Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

19 DEC, 2024 | 01:30 PM

image
 

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை  மீட்டு கரைக்கு  கொண்டுவரும் நடவடிக்கையில்  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்,  கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கியிருக்கியுள்ளனர். படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

IMG-20241219-WA0024.jpgIMG-20241219-WA0027.jpgIMG-20241219-WA0033.jpgIMG-20241219-WA0028.jpgIMG-20241219-WA0039.jpg

https://www.virakesari.lk/article/201646

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Update : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம்!

19 DEC, 2024 | 03:54 PM
image
 

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பேருடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில், 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருக்கின்றனர்.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள்  பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG_20241219_133357.jpg

IMG_20241219_143023.jpgIMG_20241219_125359.jpgIMG_20241219_143007.jpgIMG_20241219_125416.jpg

https://www.virakesari.lk/article/201658

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மியன்மார் படகு வழிமாறி இலங்கை வந்ததா? அனைத்து பயணிகளும் தப்பியது அதிசயம்தான். ஜீபிஎஸ் கடல்வழி பயணத்தில் படகில் பயன்படுத்த இல்லை போல? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொஹிங்கா முஸ்லிம் அகதிகள் என நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் கடலால் வெளியேற முடியாது எமது மக்கள் வல்வளைக்கப்பட்ட இடம்.

இன்று அதே இடத்தில், அதே மக்கள் இன்னொரு பாவப்பட்ட இனத்தை கடலில் இருந்து மீட்டு உதவி செய்கிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

ரொஹிங்கா முஸ்லிம் அகதிகள் என நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் கடலால் வெளியேற முடியாது எமது மக்கள் வல்வளைக்கப்பட்ட இடம்.

இன்று அதே இடத்தில், அதே மக்கள் இன்னொரு பாவப்பட்ட இனத்தை கடலில் இருந்து மீட்டு உதவி செய்கிறார்கள்.

எங்களைப்போல் அவர்களும் பாவப்பட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஹிங்கியா போலத்தான் தெரிகிறது.

இது 3 வது கடல்  கலம் அல்லது படகு என்று நினைக்கிறன் பர்மா /  அல்லது பர்மா பகுதியில் இருந்து.

ஆனல், எல்லாம் வந்தது முல்லைத்தீவு கடலுக்கு.

எங்கு வருகிறேன் என்று தெரிகிறதா?

விஜயன் என்று அலைக்கட்ட நபரும், அவரின் கூட்டாளிகள் / க்கூடங்கள் வந்தது மன்னார் பக்கம்.


கடல் சுழி திசை மாறிவிட்டதா?

(அல்லது, மன்ன்னர் பக்கம் அப்போதைய வர்த்தக வழியாக இருந்து இருக்குமோ?) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, Kadancha said:

ரோஹிங்கியா போலத்தான் தெரிகிறது.

இது 3 வது கடல்  கலம் அல்லது படகு என்று நினைக்கிறன் பர்மா /  அல்லது பர்மா பகுதியில் இருந்து.

ஆனல், எல்லாம் வந்தது முல்லைத்தீவு கடலுக்கு.

எங்கு வருகிறேன் என்று தெரிகிறதா?

விஜயன் என்று அலைக்கட்ட நபரும், அவரின் கூட்டாளிகள் / க்கூடங்கள் வந்தது மன்னார் பக்கம்.


கடல் சுழி திசை மாறிவிட்டதா?

(அல்லது, மன்ன்னர் பக்கம் அப்போதைய வர்த்தக வழியாக இருந்து இருக்குமோ?) 

காரியத்தில்  கண்ணாளர்... 😃

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

விஜயன் என்று அலைக்கட்ட நபரும், அவரின் கூட்டாளிகள் / க்கூடங்கள் வந்தது மன்னார் பக்கம்.

 

எனக்கு அவர்களின் வரலாறு விளங்கவில்லை, சிங்களவர்கள் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்தவர்கள் என கூறுகிறார்கள், அதே வேளை சிங்க தந்தை மூலம் வந்த வம்சாவளியே சிங்களவர்கள் எனவும் கூறுகிறார்கள், சிங்கமா? விஜயனா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்களுடைய வரலாறு அவர்களுக்கே விளங்காது.  தங்கள் எண்ணத்துக்கு ஒவ்வொரு பிக்கு ஒவ்வொரு வரலாறு எழுதுவார் பௌத்தத்தையும் சிங்களத்தையும் பெருமைப்படுத்தி   தமிழ்ப்பெயரை மாற்றி சிங்களப்பெயர் என்றும் கூறுவார்கள், அதனாற்தான் நாட்டில் இவ்வளவு குழப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

எங்களைப்போல் அவர்களும் பாவப்பட்டவர்கள்.

படகின் அமைப்பைப் பார்க்கும் போது அவர்கள் தூரதேச பயணத்திற்கு ஆயத்தமானார்கள் போலத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

20 DEC, 2024 | 09:47 AM
image
 

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியிருந்தது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

online.jpg

.jpg

.jpg

https://www.virakesari.lk/article/201707

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, RishiK said:

படகின் அமைப்பைப் பார்க்கும் போது அவர்கள் தூரதேச பயணத்திற்கு ஆயத்தமானார்கள் போலத் தெரியவில்லை. 

சிலகாலத்துக்கு  முன்பு இலங்கையிலிருந்து….  அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா நோக்கி பயணமாகிய கப்பல்கள் எல்லாம், இதே “கொண்டிஷனில்” தான் இருந்தது.

ஆபிரிக்காவில் இருந்து… ஐரோப்பா வரும் அகதிக் கப்பல்களும் இதே நிலையில்தான் இருக்கும்.
 நாட்டை விட்டு தப்பி ஓட நினைப்பவர்கள்… பெரும் சமுத்திரத்தை தாண்ட, தாங்கள் பயணிக்கும் கப்பலின் நிலைமையை யோசித்து பார்ப்பதில்லை.
இப்படியான கப்பல்களில் பெரும்பாலவை  கடலிலேயே ஆட்களுடன் சமாதி ஆகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு - வெளியானது புதிய தகவல்

20 DEC, 2024 | 06:59 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய தினம் (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர். 

WhatsApp_Image_2024-12-20_at_5.20.47_PM.

இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். 

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.

அதன்படி, படகில் வந்தவர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2024-12-20_at_5.20.47_PM_

WhatsApp_Image_2024-12-20_at_5.20.48_PM_

https://www.virakesari.lk/article/201762

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, vasee said:

எனக்கு அவர்களின் வரலாறு விளங்கவில்லை, சிங்களவர்கள் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்தவர்கள் என கூறுகிறார்கள், அதே வேளை சிங்க தந்தை மூலம் வந்த வம்சாவளியே சிங்களவர்கள் எனவும் கூறுகிறார்கள், சிங்கமா? விஜயனா?

3-4 வெவேறு வடிவம்.

எல்லாவற்றிலும், விஜயனின் தந்தை சிங்கபாகு பிறந்தது (அல்லது வளர்ந்தது, ஏனெனில் ஒரு வடிவத்தில் சிங்கம்  விஜயனின் அப்பமா சிங்கவல்லி , அவரின் இரு பிள்ளைகளையும் காவச்சென்று அதன்  காவலில் வைத்து இருந்தகாக) சிங்கத்துக்கும்,   விஜயனின் அப்பம்மா சிங்கவல்லிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கத்திற்கு பிறந்தபடியால் சிங்கபாகு என்று பெயர் வைத்ததில் ஒரு நியாயம் இருக்கின்றது.............

ஆனால் சிங்கம் தூக்கிச் செல்ல முன்னேயே சிங்கவல்லிக்கு ஏன் சிங்கவல்லி என்று பெயர் வைத்தார்கள்........... அதானல் தான் சிங்கம் வந்து சிங்கவல்லியை தூக்கிக் கொண்டு போய், பின்னர் சிங்கபாகு பிறக்க வேண்டியதாகப் போய்விட்டதோ என்னவோ..................🤣.

என்னுடைய முன்னோர்களிலும் சிங்கம் என்று வரும் பெயர்கள் இருக்கின்றன..............😜

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Kadancha said:

3-4 வெவேறு வடிவம்.

எல்லாவற்றிலும், விஜயனின் தந்தை சிங்கபாகு பிறந்தது (அல்லது வளர்ந்தது, ஏனெனில் ஒரு வடிவத்தில் சிங்கம்  விஜயனின் அப்பமா சிங்கவல்லி , அவரின் இரு பிள்ளைகளையும் காவச்சென்று அதன்  காவலில் வைத்து இருந்தகாக) சிங்கத்துக்கும்,   விஜயனின் அப்பம்மா சிங்கவல்லிக்கும்.

இதனை வாசிக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது,

ஒரு இளம் பெண்ணொருவரது ஒரு யூரியூப் காணொளியில் அவரது அம்மா ஐரிஸ் பின்புலம் அவரது தந்தை இலங்கையர் அந்த பெண் முற்றூ முழுதாக அவரது தந்தையின் எந்த அம்சமும் கொண்டிருக்கவில்லை, அவர் சிறு வயதில் அவரது தந்தையுடன் கடைக்கு சென்றிருந்த போது கடையிலிருந்து வரும்போது அவரது தந்தை அவரை தோளில் போட்டு தூக்கி வரும் போது வாசலில் நின்ற காவலாளி அந்த குழந்தையினை இலங்கையினை சேர்ந்த தந்தையினை குழந்தையினை கடத்துபவராக கருதிவிட்டதாக கூறினார்.

அந்த காணொளியில் இடப்பட்ட பின்னூட்டத்தில் ஒரு சிங்களவர் என நினைக்கிறேன் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண்ணின் தந்தை சிங்களவராக இருக்க முடியாது ஏனெனில் சிங்களவர்கள் வலுவான உயிரணுக்கள் கொண்டவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சிங்களவர்கள் இந்த கதைகளை நம்புவர்களாக இருக்கிறார்கள் என கருதுகிறேன்.

காணொளியினை தேடிப்பிடித்து இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, vasee said:

இதனை வாசிக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது,

முதலில் சிறிய குழப்பம் வரும், பின்பு சரியாகி விடும்.

17 minutes ago, vasee said:

ஒரு இளம் பெண்ணொருவரது ஒரு யூரியூப் காணொளியில் அவரது அம்மா ஐரிஸ் பின்புலம் அவரது தந்தை இலங்கையர் அந்த பெண் முற்றூ முழுதாக அவரது தந்தையின் எந்த அம்சமும் கொண்டிருக்கவில்லை, அவர் சிறு வயதில் அவரது தந்தையுடன் கடைக்கு சென்றிருந்த போது கடையிலிருந்து வரும்போது அவரது தந்தை அவரை தோளில் போட்டு தூக்கி வரும் போது வாசலில் நின்ற காவலாளி அந்த குழந்தையினை இலங்கையினை சேர்ந்த தந்தையினை குழந்தையினை கடத்துபவராக கருதிவிட்டதாக கூறினார்.

அந்த காணொளியில் இடப்பட்ட பின்னூட்டத்தில் ஒரு சிங்களவர் என நினைக்கிறேன் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண்ணின் தந்தை சிங்களவராக இருக்க முடியாது ஏனெனில் சிங்களவர்கள் வலுவான உயிரணுக்கள் கொண்டவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சிங்களவர்கள் இந்த கதைகளை நம்புவர்களாக இருக்கிறார்கள் என கருதுகிறேன்

 

அந்த பெண் சொல்வது உண்மையாக இருக்கலாம்.

ஏனெனில், சிங்களவர் தீவுக்கு வரும் எல்லா வெளி  இன மக்களோடும் கலக்கும், கலந்த  வீதம் மிக கூட.

தமிழரில் அப்ப்படி  இல்லை என்றே சொல்லலாம்

அந்த சிங்களவரின் வலிதான  உயிரணு என்பது, அவர்கள் நாகர், யக்கர், வேடர் மற்றும் சிங்க  அடி  விஜயனின் கலவை என்று இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள், அத்துடன் புத்தர் தென்பகுதி காட்டில்  பிறந்து கபிலவஸ்து  சென்றகாகவும்  இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிய படகிலிருந்த மியன்மாா் நாட்டினருக்கு விளக்கமறியல்

adminDecember 21, 2024
written by  admin December 21, 2024
boat3.jpg

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கடந்த     வியாழக்கிழமை (19) 103      கரையொதுங்கிய படகிலிருந்து  மீட்கப்பட்ட . மியன்மாா்   அகதிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த மியன்மார் அகதிகளை படகுடன் மீட்ட கடற்படையினர், திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று (20) கொண்டு சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.  குறித்த படகில் இருந்து  25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் , 12  பணியாளர்கள்உட்பட  103 பயணிகள் காணப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://globaltamilnews.net/2024/209491/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.