Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு.

சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர்.

மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது.

கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப் பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://athavannews.com/2024/1412810

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடக்கடவுளே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி நல்ல அனுபவபட்டவர்👍, சாத்திரி மறைமுகமாக இவருக்கு உணர்த்தியுள்ளார், இவருக்கு தான் கோழியை விழுங்க வேண்டுமென்பதை தவறாக நிஜ கோழியை விளுங்கிவிட்டார்😪, இவருக்கு நெருக்காமான பஸ் இரயில் பயணங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • Like 1
Posted

தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.

யாருடைய கோழிக் குஞ்சை யார் விலுங்க வேண்டும் என்கிற குழப்பத்தில் வந்தது வினை. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

 

மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர்.

 

கோழிக்குஞ்சு தப்பி விட்டது, silver line!

சீரியசாக, 10% ஆன ஆண்களில் விந்துகள் சுக்கிலப் பாய்மத்தில் (semen) அறவே இல்லாமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது விந்து உற்பத்தி குறைவாக இருப்பதால் இருக்கலாம் அல்லது விந்து உற்பத்தியானாலும், விந்தை வெளியே கொண்டு வரும் வழிகள் அடைபடுவதன் காரணமாக இருக்கலாம்.நவீன மருத்துவத்தில் இதைக் கண்டறிவதும், சரி செய்வதும் இலகு.

விந்து எண்ணிக்கை குறைந்த ஆண்களில் பெரும்பான்மையானோரின் பிரச்சினை வரிகோஸ் நாளம் (Varicocele) என்ற விதைகளுக்கு வெளியே இருக்கும் பிரச்சினையாகத் தான் இருக்கிறது. கால்களில் இரத்த நாளங்கள் புடைத்திருப்பது போலவே, விதைகளுக்கு செல்லும் இரத்த நாளங்களும் புடைத்து, இரத்த ஓட்டம் குழம்பி, இதனால் விதை வெப்ப நிலை அதிகரிக்கும் - விந்து உற்பத்தி குறையும். இதற்கும் சிகிச்சை இருக்கிறது. அடி வயிற்றில் சிறிதாக வெட்டி, புடைத்திருக்கும்  நாளத்தை வெட்டி முடுச்சுப் போட்டு விடுவர்.

இதையெல்லாம் மருத்துவர்கள் சொன்னாலும் கேக்காமல், மூலிகை மந்திரமென்று போவோர் உரிய விலையைக் கொடுக்கிறார்களென நினைக்கிறேன்.  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, உடையார் said:

சாத்திரி நல்ல அனுபவபட்டவர்👍, சாத்திரி மறைமுகமாக இவருக்கு உணர்த்தியுள்ளார், இவருக்கு தான் கோழியை விழுங்க வேண்டுமென்பதை தவறாக நிஜ கோழியை விளுங்கிவிட்டார்😪, இவருக்கு நெருக்காமான பஸ் இரயில் பயணங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை

🤣........................

காவோலை வீதியில் நீங்கள் பதிந்த கருத்துகளில் இருந்தும், இந்தப் பதிவில் இருந்தும் நீங்கள் எந்த பஸ்களில் போய் வந்திருப்பீர்கள் என்று ஓரளவிற்கு தெரிகின்றது...................🤣.   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நிழலி said:

தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.

இதே மாதிரி, இதே பாணியில் அன்றொரு நாள் நான் எழுதியதிற்கு  என்னை கருத்து எழுத தடை செய்திருந்திருந்தார்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.