Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை  மாணவி கண்டுபிடிப்பு!

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1416191

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people

May be an image of 4 people, people studying and hospital

May be an image of 3 people

கடத்தப் பட்ட மாணவியின் பெற்றோரிடம்.... கடத்தல்காரன் 50 லட்ச ரூபாய் 
கப்பம் கேட்டுள்ள நிலையில்...  மாணவியும், கடத்தல்காரனும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

473323604_1179478927093827_2356467727751770070_n.jpg?stp=dst-jpg_p320x320_tt6&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=wYhQEUyXcaMQ7kNvgFK9n6K&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-2.xx&_nc_gid=AIL0fyeSE_m7tM_LcAVcvwC&oh=00_AYBdvohmbkEwLT2kStoQz0Lt1OWIdqTy2435f_7Z9uIJCg&oe=678AD4BF 

473616077_1179478967093823_4332520045305230135_n.jpg?stp=dst-jpg_p235x350_tt6&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=m4duGZWx6vUQ7kNvgGsIQr6&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-1.xx&_nc_gid=AIL0fyeSE_m7tM_LcAVcvwC&oh=00_AYBJfDW9zV0dZvlUUoXTdNqIMFXJiYwys4OBCncBBR5_8Q&oe=678B040C

இவன்தான் மாணவியைக் கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டவன்!
இவனுடைய பெயர்: முஹமட் நஷார் முஹமட் நஷீர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இவன்தான் மாணவியைக் கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டவன்!
இவனுடைய பெயர்: முஹமட் நஷார் முஹமட் நஷீர்.

சிறி இது கடத்தலா?

சேர்ந்து கூத்தடித்த மாதிரி உள்ளதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சிறி இது கடத்தலா?

சேர்ந்து கூத்தடித்த மாதிரி உள்ளதே.

ஈழப்பிரியன், அந்த மினி பஸ்ஸில் கடத்தும் காணொளியை பார்த்தேன்.
சினிமா பட காட்சியைப் போலிருந்தது. 
வீதியால் போன ஒருவர்தான் உதவிக்கு ஓடிப் போனவர்.
மற்றவர்கள் சுதாகரித்து தடுக்க முதல், மினிபஸ் கிளம்பி போய் விட்டது.
இப்போ... பல இடங்களிலும், சிசிரிவி கமெரா பொருத்தப் பட்டுள்ளதால்,
கடத்தல்கள் உடனே பிடிபட்டு விடுகின்றன. 

நீங்கள் கூறிய காரணத்தையும்... தட்டிக் கழிக்க முடியாது.
இப்போ... எந்தப் புற்றில், இந்தப் பாம்பு உள்ளது என கண்டுபிடிப்பது சிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

ஒன்றாக இருந்திருக்கிறார்கள் பயணிக்கிறார்கள் .இங்கே தான் சந்தேகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தியவர்  அந்த பெண்ணின்   முறைப்பையனாம். நேரில் வீட்டில் சென்று கேட்டு இருக்கிறார். அவர்கள் மறுத்ததால்  இப்படி செய்தாராம். என்று கேள்வி .....இது தொற்று நோய் போல பரவாதிருக்கட்டும். (நாங்களும் கடத்தி பார்ப்போம் என்று இளசுகள் தொடங்கி விடும்.)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒன்றாக இருந்திருக்கிறார்கள் பயணிக்கிறார்கள் .இங்கே தான் சந்தேகமாக உள்ளது.

அண்ணன் மகள்... தங்கை மகன்...இரு வீட்டார் ஒப்புதலுடன் நடந்த காதல்...இடையில் பெண்ணின் தகப்பன்...ஒப்புதலில் மறுக்கவே..காதல்ர் கலங்கி ஆடிய நாடகம்..கடைசியில் கப்பம் கேட்டதாக நாடகம்...இதில் ஒரு விசயம் க்வனிக்க ..கூடுதல் செய்திகளில்..என்ன இனம் பெயர் வெளியிடப்படவில்லை...நாம இலங்கையில் சுத்தமான இனமுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

.இதில் ஒரு விசயம் க்வனிக்க ..கூடுதல் செய்திகளில்..என்ன இனம் பெயர் வெளியிடப்படவில்லை...நாம இலங்கையில் சுத்தமான இனமுங்கோ

மொட்டாக்க பார்த்தாலேதெரியுதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

இதில் ஒரு விசயம் க்வனிக்க ..கூடுதல் செய்திகளில்..என்ன இனம் பெயர் வெளியிடப்படவில்லை...நாம இலங்கையில் சுத்தமான இனமுங்கோ

முஸ்லீம் இனம் என்றால்…. தமது செய்தித் தளங்களில் பெயரை வெளியிட மாட்டார்கள்.
தமிழர் என்றால்…. அக்கு வேறு, ஆணி வேறாக “பிரேக்கிங் நியூஸ்” போட்டு, பிரித்து மேய்ந்து விடுவார்கள்.
போதாக் குறைக்கு… “யூ ரியூப்” காரரும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டு விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஒன்றாக இருந்திருக்கிறார்கள் பயணிக்கிறார்கள் .இங்கே தான் சந்தேகமாக உள்ளது.

ஹிஜாப்பால்  மூடி இருப்பதை பார்த்தனீர்கள் தானே ஹிஜாப் போட்டிருப்பவர்கள் மீது சந்தேகபடமுடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை  மாணவி கண்டுபிடிப்பு!

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!

கண்டி – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கடத்தப்பட்ட மாணவியும், சந்தேக நபரும்... நேற்று அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1416286

@ஈழப்பிரியன், @நிலாமதி, @alvayan

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்

கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்.

கம்பளை, தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரும் மாணவியும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்ததோடு, ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தெரிவித்தார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்

https://athavannews.com/2025/1416298

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆதவன் அவைக்கு  நோகாமல் ஊசி போடுவதில் கில்லாடிசார்

12 hours ago, தமிழ் சிறி said:

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை  மாணவி கண்டுபிடிப்பு!

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!

கண்டி – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கடத்தப்பட்ட மாணவியும், சந்தேக நபரும்... நேற்று அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1416286

@ஈழப்பிரியன், @நிலாமதி, @alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி கடத்தல் - வௌியான புதிய தகவல்

மாணவி கடத்தல் - வௌியான புதிய தகவல்

தவுலகலவில் 5 மில்லியன் ரூபா கப்பம் கோரி பாடசாலை மாணவி ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி காஞ்சனா கொடிதுவக்கு உத்தரவிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் இன்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரையும் நாளை (15) வரை தடுப்புகாவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாணவியை அவரது தந்தையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் இன்று அதிகாலை கம்பளை, ஜயமாலபுர பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான மொஹமட் நசீர் என்பவர், அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அதே நேரத்தில் வேனின் சாரதியான  மொஹமட் அன்வர் சதாம் என்பவர் கம்பளை கஹடபிட்டிய பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடத்தப்பட்ட 18 வயதான மாணவி, பிரதான சந்தேகநபரின்  தாயின் சகோதரனின் மகள் ஆவார்.

மாணவியை கடத்தப் பயன்படுத்தப்பட்ட வேன் கம்பளை, கஹடபிட்டிய பகுதியில் உள்ள வாடகை வாகன இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கடத்தல் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தவுடன், அதன் பதில் பொறுப்பதிகாரியாக சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர், மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மூலம் வேனின் உரிமையாளரை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம், வேன் பொலன்னறுவை பகுதியில் இருப்பது அடையாளம் காணப்பட்டதுடன், பொலன்னறுவை பொலிஸாருக்கு தகவல் அளித்த பின்னர், வாகனம் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டது.

அதற்குள், இந்த வேனில் சென்ற பிரதான சந்தேகநபரும் மாணவியும் பேருந்தில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்குச் சென்றுள்ளதுடன், அதே நேரத்தில் அவர்களுக்கு உதவிய இரண்டு உதவியாளர்களும் கம்பளை பகுதிக்குத் திரும்பிவிட்டனர்.

பிரதான சந்தேகநபர், மாணவியின் தந்தையிடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா கப்பம் மற்றும் ஒரு வேனை கோரும் ஒலிப்பதிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் வேலை செய்து நாடு திரும்பியுள்ள பிரதான சந்தேகநபர், அந்த இளம் பெண்ணுக்காக பணம் செலவழித்து, வீட்டைக் கட்டியுள்ளதுடன், அவரது தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ள தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த தகவல் உண்மையா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

பொலன்னறுவை பொலிஸாரின் பொறுப்பிலிருந்த வேனும் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபருடன் குறித்த மாணவி, அம்பாறை மற்றும் கல்குடா பகுதிகளில் உள்ள விடுதிகளில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும், தான் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்று மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும், இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198776

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அதற்குள், இந்த வேனில் சென்ற பிரதான சந்தேகநபரும் மாணவியும் பேருந்தில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்குச் சென்றுள்ளதுடன், அதே நேரத்தில் அவர்களுக்கு உதவிய இரண்டு உதவியாளர்களும் கம்பளை பகுதிக்குத் திரும்பிவிட்டனர்.

ஜப்பானில் வேலை செய்து நாடு திரும்பியுள்ள பிரதான சந்தேகநபர், அந்த இளம் பெண்ணுக்காக பணம் செலவழித்து, வீட்டைக் கட்டியுள்ளதுடன், அவரது தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ள தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 

பிரதான சந்தேகநபருடன் குறித்த மாணவி, அம்பாறை மற்றும் கல்குடா பகுதிகளில் உள்ள விடுதிகளில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும், தான் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்று மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும், இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198776

இவையின் கலியாண வயதுக்கு மாணவியின் வயது சரி...மகளுக்கும் செலவு செய்து..தகப்பனுக்கும் செலவு செய்திருக்கிறார்... பஸ்சிலை சந்தோசமாகப் போயிருக்கினம் .இரண்டு நாள் வெவ்வேற கோட்டலில் தங்கியிருக்கினம்... ஒன்றுமாகவில்லை.. நாம இலங்கையில் பத்தரைமாத்து தங்கமான இனமுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

நடுவீதியில் கடத்தப்பட்ட மாணவி! தாய் வெளியிட்டுள்ள பல தகவல்கள்.

கம்பளை - தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தாயார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி தன்னுடைய சகோதரரின் மகள் என்றும், தனது மகனை சகோதரருடைய குடும்பத்தார் ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயார் வெளியிட்ட தகவல்கள் 

கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றையதினம்(14) கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரையும், வானின் சாரதியையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தநிலையில், கடத்தப்பட்ட மாணவியின் தந்தை நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தெரிவிக்கும்போது, “தனது சகோதரியின் மகன், தன்னுடைய மகளை கடத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியதாக” தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்றையதினம் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்ட மாணவி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரதான சந்தேகநபரின் தாயார், மாணவியின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

அத்துடன், தன்னுடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்து கிட்டத்தட்ட 32 இலட்சம் ரூபா பணத்தினை தன்னுடைய சகோதரனுக்கு வழங்கியதாகவும், இந்த பணத்தினைக் கொண்டு வாகனங்கள் வாங்கியதுடன், தனது சொந்த தேவைகள் அனைத்தையும் தனது சகோதரர் பூர்த்தி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சகோதரனுடைய மகளுக்கும், தன்னுடைய மகனுக்கும் திருமணம் செய்வதாக குடும்பத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்த நிலையில், பெருந்தொகையான பணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் தன்னுடை மகனை தனது சகோதரன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அந்த தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கடத்திச் செல்லப்படும் போது, தனது தந்தை மீது தவறில்லை என்றால், அந்த மாணவி அம்பாறை வரை செல்லாமல் இடையிலேயே கத்தி, கூச்சலிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம் .

தனது தகப்பன் மீதிருந்த தவறை உணர்ந்ததனாலேயே மாணவி அமைதியாகச் சென்றதாகவும் குறித்த தாயார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.     

https://tamilwin.com/article/schoolgirl-kidnapped-in-kandy-1736939983

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/shorts/QV40WKPLmRQ

கடத்தலை தடுக்க முயலும் காணொளி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.