Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், கப்பம் வசூலித்தலில்  கூட ஈடுபட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒரு நபரை கடத்திட்டு ஆதாரமாக அவரது அடையாள அட்டையுடன் ஒருவர் சைக்கிளில் வந்து குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு போவார். அங்கே போனால் அவர்கள் வசம் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலும், வந்திருக்கும் குடும்ப உறுப்பினரிடம் வசூலிக்க வேண்டிய கப்பத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இனி காலில் விழாத குறையாக அழுது புலம்பி அந்த தொகையை குறைக்க பகீரதப்பிரயத்தனம் பண்ணி குடும்ப உறுப்பினர்களை காப்பற்றிய, தாலிக்கொடியை கழற்றிக்கொடுத்து விட்டு வந்த கதைகள் என் குடும்பத்திலேயே உண்டு. இப்படி கப்பம் வசூலித்த மாவீரன் ஒருவனை STF உயிருடன் பிடித்து அவனது வயிற்றை இரும்புக்கம்பியால் துளைத்து அவர்களது ஜீப்பில் கட்டி குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்து சென்றதை பார்த்து ஊரே ஆரவாரித்து மகிழ்ந்து "ஜெயவெவா" போட்ட வரலாற்று பதிவுக்கு வாழும் கண்கண்ட சாட்சி நானே. உண்மைக்கு எப்போதும் இரண்டு கெட்ட குணங்கள்  உண்டு. ஒன்று சுடும், மற்றையது என்றுமே உறங்காது  

வழவனுக்கு இன்னொரு திரியில் புலிகளின் கட்டாய ஆட்சேர்பு பற்றி எழுதிய பதிலை கண்டிருப்பீர்கள்.

அந்தளவுக்கு உறவினருக்கு நடந்தது வரைக்கும் போக தேவை இல்லை…

என் தந்தைக்கு சொந்தமான மிக விலை உயர்ந்த வாகனத்தை எடுத்து போனார்கள்.

நாங்கள் பாஸ் எடுத்து வந்த பின்னும், குடும்பத்தில் ஒருவரும் தமது பகுதியில் இல்லை என கூறி மிக பெறுமதியான எமது வீட்டை எடுத்து கொண்டனர்.

இரண்டையும் மீட்க போன எனது பெற்றாரை அலைகழித்து, அவர்கள் முகாமில் இருக்கும் போது அது வான் தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இதனால் என் தாயார் உயிரை கூட இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த இரு விடயங்களும் அதி உச்ச தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் பயனிருக்கவில்லை.

இத்தனைக்கும் பின் சமாதான காலத்தில் ஊருக்கு போன போது, அலுவலகம் அழைக்கப்பட்டு, வெளிநாட்டு விலாசம் தமது பங்களிப்பு ரெஜிஸ்டரோடு சரிபார்க்கப்பட்டே விடப்பட்டேன்.

இப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும்.

ஆனால் இவற்றால் அவர்கள் மீது கோவம் வந்தாலும் வன்மம் வரவில்லை - பின்னாளில் சட்டத்துக்கு உட்பட்ட உதவிகள் கேட்டபோதும் மறுக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இதை என்ன குறிக்கோளுக்காக செய்கிறார்கள் என்ற தெளிவு இருந்தபடியால்.

இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கும் அசாத்துக்கும் உள்ள வித்தியாசம்.

அசாத் புலிகள் செய்ததை போல் நூறு மடங்கு அநியாயத்தை தன் குடும்ப நலனுக்காக செய்தார். புலிகள் செய்த அநியாயங்கள் அநேகம் இன நலனை நோக்கியே இருந்தது. 

இதை தவிர்த்து விட்டு ஒத்த கோடு கீற முடியாது.

தலைவர் இறந்த போது உலகம் தமிழர் அத்தனை பேரும் (சிலர் நீங்கலாக) துக்கித்தானர். அசாத்? அவரது அலவி சமூகமே ஆர்பரித்து வரவேற்கிறது.

இதுதான் வித்தியாசம்.

  • Thanks 1
  • Replies 139
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

கிருபன்

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

ரஞ்சித்

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

அட... அது நீங்கள் இல்லையா? நீங்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!

👆மாரடைப்பு கேஸ் இலக்கம் 1 🤣.

நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

எனது புலி விமர்சனம் அவரையும் என்னையும் முரண்பட வைத்தது.

ஐடி மாறினாலும் மனிசன் என்மேல் வைத்த பார்வை மாறவில்லை.

மாற வேண்டிய அவசியமும் இல்லை.

31 minutes ago, goshan_che said:

நான் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை கொடுக்கிறேன் என நீங்கள் எழுதியதை வாசித்து பல பழைய காய்களுக்கு மாரடைப்பு வராத குறை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, goshan_che said:

உங்கள் கோடு வரைதல் பிழை என பலர் எழுதிய பின்

1. நான்  சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்)  - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு -  வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள்  இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்பொது தெளிவாக  இருக்கிறது தானே. 

2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, goshan_che said:

நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

காலம் பதில் சொல்லும்! அதுவரை மௌனம் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

1. நான்  சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்)  - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு -  வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள்  இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்பொது தெளிவாக  இருக்கிறது தானே. 

2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
 
ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்….

அல்லது….

You are moving the goal post as the game unfolds…..

இதை முன்பும் நான் உட்பட பலர் அயர்சி தரும் தர்க்கம் என யாழில் குறிப்பிட்டுள்ளோம்.

1 hour ago, satan said:

காலம் பதில் சொல்லும்! அதுவரை மௌனம் நலம்.

மெளனம் சம்மதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

மெளனம் சம்மதம்.

இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை  என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை  என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.

இந்த திரியில் என்ன கருத்தை எழுதினீர்கள் அது எடுபடாமல் போக?

நான் ஒரு ஐந்தாம்படை என எழுதினீர்கள். அதை விளக்கி நான் பதில் எழுதியுள்ளேன்.

இதில் எங்கே சாத்ஸ் கருத்து எழுதினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, satan said:

நான் சொன்னது உண்மை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

மெளனம் சம்மதம்.

இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடக்குது? 🤣

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/12/2024 at 23:23, குமாரசாமி said:

விசுகர்! இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும்,போர் அழிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தது யார் யார்?

வரலாறு தெரிந்தவர் நீங்கள்.

நாம் மேற்கை நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை.

எமது கனவும் அரவணைப்பும் இந்திய ரசிய சீன கியூபா மற்றும் வியட்நாம் சார்ந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கதவையும் காதையும் முற்றிலுமாக மூடிய பின்னரே நாம் அடுத்தவரை நாடினோம். 

போர்க்குற்றங்கள் மற்றும் பேரளிவுகளுக்கு எல்லோரும் தான் காரணம். அதில் இந்திய ரசிய சீன பங்கு மிக மிக அதிகம். மேற்குலகம் சில தடைகள் எச்சரிக்கைகளை யாவது செய்தது. அதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டுப்பாடற்ற இந்திய ரசிய சீன ஆதரவுடன் இலங்கையில் தமிழர்களே முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.

15 hours ago, குமாரசாமி said:

விசுகர்! முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுத முயற்சியுங்கள் 😄
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடக்குது? 🤣

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்….

அல்லது….

You are moving the goal post as the game unfolds…..

இப்போது தெளிவு தானே.. 1 க்கு பின்பபு வருகிறேன் தேவை  என்றால்.

2 இல் ஒரு குறையும் உங்களுக்கு இல்லைத்தானே 
 
அப்படியானால் 2 க்கு,

                   2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது 

                    நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு.
                    நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.

முதல் கேள்வி உங்களிடம் ஒருபோதும் எழவில்லையா? 

 ஏன் பாலசிங்கம் நீங்கள் சொல்லிய போராட்டத்தை பாதுகாக்க  (அல்லது அதற்கு கிட்டத்தட்ட ஒப்பான ஓர் கருத்தை) (நேரடியாக) சொல்லவில்லை.

நேரடியாக  நான் சொல்வதன்  காரணம் - நீங்கள் நம்புகிறீர்கள் வேறு  ஏதாவது சொல்லி , அதை நிருபர்கள் சொல்லவில்லை என்று. அல்லது பேட்டியில்  வேறு  ஏதாவது  சூழ்நிலை இருக்கலாம் என்று.

நீங்கள் சொல்லும் போராட்டத்தை பாதுகாப்பது என்பது, என்பது மட்டும்  தான்  என்றால்,  அதற்காக மற்ற இயக்கங்களை அழித்து இருந்தால் - கிட்டத்தட்ட மிக கூடிய போராட்ட தார்மீக நியாயாதிகமாக இருக்கிறது அல்லவா - அது, அது  மட்டும்  தானே  உடனடியாக மதி, மனம் (state of mind - உங்களுக்கு சட்டத்துறை பரீட்சயம் இருக்கிறது , இதன் அர்த்தம் நன்றாக புரியும்)  ஆக வாயில் வந்து இருக்க வேண்டும். வேறு எந்த பதில்களும் வந்து இருக்க கூடாது அல்லவா?

ஆகவே, வேறு அடிப்படை காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் நியாயமானது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Kadancha said:

பாலசிங்கம் ஒன்றும் பபா இல்லை. ஒரு பேட்டி என அமரும் போது கண்டபடி வாயை விட கூடியவர் அல்ல.  இந்த கேள்வி (கேட்கப்பட்டிருந்தால்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விதான்.

ஆகவே இந்த பேட்டியை பார்க்காது, அதன் சூழமைவை பார்க்காது cherry picked quotes ஐ வைத்து எதையும் சொல்ல முடியாது.

நீங்களே இப்போ உங்கள் காரணத்தை “சந்தேகம்” என்கிறீர்கள்.

என்னை பொறுத்தமட்டில் புலிகள் ஏனைய இயக்கங்களை தடை செய்தது அவர்கள் போராட்டத்தை பலமிழக்க செய்கிறார்கள் என கருதியே. அத்தோடு தாம் மட்டுமே விலை போகாதோர், கட்டுகோப்பானோர் எனவும் நம்பினர் (இது உண்மையும்). 

இது தவறான முடிவு. குறிப்பாக அடி மட்ட போராளிகளை கொலை செய்தது.

ஆனால் இதுவும் அசாத் செய்ததும் ஒன்றல்ல.

புலிகள் ஒரு உயரிய நோக்கிற்காக போராடும் போது அதனை உள்ளிருந்து பலவீனமாக்கும் என தாம் நினைத்ததை தடை செய்தார்கள்.

அசாத், தன் குடும்பத்தின் ஆட்சியை தக்க வைக்க - பலமடங்கு இல்லை பல ஆயிரம் மடங்கு வன்முறையை எதிர் தரப்புகள் மீது மட்டும் அல்ல, கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் மீதும் பாவித்தார்.

இவை ஒரு போதும் ஒன்றாகாது.

பிகு

புலிகளின் தலைவரை இட்டு புலிகள் paranoia வில் இருந்தார்கள் என நீங்கள் கூறி இருந்தீர்கள். இந்த மாதிரியான வார்த்தை பிரயோகங்களும், புலிகளை விளங்கி கொள்ளலுமே எமக்கு சட்டென the Hindu, Asian Tribune, Frontline போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து தொலைக்கிறன.

புலிகள் தலைவரின் பாதுகாப்பை இட்டு மிக கவனமாக இருந்தார்கள். இது பரனோயாவால் அல்ல, அவரை முடித்தால் எல்லாம் முடிந்து விடும் என்பதை அவர்களும், எதிரிகளும் தெரிந்து இருந்தார்கள். இப்படி ஒரு   Decapitation இல் இருந்து பாதுகாக்கும் முயற்சியே அது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kadancha said:

இங்கே யாழில் இருக்கார் வடமராட்சியை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் வல்வெட்டுத்துறை அல்லது அததற்கு கிடாவாக அவரின் ஊர்.

வேலும் மயிலும் என்பவரின் குடும்பம் கொஞ்சம் வசதி, அவர்கள் இதில் இரு முறை பாதிக்கப்பட்டார்கள்.

இப்படு பல கண்ணுக்கு தெரியாமல், பரவலாக தெரியாமல் நடந்தன.

அன்று இரண்டு பிரபலமான வேலும்மயிலும் அங்கே இருந்தார்கள். ஒருவர் அப்போது வடமராட்சி வடக்கு அரசாங்க உதவி அதிபர், மற்றயவர் வல்வை ஊரணி மருத்துவமனை மருத்துவர். ஆனால், இவர்கள் இருவருக்கும் இப்படி நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அந்தக் காலத்தில் நான் ஊரிலேயே இருந்தேன். இது ஒரு பிழையான தகவலாக இருக்கலாம், பின்னர் இதுவே மீண்டும் மீண்டும் பல இடங்களில் உதாரணமாக எடுத்துச் சொல்லப்படும் என்றே இதை இங்கே பதிகின்றேன்.

ஆனால், அந்த நாட்களில் எங்களின் எலான் மஸ்க்குகள் என்று சொல்லப்படக் கூடிய சில பெரும் பணக்காரர்கள் ஊரில் (வல்வெட்டித்துறையில்) இருந்தார்கள். அவர்களுக்கு இப்படி நடந்ததுவே..........

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.