Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

இலங்கை தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412820

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி...  
சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும்,  
தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்... 
வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல் 
படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்து தான் சிறீ வாத்தியார் கனடா சுற்றுலா சென்றாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட  விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க தமிழரசு கட்சி ...வெல்க உங்கள் கொள்கை ....நீங்கள் சகல கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து  உங்கள் இலட்சியத்துக்காக போராடினீர்கள் ..நன்றிகள்...தொடர்ந்து போராடுங்கள்...பல தடங்கள் வருகின்றது  சுழிச்சு முன்நோக்கி செல்கின்றீர்கள் வாழ்க ..வெல்க....



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்…. அல்லது…. You are moving the goal post as the game unfolds….. இதை முன்பும் நான் உட்பட பலர் அயர்சி தரும் தர்க்கம் என யாழில் குறிப்பிட்டுள்ளோம்.   மெளனம் சம்மதம்.
    • 18 DEC, 2024 | 03:31 PM   நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், சரியான முறையில் கணக்காய்வு விடயங்களை முகாமை செய்யும்போது ஐய வினாக்களைத் தவிர்க்கலாம் எனவும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை தற்துணிவுடன் எடுப்பதனால் சில இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் சுனில் ஜெயசேகர நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கணக்காய்வாளர் அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201574
    • ஆஸ்திரியாவில் ஒரு ஜோடி, கடந்த 43 ஆண்டுகளில், 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அத்தம்பதி உதவித்தொகை வாங்கி பயனடைந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… ஆஸ்திரிய பெண் ஒருவர் 1981ல் தனது முதல் கணவர் இறந்ததற்கு பிறகு, ஆஸ்திரிய அரசாங்க சட்டத்தின்படி கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார். அதன் பிறகு 1982ல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த மறுமணம் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் ஓய்வூதியத்தை நிறுத்தியது. இதனால் கைம்பெண்ணாக இருந்தால்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நினைத்த அப்பெண், தனது இரண்டாம் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அந்த நபரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். மீண்டும், அரசாங்கத்திற்கு இவர்களின் திருமணம் தெரியவரவே… அப்பெண்ணுக்கு கொடுத்து வந்த கைம்பெண் பணத்தை நிறுத்தியது. மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்க நினைத்த அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அரசாங்கத்திடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, பிரிந்த கணவரை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதே போன்று அரசு எப்போதெல்லாம் கைம்பெண் பணத்தை நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு கைம்பெண் பணத்தை பெற்றுக்கொண்ட கையோடு மீண்டும் கணவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இப்படி கைம்பெண் ஓய்வூதியத்தைப்பெற கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து வாங்கிக்கொள்வது – மீண்டும் திருமணம் செய்துக்கொள்வது என 43 ஆண்டுகளாக, 12 முறை அவர் இந்த நாடகத்தை அறங்கேற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் இவரின் நாடகம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு தெரியவர, அப்பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட ஓய்வூதியத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியது. ஆனால், அப்பெண்ணோ விக்கிரமாதித்தன் வேதாளம் கதையைப்போன்று, 13வது முறையாக தனது கணவரை விவாகரத்து செய்து மீண்டும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். இம்முறை சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை விசாரிக்கையில், இருவரும் வெளி உலகிற்கு பிரிந்ததைப்போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, ஒரேவீட்டில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணிற்கான ஓய்வூதியத்தை அரசாங்கத்தை முற்றிலும் நிறுத்தியது. இதனை எதிர்த்து அப்பெண் 2022ல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். இவர்களின் வழக்கை விசாரித்த ஆஸ்திரியா உச்சநீதிமன்றம் மார்ச் 2023 இல், இவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து, “மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொள்வதும் இப்படி விவாகரத்து செய்து கொள்வதும் தவறானது. ஏனெனில் உங்களின் விவாகரத்துகளும் திருமணமும் கைம்பெண் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே நிகழ்ந்துள்ளன” என்று தீர்ப்பளித்தது. இப்படி இவர் தனது 73ம் வயதுவரை மொத்தமாக அரசிடமிருந்து பெற்ற ஓய்வூதியமானது 3,42,000 டொலர் என்பது தெரியவந்துளது. https://thinakkural.lk/article/313890
    • இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக "சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது" இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினின் வார்த்தைகள் இவை. உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஸ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அஸ்வின் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார். ஆஸ்திரேலியத் தொடருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த அடிலெய்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் பெரிதாக ஒத்துழைக்கும் மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களால் சோபிக்க முடியவில்லை. அஸ்வினுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தும் உடனடியாக அஸ்வின் இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா இளம் வயதில் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்த குகேஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக கடைசிநாள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் " சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய வீரராக நான் பங்கேற்பது இதுதான் கடைசி நாள். கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். ஆதலால் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன், என்னை வெளிப்படுத்துவேன்" என்று தெரிவித்தார். கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்ட அஸ்வின் " இந்திய அணியில் எனக்கு ஏராளமான இனிமையான அனுபவங்கள், நினைவுகள் இருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர்களுடன் நான் மிகுந்த விளையாட்டுத்தனமாக இருந்தேன். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக என் சக வீரர்கள் ஓய்வு பெற்று சென்றனர். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்கள் நாங்கள்தான், நாங்களும் ஓய்வறையைவிட்டு சென்றுவிட்டோம். வயதான வீரர்களில் நானும் ஒருவன். என்னுடைய ஓய்வு நாள் இன்றுதான் என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித், கோலி, ரஹானே, புஜாராவுக்கு அஸ்வின் நன்றி உண்மையில் இந்த நேரத்தில் ஏராளமானோருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆனால், பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நான் நன்றி கூறாவிட்டால் நான் என் கடமையிலிருந்து நழுவியவனாகிவிடுவேன். அதில் சிலரின் பெயர், பயிற்சியாளர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக ரோஹித், விராட் கோலி, ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணி பேட்டர்களின் பேட்டிலிருந்து தெறித்துப் பாய்ந்த கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை வாரிக் கொடுத்தவர்கள்" எனத் தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில் " அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களுடன் நான் தீவிர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து ஆடியிருக்கிறேன். இந்த ஓய்வு முடிவை எடுக்க நான் நீண்டகாலம் எடுக்கவில்லை. சிறிது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் இருப்பதால் நான் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை. என்னைப் பற்றி நல்லவிதமாகவும், விமர்சித்தும் எழுதிய, பேசிய ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி " என்று தெரிவித்தார். ஐபிஎல் ஏலம்: சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் யாரை வாங்கின? நடராஜன், அஸ்வின் எந்த அணிக்கு?25 நவம்பர் 2024 போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர்11 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் இந்தியக் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அரங்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர். இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சுழற்பந்துவீச்சில் புதுமை தொடக்கத்தில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், தனது பயிற்சியாளர் சி.கே.விஜயகுமார் அறிவுரையின்படி சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் வீரர் டபிள்யு வி ராமன் ஆகியோரிடம் அஸ்வின் பயிற்சி பெற்றார். அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சவாலான பந்துவீச்சாளராகவே இருந்து வந்துள்ளார். அஸ்வினின் புத்திக்கூர்மை, பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவது, அவரின் நுணுக்கமான 'கேரம் பந்துவீச்சு', 'ஆர்ம் பந்துவீச்சு', ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் 'லைன் மற்றும் லென்த்தில்' வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் இந்திய அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அவரின் பந்துவீச்சு பலராலும் பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது. அஸ்வின் அசாத்திய பந்துவீச்சுத் திறன், சுழற்பந்துவீச்சு ஆகியவை இந்தியத் தேர்வாளர்களைத் ஈர்த்தது. இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அஸ்வின் 32 பந்துகளில் 38 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அடுத்த ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அஸ்வின் அறிமுகமாகி விளையாடினார். அன்றே கூறிய கம்பீர் 2010-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். 2010-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அஸ்வின் குறித்து கூறுகையில் " பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான வீரர் அணிக்கு கிடைத்துவிட்டார்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். ஆனாலும், அஸ்வினுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். 2011-ஆம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் அறிமுகமானார். குர்ஜப்னீத் சிங், அன்சுல் கம்போஜ்: அனுபவமில்லாத இரு பவுலர்களை சிஎஸ்கே வாங்கியது ஏன்? தோனியின் அணுகுமுறை என்ன?3 டிசம்பர் 2024 ஐ.பி.எல்: தோனி, ரோகித் ஊதியம் குறைப்பு - இந்த இளம் வீரருக்கு 70 மடங்கு கூடுதல் சம்பளம்3 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர் இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம். பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். அஸ்வின் படைத்த சாதனைகள் அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் உலகளவில் 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையோடு விடை பெற்றார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 8 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகளவில் அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 66 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 45 போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார். 98 போட்டிகளில் 500-வது விக்கெட்டை வீழத்தி, அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். 116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஆல்ரவுண்டர்' அஸ்வின் அஸ்வின் பேட்டிங்கிலும் பிரகாசித்துள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3503 ரன்களை குவித்துள்ள அவரது ரன் சராசரி 25 ஆகும். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 707 ரன்களும், டி20 போட்டியில் 184 ரன்களும் அஸ்வின் சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்ட தன்னை கடைசியில் ஆல்ரவுண்டர் எனும் நிலைக்கு படிப்படியாக அஸ்வின் உயர்த்திக்கொண்டார். அது மட்டுமல்லாமல் 11 முறை தொடர்நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 64 தொடர்களில் ஆடி 11 தொடர்நாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஸ்வின் 44 தொடர்களில் விளையாடி 11 தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட் அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பின் போது குறிப்பிட்டதைப் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் ரசித்து ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் 115 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் முறியடித்தார். அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதையும் அஸ்வின் முறியடித்து, 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியும், கோலியும் இந்திய கேப்டன்களில் எம்எஸ் தோனி, விராட் கோலி இருவரும் அஸ்வினின் திறமையை நன்கு பயன்படுத்தினர். தோனி கேப்டன்ஷியில் 3 ஆண்டுகளில் மட்டும் 22 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி கேப்டன்ஷியில் 7 ஆண்டுகளில் 55 போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஸ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை பேட்டர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது. குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின் வாழ்க்கையில் முக்கிய கட்டம் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார். அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஸ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. பயணங்கள் முடிவதில்லை... இந்திய வீரராக அஸ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czxdyz9gw1yo
    • தனியார் கல்வி நிறுவனத்தில்  காத்திருக்கும் பெற்றோருக்கு இலவசமாக சிங்கள் மொழியினை கற்பிக்கலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.