Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

December 28, 2024  02:55 pm

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதும் 18 உறுப்பினர்கள் கையொப்படமிட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது.

 மாவைசேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது.

இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார். 

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கபட வேண்டும் என்று எமது யாப்பிலும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஞ்சிய காலத்திற்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் பிரிவினை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஆகவே கட்சித்தலைவர் பதவியை சிவஞானம் வகிப்பார் அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையபடுத்தி, மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கிறது. பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கிறது. 

எனவே முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தன் அவர்களை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம். அதனடிப்படையிலேதான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியினை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதேவேளை கட்சி தொடர்பாக யாழில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் எதும் வழங்கப்படவில்லை எனவே அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு இல்லை என்றார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197937

 

 

தலைவர் தலைவராகவே இருப்பார் - கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

28 Dec, 2024 | 03:26 PM

image

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எப்போதும் எமது கட்சித் தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு எடுப்பது வழமை. இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது.

இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான்.

வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை பதிவிட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

ஆகவே, அவரும் அந்த வழக்குகளில் பின்வாங்கினால் நானும் எனது வழக்குகளில் பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது. நாங்கள் கேட்டுக்கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறுதான். ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை  வெளியிடுகிறார்கள்.  தலைவர் தலைவராகவே இருப்பார் என்றார். 

 

https://www.virakesari.lk/article/202381

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றமில்லை

December 28, 2024  06:48 pm

தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றமில்லை

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக  பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.

எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197947

 

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

December 28, 2024  06:39 pm

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் அவர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.  இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், கடந்த தேர்தலில் கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சை குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது.

மேலும், வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனையவர்களுக்கும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197946

 

  • கருத்துக்கள உறவுகள்

தில் இருந்தால் ஶ்ரீ மாஸ்டர் மீது கைவையுங்கள் பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

 

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

 

 

https://www.virakesari.lk/article/202381

 

தமிழரசுக் கட்சியின் தலைவரை - அவர் தானாக விலகினால் ஒழிய - பதவி நீக்க வேண்டுமாயின் எப்படி செய்வது? மத்திய குழுவில் வாக்கெடுப்பதா அல்லது முழுமையான கட்சியின் உறுப்பினர்களிடையே தேர்தல் வைப்பதா? (இப்படி கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் வைக்கும் வசதிகள் இலங்கையில் இருக்கின்றனவா?).

இதைப் பற்றி கட்சியின் யாப்பில் கட்டாயம் இருக்க வேண்டுமே? யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

தமிழரசுக் கட்சியின் தலைவரை - அவர் தானாக விலகினால் ஒழிய - பதவி நீக்க வேண்டுமாயின் எப்படி செய்வது? மத்திய குழுவில் வாக்கெடுப்பதா அல்லது முழுமையான கட்சியின் உறுப்பினர்களிடையே தேர்தல் வைப்பதா? (இப்படி கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் வைக்கும் வசதிகள் இலங்கையில் இருக்கின்றனவா?).

இதைப் பற்றி கட்சியின் யாப்பில் கட்டாயம் இருக்க வேண்டுமே? யாருக்காவது தெரியுமா?

யாப்பில்இருக்குதாம் ஆனால் விளக்கமில்லாதல் இருக்காம், அதுதான் சுமந்திரனிடம் விளக்கம் கேட்டு, இப்ப நடவடிக்கை எடுத்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, RishiK said:

யாப்பில்இருக்குதாம் ஆனால் விளக்கமில்லாதல் இருக்காம், அதுதான் சுமந்திரனிடம் விளக்கம் கேட்டு, இப்ப நடவடிக்கை எடுத்து விட்டார்கள். 

இதைப் பற்றி கோசான் சொன்னது சரி தான் போல் இருக்கிறது. தமிழரசின் ஸ்தாபகர்கள், பெரிய தலைகள் அனேகர் சட்டத்தரணிகள், பரிஸ்டர்கள், QC/PC க்கள். இவ்வளவு முக்கியமான ஒரு விடயத்தை யாப்பில் தெளிவாக எழுதத் தெரியாத சான்றிதழ் சட்டத்தரணிகளாக இருந்திருக்கிறார்கள் போல.  

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறிதரன் தலைவராக தேர்வான தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக அல்லவா யாழில் செய்திகள் பகிரப் பட்டன? இந்த முறைகேடான தேர்வைப் பற்றி சிறியர் சொல்ல எதுவும் இல்லையாமா? சுமந்திரனும் இந்த தேர்தலில் நேர்மையில்லாமல் நடந்து கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முறைகேடான வாக்குகளால் கிடைத்த பதவியை சிறிதரன் இன்னும் முறையானதாகக் கருதுகிறாரா😂?
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கேள்வி 12 நொடிகள்; ஆனால் சும்மு சுற்றிவளைத்து பதிலளிக்க 118நொடிகள் தேவைப்பட்டிருக்கு. காய் கட்சியை ஒருவழிபண்ணிக் கிட்டவந்து சேடமிழுக்கும் நிலை. ஆனா மனுசன் சனமே கழித்துவிட்டாலும் சங்கூதித் தூக்கிறவரைக்குமான கடமை உணர்விலை பின்வாங்கேல்லையே.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி   
 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

//👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு (சி.வி.கே.சிவஞானம்) பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.//

கடந்த வியாழக்கிழமை @goshan_che தெரிவித்த கருத்து, இன்று  பலித்து விட்டது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, RishiK said:

கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 

இவர்கள் கலைகிறார்களோ இல்லையோ மக்கள் கலைத்தும் களைந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சிலதுகள் புரிந்தும் புரியாதது மாதிரித் திரிகிறார்கள். அதைவிட இனிக் கலைக்கவோ, களையவோ ஏதும் இல்லை. கட்சியை இயங்காதவகையில் எதிர்வரும் கால நீதிமன்ற நடவடிக்கைகள் அமையலாம்.

நட்பார்ந்து நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது. அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கே இருக்கிறது. அதனை இன்று செய்துள்ளது.

தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அரசியல்குழு தலைவராக சம்மந்தன் அவர்களை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம்.

அவ்வாறு மாவைசேனாதிராஜாவை அழைப்போம் என நான் பிரேரித்திருந்தேன், ஆனால் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை, எனவே யாப்பின்படி நாங்கள் செல்லவேண்டும் என்று சிறிதரன்கூறியதன் காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லை.

இதேவேளை சிவிகே சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

கட்சியின் 75 வது வருடநிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம். அதனையொட்டி மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர்குழுவிற்கு மாவைசேனாதிராஜா அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழாக்குழுவின் தலைவராக கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருக்கிற சிவிகே. சிவஞானம் அவர்களை நியமித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டகுழுவுடன் இணைந்து செய்வதாக என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்றார்.

https://oruvan.com/the-power-to-fill-a-vacant-position-in-the-party-lies-with-the-central-committee-m-a-sumanthiran/

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களின் கட்டாய ஓய்வு வயதும் கட்சியின் யாப்பில் குறிப்பிட வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உறவுகளின் கவனத்திற்கு…!

Vhg டிசம்பர் 30, 2024
1000405824.jpg

தமிழ்த்தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக 83, சிவில் அமைப்புகள், 7, தமிழ்த்தேசியகட்சிகள், அனைத்து புலம்பெயர் அமைப்புகளும், யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் எல்லோரும் என்னை தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தி அந்த கொள்கைக்காக 226343, வாக்குகளை பெற்று தமிழ் தேசிய உறுதிப்பாட்டை நிருபித்தேன் ஆனால் என்னை (28/12/2024) ஆம் திகதி தமிழரசுக்கட்சி மத்தியகுழு கூட்டத்தில் கட்சியில் இருந்து விலக்கியதாக சுமந்திரன் கூறுகிறார்.

1000405817.jpg

அப்படியானால் தமிழரசுகட்சி தமிழ்தேசிய கொள்கைக்கு எதிரான கட்சி என்பதை நிருபித்துள்ளனர்.

எனவே இதையிட்டு தமிழ் பொதுவேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து இரவு பகலாக பிரசாரம் செய்த புலம்பெயர் உறவுகள், அமைப்புகள் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
1000405818.jpg

 

தமிழ்தேசிய கொள்கைக்காக ஒட்டுமொத்த தமிழ்தேசிய அமைப்புகள் எடுத்த முடிவும், அந்த முடிவுக்காக தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட நான் துரோகியா?

இல்லை சிங்கள சஜீத்பிரமதாசாவை ஆதரித்த தமிழரசுக்கட்சி சுமந்திரன் குழு தியாகியா?
1000405473.jpg

சகல புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.

 

பா.அரியநேத்திரன்

28/12/2024

 

வட்சப் 0773277774
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அரியத்தை பப்பாவில் ஏத்திவிட்ட நிலாந்தன் மாஸ்டர் இப்ப எஸ்க்கேப்!😂

கொம்பு சீவிவிட்ட பார் சிறிதரன் போன்றவர்கள் தான் பதில்சொல்லவேண்டும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2024 at 03:39, கிருபன் said:

 

கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

 

 

 

அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

 

https://oruvan.com/the-power-to-fill-a-vacant-position-in-the-party-lies-with-the-central-committee-m-a-sumanthiran/

சிவமோகனுக்கு சாப்பாட்டு இடைவேளை, மத்திய குழுக் கூட்டம் எல்லாம் ஒன்றாகத் தெரிந்திருக்கிறது போல! கூட்டங்களில் தூங்கி விழும் வகையறா போல் தெரிகிறது. இவரது தூக்கக் கலக்கத்திற்கும் தமிழரசுக் கட்சி தான் அடிவாங்க வேண்டியிருக்கிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்

M._A._Sumanthiran.jpg

சுத்துமாத்து சுமந்திரன் தமிழரசு கட்சியில்  இருக்கு மட்டும்,
தமிழரசு கட்சிக்கு... ஏழரை சனியன் தான்.  😲

சுத்துமாத்து சுமந்திரன் தேர்தலில் படு தோல்வி அடைந்தும்,  
திருந்துகின்ற நோக்கம் இல்லாமல் வெட்கம் இல்லாமல்  திரியுது. 😂

வர இருக்கும், உள்ளூராட்சி தேர்தலிலும்... 
தமிழரசு கட்சிக்கு  மரண அடி வாங்கிக் குடுக்கத்தான்... 
சுத்துமாத்து சுமந்திரன் ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 🔴

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சிங்கள சஜீத்பிரமதாசாவை ஆதரித்த தமிழரசுக்கட்சி சுமந்திரன் குழு தியாகியா?

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம் – TRT தமிழ் ஒலி

சுமந்திரம்" எனும் பத்திரிகை அறிமுகம்! - Tamil FM

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்... 
சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் போது,
சஜித் உள்ள மேடையில் வைத்து,
 கருமாந்திரம் சாரி... 
"சுமந்திரம்"
என்ற ஒரு பத்திரிகையை வெளியிட்டது   நினைவு இருக்கின்றதா? 
அதற்குப் பிறகு அந்தப் பத்திரிகை ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை 
என்று யாருக்காவது தெரியுமா?

மூஞ்சையின்ரை திறத்திலை... பத்திரிகை வெளியிட்டு "பவர்" காட்ட  வெளிக்கிட்டவர்,
சனம் உசாராகி...  சாணியால்  அடித்துவிட்டு போய் விட்டார்கள். 😂

"சுமந்திரம்  எனும் மந்திரம்" என்று சொல்லி...... சுமந்திரனை பப்பாவில் ஏற்றி,
பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் செய்ததுதான்....
சுமந்திரனின் அல்லக்கைகள் செய்த ஒரு நல்ல வேலை. 👍 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம் – TRT தமிழ் ஒலி

சுமந்திரம்" எனும் பத்திரிகை அறிமுகம்! - Tamil FM

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்... 
சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் போது,
சஜித் உள்ள மேடையில் வைத்து,
 கருமாந்திரம் சாரி... 
"சுமந்திரம்"
என்ற ஒரு பத்திரிகையை வெளியிட்டது   நினைவு இருக்கின்றதா? 
அதற்குப் பிறகு அந்தப் பத்திரிகை ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை 
என்று யாருக்காவது தெரியுமா?

மூஞ்சையின்ரை திறத்திலை... பத்திரிகை வெளியிட்டு "பவர்" காட்ட  வெளிக்கிட்டவர்,
சனம் உசாராகி...  சாணியால்  அடித்துவிட்டு போய் விட்டார்கள். 😂

"சுமந்திரம்  எனும் மந்திரம்" என்று சொல்லி...... சுமந்திரனை பப்பாவில் ஏற்றி,
பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் செய்ததுதான்....
சுமந்திரனின் அல்லக்கைகள் செய்த ஒரு நல்ல வேலை. 👍 😂

நானும் சுமந்திரம் பேப்பரை தேடிக்கொண்டு இருக்கிறன் கண்ணிலை காட்டுறாங்கள் இல்லையப்பா. ஒரு வேளை தானே எழுதி தானே அச்சடிச்சு தானே வாசிச்சு அக மகிழ்கின்றாரோ? 😂
 

  • கருத்துக்கள உறவுகள்

நானுந்தான், கனநாளாக இந்த சுமந்திரம் பேப்பருக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என நினைத்தேன். யாராவது கைக்கு கிடைத்தால் அனுப்பிவிடவும். பத்திரிகை வெளியிட்டவரும், வாங்கியவரும்அவுட். இவர் மட்டும் வென்றிருந்தால் பாருங்கள்; அந்தப்பத்திரிகை எத்தனை பேரை கிழித்து தொங்க விட்டிருக்கும். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்கு போட்டது பிழை, எந்த மூஞ்சியோடு சிங்களவனிடம் போய் பேசுவது என்று வாதம் செய்தவர்கள், பாராளுமன்றத்தேர்தலில், எப்படி சிங்களக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று  மக்களை கேள்வி கேட்டார்கள். பொது வேட்ப்பாளரை தேர்ந்தெடுத்த மக்கள், அடுத்த தேர்தலில் சிங்களக்கட்சிக்கு   ஏன்? யாரால்? வாக்களித்தார்கள் என்று தம்மைத்தாமே  பரிசோதனை செய்தால், பதில் கிடைக்கும்! ஏதோ, நாம் ஒன்றும் செய்யத்தேவையில்லை, மக்கள் நமக்குத்தான் வாக்குபோடவேண்டும் என்று கனவு கண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட பலர், மற்றவர்கள் மேல் குற்றம்சாட்டி புலம்புகிறார்கள். இன்னும் சிலர், மக்கள் நிராகரித்தாலும் எங்காவது ஒரு இடைவெளி தெரியாதா? பூந்து விடலாமென அலைகிறார்கள். பதவியில் இருக்கும்போது தூங்கியவர்கள், பதவியிழந்த பின்தான் மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்களாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.