"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்? - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம் Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

பட மூலாதாரம்,FACEBOOK/ILAYARAAJA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

அவரை உள்ளே அனுமதிக்காததற்கு அவரது சாதி தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கோயில் விதிகளின் படி அர்த்த மண்டபத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று கோயில் நிர்வாகம் கூறுகிறது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு என்ன நடந்தது? கோயில் நிர்வாகம் என்ன சொல்கிறது? இளையராஜா தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் என்ன?

ஆண்டாள் கோயிலில் என்ன நடந்தது?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயில் அதன் கட்டடக்கலைக்கு புகழ் பெற்றது.

மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பங்கேற்றார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் இசைத்தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக்கலைஞர்கள் அங்கு பாடினர்.

ஆண்டாள் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஶ்ரீ ஆண்டாள் ஜீயர் மடத்தை சேர்ந்த, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் இளையராஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு முன்பாக, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள ஆண்டாள் ரெங்கமன்னார் இருக்கக் கூடிய அர்த்த மண்டபத்துக்குள் ஜீயர்களுடன் நுழைய முயன்ற போது இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டார்.

இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

பட மூலாதாரம்,HANDOUT

இளையராஜா தடுக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது?

ஆண்டாள் சன்னதியில், அர்த்த மண்டபத்துக்கு வெளியே இருக்கும் வசந்த மண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். "கருவறைக்கு செல்லும் வழியில் இருக்கும் அர்த்த மண்டபத்தை நோக்கி இளையராஜா சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று ஜீயர்கள் தெரிவித்தனர். எனவே வழக்கமாக அனைவரும் பிரார்த்தனை செய்யும் இடத்தில் நின்று இளையராஜா வணங்கினார்" என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதன் பின், இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே செல்லதுரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சன்னதி,நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதி ஆகியவற்றில் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். ஆடிப் பூர கொட்டகையில் நடைபெற்ற திவ்ய பாசுர நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

பட மூலாதாரம்,HANDOUT

இந்நிலையில், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால்தான் கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அவர் ஜீயர்களால் தடுத்து நிறுத்தப்படும் காட்சிகளை கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு"

கோயில் வழக்கமே காரணம் என்று நிர்வாகம் கூறினாலும், கருவறைக்குள் நிகழ்த்தப்படும் தீண்டாமையே இது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை.

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு அரசு மையத்தில் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் 24 பேர் பல்வேறு கோயில்களில் பணியமர்த்தப்பட்டனர். அவற்றில் 6 கோயில்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை.

"தமிழ்நாட்டில் அர்ச்சகராக பிராமணர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வது எல்லா இடங்களிலும் இன்னும் சாத்தியமாகவில்லை. திருச்சியில் உள்ள ஆகம விதிக்கு உட்பட்ட வயலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்ய அனுமதிக்கப்படாததால், நீண்ட போராட்டம் நடத்தி, ஒரு மணி நேரம் பூஜை செய்தார். அவரது நியமனம் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை பெற்றுள்ளோம்" என்று அர்ச்சகராக பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வி ரங்கநாதன்.

"ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு நேர்ந்தது தவறு, ஆனால் இந்த தீண்டாமை குறித்து அவர் குரல் எழுப்புவாரா? " என்கிறார் அவர்.

இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, வி ரங்கநாதன், அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர்

2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்துக்கு சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. "கோயில்களின் மரபு, வழக்கம் என்று கூறியே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு 24 அர்ச்சகர்களுக்கு மேல் நியமனம் செய்யாமல் இருக்க தடையாக இருப்பதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளே" என்கிறார் ரங்கநாதன்.

இளையராஜா தடுக்கப்பட்டது ஏன்?

இளையராஜா சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாடசாலை ஆகம ஆசிரியரான கோகுலகிருஷ்ணன், "ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைக்காநசம் என்ற ஆகம விதிக்கு உட்பட்டது. தோளில் சக்கர அடையாளம் பெற்றுக்கொள்வது, உடலில் பெருமாள் பாத அடையாளங்களை பெறுவது உள்ளிட்ட ஐந்து தீட்சைகள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் செல்லலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலில் பெண்களே பூஜை செய்கின்றனர்." என்கிறார்.

கோயில் வழக்கப்படி அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர், "அர்த்த மண்டபத்திற்குள் கோவிலில் பணி செய்யும் அர்ச்சகர்களை தவிர்த்து மற்ற நபர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் இசையமைப்பாளர் இளையராஜாவை அங்கிருந்து வெளியேறுமாறு ஜீயர் மற்றும் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இளையராஜா வெளியேறி சாமி தரிசனம் செய்தார்" என தெரிவித்தார்.

இளையராஜா விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா தடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்கு அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

பட மூலாதாரம்,X/@ILAIYARAAJA

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cgm9wekk4epo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுவனே ஒன்றும் தனக்கு நடக்கவில்லை என்று ஒப்புதல் தந்ததன் பின்னர் என்ன சொல்ல இருக்கு! கடையச் சாத்தீட்டு போகவேண்டியதுதான்!

ஆனா ஒண்டு நல்ல ஊமைக்குத்து சிறுவனுக்கு குத்தியிருக்கானுகள் பார்ப்பானுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ilayaraaja Temple Issue: அங்கே நடந்தது என்ன? இளையராஜா அங்கு சென்றது ஏன்? முழு விவரம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியார் மண்ணாவது/ம...வது. மண்ணின் மைந்தனைத் தடுக்க வந்தேறி அரியர்களுக்கு என்ன கொழுப்பு. இதற்குத்தான் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும். சீமான் தேவை என்று நாங்கள் சொல்வது இதற்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 16/12/2024 at 21:37, புலவர் said:

பெரியார் மண்ணாவது/ம...வது. மண்ணின் மைந்தனைத் தடுக்க வந்தேறி அரியர்களுக்கு என்ன கொழுப்பு. இதற்குத்தான் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும். சீமான் தேவை என்று நாங்கள் சொல்வது இதற்குத்தான்.

Expand  

அந்த மகன் காது குத்து விழாவில் புரோகிதரை கூப்பிட்டு அவர் சமஸ்கிருதத்தில் ஒத கைகட்டி நின்றாரே அந்த தன்மான சிங்கத்தையா சொல்றீங்க 🤣.

முடிந்தால்…அவர் குடும்பத்தில் ஆரிய வணக்கத்தை கைவிட சொல்லுங்கள். பிறகு மிச்ச புரட்சிய ஆரம்பிக்கலாம்.

  On 16/12/2024 at 15:42, வாலி said:

சிறுவனே ஒன்றும் தனக்கு நடக்கவில்லை என்று ஒப்புதல் தந்ததன் பின்னர் என்ன சொல்ல இருக்கு! கடையச் சாத்தீட்டு போகவேண்டியதுதான்!

ஆனா ஒண்டு நல்ல ஊமைக்குத்து சிறுவனுக்கு குத்தியிருக்கானுகள் பார்ப்பானுகள்!😂

Expand  

நீ வேணா உன்னை பார்ப்பனனாக பாவனை செய்யலாம். இந்து என எண்ணலாம்….

எமக்கு நீ என்றும் டேனியல் இராசையா தான் என மூக்கிலே குத்தி விட்டிருக்கானுனோ…

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜாவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 16/12/2024 at 15:18, ஏராளன் said:
 

அதில், "நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை..................." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Expand  

நீங்கள் இப்படியான ஒரு ராசாவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் என்றைய விருப்பமும்............ ஆனால் போலிப் பெருமைக்காக உங்களை அவர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள நீங்கள் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கின்றீர்கள்...................😌.

பண்ணைப்புரமும், அந்த தாயும் எந்த கோவிலுக்கும் ஈடானதே என்ற ஒரு இறுமாப்புடன் நீங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்........................   

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 16/12/2024 at 21:57, goshan_che said:

முடிந்தால்…அவர் குடும்பத்தில் ஆரிய வணக்கத்தை கைவிட சொல்லுங்கள். பிறகு மிச்ச புரட்சிய ஆரம்பிக்கலாம்.

Expand  

ஆரியத்தை அடக்க  திராவிடம் தேவையில்லை. தமிழராக இருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 16/12/2024 at 22:41, குமாரசாமி said:

ஆரியத்தை அடக்க  திராவிடம் தேவையில்லை. தமிழராக இருந்தாலே போதும்.

Expand  

இதில் மாற்றுகருத்தில்லை. இடையில் உங்கள் சொக்கதங்கத்தை சொருவியாதால் தான் அப்படி கேள்வி எழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 16/12/2024 at 21:57, goshan_che said:

ந்த மகன் காது குத்து விழாவில் புரோகிதரை கூப்பிட்டு அவர் சமஸ்கிருதத்தில் ஒத கைகட்டி நின்றாரே அந்த தன்மான சிங்கத்தையா சொல்றீங்க 🤣.

Expand  

உண்மையில் தமிழ் ஓதுவார் முன்னிலையில் தமிழைpல் தேவாரங்கள் இசைக்கப்பட்டு இநறுதியில் குலதெய்க் கோயிலுக்கு  சென்ற வேளையில் அங்கிருந்த புPசாரி சமஸகிருதத்தில் புPச பண்ணும் போது அவருக்கு மரியாதை கொடுத்தார்.  முழுப்புPசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.ஏதாவது ஊடகத்திற்கு வெட்டி ஒட்டும் வேலைக்கு சரியான ஆளாக இருக்கிறீர்ள்.முழு வீடியோ இப்பொழுது எடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 17/12/2024 at 22:17, புலவர் said:

உண்மையில் தமிழ் ஓதுவார் முன்னிலையில் தமிழைpல் தேவாரங்கள் இசைக்கப்பட்டு இநறுதியில் குலதெய்க் கோயிலுக்கு  சென்ற வேளையில் அங்கிருந்த புPசாரி சமஸகிருதத்தில் புPச பண்ணும் போது அவருக்கு மரியாதை கொடுத்தார்.  முழுப்புPசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.ஏதாவது ஊடகத்திற்கு வெட்டி ஒட்டும் வேலைக்கு சரியான ஆளாக இருக்கிறீர்ள்.முழு வீடியோ இப்பொழுது எடுக்க முடியவில்லை.

Expand  

என்ன புலவர் இதெல்லாம் - குல தெய்வம் கோவிலில் எது ஐயர்?

போனது ஆகம முறைப்படியான கோவிலுக்கு. அங்கே ஐயர் சமஸ்கிருத மொழியில்தான் முழுவதும் செய்தார். அண்ணை பவ்வியமாக நின்றார்.

யாழில் ஒரு திரியே ஓடியது. தேவையான வீடியோக்கள் முழுவதும் அதில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
  On 17/12/2024 at 22:19, goshan_che said:

சமஸ்கிருத மொழியில்தான் முழுவதும் செய்தார். அண்ணை பவ்வியமாக நின்றார்.

Expand  

காது கொடுத்து வடிவாகக் கேளுங்கள் ஓதுவார் தமிழில்தான் பூசைகள் செய்தார்.பலமணிநேரம் தமிழில் பூசை நடந்தது. கடைசியாக கோவிலில் நடந்த பூசையில்தான் ஐயர் சமஸ்கிருதத்ததில் பூசை செய்தார்.

Edited by புலவர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:21, புலவர் said:

காது கொடுத்து வடிவாகக் கேளுங்கள் ஓதுவார் தமிழில்தான் பு{சகள் செய்தார்.பலமணிநேரம் தமிழில் புஜச நடந்தது. கடைசியாக கோவிலில் நடந்த பூசையில்தான் ஐயர் சமஸ்கிருதத்ததில் பூசை செய்தார்.

Expand  

ஏன் அந்த கோவிலுக்கு போனார்?

ஏன் சமஸ்கிருதத்தில் பூசை செய்ய அனுமதித்தார்?

ஏன் இடை நிறுத்தவில்லை?

மறுத்தால் ஏன் வெளியேறவில்லை?

அண்ணனுக்கு வீரம் வாயில் மட்டும்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:21, புலவர் said:

காது கொடுத்து வடிவாகக் கேளுங்கள் ஓதுவார் தமிழில்தான் பூசைகள் செய்தார்.பலமணிநேரம் தமிழில் பூசை நடந்தது. கடைசியாக கோவிலில் நடந்த பூசையில்தான் ஐயர் சமஸ்கிருதத்ததில் பூசை செய்தார்.

Expand  

புலவர், உங்கள் இந்த "பிடித்த தரப்பு எது செய்தாலும் ஓகே" என்று முரட்டு முட்டு கொடுக்கும் பண்பு விசித்திரமாக இருக்கிறது.

இங்கே சீமானின் நடிப்பை ஆதரித்துக் கடந்து போகிறீர்கள். கஜேந்திரகுமார் மணியை "தேர்தல் வென்ற பின்னர் தூக்கி விட்டு" கஜேயைக் கொண்டு வந்ததைப் பற்றி, அதில் இருக்கும் உட்கட்சி ஜனநாயக மறுப்பை மௌனமாக ஆதரித்த படியே தமிழரசில் இருக்கும் ஜனநாயக மறுப்பைப் பற்றி காட்டமாக எழுதுவீர்கள்😂!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:24, goshan_che said:

ஏன் அந்த கோவிலுக்கு போனார்?

ஏன் சமஸ்கிருதத்தில் பூசை செய்ய அனுமதித்தார்?

ஏன் இடை நிறுத்தவில்லை?

Expand  

அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி  கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம்.  சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:35, புலவர் said:

அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி  கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம்.  சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!

Expand  

அது தானே பல தடவை சொல்லியாயிற்று?

சீமானும் கருணாநிதியும் ஒன்று தான்: சராசரி தமிழக அரசியல் வாதிகள். ஆழமாகப் பார்த்தால், ஈழவர் பிரச்சினையை வைத்து தன்னை வளர்ப்பதால் சீமான் கருணாநிதியை விட மோசமான சராசரி அரசியல்வாதி!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:34, Justin said:

கஜேந்திரகுமார் மணியை "தேர்தல் வென்ற பின்னர் தூக்கி விட்டு" கஜேயைக் கொண்டு வந்ததைப் பற்றி, அதில் இருக்கும் உட்கட்சி ஜனநாயக மறுப்பை மௌனமாக ஆதரித்த படியே தமிழரசில் இருக்கும் ஜனநாயக மறுப்பைப் பற்றி காட்டமாக எழுதுவீர்கள்😂!

Expand  

, அதையே மாற்றிப் போட்டுப் பாருங்க நீங்களும் அப்படித்தானே. கஜேந்திரன் கட்சியின் செயலாளர். அதுமட்டுமல்ல 2வது கூடுதல் வாக்குகளையும் எடுத்தவர் அவரை  தேசியப்பட்டியலில்  உள்வாங்கியதில் என்ன தவறு. மேலும் மணியை வெளியேற்றியது சரிதான் என்பதை மணியே செயலில் காடடியுள்ளார். {பிடிபியுடன் சேர்ந்து மாநகர மேயரானார். தான் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் சொன்னார். கடைசியில் விக்கியின் கட்சியை தனது உடைமையாக மாற்றிக் கொண்டு விட்டார். எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால்கஜேந்திரன் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லாவிட்டாலும் களப் பேராட்டங்களில் கலந்து கொள்கிறார். தையிட்டிய விகாரைக்கு டஎதிராக இரவிரவாகப் பேராடுகிறார். ஆனால் நோகாமல் நொங்கு தின்னப் பார்த்த மணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:44, புலவர் said:

, அதையே மாற்றிப் போட்டுப் பாருங்க நீங்களும் அப்படித்தானே. கஜேந்திரன் கட்சியின் செயலாளர். அதுமட்டுமல்ல 2வது கூடுதல் வாக்குகளையும் எடுத்தவர் அவரை  தேசியப்பட்டியலில்  உள்வாங்கியதில் என்ன தவறு. மேலும் மணியை வெளியேற்றியது சரிதான் என்பதை மணியே செயலில் காடடியுள்ளார். {பிடிபியுடன் சேர்ந்து மாநகர மேயரானார். தான் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் சொன்னார். கடைசியில் விக்கியின் கட்சியை தனது உடைமையாக மாற்றிக் கொண்டு விட்டார். எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால்கஜேந்திரன் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லாவிட்டாலும் களப் பேராட்டங்களில் கலந்து கொள்கிறார். தையிட்டிய விகாரைக்கு டஎதிராக இரவிரவாகப் பேராடுகிறார். ஆனால் நோகாமல் நொங்கு தின்னப் பார்த்த மணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.

Expand  

😂கொஞ்சம் பொறுங்கோ.

மணியை நீக்கும் போது என்ன காரணம் என்பது தான் கேள்வி.  மணியை நீக்கிய பிறகு, பல வருடங்கள் கடந்து மணி என்ன செய்தாலும் "இந்தா பார், இது தான் நீக்கினோம்" என்பது பாபநாசம் படக் கதையல்லவா😂?

இன்னும் உங்களிடம் விளக்கமோ, நியாயமான கேள்வி கூட இது விடயத்தில் இல்லை. பிறகெப்படி நீங்கள் தமிழரசையும் , சுமந்திரனையும் கேள்வி கேட்க moral standing இருக்கென்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:35, புலவர் said:

அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி  கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம்.  சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!

Expand  

புலவர் ப்ரோ,

கருணாநிதி குடும்பமே பக்கா பிராடு.

ஆனால் நாங்கள் இன்று பேச எடுத்து கொண்ட விடயம் - சீமான்.

ஆகவே அதை பற்றி மட்டும் பேசுவோம்.

சீமான் ஒரு காலத்தில் கடவுள் மறுப்பாளர் பின்னர் மாறிவிட்டார். அதுவும் ஓக்கே.

ஆனால் தமிழ் தமிழ் என காட்டு கத்தல் கத்தும் யோக்கியனுக்கு மகனுக்கு மட்டும் சமஸ்கிருதத்தில் பூசை, ஆங்கிலத்தில் கல்வி எண்டால் இவர் கருணாநிதி போல் இன்னொரு பிராடுதானே?

பிகு

கருணாநிதி கள்ளன் எனவே சீமான் மாற்று என்கிறார்கள்.

கருணாநிதி செய்த அதே தில்லாடங்கடி வேலையை சீமானும் செய்கிறாரே என ஒரு டவுட் கேட்டால்…

கருணாநிதி செய்யலாம் சீமான் செய்ய கூடாதா என்கிறார்கள்🤣.

அப்ப மாற்று எல்லாம் ஏமாற்றுத்தானா கோப்பால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:41, Justin said:

மான் கருணாநிதியை விட மோசமான சராசரி அரசியல்வாதி!

Expand  

  30 இலட்சம் மக்களை தமிழ்த்தேசியத்திற்காக ஓருங்கிணைத்து  புலிகளைப் பற்றியே டபேசப் பயந்த  தமிழகத்தில் புலிகளையும் மாவீரர்களையும் தமிழ்த்தேசியத்தலைவரின் பட்ததையும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சீமான் மோசமான அரசியல்வாதி. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை ஊச்சத்தில் இருந்த போது மகள் கனிமொழிக்கு மந்திரிப்பதவி கேட்டு டெல்லக்கு பறந்த ஊழல்வாதி  குடும்பக்கட்சி நடத்திய கருணாநிதியைுயும் சுpமானையும் ஒரே மாதிரி  எடை போடுவது எப்படி? சுமத்திரன் தோற்கடிக்கப்பட்ட கடுப்பில் எரியுதடிமாலா!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:53, புலவர் said:

  30 இலட்சம் மக்களை தமிழ்த்தேசியத்திற்காக ஓருங்கிணைத்து  புலிகளைப் பற்றியே டபேசப் பயந்த  தமிழகத்தில் புலிகளையும் மாவீரர்களையும் தமிழ்த்தேசியத்தலைவரின் பட்ததையும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சீமான் மோசமான அரசியல்வாதி. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை ஊச்சத்தில் இருந்த போது மகள் கனிமொழிக்கு மந்திரிப்பதவி கேட்டு டெல்லக்கு பறந்த ஊழல்வாதி  குடும்பக்கட்சி நடத்திய கருணாநிதியைுயும் சுpமானையும் ஒரே மாதிரி  எடை போடுவது எப்படி? சுமத்திரன் தோற்கடிக்கப்பட்ட கடுப்பில் எரியுதடிமாலா!!!!

Expand  

😂புலவர், நீங்கள் சிறு பையன் அல்ல! அதே புளித்துப் போன "பட்டி தொட்டி பிரபாகரன் பெயர்.." என்ற யூ ரீயூபர்களின் பல்லவியோடு வர. இந்தியா தாண்டியும் கூட  தெரிந்த புலிகளையும், பிரபாகரனையும் பக்கத்தில் இருக்கும், ஒரே மொழி பேசும் மாநிலத்தின் மக்களுக்கு 2009 இற்குப் பிறகு சீமான் பிரபலமாக்கினார் என்பதை கேனையர்கள் நம்புவர் - யாழ் கள வாசகர்கள் கேனையர்கள் அல்ல!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் இல்லை எனில் திராவிடர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்று இல்லை என்பதை நிறுவி இருப்பார்கள்.

சினிமாவும் சீரியலும் என ஒரு மாயையை உருவாக்கி விட்டுருப்பார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 22:36, குமாரசாமி said:

சீமான் இல்லை எனில் திராவிடர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்று இல்லை என்பதை நிறுவி இருப்பார்கள்.

சினிமாவும் சீரியலும் என ஒரு மாயையை உருவாக்கி விட்டுருப்பார்கள்.

Expand  

இதற்கு ஆதாரம் ஏதாவது....? சீமான் 2010 இல் "காட்சி" கொடுக்கும் வரை, புலிகள் எப்படி தமிழ்நாட்டில் ஆதரவுத் தளம் வைத்திருந்தார்கள்? ராஜீவ் கொல்லப் பட்ட பின்னரும், தமிழ்நாட்டில் இருந்து சிங்களவர்கள் நமக்குத் தராத பொருட்கள் சில கடல் மூலம் வந்து சேர்ந்ததை அங்கு வசித்தவர்கள் அறிவார்கள்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 22:52, Justin said:

இதற்கு ஆதாரம் ஏதாவது....? சீமான் 2010 இல் "காட்சி" கொடுக்கும் வரை, புலிகள் எப்படி தமிழ்நாட்டில் ஆதரவுத் தளம் வைத்திருந்தார்கள்? ராஜீவ் கொல்லப் பட்ட பின்னரும், தமிழ்நாட்டில் இருந்து சிங்களவர்கள் நமக்குத் தராத பொருட்கள் சில கடல் மூலம் வந்து சேர்ந்ததை அங்கு வசித்தவர்கள் அறிவார்கள்.

 

Expand  

அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது  தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து   அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு  மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.  அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது.  அன்று பிரபாவோ  உமாவோ தமிழ் நாட்டில்  எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ்  போராளிகள்  மட்டுமே. 

அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில்  பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக   பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி  புலிகள் மறைவாக  பயிற்சி பெற  பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். 

ராஜீவ் கொலைக்கு பின்  இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும்  மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர்.  அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர்.  

ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள்  சீமானின்  சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 18/12/2024 at 21:49, goshan_che said:

கருணாநிதி கள்ளன் எனவே சீமான் மாற்று என்கிறார்கள்

Expand  

சரிதானே! கள்ளனுக்குக் கள்ளன் தானே மாற்றீடாக முடியும். கருணாநிதி இப்ப உயிரோடு இல்லை எனவே இருக்கும் அந்த வெற்றிடத்துக்கு (கள்ளருந்தும்) செந்தமிழன் சீமான் அண்ணாதான் சிறந்த மாற்றீடாக இருக்கமுடியும்.😂

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂 அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால்  உசாராக இருப்பார்கள். 😂 🤣
    • பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்
    • சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️ அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏 மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕 கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝ அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘 இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊 மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇 நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால்,  consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்)..... இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰 இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕 சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕 முகப் புத்தகம். இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.