Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் பிழையா விள‌ங்கி விட்டீங்க‌ள் உற‌வே

நான் சொன்ன‌து அப்பாகிஸ்தான் பயிற்சியாளர்.............அவ‌ர் பிற‌ந்த‌து தென் ஆபிரிக்காவில்

ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இங்லாந் அணிக்கு விளையாடி பிற‌க்கு வ‌ய‌தான‌தும் அப்கானிஸ்தான் பயிற்சியாளர ஆகி விட்டார்

அவ‌ர் த‌ல‌மையில் தான் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை வென்று சிமி பின‌லுக்கு வ‌ந்து தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌வை................அவ‌ர் பெய‌ர் Jonathan Trott................டெஸ்ட் விளையாட்டில் சிற‌ந்த‌ வீர‌ர்...............இங்லாந்தில் வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே ஓய்வை அறிவிப்பின‌ம் ஆனால் ஆசியாவில் 40வ‌ய‌து வ‌ரையும் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...........................

அது சரிதான். நான் மாறித்தான் வாசித்து விட்டேன். Jonathan Trott மிகச் சிறந்த வீரர். ஆனால் அவரால் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, குடும்பத்தை பிரிந்து அவரால் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆஷஸ் தொடர் ஒன்றில் இருந்து இடையிலேயே திரும்பி சென்றுவிட்டார். அன்றிலிருந்து அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உதில 17வதாய் நிக்கிறவர் புடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி விளையாட்டு முடியும் மட்டும் அதே இடத்திலை நிண்டார் எண்டால் தில்லையம்பல பிள்ளையாருக்கு 1000 மோதகம் நேர்த்தி வைச்சிருக்கிறன் cool

யோவ் பெரிசு காலையில் எழும்பி பாருங்கள்.

அண்ணாந்து பாருங்கள் தெரியுதா என்று.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வீரப் பையன்26 said:

@vasee

என்ன‌ அண்ணா

உங்க‌ளை இங்கால‌ காணும்....................

ஒரு 4 நாளா உடல்நிலை சரியில்லை, வேலைக்கு போவது குழந்தைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்குவது மிகுதி நேரம் நித்திரை கொள்வது என போய்விட்டது, உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு நேரம் முழுவதனையும் நித்திரை கொள்வதில் கழித்ததால், யாழ் இழக்கவேண்டியதாயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

வசீ இந்த மூன்று பேரையும் - ரோகித், கோலி, ஹில் - இந்தியாவின் 'ஹாண்ட் பிரேக்ஸ்' என்று பகிடியாக சொல்லித்தான் எனக்கு இவரைத் தெரியும்........... மற்ற இருவரும் டி-20 இல் நியூயோர்க் பிட்சில் பிரேக் போடும் போது தெரிய வந்திருந்தார்கள்............🤣.

இந்தியாவிற்கு ஏற்ற சூழல் போல உள்ளது....................... அங்கே போட்டிகள் எப்படிப் போனாலும், இங்கு கலகலப்பாக வைத்திருப்போம்..........👍.

இந்தியணி முன்னால் தமிழ்நாட்டு வீரர் பத்ரிநாத் கில்லிற்கு வழங்கப்படும் வாய்ப்பு பற்றி BGT தொடரில் கேள்வி எழுப்பியிருந்தார், இதுவே ஒரு தமிழ்நாட்டு வீரராக இருந்தால் இவ்வாறான வாய்ப்பு வழங்கப்படுமா என.

இந்தியா பங்களாதேச விளையாட்டு பார்க்கவில்லை, ஆனால் மோசமான பங்களாதேச அணியுடனே இவ்வளவு கஸ்ரப்படும் இந்தியணி, பாகிஸ்தான் அணியுடன் நிச்சயமாக தோற்றுவிடும் (நான் இந்தியா தோற்கும் என தெரிவு செய்துள்ளேன்)😁.

இந்த ஆடுகளத்தில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதுதான் சாதகம் என கூறப்படுகிறது, ஆனாலும் இந்தியா இலக்கை துரத்த பிரயத்தனப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.

அண்மையில் 2 கிழமைக்கு முன்னர் இந்த ஆடுகளத்தில் ரி20 போட்டிகள் நடந்தமையால் ஆடுகளம் மெதுவாகி விடும் என அது இந்தியாவிற்கு சாதகம் என இந்தியர்கள் கூறுகிறார்கள், ஆனால் மைதான பராமரிப்பாளர் அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாக கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை தந்த லிங்குகள் வேலை செய்யுதா?

அல்லது இன்னும் வேணுமா?

வேறு யாராவது பகிரங்கமாக கேட்க விரும்பாவிட்டால்

தனிமடலில் கேழுங்கள்.

இப்படிக்கு கொள்ளைக் கூட்ட தலைவன்.

ம் சத்தம் போடாமல் எத்தனை மாபியாக்கள் களவாக பார்க்கிறாங்களோ தெரியாது.

அமசடக்கியள்.

எனது இந்திய நண்பர்கள் கூறினார்கள் bet 365 $5 வைப்பீட்டு செய்துவிட்டு நேர்முக வர்ணனை இன்றி அனைத்து போட்டிகளையும் (கிரிக்கட் மட்டுமன்றி) பார்க்கலாம் என்றார்கள், பதிவு செய்துவிட்டுப்பார்த்தால் குறைந்த பட்ச கட்டணமாக $50 வைப்பீடு செய்யவேண்டும் என வந்தது, $50 வைப்பீடு செய்தாயிற்று போட்டிகள் முடிந்தவுடன் $50 திருப்பி எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:

உண்மை ஆனால்

அது சூதாட்ட‌ இணைய‌த்த‌ள‌ம்

எல்லா கிரிக்கேட்டையும் நேர‌யா காட்டுவின‌ம்

அதை நான் லொக் ப‌ண்ணி 10வ‌ருட‌ம் ஆக‌ போகுது

அந்த‌ இணைய‌த்தில் மெம்ப‌ர் ஆகி அதிக‌ ப‌ண‌ம் வென்றால் அவ‌ர்க‌ளே உங்க‌ளின் எக்க‌வுன்டை மூடுவின‌ம் அண்ணா

அதுக்குள் போக‌ வேண்டாம்...........நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு கொடுத்த‌ ஆப்ப‌ ட‌வுன்லுட் ப‌ண்ணுங்கோ விள‌ம்பர‌ம் இல்லாம‌ காசு க‌ட்டாம‌ இல‌வ‌ச‌மாய் பார்க்க‌லாம்.....................

1 hour ago, vasee said:

ஒரு 4 நாளா உடல்நிலை சரியில்லை, வேலைக்கு போவது குழந்தைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்குவது மிகுதி நேரம் நித்திரை கொள்வது என போய்விட்டது, உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு நேரம் முழுவதனையும் நித்திரை கொள்வதில் கழித்ததால், யாழ் இழக்கவேண்டியதாயிற்று.

உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ அண்ணா..................

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

உண்மை ஆனால்

அது சூதாட்ட‌ இணைய‌த்த‌ள‌ம்

எல்லா கிரிக்கேட்டையும் நேர‌யா காட்டுவின‌ம்

அதை நான் லொக் ப‌ண்ணி 10வ‌ருட‌ம் ஆக‌ போகுது

அந்த‌ இணைய‌த்தில் மெம்ப‌ர் ஆகி அதிக‌ ப‌ண‌ம் வென்றால் அவ‌ர்க‌ளே உங்க‌ளின் எக்க‌வுன்டை மூடுவின‌ம் அண்ணா

அதுக்குள் போக‌ வேண்டாம்...........நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு கொடுத்த‌ ஆப்ப‌ ட‌வுன்லுட் ப‌ண்ணுங்கோ விள‌ம்பர‌ம் இல்லாம‌ காசு க‌ட்டாம‌ இல‌வ‌ச‌மாய் பார்க்க‌லாம்.....................

உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ அண்ணா..................

கிரிக்கெட் பார்ப்தோடு சரி, சாம்பியன் ரொபி முடிந்தவுடன் வைப்பு செய்த $50 மீள பெற்றுக்கொண்டு கணக்கை மூடி விடவேண்டியதுதான். இங்கு கயோ ஸ்போர்ட்ஸ் எனும் இணையவழி விளையாட்டு சனல் உள்ளது மாதம் தோறும் $25 செலுத்த வேண்டும். இது இலவசம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

கிரிக்கெட் பார்ப்தோடு சரி, சாம்பியன் ரொபி முடிந்தவுடன் வைப்பு செய்த $50 மீள பெற்றுக்கொண்டு கணக்கை மூடி விடவேண்டியதுதான். இங்கு கயோ ஸ்போர்ட்ஸ் எனும் இணையவழி விளையாட்டு சனல் உள்ளது மாதம் தோறும் $25 செலுத்த வேண்டும். இது இலவசம்.

ஆனால் அவுஸ்ரேலியாவில் நீங்க‌ள் வ‌சிப்ப‌தால் அந்த‌ இணைய‌த்தில் கிரிக்கேட் பார்க்க‌ முடியுமோ தெரியாது

அவ‌ங்க‌ட‌ ச‌ட்ட‌ம் அப்ப‌டி தான்

டென்மார்க்கில் கிரிக்கேட் வ‌ள‌ர‌ வில்லை..............இங்க‌த்த‌ ஊட‌க‌ங்க‌ளும் கிரிக்கேட்டை காட்டுவ‌தில்லை

அவுஸ்ரேலியாவில் கிரிக்கேட்ட‌ அவுஸ்ரேலிய‌ன் ச‌ண‌ல்க‌ள் வேண்டி ஒளிப‌ர‌ப்புவ‌தால் பார்க்க‌ முடியுமோ தெரியாது bet365சில்....................இதை அறிமுக‌ப் ப‌டுத்தின‌ உங்க‌ட‌ ந‌ண்ப‌ர் அவுஸ்ரேலியாவா.................

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்...............வெற்றி ந‌ம‌தே ஜ‌ந்து அவுஸ்சும் என‌தே ஹா ஹா @கிருபன் 😁😁😁😁😁😁😁😁..................பெரிய‌ப்பு உங்க‌ட‌ கையால் 5பவுஸ் வென்று சில‌ வ‌ருட‌ம் ஆச்சு இந்த‌ முறை வேண்டியாக‌னும்

அது தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டியில் கல‌ந்து கொண்ட‌ நான்

தொட‌ர்ந்து அமெரிக்கா பிர‌பா அண்ணா தான் 5ப‌வுன்ஸ்ச‌ த‌ட்டி செல்லுகிறார்.................இந்த‌ முறை அது ந‌ட‌க்காது😁...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

அது தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டியில் கல‌ந்து கொண்ட‌ நான்

தொட‌ர்ந்து அமெரிக்கா பிர‌பா அண்ணா தான் 5ப‌வுன்ஸ்ச‌ த‌ட்டி செல்லுகிறார்.................இந்த‌ முறை அது ந‌ட‌க்காது😁

லாஹூரில் ஃபைனல்ஸ் நடக்குது. பாகிஸ்தான் வெல்லுது!

அஞ்சு பவுண்ஸையும் நானே வச்சிருப்பேன்! 😂

உங்களுக்கு இந்த 5000 ரஷ்யன் ரூபிளை அனுப்பலாம்🤣

Russian Enterprise

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் அவுஸ்ரேலியாவில் நீங்க‌ள் வ‌சிப்ப‌தால் அந்த‌ இணைய‌த்தில் கிரிக்கேட் பார்க்க‌ முடியுமோ தெரியாது

அவ‌ங்க‌ட‌ ச‌ட்ட‌ம் அப்ப‌டி தான்

டென்மார்க்கில் கிரிக்கேட் வ‌ள‌ர‌ வில்லை..............இங்க‌த்த‌ ஊட‌க‌ங்க‌ளும் கிரிக்கேட்டை காட்டுவ‌தில்லை

அவுஸ்ரேலியாவில் கிரிக்கேட்ட‌ அவுஸ்ரேலிய‌ன் ச‌ண‌ல்க‌ள் வேண்டி ஒளிப‌ர‌ப்புவ‌தால் பார்க்க‌ முடியுமோ தெரியாது bet365சில்....................இதை அறிமுக‌ப் ப‌டுத்தின‌ உங்க‌ட‌ ந‌ண்ப‌ர் அவுஸ்ரேலியாவா.................

கிரிக்கட் மட்டுமன்றி அனைத்து வகை போட்டிகளையும் பார்க்கலாம் என நண்பர் கூறினார், தற்போது ஆப்கன் தென்னாபிரிக்க போட்டிகளை பார்த்துக்கொண்டுள்ளேன்.

நேர்முக வர்ணனை இல்லை (commentators)

தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரிக்கில்டன் சிறப்பாக ஆடுவார் என கூறப்படுகிறது 9 பந்துக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, vasee said:

கிரிக்கெட் பார்ப்தோடு சரி, சாம்பியன் ரொபி முடிந்தவுடன் வைப்பு செய்த $50 மீள பெற்றுக்கொண்டு கணக்கை மூடி விடவேண்டியதுதான். இங்கு கயோ ஸ்போர்ட்ஸ் எனும் இணையவழி விளையாட்டு சனல் உள்ளது மாதம் தோறும் $25 செலுத்த வேண்டும். இது இலவசம்.

Amazon Prime இல் ஆவுஸ்திரேலியாவில் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கந்தப்பு said:

Amazon Prime இல் ஆவுஸ்திரேலியாவில் பார்க்கலாம்

நன்றி,

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு முட்டை உறுதி அனால் எனக்கு பின்னாலும் கொஞ்ச ஆக்கள் நிக்கினம் எண்டது ஆறுதல் 😀

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா 350 ஓட்டங்களை பெறும், தற்போது 177/2

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கிரிக்கட் மட்டுமன்றி அனைத்து வகை போட்டிகளையும் பார்க்கலாம் என நண்பர் கூறினார், தற்போது ஆப்கன் தென்னாபிரிக்க போட்டிகளை பார்த்துக்கொண்டுள்ளேன்.

நேர்முக வர்ணனை இல்லை (commentators)

தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரிக்கில்டன் சிறப்பாக ஆடுவார் என கூறப்படுகிறது 9 பந்துக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளார்.

தெரிந்த‌ விடைய‌ம் தான்

ஆனால் ஒலிம்பிக் விளையாட்டு அதில் காட்ட‌ மாட்டின‌ம்

Bet365 இணைய‌த்தை நினைச்சா அருவ‌ருப்பாய் இருக்கும்..............அவ‌ங்க‌ளுக்கு தேவை ம‌க்க‌ள் காசை கொண்டு வ‌ந்து தோக்க‌னும்

காசு வெல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ளின் எக்க‌வுன்ட் முட‌க்க‌ப் ப‌டும்

டென்மார்க் இன‌த்தை சேர்ந்த‌ ப‌ல‌ரை த‌டை செய்து இருக்கின‌ம் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அதிக‌ ப‌ண‌ம் வெல்வ‌தால் என‌ நினைக்கிறேன் , இது அவ‌ர்க‌ள் முக‌ நூலில் எழுதின‌வை....................

உங்க‌ட‌ ந‌ன்மைக்கு மீண்டும் ஒரு முறை சொல்லுறேன் அதுக்கை ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ வேண்டாம் அண்ணா 1000டொல‌ர் வென்றால் பிற‌க்கு 2000டொல‌ர‌ இழ‌க்க‌ வேண்டின்வ‌ரும்.............இது என் வாழ்க்கையில் நான் க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

தென்னாபிரிக்கா 350 ஓட்டங்களை பெறும், தற்போது 177/2

இந்த‌ மைதான‌த்தில் தான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் நியுசிலாந் 320ர‌ன்ஸ் அடிச்ச‌வை

தென் ஆபிரிக்காவும் 300தாண்ட‌க் கூடும்🙏👍.......................

  • கருத்துக்கள உறவுகள்

South Africa vs Afghanistan, 3rd Match, Group B at Karachi, Champions Trophy, Feb 21 2025 - Live Cricket Score

Live

3rd Match, Group B (D/N), Karachi, February 21, 2025, ICC Champions Trophy

PrevNext

South Africa FlagSouth Africa

(35/50 ov) 199/2

Afghanistan FlagAfghanistan

South Africa chose to bat.Stats view

Current RR: 5.68

 • Last 5 ov (RR): 29/0 (5.80)

forecasterLive Forecast:SA 323

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

3rd Match, Group B (D/N), Karachi, February 21, 2025, ICC Champions Trophy

South Africa FlagSouth Africa (35.3/50 ov) 201/3

Afghanistan FlagAfghanistan

South Africa chose to bat

Current RR: 5.66 • Last 5 ov (RR): 30/1 (6.00)

Live Forecast:SA 321

Ryan Rickelton run out (Rashid Khan/†Rahmanullah Gurbaz) 103 (106b 7x4 1x6) SR: 97.16

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

தெரிந்த‌ விடைய‌ம் தான்

ஆனால் ஒலிம்பிக் விளையாட்டு அதில் காட்ட‌ மாட்டின‌ம்

Bet365 இணைய‌த்தை நினைச்சா அருவ‌ருப்பாய் இருக்கும்..............அவ‌ங்க‌ளுக்கு தேவை ம‌க்க‌ள் காசை கொண்டு வ‌ந்து தோக்க‌னும்

காசு வெல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ளின் எக்க‌வுன்ட் முட‌க்க‌ப் ப‌டும்

டென்மார்க் இன‌த்தை சேர்ந்த‌ ப‌ல‌ரை த‌டை செய்து இருக்கின‌ம் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அதிக‌ ப‌ண‌ம் வெல்வ‌தால் என‌ நினைக்கிறேன் , இது அவ‌ர்க‌ள் முக‌ நூலில் எழுதின‌வை....................

உங்க‌ட‌ ந‌ன்மைக்கு மீண்டும் ஒரு முறை சொல்லுறேன் அதுக்கை ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ வேண்டாம் அண்ணா 1000டொல‌ர் வென்றால் பிற‌க்கு 2000டொல‌ர‌ இழ‌க்க‌ வேண்டின்வ‌ரும்.............இது என் வாழ்க்கையில் நான் க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம்..........................

கந்தப்பு அமேசன் பிரைமில் ஒளிபரப்புகிறார்கள் என கூறியபோதே எனது பனத்தினை திரும்ப (Withdraw) பெற்றுவிட்டேன்.

2 hours ago, vasee said:

தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரிக்கில்டன் சிறப்பாக ஆடுவார் என கூறப்படுகிறது 9 பந்துக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளார்.

ரிகில்டன் 103 ஓட்டங்களுக்கு துரதிஸ்டமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செம்பாட்டான் said:

அது சரிதான். நான் மாறித்தான் வாசித்து விட்டேன். Jonathan Trott மிகச் சிறந்த வீரர். ஆனால் அவரால் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, குடும்பத்தை பிரிந்து அவரால் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆஷஸ் தொடர் ஒன்றில் இருந்து இடையிலேயே திரும்பி சென்றுவிட்டார். அன்றிலிருந்து அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

இவ‌ர் ம‌ட்டும் இல்லை

முன்னாள் இங்லாந் க‌ப்ட‌ன் கொக் 34 , 35 வ‌ய‌தில் ஓய்வை அறிவித்த‌வ‌ர்...............பிற‌க்கு சிறிது கால‌ம் சின்ன‌ வ‌ய‌தில் விளையாடின‌ கில‌ப்புக்கு சில‌ வ‌ருட‌ம் விளையாடி விட்டு ஒட்டு மொத்த‌ கிரிக்கேட் விளையாட்டிலும் இருந்து ஓய்வை அறிவிப்பின‌ம்

கிரிக்கேட்டில் அதிக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌து முத‌ல் இந்திய‌ வீர‌ர்க‌ள் , அதுக்கு அடுத்து இங்லாந் வீர‌ர்க‌ள்............ஜ‌பிஎல் வ‌ருக்கைக்கு முத‌ல் அப்ப‌டி தான் இருந்த‌து...............இப்ப‌ முன்னனி வீர‌ர்கள் ஒரு ஜ‌பிஎல் சீச‌னில் விளையாடினால் 1மில்லிய‌ன் பவுன்ஸ்சுக்கு மேல‌ அவ‌ர்க‌ளுக்கு கிடைக்குது.................அப்ப‌டி ப‌ல‌ சீச‌னில் தொட‌ர்ந்து விளையாடும் வீர‌ர்க‌ளின் ஆத்தில் காசு ம‌ழை..............................

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, vasee said:

கந்தப்பு அமேசன் பிரைமில் ஒளிபரப்புகிறார்கள் என கூறியபோதே எனது பனத்தினை திரும்ப (Withdraw) பெற்றுவிட்டேன்.

மேற்க்கிந்தியா , அமெரிக்காவில் நடைபெற்ற T 20 உலகக்கோப்பையும் Amazon Prime இல் காண்பித்தார்கள். ஐசிசி போட்டிகள் 2027 வரை அவுஸ்திரேலியாவில் அமேசான் பிரேம் இல் தான் காணபிப்பார்கள்

  • Prime Video announced as the home of ICC cricket in Australia until the end of 2027, with every World Cup, World Test Championship Final, and Champions Trophy match streamed exclusive and live

  • World Cup Cricket—it’s on Prime. All matches available to Prime members in Australia at no extra cost to their membership

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

நன்றி பயனுள்ள தகவல்.

South Africa 315/6

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானுக்கான வெற்றி வாய்பு உள்ளது, புதிய பந்தில் (முதல் 10 ஓவர்) அடித்தாடினால் அப்கானிஸ்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன், பாகிஸ்தான் போட்டி போலவே மைதான ஈரலிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா இலகுவா வெல்லப் போகினம் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.