Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 DEC, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. 

இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். 

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. 

எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள்.

உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு  மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/201981

  • கருத்துக்கள உறவுகள்

இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட,
அவரை...
"பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட,
அவரை...
"பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣

அது என்ன ""தட்டிக் கேட்டல் ""? 

அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். 

அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதே Formula,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 
இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம்  சுமந்திரனுக்கும்  பொருந்தி வர வேண்டும் என்பதே 
எனது நத்தார்  கால  பிரார்த்தனை. 😂 animiertes-weihnachten-smilies-bild-0234

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:
23 DEC, 2024 | 04:46 PM
 
இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/201981

இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்

மனிதரை மனிதராக மதிக்கும் பண்பைவிட்டு வர்ணாச்சிரம முறையைப் பின்பற்றி வாழ்வோர் இலங்கை வடபகுதியில் அதிகமாக இருப்பதினால் இருக்கும் நிலையிது.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7929.jpeg.22916152fa58962893ff

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7929.jpeg.22916152fa58962893ff

ஓம் கவி 

லண்டனில் சேவை செய்த போது

IMG-2991.png

கனடாவில் சேவை செய்த போது

IMG-2992.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

அது என்ன ""தட்டிக் கேட்டல் ""? 

அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். 

அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர். 

உண்மை .....படித்தவர்,மக்கள் செல்வாக்கு உள்ளவர் நிதானமாக செயல்பட வேண்டும் ...

9 hours ago, ஏராளன் said:

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

இதை தான் 2009 முல்லைதீவில் இல் கடமையாற்றிய இரு மருத்தவர்களும் சொன்னார்கள் ...நேற்றிஅய் ஐ.பி.சி. பேட்டி ஒன்றில் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இதே Formula,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 
இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம்  சுமந்திரனுக்கும்  பொருந்தி வர வேண்டும் என்பதே 
எனது நத்தார்  கால  பிரார்த்தனை. 😂 animiertes-weihnachten-smilies-bild-0234

சுமந்திரனுக்கு டமில் தேசிக்காய்களிடம் அரசியல் செய்யத் தெரியாது.  அவர் எதனையும் மறைக்காது நேராகப் பேசுவது  என்பது  எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் இலங்கையின் அதி உயர் மன்றத்தில், பிரதிநிதிகள் எல்லோரும்,  தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களைப் பார்த்து சிரிக்கும்படி செய்யவில்லை. 

சிறீதரன் போன்று வாயைத் திறக்காமல் (அவருக்கு வாயைத் திறக்கத் தெரியாது என்பது வேறு  😉) நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி 20 Bar Licence எடுத்து விற்றிருந்தால் உந்த புலன் பெயர் சமூகம் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். உந்தத் திருவிளையாடல் உவருக்குத் தெரியாமல் போனது சுமந்திரனின் துரதிஸ்ரமே. 

48 minutes ago, putthan said:

உண்மை .....படித்தவர்,மக்கள் செல்வாக்கு உள்ளவர் நிதானமாக செயல்பட வேண்டும் ...

இதை தான் 2009 முல்லைதீவில் இல் கடமையாற்றிய இரு மருத்தவர்களும் சொன்னார்கள் ...நேற்றிஅய் ஐ.பி.சி. பேட்டி ஒன்றில் 

அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. 

அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. 

அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான். 

உண்மை ....உயிருடன் இருப்பது பெரிய விடயம் ..ஒரு சிலர் தப்பி பிழைத்து விடுகிறார்கள் ...

சிறிஙகனில் அப்படி தப்பி பிழைத்தவர் தோழர் அணுரா ...சிங்கள வலதுசாரிகளுக்கும் ,இந்திய பெரியண்ணருக்கும் பெரிய தலை இடியிடியாக இருக்கின்றார் இருப்பார் ...கொஞ்ச காலத்திற்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

உண்மை ....உயிருடன் இருப்பது பெரிய விடயம் ..ஒரு சிலர் தப்பி பிழைத்து விடுகிறார்கள் ...

சிறிஙகனில் அப்படி தப்பி பிழைத்தவர் தோழர் அணுரா ...சிங்கள வலதுசாரிகளுக்கும் ,இந்திய பெரியண்ணருக்கும் பெரிய தலை இடியிடியாக இருக்கின்றார் இருப்பார் ...கொஞ்ச காலத்திற்கு 

தப்பிப்பிழைத்ததால் தான் சிலருக்கு சத்யன் மேல் சந்தேகம்................ நான் இதைப் பகிடியாக எழுதவில்லை. இவருடன் இறுதிப் போரின் போது கூட இருந்த இன்னொரு வைத்தியர் இங்கே அமெரிக்கா வந்து சேர்ந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டிருக்கின்றார். அவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள். சத்யன் அங்கேயே தங்கி விட்டபடியால், மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பது போல போய்க் கொண்டிருக்கின்றது.....................  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr.  சத்தியன்,  இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு  எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர்  பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது  புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

இல்லை கபிதன், என் நினைவில் சில விசயங்கள் திரும்பத் திரும்ப வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவனையில் இருந்து இறுதி யுத்தத்தின் போது தகவல்கள் உலகெங்கும் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் என்ன செய்யலாம் என்று பலர் கலங்கி நின்றனர். சத்யனையும், அங்கு நின்ற மற்ற மருத்துவர்களையும் மறக்கவே முடியாது.

பின்னரும், இலங்கை அரசால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு என்ன நடந்தது என்று அறிய, மற்றைய மருத்துவரின் புத்தகத்தை மக்கள் வாசிக்கவேண்டும். அவர் இங்கு வந்த போது, சில சந்திப்புகளை நடத்தியிருந்தார். நான் சிலவற்றுக்குப் போயிருந்தேன். அதுவும் கண்ணீர்க் கதை தான்........

இன்று எல்லாமே வெறும் கட்சி அரசியலும், பக்கச்சார்பு என்றும் ஆகிவிட்டது..............😌

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

எல்லோரும் என்று நான் குறிப்பிட்டது  சகட்டுமேனிக்கு  Dr. ல் குறை கூறுபவர்களை மட்டும்தான். 

யாழ் பல்கலையில் பாதுகாவலர்கள் முதற்கொண்டு  சகல துறைகளிலும் டக்கியரின் ஊடுருவல்களைக்  க்ண்களால் கண்டவன் என்கிற வகையில் வைத்தியசாலை நிலவரத்தை நன்கு என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. 

பலருக்கு அது புரிவதில்லை. 

Dr. சத்தியமூர்த்தி பக்கச சார்பில்லாமல் அல்லது அரசியல்வாதிகளுடன் ஒத்துழைக்காது  அங்கே இயங்க முடியுமா? இதற்கு விமர்சிப்பவர்கள் பதில் தர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தப்பிப்பிழைத்ததால் தான் சிலருக்கு சத்யன் மேல் சந்தேகம்................ நான் இதைப் பகிடியாக எழுதவில்லை. இவருடன் இறுதிப் போரின் போது கூட இருந்த இன்னொரு வைத்தியர் இங்கே அமெரிக்கா வந்து சேர்ந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டிருக்கின்றார். அவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள். சத்யன் அங்கேயே தங்கி விட்டபடியால், மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பது போல போய்க் கொண்டிருக்கின்றது.....................  

அந்த அமெரிக்க மருத்துவர் இந்த மாதம் அவுஸ்ரேலியவிலும் அந்த புத்தகத்தை வெளியிட்டார் ...நான் சென்றிருந்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இன்று எல்லாமே வெறும் கட்சி அரசியலும், பக்கச்சார்பு என்றும் ஆகிவிட்டது..............😌

அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை.

என நீங்கள் நினைக்க இல்லையா?

இமெல்டா சுகுமாருக்கும் இதுவே நடந்தது.

அவர்கள் 2009 மேயிற்கு பின் அவர்களை பாதுகாத்தவர் எவரோ அவருக்கு தம் விசுவாசத்தை நிருபிக்க சிலதை செய்யவேண்டி ஆகியது.

பின் அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது.

பழத்தை கடித்த பின் ஆத ஏவாளுக்கே மீட்சியில்லை.

16 hours ago, ஏராளன் said:

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

அப்படி இருப்பின் அவர் இதை ஒரு எழுத்து உத்தரவாக போட்டிருந்தால் அதை அதிகாரி தட்டி கழித்திருக்க முடியாது.

ஏன் வாய்மூலம் சிபாரிசு? ரெக்கோர்ர்ட்டில் இல்லாமல் அலுவல் பாக்கும் கள்ளத்தனம்?

மாகாணசபை தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை, பின்கதவால் அனுபவிக்கும், பிரயோகிக்கும் ஒருவர்தான் இந்த ஆளுனரும் ஏனையோரும்.

இன்னும் ஒரு விடயம் தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு அதிகாரியை பொதுவெளியில் யார் என தெரியும் படி விபரம் சொல்லி விமர்சிக்கிறார்?

இதெல்லாம் தலைமைதுவ பண்பு. இவர் எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி.

அந்த அதிகாரியை பற்றி எனக்கு தெரியாது - ஆனால் இவர் அனுப்பி விட்டார் என்பதால் கூட்டத்தை விட்டு விட்டு அவர்களை சந்திக்க முடியாதே?

வந்தவர்கள் நேராக அவரிடம் வராமல், ஆளுனர் மூலம் வந்த சிபாரிசு பேர்வழிகள் அவர்களுக்கு வெத்திலை வைக்க வேண்டும் என ஆளுனர் எதிர்பார்ப்பது அவரின் மமதையையே காட்டுகிறது.

மிக முக்கியமாக -

அதிகாரி நடந்தது தவறு எனில் ஏன் அவர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வில்லை?

எடுத்தால் இவரின் அதிகார துஸ்பிரயோகம் - employment tribunal இல் நாறும் என்ற பயம்?

எனவே தன் இயலாமையை மேடையில் கூறி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

ஓம் கவி 

லண்டனில் சேவை செய்த போது

இது இறந்தகாலம். நிகழ்காலத்துக்கு சற்றே இறங்கி  வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இது இறந்தகாலம். நிகழ்காலத்துக்கு சற்றே இறங்கி  வாருங்கள்

உங்களுக்கு தேவை என்றால் இறந்த காலமும் நிகழ்காலம் ஆகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

தான் சிபாரிசு செய்ததை வெளிப்படையாக ஆளுநரால் கூற முடியுமென்றால் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் என யூகிக்கலாம். 

எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்து பத்து மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை மன்னாருக்கு இடமாற்றம் செய்திருந்தனர். அவரோ மூன்று பிள்ளைகளின் தாய். அவர் தனது நிலையை பரிபூரணமாக அறியத் தந்தும் கல்வி அமைச்சின் ஒரு சிலர் அவரது இட மாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தடையாக இருந்தனர். இறுதியில் அவர் ஆளுநர் வரைக்கும் சென்றுதான் தனது இடமாற்றத்தை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. 

அது தவிர வட மாகாண கல்வி அமைச்சு என்பது சாதி மதம் பிரதேசவாதம் என்பன தாண்டவமாடும் இடம். அங்கே என்ன நடைபெறுகிறது என்பது அதனுடன் தொடர்புபட்ட ஆட்களுக்கு நன்கு தெரியும். 

வட மாகாண கல்வி அமைச்சு என்பது கூவம் ஆறு போன்றது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை என நீங்கள் நினைக்க இல்லையா?

நீங்கள் சொல்வது சரியே, கோஷான். இவர்கள் சிலர் இவர்கள் செய்த பணிகளால் அன்று முக்கியஸ்தர்கள் மற்றும் உலகிற்கு தெரிந்தவர்கள். ஒரு விலை கொடுத்தே அவர்கள் வெளியே வரவேண்டி இருந்தது.

இந்தப் புரிதல்களும், அவர்களின் தன்னலமற்ற பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவர்களை துரோகிகள் என்ற எல்லைவரை இழுத்துக் கொண்டு போவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

புதிதாக வந்த ஒருவர் சேவை செய்கின்றார், புரட்சி செய்கின்றார் என்கின்றார்கள். உண்மையில் இதுவரை அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்.................. அப்படியே எப்பவாவது ஏதாவது காத்திரமாக செய்து விட்டாலும் கூட, இறுதிப் போரில் அங்கேயே நின்று மக்களுக்கு இவர்கள் செய்த சேவைகளை அவை மிஞ்சிவிடுமா...............

பல தாக்குதல்களில், நடவடிக்கைகளில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றே என் பார்வைக்கு தெரிகின்றது. என் பார்வை பிழையாகக் கூட இருக்கலாம். 

ஒரு சமூகமாக, எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றோம், யாரையாவது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம், தொடர்ச்சியாக அவதானிப்பதை தவிர்க்கின்றோம் அதனால் நாங்கள் கொண்டாடுவதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பத் தலைப்படுகின்றோம்.............  

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2024 at 11:25, ஏராளன் said:
23 DEC, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. 

இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். 

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. 

எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள்.

உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு  மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/201981

அவர் செய்தது பிழையென்றால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமே? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.