Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

நாளைக்குப் பாருங்க கிளாசனின் அடிய.

நிச்சயமாக!

முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதி பகுதியாக பார்க்க வாய்ப்புள்ளது.

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vasee said:

நேற்றைய போட்டியில் வென்ற இந்தியாவிற்கு வாழ்த்துக்கள், இன்றைய போட்டி இரண்டு சிறந்த அணிகளுக்கிடியேயான போட்டி, எனது கணிப்ப்பு நியுசிலாந்து இன்றைய போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் இந்தியாவினை வீழ்த்தும்.

போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.

எல்லாம் ஒரு நிகழ்தகவுதானே!

நாணய சுழற்சியில் நாம் எதிர்பார்த்த தெரிவு வராவிட்டால் கண்டு கொள்வதில்லை, ஆனால் மற்ற விடயங்களில் அவ்வாறு நிகழும் போது அதனை சீரியசாக எடுத்து கொள்கிறோம் என கருதுகிறேன்.

ஒரு விடயத்தினை எவ்வாறு பார்க்கிறோம் என்பதில்தான் விடயமே இருக்கிறது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

ஒரு விடயத்தினை எவ்வாறு பார்க்கிறோம் என்பதில்தான் விடயமே இருக்கிறது.🤣

உண்மையே வசீ................ பொதுவாகவே பலரும் சில விடயங்களை இலேசாகவும், வேறு சில விடயங்களை அதிக அர்த்தங்கள் உள்ளவையாகவும் ஆக்கிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலருக்கு வாழ்வில் எல்லாமே வெற்றி - தோல்வி வரை போகும் போட்டிகள் தான்........

ஆடுகள் போல சிலரும் உள்ளனர். இங்கே ஒரு கடி, அங்கே ஒரு கடி என்று சும்மா மேய்ந்து கொண்டு, எல்லாவற்றையும் இலேசாக கடந்து போகும் மனிதர்கள்............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

ஆடுகள் போல சிலரும் உள்ளனர். இங்கே ஒரு கடி, அங்கே ஒரு கடி என்று சும்மா மேய்ந்து கொண்டு, எல்லாவற்றையும் இலேசாக கடந்து போகும் மனிதர்கள்............

இது கொஞ்சம் ஓவர்.🤣

நடைமுறை யதார்த்தத்தினை புரியாதவர்கள், விடயங்களை இயல்புநிலைக்கு வெளியே தமது விருப்பு வெறுப்புகளோடு இணைத்து கஸ்ரப்படுவது, நான் இந்தியா தோற்க வேண்டும் என நடைமுறை இல்லாத விடயத்தினை விரும்புவது போல. ஆனால் விருப்பம் வேறு யதார்த்தம் வேறு, அதனை புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விளையாட்டு போட்டி எதிர்வு கூறலில் முன்னணியில் நிற்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார்.

நாளைக்கு தென் ஆப்பிரிக்கா வென்றாலும் எப்போதும் தமிழன்தான் முதல்வர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.என்னுடைய பார்வையில் எப்போதும் தமிழன்தான் முதல்வராக வருவார் என்று நினைக்கிறேன்.அவருக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

நாளைக்கு தென் ஆப்பிரிக்கா வென்றாலும் எப்போதும் தமிழன்தான் முதல்வர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.என்னுடைய பார்வையில் எப்போதும் தமிழன்தான் முதல்வராக வருவார் என்று நினைக்கிறேன்.அவருக்கு வாழ்த்துகள்.

நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wiவாய்ப்பில்லை ராஜா!!!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நேற்றைய போட்டியில் வென்ற இந்தியாவிற்கு வாழ்த்துக்கள், இன்றைய போட்டி இரண்டு சிறந்த அணிகளுக்கிடியேயான போட்டி, எனது கணிப்ப்பு நியுசிலாந்து இன்றைய போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் இந்தியாவினை வீழ்த்தும்.

அண்டைக்கும் இப்ப‌டி தான் சொன்னீங்க‌ள்

நியுசிலாந் இந்தியாவை வெல்லும் என்று

நியுசிலாந் ப‌டு தோல்வி............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

அண்டைக்கும் இப்ப‌டி தான் சொன்னீங்க‌ள்

நியுசிலாந் இந்தியாவை வெல்லும் என்று

நியுசிலாந் ப‌டு தோல்வி............................

2 hours ago, ரசோதரன் said:

போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.

இந்தியாவே வெல்லும் என எல்லோரும் சொன்னால் ஒரு சுவாரசியம் இருக்காதல்லவா?🤣

ஆனால் நான் கூறியது நடந்தால் அதனை பற்றி நான் எப்போதும் சிலாகிப்பதில்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

இந்தியாவே வெல்லும் என எல்லோரும் சொன்னால் ஒரு சுவாரசியம் இருக்காதல்லவா?🤣

ஆனால் நான் கூறியது நடந்தால் அதனை பற்றி நான் எப்போதும் சிலாகிப்பதில்லை.🤣

பத்தோடு பதினொன்றாக இருக்காமல், தனித்தன்மையுடன் இருப்போம் என்று தான் நானும் வித்தியாசமாக பாகிஸ்தானை தெரிவு செய்தேன்..................... பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டதால் இந்த ஆடுகளம் தப்பிவிட்டது..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.

ம்ம் கூடவே கிருபனும் கவிழ்ந்து போனார்.

சரி சரி இதில கோட்டைவிட்டவர்

கொறட்டை விட்டவரெல்லாம்

இன்னும் 15 நாளில் தொடங்க இருக்கும்

ஐபிஎல் போட்டிக்குத் தயாராகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ம்ம் கூடவே கிருபனும் கவிழ்ந்து போனார்.

சரி சரி இதில கோட்டைவிட்டவர்

கொறட்டை விட்டவரெல்லாம்

இன்னும் 15 நாளில் தொடங்க இருக்கும்

ஐபிஎல் போட்டிக்குத் தயாராகுங்கள்.

இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளும் உள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

அண்டைக்கும் இப்ப‌டி தான் சொன்னீங்க‌ள்

நியுசிலாந் இந்தியாவை வெல்லும் என்று

நியுசிலாந் ப‌டு தோல்வி............................

அன்று நியூஸிலாந்து தோற்றதற்கு காரணம் வில்லியம்சனின் சுயநலமான ஆட்டம். எல்லோருக்கும் ப்ரஸ்வெல்லின் lbw அவுட் இல்லை எனத்தெரியும்போது எதிர்புறத்தில் இருந்த அவர் அதனை ரிவியூ பண்ண விடவில்லை. அத்துடன் அவரது மிக மெதுவான ஆட்டம் மற்றவர்களை தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவைத்தது!

7 hours ago, goshan_che said:

நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).

விளையாட்டுத்திரியில் அரசியல் பேசக்கூடாது! 😜

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

உண்மையே வசீ................ பொதுவாகவே பலரும் சில விடயங்களை இலேசாகவும், வேறு சில விடயங்களை அதிக அர்த்தங்கள் உள்ளவையாகவும் ஆக்கிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலருக்கு வாழ்வில் எல்லாமே வெற்றி - தோல்வி வரை போகும் போட்டிகள் தான்........

ஆடுகள் போல சிலரும் உள்ளனர். இங்கே ஒரு கடி, அங்கே ஒரு கடி என்று சும்மா மேய்ந்து கொண்டு, எல்லாவற்றையும் இலேசாக கடந்து போகும் மனிதர்கள்............

நன்றாகச் சொன்னீர்கள். நுனிப்புல் மேய்கின்ற ஆக்களாலதான் இப்போ பெரும் ரோதனையே. நீங்கள் சொன்னமாதிரி இலகுவா கடந்து போனால் பரவாயில்லை.

ஆனால், நாஞ்சொல்றதுதான் சரி என்று வாதிக்கிறதும், மற்றவை என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருக்கிறதும், தனிமனித தாக்குதலில் இறங்குவதும்,.... இது இன்றைய சமூக வலைத்தளங்களினால் நிகழ்கின்ற வினோதம்.

அறியாமை வேறு. அறியாமலே இருப்பது வேறு.

1 hour ago, Eppothum Thamizhan said:

அன்று நியூஸிலாந்து தோற்றதற்கு காரணம் வில்லியம்சனின் சுயநலமான ஆட்டம். எல்லோருக்கும் ப்ரஸ்வெல்லின் lbw அவுட் இல்லை எனத்தெரியும்போது எதிர்புறத்தில் இருந்த அவர் அதனை ரிவியூ பண்ண விடவில்லை. அத்துடன் அவரது மிக மெதுவான ஆட்டம் மற்றவர்களை தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவைத்தது!

விளையாட்டுத்திரியில் அரசியல் பேசக்கூடாது! 😜

வில்லியம்சன் ஆடினது சுயநலமா. விளையாட்டை அறிந்த நீங்களே இப்பிடிக் கதைக்கலாமா. போட்டி எப்படிப் போனது என்று பார்த்திருப்பீங்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

இது கொஞ்சம் ஓவர்.🤣

நடைமுறை யதார்த்தத்தினை புரியாதவர்கள், விடயங்களை இயல்புநிலைக்கு வெளியே தமது விருப்பு வெறுப்புகளோடு இணைத்து கஸ்ரப்படுவது, நான் இந்தியா தோற்க வேண்டும் என நடைமுறை இல்லாத விடயத்தினை விரும்புவது போல. ஆனால் விருப்பம் வேறு யதார்த்தம் வேறு, அதனை புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.🤣

யதார்த்தமும் நடைமுறையும் ஒத்து வராட்டிப் பரவாயில்லை. புரியாத ஒன்று: உங்களின் உதாரணத்தையே எடுத்தால், இந்தியா தோற்கவேண்டும் என்று விருப்பம். ஆனால் இந்தியாவைத் தெரிவு செய்வது. இது சரியானதா. ஓரே குழப்பமாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, செம்பாட்டான் said:

வில்லியம்சன் ஆடினது சுயநலமா. விளையாட்டை அறிந்த நீங்களே இப்பிடிக் கதைக்கலாமா. போட்டி எப்படிப் போனது என்று பார்த்திருப்பீங்கள் என்று நினைக்கிறேன்.

நான் சுயநலம் என்று சொன்னது, ஒரே ஒரு ரிவியூ இருக்கும்போது அதை கடைசி recognize பாட்ஸ்மனுக்கு பயன்படுத்த விடாமல் தடுத்ததை!

அத்துடன் ஒருவர் மிக மெதுவாக ஓட்டங்களை எடுக்கும்போது மற்றவர்கள் ரிஸ்க்கான அடிகளை அடித்து ஓட்டமெடுக்க முனைவர். அதுவே அவர்களின் ஆட்டமிழப்பிற்கு காரணமாகி விடுகிறது!

அவர் அவுட் ஆனமுறையும் தேவையற்றது! அக்ஸாரின் கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து அடுத்த ஓவரை ஆடியிருக்க வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

South Africa: 1 Temba Bavuma (capt), 2 Ryan Rickelton, 3 Rassie van der Dussen, 4 Aiden Markram, 5 Heinrich Klaasen (wk), 6 David Miller, 7 Wiaan Mulder, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi

New Zealand: 1 Will Young, 2 Rachin Ravindra, 3 Kane Williamson, 4 Daryl Mitchell, 5 Tom Latham (wk), 6 Glenn Phillips, 7 Michael Bracewell, 8 Mitchell Santner (capt), 9 Matt Henry, 10 Kyle Jamieson, 11 Will O'Rourke

நியூஸிலாந்து நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 மார்ச்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

தென்னாபிரிக்கா அணி (குழு B முதல் இடம்) எதிர் நியூஸிலாந்து அணி (குழு A இரண்டாவது இடம்)

07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக்கணித்துள்ளார். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

image.png

அந்த ஒரு ஆள் நான் தானே😀

நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

big-vest-guy-funny-moves.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

South Africa: 1 Temba Bavuma (capt), 2 Ryan Rickelton, 3 Rassie van der Dussen, 4 Aiden Markram, 5 Heinrich Klaasen (wk), 6 David Miller, 7 Wiaan Mulder, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi

New Zealand: 1 Will Young, 2 Rachin Ravindra, 3 Kane Williamson, 4 Daryl Mitchell, 5 Tom Latham (wk), 6 Glenn Phillips, 7 Michael Bracewell, 8 Mitchell Santner (capt), 9 Matt Henry, 10 Kyle Jamieson, 11 Will O'Rourke

நியூஸிலாந்து நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடுகிறது!

Temba Bavuma ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அடிச்சு ஆடாம‌ ப‌ந்தை நெட்டினால்

நியுசிலாந் வென்று விடும் போர‌ போக்கை பார்த்தால் நியுசிலாந் அணி

நேற்று இர‌வு சொன்ன‌து போல் 350ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது............................................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளும் உள்ளனவா?

இந்த விளையாட்டை எவருமே கவனிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ல‌ஹோர் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

இங்லாந் இதே மைதான‌த்தில் 351 ர‌ன்ஸ் அடிச்சு அதை அவுஸ்ரேலியா , அதிர‌டியா விளையாடி 48ஓவ‌ருக்கை ம‌ச்சை வென்று விட்டின‌ம்..................தென் ஆபிரிக்கா அணியில் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் , தொட‌க்க‌ம் ந‌ல்லா அமைந்தால் வெற்றிய‌ பெற‌லாம் இல்லையேன் தோல்வி தான்..........................................

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கூட அடித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

South Africa: 1 Temba Bavuma (capt), 2 Ryan Rickelton, 3 Rassie van der Dussen, 4 Aiden Markram, 5 Heinrich Klaasen (wk), 6 David Miller, 7 Wiaan Mulder, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi

New Zealand: 1 Will Young, 2 Rachin Ravindra, 3 Kane Williamson, 4 Daryl Mitchell, 5 Tom Latham (wk), 6 Glenn Phillips, 7 Michael Bracewell, 8 Mitchell Santner (capt), 9 Matt Henry, 10 Kyle Jamieson, 11 Will O'Rourke

நியூஸிலாந்து நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடுகிறது!

நான் சொன்னான் தானே இவ‌ர் ப‌ந்தை வீன் அடிப்பார் என்று அத‌ற்க்கு ஏற்ற‌ போல் டெஸ்ட் விளையாட்டு என்று நினைத்து விளையாடுகிறார்

இவ‌ரை 20ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து நீக்கியாச்சு , இதே நிலை தொட‌ர்ந்தால் ஒரு நாள் தொட‌ரில் இருந்தும் இவ‌ரை நீக்கி மாற்று வீர‌ரை தெரிவு செய்வின‌ம்....................

Screenshot-20250305-143535-ESPNCricinfo.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.