Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

December 28, 2024  02:55 pm

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதும் 18 உறுப்பினர்கள் கையொப்படமிட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது.

 மாவைசேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது.

இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார். 

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கபட வேண்டும் என்று எமது யாப்பிலும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஞ்சிய காலத்திற்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் பிரிவினை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஆகவே கட்சித்தலைவர் பதவியை சிவஞானம் வகிப்பார் அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையபடுத்தி, மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கிறது. பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கிறது. 

எனவே முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தன் அவர்களை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம். அதனடிப்படையிலேதான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியினை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதேவேளை கட்சி தொடர்பாக யாழில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் எதும் வழங்கப்படவில்லை எனவே அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு இல்லை என்றார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197937

 

 

தலைவர் தலைவராகவே இருப்பார் - கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

28 Dec, 2024 | 03:26 PM

image

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எப்போதும் எமது கட்சித் தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு எடுப்பது வழமை. இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது.

இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான்.

வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை பதிவிட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

ஆகவே, அவரும் அந்த வழக்குகளில் பின்வாங்கினால் நானும் எனது வழக்குகளில் பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது. நாங்கள் கேட்டுக்கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறுதான். ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை  வெளியிடுகிறார்கள்.  தலைவர் தலைவராகவே இருப்பார் என்றார். 

 

https://www.virakesari.lk/article/202381

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றமில்லை

December 28, 2024  06:48 pm

தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றமில்லை

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக  பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.

எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197947

 

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

December 28, 2024  06:39 pm

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் அவர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.  இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், கடந்த தேர்தலில் கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சை குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது.

மேலும், வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனையவர்களுக்கும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197946

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தில் இருந்தால் ஶ்ரீ மாஸ்டர் மீது கைவையுங்கள் பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

 

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

 

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

 

 

https://www.virakesari.lk/article/202381

 

தமிழரசுக் கட்சியின் தலைவரை - அவர் தானாக விலகினால் ஒழிய - பதவி நீக்க வேண்டுமாயின் எப்படி செய்வது? மத்திய குழுவில் வாக்கெடுப்பதா அல்லது முழுமையான கட்சியின் உறுப்பினர்களிடையே தேர்தல் வைப்பதா? (இப்படி கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் வைக்கும் வசதிகள் இலங்கையில் இருக்கின்றனவா?).

இதைப் பற்றி கட்சியின் யாப்பில் கட்டாயம் இருக்க வேண்டுமே? யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Justin said:

தமிழரசுக் கட்சியின் தலைவரை - அவர் தானாக விலகினால் ஒழிய - பதவி நீக்க வேண்டுமாயின் எப்படி செய்வது? மத்திய குழுவில் வாக்கெடுப்பதா அல்லது முழுமையான கட்சியின் உறுப்பினர்களிடையே தேர்தல் வைப்பதா? (இப்படி கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் வைக்கும் வசதிகள் இலங்கையில் இருக்கின்றனவா?).

இதைப் பற்றி கட்சியின் யாப்பில் கட்டாயம் இருக்க வேண்டுமே? யாருக்காவது தெரியுமா?

யாப்பில்இருக்குதாம் ஆனால் விளக்கமில்லாதல் இருக்காம், அதுதான் சுமந்திரனிடம் விளக்கம் கேட்டு, இப்ப நடவடிக்கை எடுத்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, RishiK said:

யாப்பில்இருக்குதாம் ஆனால் விளக்கமில்லாதல் இருக்காம், அதுதான் சுமந்திரனிடம் விளக்கம் கேட்டு, இப்ப நடவடிக்கை எடுத்து விட்டார்கள். 

இதைப் பற்றி கோசான் சொன்னது சரி தான் போல் இருக்கிறது. தமிழரசின் ஸ்தாபகர்கள், பெரிய தலைகள் அனேகர் சட்டத்தரணிகள், பரிஸ்டர்கள், QC/PC க்கள். இவ்வளவு முக்கியமான ஒரு விடயத்தை யாப்பில் தெளிவாக எழுதத் தெரியாத சான்றிதழ் சட்டத்தரணிகளாக இருந்திருக்கிறார்கள் போல.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சிறிதரன் தலைவராக தேர்வான தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக அல்லவா யாழில் செய்திகள் பகிரப் பட்டன? இந்த முறைகேடான தேர்வைப் பற்றி சிறியர் சொல்ல எதுவும் இல்லையாமா? சுமந்திரனும் இந்த தேர்தலில் நேர்மையில்லாமல் நடந்து கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முறைகேடான வாக்குகளால் கிடைத்த பதவியை சிறிதரன் இன்னும் முறையானதாகக் கருதுகிறாரா😂?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

கேள்வி 12 நொடிகள்; ஆனால் சும்மு சுற்றிவளைத்து பதிலளிக்க 118நொடிகள் தேவைப்பட்டிருக்கு. காய் கட்சியை ஒருவழிபண்ணிக் கிட்டவந்து சேடமிழுக்கும் நிலை. ஆனா மனுசன் சனமே கழித்துவிட்டாலும் சங்கூதித் தூக்கிறவரைக்குமான கடமை உணர்விலை பின்வாங்கேல்லையே.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி   
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

//👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு (சி.வி.கே.சிவஞானம்) பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.//

கடந்த வியாழக்கிழமை @goshan_che தெரிவித்த கருத்து, இன்று  பலித்து விட்டது. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, RishiK said:

கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 

இவர்கள் கலைகிறார்களோ இல்லையோ மக்கள் கலைத்தும் களைந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சிலதுகள் புரிந்தும் புரியாதது மாதிரித் திரிகிறார்கள். அதைவிட இனிக் கலைக்கவோ, களையவோ ஏதும் இல்லை. கட்சியை இயங்காதவகையில் எதிர்வரும் கால நீதிமன்ற நடவடிக்கைகள் அமையலாம்.

நட்பார்ந்து நன்றியுடன்
நொச்சி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை முன்வைக்கும் புதிய திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு ; சீன அறிவிப்பை தொடர்ந்து விசேட கலந்துரையாடல்களில் அரசாங்கம் 29 Dec, 2024 | 11:54 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின்போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் பல சர்ச்சைக்குரிய விடயங்களுடன் நிறைவடைந்தது. நாட்டுக்கு பாதகமான பல ஒப்பந்தங்களில்  ஜனாதிபதி கைச்சாத்திட்டதாக பலரும் குற்றம் சுமத்திய போதிலும், அவ்வாறான தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சாத்திடவில்லை என அரசாங்கம் அறிவித்தது. இதன் காரணமாக இந்திய விஜயத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் அடுத்த சீன விஜயத்தையே பலரும் உற்று நோக்குகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா  செல்லவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை  உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதற்குக் காரணம், சீனாவை நோக்கிய ஒரு சார்பு தன்மை அரசாங்கத்திடமிருந்து வெளிப்பட தொடங்கியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திர தகவல்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளன. அது மாத்திரம் அன்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் பின்னரே அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை குறித்து ஒரு தெளிவான பார்வையை அனைவராலும் உணர முடியும்.  எவ்வாறாயினும் அண்மைய புவிசார் அரசியல் நிகழ்வுகளை நோக்கும் போது ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் விசேடமானதாக அமைகிறது. குறிப்பாக இந்த விஜயத்தை திட்டமிடுவதற்காக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தது. இந்திய விஜயத்தை நிறைவு செய்து  கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பிய  ஜனாதிபதி அநுரவை, மறுநாள் காலை (18ஆம் திகதி) சீனப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்த சீனா அரசு தயாராக இருப்பதான செய்தி இதன் போது தெரிவிக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைக்காத தனித்துவமான தீர்மானத்தை சீனா முன்வைத்துள்ள நிலையில், சீன விஜயத்தின்போது முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து கடந்த சில நாட்களாக அரசாங்கத்துக்குள் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீன விஜயத்தின்போது, தற்போது தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம பகுதிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இம்முறை ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது சீன அரசாங்கத்துக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுக நகர் முதலீடுகள், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீன கப்பல் விஜயங்கள் உட்பட பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பரந்தளவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://www.virakesari.lk/article/202441
    • நிஜமான ஒரு அப்பனின் வார்த்தை. நெஞ்சைத் தொடும்வகையில் இல்லை இல்லை நெஞ்சைச் சுடும் வகையில் எழுதியிருக்கிறார் நெற்கொழுதாசன்
    • அவுஸ்ரேலியா 9/228 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளது, தற்போது 333 அவுஸ்ரேலியா முன்னிலையில் உள்ளது, இது வரை எந்த ஒரு அணியும் இந்த ஓட்டத்தினை 4 ஆவது இனிங்ஸில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  
    • நாட்டில் உள்ள நிலமை அப்படி.  நீங்கள் கூட ஒரு தடவை எழுதியிருந்தீர்கள். “உடுப்பைக் கழட்டிப் பாத்திட்டா அடிக்கப் போறாங்கள்?” என்று. 
    • கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்ததுக்கள்!  தொடருங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.