Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, கெளரவ சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

https://athavannews.com/2025/1416130

  • கருத்துக்கள உறவுகள்

தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.

யோவ் கோசான் நீங்களும் விட்ட பாடில்லை… 

இவங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. இவங்கள் ஒருபோதும் மாற மாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

இடப்பக்கத்தில் நிற்பவர் அச்சொட்டாகத் தமிழ்சிறி தான். சனாதிபதியை எப்போ சந்தித்தார்??🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.

 

3 hours ago, MEERA said:

யோவ் கோசான் நீங்களும் விட்ட பாடில்லை… 

இவங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. இவங்கள் ஒருபோதும் மாற மாட்டாங்கள்.

 

May be an image of text

நாம் பேசியதெல்லாம் பொய்.  NPP 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

 

May be an image of text

நாம் பேசியதெல்லாம் பொய்.  NPP 😂 🤣

இது சுப்பர் சிறீயர்....இந்த லோகோவை...நம்ம டமிழரசு சம்பந்தப்பட்ட திரியிலும் பாவிக்கலாமே..

அனுர என்பவர் சிறிலங்கா சிங்களநாடு மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்கின்றார்...இதுக்கிடையில் நாம சந்திரசேகரத்தையும் ..இளங்குமரனையும் கட்டவுட் கட்டி பாலாபிசேகம் செய்யிறம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.

இந்த சிவப்பு தொப்பிகாரார் சொல்லுறார் 5ஆவது நிமிடத்தில் ஐன்ஸ்டீன் விளக்கம் கொடுக்கிறார்....
நன்றாகவே காதில பூ சுத்துகிறார் ...ஜெ.வி.பி பிரதிநிதி ..

உயர் நீதியரசர் சிறுபான்மையினராக இருந்து ஒர் பெரும்பான்மையினருக்கு தண்டனை வழங்க வேண்டி வந்தால் அது இனக்கலவரத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே தான் சிறுபான்மை இனத்தினருக்கு நீதியரசர் பதவி வழங்க வில்லை ..தோழர் புத்தனிஸ்ட் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.

இது தான் தூரப்பார்வை மற்றும் எதிரியை எதிர் கொள்ள களத்தை தயாராக்குதல் என்பது. சிங்களம் அதில் பல நூறு வருடங்களாக அனுபவம் கொண்டது. 

உதாரணமாக இனி மேல் நீதிமன்றத்தில் எதையாவது முயலலாம் என்ற நினைப்பு தமிழர்களுக்கு வருமா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இது தான் தூரப்பார்வை மற்றும் எதிரியை எதிர் கொள்ள களத்தை தயாராக்குதல் என்பது. சிங்களம் அதில் பல நூறு வருடங்களாக அனுபவம் கொண்டது. 

உதாரணமாக இனி மேல் நீதிமன்றத்தில் எதையாவது முயலலாம் என்ற நினைப்பு தமிழர்களுக்கு வருமா என்ன??

எங்கன்ட அப்புகாத்து சுமத்திரன் சர்வதேச நீதிமன்றில் வாதாடி சிரிலங்காநீதியரசர்களின் தீர்ப்பை மாற்றுவார் ..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, putthan said:

எங்கன்ட அப்புகாத்து சுமத்திரன் சர்வதேச நீதிமன்றில் வாதாடி சிரிலங்காநீதியரசர்களின் தீர்ப்பை மாற்றுவார் ..

அவர் உள்ளூர் சந்தைக்கு போகவே உங்கள் கத்தரிக்காய் முத்தவில்லை என்கிறார். இதில் சர்வதேச???? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

 

 

May be an image of text

நாம் பேசியதெல்லாம் பொய்.  NPP 😂 🤣

என்ன பொய்????    ......விகிதாசாரப்படி    தமிழருக்கு ஒரு இடமும். கிடையாது வாய்ப்புகள் இல்லை   நாலு பேர் எனில்    ஒரு நியமனம் பெற   25 % மக்கள் தொகை வேண்டும்    தமிழர்களிடம் உண்டா  ??    இல்லை,.........எனவே…    

பிள்ளைகள் பெறுங்கள்.   🤣

 விகிதாச்சாரத்தில்.  உயருங்கள்.    

இயல்பாக   மற்ற எல்லாம் கிடைக்கும்    

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அனுரா அரசுக்கு ஆதவராகத் தீர்ப்பு வழங்குவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, RishiK said:

இவர்கள் அனுரா அரசுக்கு ஆதவராகத் தீர்ப்பு வழங்குவார்களா? 

13 ஆவது திருத்தசட்டம் இல்லாமல் பண்ண போகிறார்கள் அதற்கு எதிராக தமிழ் த்ரப்பு வழக்கு போட்டா ...அரசாங்கம் சார்பாக இவ்ர்கள் நீதி வழங்குவார்கள்

On 13/1/2025 at 09:03, விசுகு said:

அவர் உள்ளூர் சந்தைக்கு போகவே உங்கள் கத்தரிக்காய் முத்தவில்லை என்கிறார். இதில் சர்வதேச???? 

இந்த கத்தரிக்காய் கிறிஸ்தவ கத்தரிக்காயா?சைவ கத்த்ரிக்காயா?அதாவ்து  சாம்பாருக்கு போடும் கத்தரிக்காயா? இறைச்சிக்கு சமைக்கும் பால்கறி கத்தரிக்காயா/😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் பாரபட்சம்.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது வெற்றிடமாகவுள்ள நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஆர்.எம். சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் சிரேஷ்டத்துவத்தில் முறையே 1ஆம், 2ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் காணப்பட்டனர். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3ஆவது சிரேஷ்டத்துவத்திலுள்ள நீதியரசர் லபார், உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை என்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசரர்களான புவனகே அலுவிகார, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோரின் ஓய்வினை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். நீதியரசர் மேனகா விஜேயசுந்தர சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாக செயற்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதியதியாக நியமிக்கப்பட்டார். அதிலிருந்தே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, நீதியரசர்களான சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகிய இருவரும், நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களைப் போன்றே நீதியரசர் லபாரும் நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்ற நீதியரசாரக தற்போது இவர் நியமிக்கப்படாமையினால் எதிர்வரும் ஜுன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயது வரையே கடமையாற்ற முடியும்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்ன, குறித்த பதவியிலிருந்து இம்மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இவருக்கு எதிராக விரைவில் குற்றப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து இவர் இராஜினாமாச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி இவர் 63 வயதை அடையவுள்ளமையினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஓய்வுபெறவுள்ளார்.

நீதவானாக தனது நீதித் துறையை ஆரம்பித்த நீதிரயசர் நிசங்க பந்துல கருணாரத்ன பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரானார். உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு இவருடைய பெயர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்; முன்மொழியப்பட்டது.

எனினும், அரசியலமைப்பு பேரவையினால் குறித்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு பேரவையின் இந்த தீர்மானத்தினை சவாலுக்குட்படுத்தி சட்டத்தரணி ஒருவரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இந்த மனுவினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில அவதானிப்புகளை நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்னவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு பயன்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அறியப்படுகின்றது.

இதேவேளை,உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்களை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://madawalaenews.com/12347.html?fbclid=IwY2xjawHzWX9leHRuA2FlbQIxMAABHeb66bfmRlxcDZTlilRYJCgJh3DLIjMRUl8Dkr-aH7snI4XeoZ92LnZUrw_aem_2rT6O1FijFJWc5SauNz48g

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.