடன் இலங்கையில் தமிழர்களே முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.

15 hours ago, குமாரசாமி said:

விசுகர்! முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுத முயற்சியுங்கள் 😄
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடக்குது? 🤣

🤣🤣🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்….

அல்லது….

You are moving the goal post as the game unfolds…..


இப்போது தெளிவு தானே.. 1 க்கு பின்பபு வருகிறேன் தேவை  என்றால்.

2 இல் ஒரு குறையும் உங்களுக்கு இல்லைத்தானே 
 
அப்படியானால் 2 க்கு,

                   2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

                    நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
                    நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.

முதல் கேள்வி உங்களிடம் ஒருபோதும் எழவில்லையா? 

 ஏன் பாலசிங்கம் நீங்கள் சொல்லிய போராட்டத்தை பாதுகாக்க  (அல்லது அதற்கு கிட்டத்தட்ட ஒப்பான ஓர் கருத்தை) (நேரடியாக) சொல்லவில்லை.

நேரடியாக  நான் சொல்வதன்  காரணம் - நீங்கள் நம்புகிறீர்கள் வேறு  ஏதாவது சொல்லி , அதை நிருபர்கள் சொல்லவில்லை என்று. அல்லது பேட்டியில்  வேறு  ஏதாவது  சூழ்நிலை இருக்கலாம் என்று.

நீங்கள் சொல்லும் போராட்டத்தை பாதுகாப்பது என்பது, என்பது மட்டும்  தான்  என்றால்,  அதற்காக மற்ற இயக்கங்களை அழித்து இருந்தால் - கிட்டத்தட்ட மிக கூடிய போராட்ட தார்மீக நியாயாதிகமாக இருக்கிறது அல்லவா - அது, அது  மட்டும்  தானே  உடனடியாக மதி, மனம் (state of mind - உங்களுக்கு சட்டத்துறை பரீட்சயம் இருக்கிறது , இதன் அர்த்தம் நன்றாக புரியும்)  ஆக வாயில் வந்து இருக்க வேண்டும். வேறு எந்த பதில்களும் வந்து இருக்க கூடாது அல்லவா?

ஆகவே, வேறு அடிப்படை காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் நியாயமானது தானே?




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது தெளிவு தானே.. 1 க்கு பின்பபு வருகிறேன் தேவை  என்றால். 2 இல் ஒரு குறையும் உங்களுக்கு இல்லைத்தானே    அப்படியானால் 2 க்கு,                    2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது                      நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.                     நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க. முதல் கேள்வி உங்களிடம் ஒருபோதும் எழவில்லையா?   ஏன் பாலசிங்கம் நீங்கள் சொல்லிய போராட்டத்தை பாதுகாக்க  (அல்லது அதற்கு கிட்டத்தட்ட ஒப்பான ஓர் கருத்தை) (நேரடியாக) சொல்லவில்லை. நேரடியாக  நான் சொல்வதன்  காரணம் - நீங்கள் நம்புகிறீர்கள் வேறு  ஏதாவது சொல்லி , அதை நிருபர்கள் சொல்லவில்லை என்று. அல்லது பேட்டியில்  வேறு  ஏதாவது  சூழ்நிலை இருக்கலாம் என்று. நீங்கள் சொல்லும் போராட்டத்தை பாதுகாப்பது என்பது, என்பது மட்டும்  தான்  என்றால்,  அதற்காக மற்ற இயக்கங்களை அழித்து இருந்தால் - கிட்டத்தட்ட மிக கூடிய போராட்ட தார்மீக நியாயாதிகமாக இருக்கிறது அல்லவா - அது, அது  மட்டும்  தானே  உடனடியாக மதி, மனம் (state of mind - உங்களுக்கு சட்டத்துறை பரீட்சயம் இருக்கிறது , இதன் அர்த்தம் நன்றாக புரியும்)  ஆக வாயில் வந்து இருக்க வேண்டும். வேறு எந்த பதில்களும் வந்து இருக்க கூடாது அல்லவா? ஆகவே, வேறு அடிப்படை காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் நியாயமானது தானே?
    • பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.
    • ஆம். இவை தான் காரணங்கள். ஆனால், இந்தக் காரணங்களிலும் சிலவற்றுடன் ஒத்துவர முடியவில்லை. புலிகளை சுமந்திரன் விமர்சித்தார் என்பது சரியான தகவலா தெரியவில்லை. நீங்கள் "ஆயுதப் போராட்டத்தால் தீர்வு வராது" என்று நம்பிய, நம்பும் ஒருவர். இதை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வது போல சுமந்திரனும் வெளிப்படையாகச் சொன்னார். அப்படிச் சுமந்திரன் சொல்வது பிரச்சினை என்பதன் அர்த்தம், "வாக்கு வாங்குவதற்காக அக்ரிங் கொடுக்க வேண்டும்" என்று சொல்வது போல படுகிறது. ஏற்கனவே செவாலியர் விருது வாங்கும் அளவிற்கு "நடிகமணிகளாக" இருக்கும் நபர்களால் தமிழ் தேசிய அரசியலும் (யாழ் களமும்😎) நிரம்பியிருக்கிறது. இன்னொரு நடிகன் தேவையா எமக்கு? ஒரு காரணம் தான் முக்கியமானது: ஏனைய "நடிகமணி" தமிழ் அரசியல்வாதிகள் போல பிரபாகரனையும், புலிகளையும் தூக்கித் தலையில் வைக்கவில்லை என்பதே அது. இதே  தான் சம்பந்தரை வெறுக்கவும் காரணம். வடக்கு கிழக்கில் ஆமி ஊருக்குள் வரமுதலே, "என்னை ஆமி தேடுது" என்று வெளியேறி வந்து வெளிநாட்டில் தஞ்சம் பெற்ற ஆட்கள்  ஊரில் தங்கி விட்ட அரசியல் வாதிகளை  கரிச்சுக் கொட்டும் போது பெரும் கொமெடி பார்ப்பது போலத் தான் இருக்கும்😂.  
    • இந்த செய்தியில் கிடைத்த மேலதிக தகவல்> மேற்படி பெண்ணின் கணவர் ஒரு லாரி டிரைவராதலால் அவர் அதிகம் வீட்டில் இருப்பதில்லை என்றும் அதனால் தனக்கு கடுமையான மனவுளைச்சல் ஏற்படுவதாக கூறி மணமுறிவு பெற்றதுடன் ஒவ்வொருதரமும் சுமார் 28000 டாலர் இழப்பீட்டு தொகையையும் அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். பின்னர் அரசு நிறுத்தி வைத்த கைம்பெண் உதவி தொகையையும் மீளப்பெறுவதற்கான அனுமதியையும் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.