Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நான் சென்னையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து சென்னைக்கும் எயார் லங்கா வில் தான் பயணம் செய்தேன். குறுகிய, ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம் என்றாலும் வெள்ளைப் பொங்கல் தந்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது.  அதை விட அதை பரிமாறிய பெண் மிக அழகாக இருந்தார்.

எயர் கனடா வில் பல முறை பயணம் செய்துள்ளேன். பயணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் சேவை மிக மிக மட்டம்.  அவர்கள் தரும் உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, சுவிங்கத்தை உமிஞ்சு கொண்டு இருக்கலாம்.

எனக்கு பிடித்தது கட்டார் விமான சேவை. நல்ல உணவு. பாரபட்சமற்ற உபசரிப்பு. விமானங்களும் புதுசாக, மிகவும் தூய்மையாகவும் இருக்கும். 

எமது பயணங்கள் கட்டார் எதிகாட் துருக்கி விமான சேவைகள் தான்.

எமிரேட்ஸ் எப்போதும் கொஞ்சம் விலை கூட.

இந்த விமான சேவைகளில் 50 இறாத்தல் 2 பொதிகள் கொண்டு போகலாம்.

இதையும் எப்போது நிற்பாட்டுகிறார்களோ தெரியவில்லை.

எல்லாவற்றிலும் சாப்பாடு கவனிப்புகள் பரவாயில்லை.

கூடுதலாக எமது நிறத்தவரே பயணிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2025 at 22:09, ஈழப்பிரியன் said:

எனக்கு தெரிந்தவரை பலரும் பலகாலமாக எயர்லங்கா விமான உணவுகளை புகழ்ந்தே சொல்லிவருகிறார்கள்.

கடந்த வருடம் கூட எனது மச்சான் இதில் பயணித்துவிட்டு நல்ல சாப்பாடு என்றார்.

ஓம் அப்படி தான் அதில் பிரயாணம் செய்தவர்கள் சொல்கிறார்கள் நான் போனது இல்லை .அனேகமாக நேரடியாக  கொழும்புக்கு போகின்றதாம் விலை அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் அப்படி தான் அதில் பிரயாணம் செய்தவர்கள் சொல்கிறார்கள் நான் போனது இல்லை .அனேகமாக நேரடியாக  கொழும்புக்கு போகின்றதாம் விலை அதிகம்

திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் அங்கங்கே குறைகள் இருந்தாலும் சாப்பாடு பிரமாதமாக இருந்தால் சகல குறைகளும் அதற்குள் மறைந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் அப்படி தான் அதில் பிரயாணம் செய்தவர்கள் சொல்கிறார்கள் நான் போனது இல்லை .அனேகமாக நேரடியாக  கொழும்புக்கு போகின்றதாம் விலை அதிகம்

இப்ப நேரே சென்னை பிறகு பலாலி, என்ன 15+7 kg luggage தான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2025 at 18:35, தமிழ் சிறி said:

இரண்டு கிழமைக்கு முன் நண்பர் ஒருவர், 
எயார் லங்காவில் இலங்கைக்கு பயணித்த போது...
விமானத்தில் கொடுக்கப் பட்ட  உணவை உண்ட அனைவருக்கும் 
வாந்தியும், வயித்தாலை அடியும் என்று சொன்னார்.

அந்த உணவை உண்ணாதவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையாம்.

விமானங்களில் பறப்பின் போது தலைமை விமானி மற்றும் துணை விமானிகளுக்கு பெரும்பாலும் வெவ்வேறு உணவுகளே பரிமாறப்படும். இந்த நடைமுறை "crew meal segregation" என்று அழைக்கப்படுகிறது. இந்த  நடைமுறைக்கான முக்கிய காரணம், மாசடைந்த அல்லது நோய் தொற்று உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் பரவும் வியாதிகளால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதாகும்/குறைப்பதாகும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

எமது பயணங்கள் கட்டார் எதிகாட் துருக்கி விமான சேவைகள் தான்.

 

 

 

நானும் எதிகாட்தான் .பாவித்தேன்...நம்ம நிறமென்ன..இசு ..இந்திதான் ...ஒரே அட்டகாசம்..சாப்பாடும் அவர்களுக்கு ஓகே..பொதி நிறைக்கு..சரி...2- 50ம்  1 - 17 ம் .. கமரா  .லப்டொப்பு   நாரி தூக்கு பையிலை ..சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, RishiK said:

இது எப்ப? Sri Lankan airlines அல்லது Air Lanka காலமா? 

குசா  Air Lanka காலத்தை குறிப்பிடுகிறார் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் ஏர்லைன்சில் போவாரே பெரியார் அஃதிலார் சீர்கெட்டு சிங்கியடிப்பார்.

கட்டாரை கற்றாரே காமுறுவர்.

எத்திக்கு போனாலும் கத்தே பசிபிக்கில் போ.

ஏர்இந்தியா, சிறிலங்கன், பிஐஏ, பீமன் நான்கும் இழுக்கா இயன்றது நற்பயணம்.

குவைத் எர்வேஸ், சவுதியா  “குடி” நாசம்.

 பெயரை நம்பி, சுவிஸ் ஏர்வேசில் ஏறாதே. எதையும் நம்பி பிரிட்டிஸ் ஏர்வேசில் ஏறாதே.

குவாண்டசில் போனால் குபேரனும் குசேலனாவான்.

#நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை🤣

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை

தங்கம் கோல்ட்டில்  பொறிக்க வேண்டிய   வசனம்.

நம்முன்னோர்கள் மேற்குலகில் குடியேறுவதற்காக  மட்டுமே ஒரே ஒரு தடவை மோசமான ரஷ்ய விமான சேவையை  பயன்படுத்தி இருக்கின்றனர்

12 hours ago, RishiK said:

இப்ப நேரே சென்னை பிறகு பலாலி, என்ன 15+7 kg luggage தான் 

தகவலுக்கு நன்றி

சிறிலங்கன்எயர் நேரடியாக மெல்போன் இருந்து கொழும்பு லண்டனில் இருந்து கொழும்பு இருந்தது. ஜேவிபி வரும் வரைக்கும் இருந்தது என்று நினைக்கிறேன்

 

 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/1/2025 at 10:14, RishiK said:

இது எப்ப? Sri Lankan airlines அல்லது Air Lanka காலமா? 

Air Lanka காலம். 8000 ரூபாய் ரிக்கற் காசு :cool:

பணிப்பெண்களை பார்க்கும் போது தேவதைகளை பார்த்த மாதிரி இருந்தது.😍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Air Lanka காலம். 8000 ரூபாய் ரிக்கற் காசு :cool:

பணிப்பெண்களை பார்க்கும் போது தேவதைகளை பார்த்த மாதிரி இருந்தது.😍

நான் ஏர் சிலோன் எண்டெல்லே நினைச்சன்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

நம்முன்னோர்கள் மேற்குலகில் குடியேறுவதற்காக  மட்டுமே ஒரே ஒரு தடவை மோசமான ரஷ்ய விமான சேவையை  பயன்படுத்தி இருக்கின்றனர்

1970 களில் கொடிகட்டிப் பறந்தது Aeroflot தான்.

அத்துடன் (Thomas Cook travelers checks)தோமஸ்குக் ரவலேர்ஸ் செக்கும் கையில் இருக்கும்.

அந்த காலங்களில் இது தான் மிகவும் பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அத்துடன் (Thomas Cook travelers checks)தோமஸ்குக் ரவலேர்ஸ் செக்கும் கையில் இருக்கும்.

அந்த காலங்களில் இது தான் மிகவும் பாதுகாப்பானது.

😀

சுவாரஸ்யமான தகவல் அறிந்திருக்கிறேன். நன்றி.எல்லா நாடுகளிலும் பாவிக்கின்ற ஒரு செக் முறை பின்பு அது இல்லாமல் போனது அதிசயம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட என்றால்  வெவ்வேறு உணவகங்கள் உண்டு. விமானங்களில் அநேகமாக அந்தந்த நாட்டு  மற்றும் குறுகிய கால அவகாச உணவுகளையே தருவர் தரமுடியும். நான் அத்தனையையும் சுவை பார்க்கும் சந்தர்ப்பமாக விமான பயணங்களை எடுத்து கொள்வதுண்டு. 

அப்புறம் இந்த சாப்பாடு தான் இன்றைக்கு ருசி பார்க்க வேண்டும் என்றால் தம்பி @goshan_che பரிந்துரைத்த உணவகத்தை நாடி மலேசியாவில் 150 கிலோமீட்டர் தேடி போய் ருசி பார்த்ததும் உண்டு. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

1970 களில் கொடிகட்டிப் பறந்தது Aeroflot தான்.

புலம்பெயர் தமிழர்களை மலிஞ்ச ரிக்கற் விலையில மொஸ்கோவுக்கு சுமந்து கொண்டு விட்டதும் Aeroflot  தான் 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.