Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

காங்கிரஸ்சுக்கு இருந்த அமோக மக்கள் ஆதரவு.

காந்தி, நேரு எல்லாரும் பிராமாண சமூகத்தவரே.

மன்னிக்கவும். தரவுப்பிழை.

காந்தி வைசிகர். பிராமணர் அல்ல.

ஆனால் மோடி போல பிராமண அடிவருடி.

நேரு கஸ்மீரி பண்டிட்.

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

மன்னிக்கவும். தரவுப்பிழை.

காந்தி வைசிகர். பிராமணர் அல்ல.

ஆனால் மோடி போல பிராமண அடிவருடி.

நேரு கஸ்மீரி பண்டிட்.

ஏன் கன்பீசன் எப்போ? @Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏன் கன்பீசன் எப்போ? @Eppothum Thamizhan

பண்டிற்றும் பிராமணரும் ஒன்றா என்ற confusionதான்  !! pandits மாமிசம் சாப்பிடுவார்களாமே!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

பண்டிற்றும் பிராமணரும் 

முதலாவதில்- அரசுசெய்து வேற்று இனங்களையும் அடக்கிப் பிறர் பெயரைத் தனதாக்கி வாழும் கலையில் நேரு இருக்கிறார்.

மற்றதில்- உழுதுண்டு வாழாது ஆண்டவனைக் காட்டுகிறோம் என்று வாழும் கலையில் பரம்பரையாகப் பலர் உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பண்டிற்றும் பிராமணரும் ஒன்றா என்ற confusionதான்  !! pandits மாமிசம் சாப்பிடுவார்களாமே!

ஒன்றுதான். சில வங்க/ஒரிசா பிராமணர் மீனும் சாப்பிடுவர்.

The Kashmiri Pandits (also known as Kashmiri Brahmins)[7] are a group of Kashmiri Hindus and a part of the larger Saraswat Brahmin community of India. They belong to the Pancha Gauda Brahmingroup[8] from the Kashmir Valley,[9][10]located within the Indian union territory of Jammu and Kashmir.
 
👆விக்கி சார் சொல்றார்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

நான் சொல்லுவது இணையத்தளத்தில் பதிவேற்றுவது பற்றியது( digitization). அப்போது எல்லோரும் நேரடியாக வாசித்து பெரியார் பற்றி அறிந்துகொள்ளலாம். இப்படி புடுங்குப்படத்தேவை இல்லையே. பெரியார் இப்படித்தான் சொன்னார் அது இந்த இதழில் வந்திருக்கிறது என்றுவிட்டு எம்வேலையை பார்க்கலாம்.

copyright இற்கும்  digitization இற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது. இதுக்குள்ள நக்கல் வேற. 

பெரியாரின் வெளியீடுகள்  digitization செய்யாமல் எப்படி பிபிசி சீமானின் அவதூறுக்கு எதிராக ஒரிஜினல் பத்திரிகையை வெளியிட்டது? அந்தத் திரியில், கிருபன் பகிர்ந்த பெரியாரின் வெளியீடுகளுக்கான இணைப்புகளையும் நீங்கள் பார்க்கவில்லையென ஊகிக்கிறேன்.

ஒரு சாக்கடை அரசியல் வாதி 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, தவறு என நிரூபிக்கப் பட்ட ஒரு அவதூறை மீண்டும் பரப்புவார். உங்கள் போன்ற ஆதரவாளர்கள் அதை நம்புவீர்கள். ஆதாரம் கேட்டால், "கேட்பவன் தான் பெரியார் எழுத்துக்களை digitization செய்து உங்களுக்கு வாயில் உரித்த வாழைப்பழம் போல ஊட்டி விட" வேண்டுமென்பீர்கள்😂.

அப்ப சீமான் ஆதரவாளர்களெல்லாம் ஆதாரங்களை எப்படித் தேடுவது என்று தெரியாத மொக்கனுகள் என்கிறீர்களா? சென்னையில் எங்கே நூலகம் இருக்கிறதென்று கூடத் தெரியாத சிறுவர்களா?

உங்கள் போன்றோரை, digitization மட்டுமல்ல, பெரியார் எழுத்துக்களை quantamization (?)  செய்தால் கூட மாற்ற முடியாது! எதைத் தந்தாலும் பார்க்கிற மூளையை மாற்றா விட்டால் எதுவும் மாறாது!   

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

உங்களைப்போன்ற அரைவேற்காடுகளுக்கு ஆதாரத்தை காட்டினால்தானே விளங்குது! அதனால்தான் கேட்டேன் விடுதலை பத்திரிகையின் PDF   எங்கே தரவிறக்க முடியும் என்று சொல்லுங்கள் பெரியார் பற்றி விளாவாரியாக சொல்கிறேன்.

முடிந்தால் செவ்வியனுக்கு சொன்ன புத்தகத்தை வாசித்துப்பாருங்கள் அப்போ விளங்கும் பெரியாரின் லீலைகள்.

மூளையை பற்றி எல்லாம் நீங்கள் பேசக்கூடாது என்று முதலே சொன்னேன். பின்னர் உங்கள் ஆரம்பகால படிப்புகளையும் நோண்ட வேண்டியிருக்கும். மட்டுக்களுக்குத்தான் வீண் வேலை!!

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Eppothum Thamizhan said:

ஆதாரத்தைப் பார்க்காமல் விளங்கிக் கொள்ள நான் "மூளையில் chip பதித்த படி திரியும்" சீமானின் சூப்பர்மேன் தம்பியல்லவே😎! நீங்களே தேடிப் பாருங்கள்! உங்கள் பாசையில் சொன்னால் நீங்களே ஒரு சாக்கடை அரசியல் வாதிக்கு செம்பு தூக்கியபடி  உங்களுக்கு சேவை செய்ய இன்னொருவரைத் தேடுவது ரூ மச்😂!

செவ்வியனுக்கு எழுதிய பரிந்துரைப்பைப் பார்த்தேன். எங்கேயோ யாரோ பெரியார் எதிர்ப்பாளர் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் எனப் புரிந்தது, நீங்களாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறதாவது?

உங்களைப் போல  அதிகம் படிப்பில்லாத ஒருவர் நோண்டுமளவுக்காவது  மிருக வைத்தியம் நான் படித்திருக்கிறேன் அல்லவா? எனவே மூளையைப் பற்றிப் பேசலாம். சீமான் ஆதரவாளர்கள் மூளையைக் கழட்டி வைத்து விட்டு பின் தொடர்வதால் மூளை பற்றிப் பேசுவது trigger ஆக இருக்கிறது போல😂!

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2025 at 18:22, Justin said:

ஆதாரத்தைப் பார்க்காமல் விளங்கிக் கொள்ள நான் "மூளையில் chip பதித்த படி திரியும்" சீமானின் சூப்பர்மேன் தம்பியல்லவே😎! நீங்களே தேடிப் பாருங்கள்! உங்கள் பாசையில் சொன்னால் நீங்களே ஒரு சாக்கடை அரசியல் வாதிக்கு செம்பு தூக்கியபடி  உங்களுக்கு சேவை செய்ய இன்னொருவரைத் தேடுவது ரூ மச்😂!

ஆதாரம் இல்லையென்றால் மூடிக்கொண்டு கப்சிப்பென்று இருக்கவேண்டும்? இருக்கா இங்கே  போய் தேடிப்பாருங்களென்றாவது  சொல்லவேண்டும்?  அதைவிட்டிட்டு கதை அளக்கக்கூடாது!

செவ்வியனுக்கு எழுதிய பரிந்துரைப்பைப் பார்த்தேன். எங்கேயோ யாரோ பெரியார் எதிர்ப்பாளர் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் எனப் புரிந்தது, நீங்களாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறதாவது?

இதைத்தான் அரைவேற்காட்டுத்தனம் என்றுசொல்வது. எழுதியவர் பெரியாரின் நண்பர். பெரியார் இருந்த காலத்திலேயே அவரின் அனுமதியுடன் எழுதப்பட்ட புத்தகம் அது.

உங்களைப் போல  அதிகம் படிப்பில்லாத ஒருவர் நோண்டுமளவுக்காவது  மிருக வைத்தியம் நான் படித்திருக்கிறேன் அல்லவா? எனவே மூளையைப் பற்றிப் பேசலாம். சீமான் ஆதரவாளர்கள் மூளையைக் கழட்டி வைத்து விட்டு பின் தொடர்வதால் மூளை பற்றிப் பேசுவது trigger ஆக இருக்கிறது போல😂!

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படிக்க வேண்டுமாயின் எத்தனை வெட்டுப்புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றாவது தெரியுமா?

அதுசரி நீங்கள்தான் அறிவுஜீவி ஆயிற்றே, சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதன் கருத்தை ஒருக்கால் சொல்லுங்களேன். அதன்பிறகு பெரியாரின் லீலைகளை தொடர்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Eppothum Thamizhan said:

ஆதாரம் இல்லையென்றால் மூடிக்கொண்டு கப்சிப்பென்று இருக்கவேண்டும்? இருக்கா இங்கே  போய் தேடிப்பாருங்களென்றாவது  சொல்லவேண்டும்?  அதைவிட்டிட்டு கதை அளக்கக்கூடாது!

நீங்கள் தானே "பெரியார் இது சொன்னார், அது சொன்னார்" என்று துணுக்குகளை வைத்து உரையாடினீர்கள்?  துணுக்குகளை  முழுவசனத்தில் context ஓடு வாசியுங்கள் என்றேன். நூலகத்தில் கூட பெரியாரின் நூல்கள் இல்லை என்கிறீர்கள்😂. இணையத்தில் துணுக்குத் தான் இருக்கிறது, எனவே என்னைக் கேட்கிறீர்கள்.

நீங்கள் ஒரு விடயத்தைப் பிரேரித்தால், அதை நீங்கள் தான் ஆதாரமாகத் தேட வேண்டுமென்பது கூடத் தெரியாமல் மொரட்டுவையில் என்ன படித்தீர்கள்? இந்த விஞ்ஞான முறைமையின் அடிப்படை கூட இல்லாமல் தான் சில இடங்களில் உங்கள் உரையாடல் என்னுடைய மிருக வைத்தியப் படிப்பை இளக்காரமாகப் பதிவிடுவதில் வந்து நின்றிருக்கிறது. 

21 hours ago, Eppothum Thamizhan said:

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படிக்க வேண்டுமாயின் எத்தனை வெட்டுப்புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றாவது தெரியுமா?

 மொரட்டுவை வெட்டுப் புள்ளி போலவே மிருக வைத்தியத்திற்கும் வெட்டுப் புள்ளி இருக்கிறது என்று தெரியாத அறிவலட்சியம் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் பெரியார் உட்பட எதைப் பற்றியும் ஆழ வாசிக்காத ஒரு பொறியியலாளர். நான் கிடைப்பவற்றையெல்லாம் வாசித்து விட்டுக் கடந்து போகிற மிருகவைத்தியர். இதில நான் உங்களுக்கு "கீழே"😂 என்கிறீர்களா?

21 hours ago, Eppothum Thamizhan said:

அதுசரி நீங்கள்தான் அறிவுஜீவி ஆயிற்றே, சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதன் கருத்தை ஒருக்கால் சொல்லுங்களேன். அதன்பிறகு பெரியாரின் லீலைகளை தொடர்கிறேன்.

பெரியார் லீலைகளைத் தொடருங்கள், ஆனால்  ஆதாரங்களைத் தாருங்கள். இணையக் குப்பையில், யூ ரியூப் பின்னூட்டங்களில இருந்து வெட்டி ஒட்டாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 17:18, Justin said:

நீங்கள் தானே "பெரியார் இது சொன்னார், அது சொன்னார்" என்று துணுக்குகளை வைத்து உரையாடினீர்கள்?  துணுக்குகளை  முழுவசனத்தில் context ஓடு வாசியுங்கள் என்றேன். நூலகத்தில் கூட பெரியாரின் நூல்கள் இல்லை என்கிறீர்கள்😂. இணையத்தில் துணுக்குத் தான் இருக்கிறது, எனவே என்னைக் கேட்கிறீர்கள்.

நூலகத்தில் சென்று பாருங்கள். விடுதலை பத்திரிக்கை எத்தனையாம் ஆண்டிலிருந்து இருக்கிறது என்று. 

நீங்கள் ஒரு விடயத்தைப் பிரேரித்தால், அதை நீங்கள் தான் ஆதாரமாகத் தேட வேண்டுமென்பது கூடத் தெரியாமல் மொரட்டுவையில் என்ன படித்தீர்கள்? இந்த விஞ்ஞான முறைமையின் அடிப்படை கூட இல்லாமல் தான் சில இடங்களில் உங்கள் உரையாடல் என்னுடைய மிருக வைத்தியப் படிப்பை இளக்காரமாகப் பதிவிடுவதில் வந்து நின்றிருக்கிறது.

 நான் சொன்னது எந்த புத்தகத்தில் வந்தது என்று செவ்விந்தியனுக்கு சொல்லியிருந்தேன். எனது விவாதமும் அவருடன்தான் இருந்தது. குறுக்கே நீங்கள் வந்துவிட்டு எனது மூளையை பற்றி பேசினீர்கள். அதனால்தான் படிப்பை பற்றி எழுதவேண்டிவந்தது! 

 மொரட்டுவை வெட்டுப் புள்ளி போலவே மிருக வைத்தியத்திற்கும் வெட்டுப் புள்ளி இருக்கிறது என்று தெரியாத அறிவலட்சியம் உங்களிடம் இருக்கிறது.

கவுண்டர் செந்திலின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. நான் ஆறாம் கிளாஸ் பாஸ் நீ SSLC பெயில் என்பதுபோல இருக்கிறது உங்கள் கதை!

நீங்கள் பெரியார் உட்பட எதைப் பற்றியும் ஆழ வாசிக்காத ஒரு பொறியியலாளர். நான் கிடைப்பவற்றையெல்லாம் வாசித்து விட்டுக் கடந்து போகிற மிருகவைத்தியர். இதில நான் உங்களுக்கு "கீழே"😂 என்கிறீர்களா?

நான் உங்களுக்கு மேல் என்று எங்கும் சொல்லவில்லையே! எல்லா திரிகளிலும் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவது நீங்கள் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததுதானே. பெரியார் பற்றி பெரியார் காலத்திலேயே எழுதப்பட்ட நூல்களை சொல்லுங்கள் நானும் வாசித்து அறிந்துகொள்கிறேன்!

பெரியார் லீலைகளைத் தொடருங்கள், ஆனால்  ஆதாரங்களைத் தாருங்கள். இணையக் குப்பையில், யூ ரியூப் பின்னூட்டங்களில இருந்து வெட்டி ஒட்டாதீர்கள். 

சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்னவென்று சொல்லவே இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 11:13, Eppothum Thamizhan said:

எனக்கு விடுதலை பத்திரிகையைத் தேட வேண்டிய அவசியம் ஏன்😂? பெரியார் பற்றிய நான் வாசித்து ஒரு 30 வருடங்கள் இருக்கும். எல்லாமே யாழ் நூலகத்தின் 3 கிளைகளில் இருந்தன, பெரும்பாலானவை நல்லூர் கிளையில் இருந்தன. இதற்கேன் விடுதலை பத்திரிகை தேவை?

நீங்கள் - கூகிள் தேடலில் வரும் துணுக்களில் தொங்கிக் கொண்டிருப்பதால் நீங்கள் தேடத்  தான் வேணும். "எங்கேயும் விடுதலை பத்திரிகை இல்லை, எனவே துணுக்கைத் தான் நான் நம்புவேன்!" என்றால் அது உங்கள் இஷ்டம்.

இந்த அறிவலட்சியமே உங்கள் தொடர் இயல்பாக வைத்துக் கொண்டு   "நான் SSLC பாஸ் தெரியுமா? என் அஞ்சாம் ஆண்டு ஸ்கொலர்ஷிப் வெட்டுப் புள்ளி தெரியுமா? என்று உங்களை மேலும் மேலும் அரிவரி லெவலுக்குக் கொண்டு போனாலும் பரவாயில்லை😎 ! வாசகர்கள் உங்கள் தரத்தையும், அறிவையும் மதிப்பிட்டுக் கொள்ள அது உதவலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

மற்றவர்களின் கருத்துக்களை மட்டம்தட்டி எழுதும்போது அறிவு, மூளை போன்ற சொற்களை பயன்படுத்தமுன் அது உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதையும் நினைவில் கொண்டால் நல்லது! இல்லையா எதிர்வினையும் இப்படித்தான் வரும்!!

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2025 at 02:28, goshan_che said:

இதன் பொருள் - இந்தியா வை வெள்ளைகாரரிடம் இருந்து (பிராமணிய) கொள்ளைகாரர்கள் கைப்பற்ற போகிறார்கள் என்ற சரியான எதிர்வுகூறல்.

இன்று வரைக்கும் தமிழர்களாகிய நமக்கு இந்திய, இலங்க சுந்தந்திர நாட்கள் கரி நாட்களாகத்தானே அமைந்து விட்டன?

இதே காரணதுக்காக (பெரியார் திராவிடர் உரிமை, அம்மேத்கர் தலித் உரிமை) அம்பேத்கர் இலண்டன் வட்டமேசை மாநாடு வரை வந்து சுதந்திரத்தை கேள்வி கேட்டுள்ளார்.

இந்திய சுதந்திரம் பல இனவழி தேசிய இனங்களுக்கு அடிமை சாசனம்.

ஆகவேதான் அது ஒரு கரி நாள். இன்றும்.

சரியாக சொன்னீர்கள். 

இந்தியா என்ற நாடு அமைந்து இருக்காவிட்டால் இன்று தமிழனுக்கு இரண்டு நாடுகள் இருந்து இருக்கும்.  

உண்மையை நேரடியாக சொன்னால் இந்தியா சுதந்திரம் அடந்த நாள்த் தான் கரி நாள். இதை பெரியார் சொன்னார் என்று சொல்லி அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் @Eppothum Thamizhan யார்? தமிழரா அல்லது இந்திய தேசியதுக்கு குடை பிடிப்பவரா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2025 at 03:11, goshan_che said:

ஆனால் தென்னிந்திய மக்களும், அவர்களுக்குள் இருந்த தமிழ் மக்களும் இதற்கு தயாராக இருக்கவில்லை.

இன்றும் இல்லை.

காந்தி நேருவின் இந்திய சுதந்திர மாயையில் சிக்கி இருந்தார்கள்.

இதனால் ஏற்பட்ட கடுப்பில்தான் பெரியார் கரிநாள் என அறிவித்தார் என நினைக்கிறேன்.

வாய்ப்பே இல்லை.

ஹைதரபாத் நவாப் தனி நாடு பிரகடனம் பண்ணி, இந்திய படைகள் அவரை போரில் தோற்கடித்தன.

இதே போல் மேலும் சில ராஜ்ஜியங்களும் மிரட்டப்பட்டு வலபாய் பட்டேலால் வழிக்கு கொண்டு வரப்பட்டன.

பாகிஸ்தானை சாட்டி காஸ்மீர், அதேபோல் மிரட்டி பணியவைக்கப்பட்ட சிக்கிம்.

மெடிராஸ் மாகாணத்தில் தனிநாடு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருப்பின் அன்றி அன்றைய இந்தியாவில் இது சாத்திய பட்டிராது.

ஆனால் பெரியாரால் கூட மக்களை இதற்கு திரட்ட முடியவில்லை.

இந்திய தேசியவாதம் அவ்வளவு வலுவாக இருந்தது, இன்னும் இருக்கிறது.

இன்றைய இந்தியாவில் சாத்தியமே இல்லை.

எங்கோ ஒரு இடத்தில் வாசித்ததாக ஞாபகம்.

அதாவது பெரியார் ஜின்னாவுக்கு கடித்தம் எழுதியதாக. பாகிஸ்தான் போல் திராவிடஸ்த்தானும் பிரிய உதவ வேண்டும் என.  கண்டறிந்தால் சொல்கின்றேன் 

ஆனால் ஒன்று,அன்றைய திராவிடர் கழகம், பெரியார், நீதிக் கட்சி போன்றவை பிரிட்டிஷ் உதவியுடன் தனி நாடாக போக விரும்பின அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் தொடர விரும்பின. 

இன்னோரு தகவல் விக்கிலீக்ஸ் மூலம் வெளியில் கசிந்தது. இந்திரா காந்தி அவசர நிலையை பிறப்பித்த பொழுது, கலைஞர் முதலமைச்சர் ஆக இருந்த பொழுது தன்னுடைய மந்திரி ராஜராமை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி தமிழ் நாட்டை தனி நாடாக்கும் யோசனை பற்றி முழுமையாக காட்டிகொள்ளாமல் வினவியதாகவும் அதற்கு அமெரிக்கா சம்மதம்( ஆசிர்வாதம் ) தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தகவல் கசிந்தது. 

தகவலுக்கு இதை வாசிக்கவும் 

https://thecommunemag.com/wikileaks-dmk-minister-had-asked-if-us-would-help-tn-secede-from-india-during-indiras-emergency/

நிலைமை இப்படி இருக்க, பட்டினியில் இருக்கும் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க கஷ்டப்பட்ட தாயானவளின் நிற்கதி நிலையை அறியாமல் அவளை தூற்றும் நன்றியற்ற பிள்ளைகள் போல் நாமும் தமிழ் நாட்டின்  அன்றைய தலைவர்களை போகின்ற போக்கில் இகழ்ந்து பேசி வருகின்றோம். 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பகிடி said:

இந்தியா என்ற நாடு அமைந்து இருக்காவிட்டால் இன்று தமிழனுக்கு இரண்டு நாடுகள் இருந்து இருக்கும்.  

பிரிட்டிஸ்காரன் போனபோது இலங்கையில் ஒரேநாட்டிற்குள் வாழ்வோம் என்றது எமது தமிழ் அரசியல் வியாதிகள். ஜின்னா போல நாங்களும் தனிநாடு கேட்டிருக்கலாமே! இதற்குள் ஏன் இந்தியாவை இழுக்கிறீர்கள். 

உண்மையை நேரடியாக சொன்னால் இந்தியா சுதந்திரம் அடந்த நாள்த் தான் கரி நாள். இதை பெரியார் சொன்னார் என்று சொல்லி அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் @Eppothum Thamizhan யார்? தமிழரா அல்லது இந்திய தேசியதுக்கு குடை பிடிப்பவரா? 

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எத்தனையோ தமிழர்களும் பங்குபற்றினர். அப்படி போராடி கிடைத்த சுதந்திரத்தை ஒருவர் மட்டும் கரிநாள் என்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன? பார்ப்பனர் ஆள்வதைவிட , அந்நியனிடம் அடிமையாக இருக்கலாம் என்பதா? சரி தமிழ்நாடுதான் பெரியாரின் மண் ஆயிற்றே, பிரிட்டிஸ்காரர் போனபின் படைதிரட்டி தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? அதுவுமில்லை! வெட்டிப்பேச்சு மட்டுமே!!

இந்திய தேசியமா? நான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கிரிக்கெட் மேட்ச்  நடந்தாலே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுறவனாக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பகிடி said:

எங்கோ ஒரு இடத்தில் வாசித்ததாக ஞாபகம்.

அதாவது பெரியார் ஜின்னாவுக்கு கடித்தம் எழுதியதாக. பாகிஸ்தான் போல் திராவிடஸ்த்தானும் பிரிய உதவ வேண்டும் என.  கண்டறிந்தால் சொல்கின்றேன் 

ஆனால் ஒன்று,அன்றைய திராவிடர் கழகம், பெரியார், நீதிக் கட்சி போன்றவை பிரிட்டிஷ் உதவியுடன் தனி நாடாக போக விரும்பின அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் தொடர விரும்பின. 

இன்னோரு தகவல் விக்கிலீக்ஸ் மூலம் வெளியில் கசிந்தது. இந்திரா காந்தி அவசர நிலையை பிறப்பித்த பொழுது, கலைஞர் முதலமைச்சர் ஆக இருந்த பொழுது தன்னுடைய மந்திரி ராஜராமை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி தமிழ் நாட்டை தனி நாடாக்கும் யோசனை பற்றி முழுமையாக காட்டிகொள்ளாமல் வினவியதாகவும் அதற்கு அமெரிக்கா சம்மதம்( ஆசிர்வாதம் ) தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தகவல் கசிந்தது. 

தகவலுக்கு இதை வாசிக்கவும் 

https://thecommunemag.com/wikileaks-dmk-minister-had-asked-if-us-would-help-tn-secede-from-india-during-indiras-emergency/

நிலைமை இப்படி இருக்க பட்டினியில் இருக்கும் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க கஷ்டப்பட்ட தாயானவள் இருந்த நிற்கதி நிலையை அறியாமல் அவளை தூற்றும் நன்றியற்ற பிள்ளைகள் போல் நாமும் தமிழ் நாட்டின்  அன்றைய தலைவர்களை போகின்ற போக்கில் இகழ்ந்து பேசி வருகின்றோம். 

தகவல்களுக்கு நன்றி.

சமாதான காலத்தில், பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டியில் சொன்னதை என் மனதில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

அது இதுதான்.

30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம்.

திராவிட நாடு கோரிக்கை கைவிடலை, சொந்த நாட்டு விடுதலை போரில் பங்கெடாமல் ஓடி வந்த நாம் பரிகாசிப்பது ஒரு முரண்நகை என்பதற்கும் அப்பால்….

அதன் பின்னால் உள்ள சிக்கலான அரசியலையும், அந்த கைவிடலை ஏற்று கொண்ட மக்களையும் black or white பார்வையுடய நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம்.

வழிமொழிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எத்தனையோ தமிழர்களும் பங்குபற்றினர். அப்படி போராடி கிடைத்த சுதந்திரத்தை ஒருவர் மட்டும் கரிநாள் என்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன? பார்ப்பனர் ஆள்வதைவிட , அந்நியனிடம் அடிமையாக இருக்கலாம் என்பதா?

தமிழர்கள் அப்படி போராடியது தவறு தான் சட்டிக்குப் பயந்து நெருப்புக்குள் விழுந்த நிலை அது . இன்னும் 50 ஆண்டுகள் பிரிட்டிஷ் தமிழ் நாட்டை மட்டும் ஆண்டு இருந்தால் இன்று நிலை வேறு.ஈவேரா அப்படித்தான் சிந்தித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழநாட்டுக்கு மூச்சு விடக் கிடைத்த காலத்தில் தான் இன்றைய தமிழநாட்டின் வளர்ச்சிக்கான அடிகல் நாட்டப்பட்டது, அப்படி என்றால் அந்த ஆட்சி இன்னும் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் சிந்தித்ததில் என்ன தவறு? 

இலங்கை சுதந்திரம் பெற எத்தனையோ தமிழர் போராடினர். ஆனால் எங்களுக்கு இப்போதும் அது கரி நாள்த் தான். அதே மன நிலை தான் ஈவேரா வுக்கும் 

1 hour ago, Eppothum Thamizhan said:

சரி தமிழ்நாடுதான் பெரியாரின் மண் ஆயிற்றே, பிரிட்டிஸ்காரர் போனபின் படைதிரட்டி தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? அதுவுமில்லை! வெட்டிப்பேச்சு மட்டுமே!!

உங்களைப் போன்ற மனிதர்கள் அன்றும் இருந்து இருப்பார்கள். அவர்களை வைத்து எப்படி படை கட்டுவது? 

சண்டைக்கு அன்றைய தமிழ் நாடு தயாராக இல்லை.80%  மக்களுக்கு ஒரு வேளை உணவில்லாத காலம், முதலாம் இரண்டாம் உலக யுத்தக் காலம், தமிழர்கள் உலகம் முழுதும் அடிமைகளாக விற்கப்பட்ட காலம். ஒரு நல்ல தலைவன் இந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பானே தவிர படை கட்டி இனத்தை அழிக்க மாட்டான் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Eppothum Thamizhan said:

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எத்தனையோ தமிழர்களும் பங்குபற்றினர். அப்படி போராடி கிடைத்த சுதந்திரத்தை ஒருவர் மட்டும் கரிநாள் என்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன? பார்ப்பனர் ஆள்வதைவிட , அந்நியனிடம் அடிமையாக இருக்கலாம் என்பதா? சரி தமிழ்நாடுதான் பெரியாரின் மண் ஆயிற்றே, பிரிட்டிஸ்காரர் போனபின் படைதிரட்டி தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? அதுவுமில்லை! வெட்டிப்பேச்சு மட்டுமே!!

இந்திய தேசியமா? நான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கிரிக்கெட் மேட்ச்  நடந்தாலே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுறவனாக்கும்!!

இலங்கை சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்களித்தனர், அப்படி போராடி பெற்ற சுதந்திர நாளில் இவ்வாரத்தில் தமிழர் பகுதியில் கரிநாள் என போராடியதேன்? இங்கு என்ன காரணமோ அதற்கு ஒப்பான காரணத்திற்காக தான் பெரியாரும் எதிர்த்தார். தமிழனின் குடுமி ஆங்கிலேயரிடமிருந்து வடநாட்டவருக்கு கைமாறுகிறது, குடுமி விடுபடவில்லை.

அதே போல் பெரியார் தனிநாடுக்கு கடைசி வரை குரல்கொடுத்தார் ஆனால் அதற்கு ஆதரவு பெருமளவு இல்லை. தனிநாடு கோரிக்கையை கைவிட்ட திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

அதாவது பெரியார் ஜின்னாவுக்கு கடித்தம் எழுதியதாக. பாகிஸ்தான் போல் திராவிடஸ்த்தானும் பிரிய உதவ வேண்டும் என.  கண்டறிந்தால் சொல்கின்றேன் 

இதோ அந்தத் தகவல் 

https://www.bbc.com/tamil/india-43341786

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

மற்றவர்களின் கருத்துக்களை மட்டம்தட்டி எழுதும்போது அறிவு, மூளை போன்ற சொற்களை பயன்படுத்தமுன் அது உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதையும் நினைவில் கொண்டால் நல்லது! இல்லையா எதிர்வினையும் இப்படித்தான் வரும்!!

மட்டம் தட்டப் பட வேண்டிய கருத்துகள் மட்டந் தட்டப் படும்! முட்டாள் தனமான கருத்துகளை (கூகிளில் இருந்து உருவிய துணுக்குகளில் இருந்து பெரியாரைப் படிக்கும் உங்கள் கருத்துகள் சிறந்த உதாரணங்கள்!)  முன் வைக்கும் கருத்தாளர்களும் மட்டந் தட்டப் படுவர்! இதில் எந்த மாற்றமும் நான் செய்யப் போவதில்லை! நீங்கள் அஞ்சாம் ஆண்டு ஸ்கொலர்ஷிப் வெட்டுப் புள்ளியோடு வந்தாலும் கூட😎

7 hours ago, Eppothum Thamizhan said:

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எத்தனையோ தமிழர்களும் பங்குபற்றினர். அப்படி போராடி கிடைத்த சுதந்திரத்தை ஒருவர் மட்டும் கரிநாள் என்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன? பார்ப்பனர் ஆள்வதைவிட , அந்நியனிடம் அடிமையாக இருக்கலாம் என்பதா? சரி தமிழ்நாடுதான் பெரியாரின் மண் ஆயிற்றே, பிரிட்டிஸ்காரர் போனபின் படைதிரட்டி தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? அதுவுமில்லை! வெட்டிப்பேச்சு மட்டுமே!!

இந்திய தேசியமா? நான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கிரிக்கெட் மேட்ச்  நடந்தாலே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுறவனாக்கும்!!

இலங்கையிலும் சிங்களவரிடம் கொடுக்காமல் தமிழர் பகுதிகளை பிரிட்டிஷார் ஆண்டிருக்கலாம், நன்றாக இருந்திருக்கும். கல்வி, தொழில்துறைகள், உள்கட்டுமானம் என்பன இன்னும் அபிவிருத்தியாகி இருக்கும். இதை மறுக்க மாட்டீர்களென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

மட்டம் தட்டப் பட வேண்டிய கருத்துகள் மட்டந் தட்டப் படும்! முட்டாள் தனமான கருத்துகளை (கூகிளில் இருந்து உருவிய துணுக்குகளில் இருந்து பெரியாரைப் படிக்கும் உங்கள் கருத்துகள் சிறந்த உதாரணங்கள்!)  முன் வைக்கும் கருத்தாளர்களும் மட்டந் தட்டப் படுவர்! இதில் எந்த மாற்றமும் நான் செய்யப் போவதில்லை! நீங்கள் அஞ்சாம் ஆண்டு ஸ்கொலர்ஷிப் வெட்டுப் புள்ளியோடு வந்தாலும் கூட😎

அதேபோல்தான் உங்கள்  கருத்துக்களும் மட்டம்தட்டப்படும். மேலே பகிடி இணைத்த பிபிசி தமிழ் இணையத்தளம் இப்போ யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது இங்கு முன்பே  விவாதித்ததுதான். அதிலேயே பெரியாரின் பகுத்தறிவு நன்கு புரிகிறது.

https://www.bbc.com/tamil/india-43319859

நாங்கள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் நிற்கிறோம். நீங்கள் இப்போதும் ஐந்தாம் ஆண்டு வெட்டுப்புள்ளியில் நிற்கிறீர்கள். அங்கேயே நில்லுங்கள்.

இலங்கையிலும் சிங்களவரிடம் கொடுக்காமல் தமிழர் பகுதிகளை பிரிட்டிஷார் ஆண்டிருக்கலாம், நன்றாக இருந்திருக்கும். கல்வி, தொழில்துறைகள், உள்கட்டுமானம் என்பன இன்னும் அபிவிருத்தியாகி இருக்கும். இதை மறுக்க மாட்டீர்களென நினைக்கிறேன்.

உண்மைதான். ஆனால் வளங்கள் அத்தனையும் சுரண்டப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

இலங்கையிலும் சிங்களவரிடம் கொடுக்காமல் தமிழர் பகுதிகளை பிரிட்டிஷார் ஆண்டிருக்கலாம், நன்றாக இருந்திருக்கும். கல்வி, தொழில்துறைகள், உள்கட்டுமானம் என்பன இன்னும் அபிவிருத்தியாகி இருக்கும். இதை மறுக்க மாட்டீர்களென நினைக்கிறேன்.

சிந்தித்து பார்ததால்,  அவ்வாறு இந்தியாவின் தென் பிரதேசத்தை பிரிட்டிஷ் தொடர்ந்து தனது ஆளுமைக்குள் வைத்திருக்கவேண்டும்  என்ற  பெரியாரின்  கோரிக்கை,   தமிழருக்கு  மிக பெரிய நல்விளைவுகள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியப்பாட்டை இயல்பாகவே   உருவாக்கியிருக்கும்.   நாடுகளை கொலனிப்படுத்தும் வரலாற்றுக்காலம் 20 ம் நூற்றாட்டில்  முடிவுக்கு வந்ததால்,  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நீண்ட காலம் இப்பிரதேசத்தை தன் ஆளுமைக்கு கீழ் வைத்திருக்க முடிந்திருக்காது. எப்படியும் சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.  ஏற்கனவே வட இந்திய பார்ப்பன  வர்ககதிற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகள் நீதி கட்சியாலும் அதை தொடர்ந்த திராவிடர் கழகத்தாலும்  ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த நிலையும்,  பரப்புரையும் தென் இந்தியா  பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ந்திருந்தாலும்  நடந்திருக்கும்.  எனவே, அந்த விழிப்புணர்வானது,   அம்மக்களிடையே  சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சுதந்திர வேட்கையை தானாகவே உருவாக்கியிருக்கும்.   அவ்வாறான நிலையானது,  இந்திய துணைக்கண்டம் ஐரோப்பிய நாடுகள் போல் தன்னிச்சையாக  பல சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சாத்தியப்பாட்டை  அதிகரித்திருக்கும்.  

மக்களிடையே சுதந்திர வேட்கையும் போராட்ட குணமும் இருக்கும் நிலையில்  இந்திய இராணுவம்  இப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும்  நிலைக்கு எதிரான சர்வதேச சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே,  கோவா போன் ற பிரதேசங்களை ஆக்கிரமித்ததை போல் தென் இந்தியாவை ஆக்கிரமிப்பது இந்திய இராணுவத்துக்கு  இலகுவாக இருந்திருக்காது. 

உண்மையில், எமது சுதந்திரத்தை வட இந்திய பார்ப்பன  வர்க்கத்திடம் கையளிப்பதால் தமிழருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை அப்போதே பெரியார் சுட்டிக்காட்டி இருந்தார். இது பெரியாரின் தீர்கக தரிசனப்பார்வை என்று கூறலாம். ஏனெனில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான முக்கிய பங்களிப்பை அனைத்துலக அளவில்  செய்தது இந்திய ஆளும் பார்ப்பன கும்பலின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளே. எமது எதிரிகளை அன்றே அடையாளம் காட்டியவர் பெரியார். அன்றைய இந்திய  சுதந்திரத்தின் பின்னர் அதிகாரவர்ககத்தால் உருவாக்கிய “இந்திய தேசபக்தி” என்ற மாயையின் முன்னால் இந்திய தேசத்திற்கெதிரான எந்த போராட்டமும் வெற்றி பெற்றிருக்காது. அந்தளவுக்கு “பாரத மாதா” என்ற போலி பிம்பம் கிட்டத்தட்ட  பக்தி உணர்வு போலவே  கட்டி வளர்க்கப்பட்டது. அதுவே தமிழக  தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும்  ஆப்பாக அமைந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் தாராளமாகத் தட்டுங்கள், அதை விட நீங்கள் யாழில் வேறு எதையும் செய்ததாக நான் இத்தனை ஆண்டுகளில் காணவில்லை😂!

ஆனால், உரையாடப் படும் விடயத்தில் விமர்சனம் வைக்காமல், அஞ்சாப்பு, அரிவரி என்று நீங்கள் அலைவது தாழ்வுச் சிக்கல் என நினைக்கிறேன்! நீங்கள் பல்வேறு திரிகளிலும் எழுதும் கருத்துக்களைப் பார்க்கையில் புரிந்து கொள்ளக் கூடியதே😎!

நீங்கள் எங்கே போய் எதைக் கற்றாலும் இறுதியில் எஞ்சுவது உங்கள் அரசியல் பார்வைக் கண்ணாடியூடாக உங்களுக்குக் கிடைக்கும் பார்வை தான்: #பிபிசி பொய், முகநூல் துணுக்கு மெய்!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.