Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நான்கு பக்கமும் கிடைக்கவில்லை.. ஆனால் கிடைத்த ஒருபக்கம் போதும்..

large.IMG_9886.jpeg.70662bcca4177b0703e873595cf99a7f.jpeg

"Liberation Tigers of Thamil Eelam எப்போது Tamil Eelam என்று மாற்றினார்கள். ஆச்சரியம்!! 
 
  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.   

சிறப்பாக சொன்னீர்கள்.

1 hour ago, ரசோதரன் said:

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

சீமானை பார்த்து தான் அர்ச்சுனாவும்  மக்களை பேய்காட்டும் பரபரப்பு அரசியலை கற்று பொண்டிருப்பார்😟    ஆனால் சீமானுக்கு வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் இருந்து பணவரவு குவிகின்றது😟

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்று ஈழத்தமிழர்கள் உருட்டவில்லையே.

செக்ஸ் சைக்கோ சீமான் இப்படித்தான் உருட்டுகிறார்.

அவருக்கு முரட்டு முட்டு கொடுத்து ஆதரிக்கும் அனைவரும் இந்த உருட்டுக்கும் உரிமையாளரே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்பவும் ஈழத்தமிழர்களுக்கு அதே நிலைப்பாடுதான்.. திராவிடக்கொள்கைகஉடன் ஈழத்தமிழர்களுக்கு என்ன வாய்க்கால் தகராறா..? எல்லாக்கொள்கைகளிலும் இருக்கிற நல்லவற்றை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. 

தமிழ்நாட்டில் அவர்கள் நிலப்பரப்பு சமூகபிரச்சினைகள் சார்ந்து இரண்டு வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை.. 

தயவு செய்து இந்த பொய் பித்தலாட்டத்தை நிப்பாட்டுங்கோ.

சீமான் திராவிட அரசியலை புடுங்கி எறிவேன் என்கிறார்.

விஜை இரெண்டும் இரு கண்கள் எண்டால் நஞ்சும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும் என்கிறார்.

நாங்கள் ஈழத்தமிழர் என சொல்லியபடி சீமானினை ஆதரிப்பதாக சொல்பவர்கள் இந்த நஞ்சை ஆதரிப்பவர்களே.

சீமானை ஆதரித்து கொண்டு எமக்கு திராவிட கட்சி/ கொள்கை ஆதரவுதளத்துடன் வாய்க்கால் தகறாறு இல்லை என்பது உச்ச பட்ச பைத்தியக்காரத்தனம்.

இந்த வகையில் இப்படி மாய்மாலம் போடாமல் சீமானை ஆதரிக்கும் பையன் போன்றோர் எவ்வளவோ திறம்.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்க உருட்டவில்லை.. இந்த அறிக்கைய வச்சு தமிழ்நாட்டில் அப்படித்தான் உருட்டுகிறார்கள்..கலைஞர் ரீவிக்காறரால் எழுதப்பட்ட இந்தக்கட்டுரையின் தலைப்பும் அப்படித்தான் உருட்டுகிறது..”திராவிடப் புலிகள்”..அப்படிஎந்த இசத்துல்குள்ளும் அவர்கள் தங்களை அடைக்கவில்லை.. அதே காலப்பகுதியில் இணைத்திருப்பதால் அதன் நீட்சியாக கிருபன் இணைத்திருக்கிறார் என்று நினைக்கிறன்.. பொதுவான பதில் அது..

யார் என்ன உருட்டினாலும் புலிகளின் திராவிட கொள்கை சார்ந்த நிலைப்பாடு இதுதான்👇

8 hours ago, goshan_che said:

இங்கே புலிகள் திராவிட அரசியல் செய்தார்கள் என யாரும் உருட்டவில்லை.

உங்களை போலவே நாமும் போராட்டத்தோடு வளர்ந்த பிள்ளைகள்தான்.

ஆனால் இந்த ஆவணங்கள் உங்களினதும் செக்ஸ் சைக்கோ சீமானினதும்

தமிழ் தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்ற பொய்சமன்பாட்டை தூள், தூள் ஆக்குகிறது.

புலிகள் தமிழ்நாட்டின் சூழமைவுக்கு அமைய அங்கே திராவிடமும், ஈழத்தில் தமிழ்தேசியமும் என்ற நிலைப்பாடிலேயே இருந்தார்கள்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றியவாழிகள் என்ற கொள்கை தெளிவில் இருந்தார்கள்.

இரெண்டும் நட்பு சக்திகள் என நடந்தார்கள்.

தனியே கருணாநிதியை, ஒற்றை மனிதனின் நடவடிக்கையை முன்னிறுத்தி, இந்த ஆத்மார்த்த கொள்கை உறவை உடைத்த நீங்கள்தான் உலக மகா உருட்டுக்காரர்கள்.

உங்களின் இந்த உருட்டில் விழுந்த சம்மட்டி அடிதான் இந்த ஆவணங்கள்.

👆இதை மறுதலித்து - புலிகள்/ தமிழ் தேசியம் திராவிட கொள்கைக்கு எதிரி என சீமான் என்ற நச்சு பாம்பு கக்குவது விசம்.

அந்த விசத்தை கக்கும் பாம்புக்கு பால் ஊத்தும் நீங்களும் இந்த இனத்தின் வாழ்வில் நஞ்சை கலப்பவரே.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

உங்களைப் போலவும் கோசான் போலவும் "தெளிந்த தண்ணீர்" மாதிரி எப்படி எழுதுவது என்று யோசிக்கிறேன், முயற்சிக்க வேண்டும். 

கருணாநிதி மீதான கோபம் என்பன சார்ந்து வரும் திராவிட எதிர்ப்பே. தேவையில்லாத ஆணி!

உங்களின் எழுத்துநடை மிகவும் சிறப்பானது, ஜஸ்டின். தயவுதாட்சண்யம், சமரசங்கள் இல்லாமல் சில நேரங்களில் நேரடியாகவே உங்களின் கருத்துகளை நீங்கள் சொல்வதால், சில நண்பர்களுக்கு அது ஒரு சீண்டல் ஆகவும் தெரிந்து விடுகின்றது போல. கோஷான், அவரே சொல்லுவது போலவே, எப்போதும் நக்கலும் நையாண்டியும் கலந்து தன் பக்கத்தை சொல்லிவிடுவார். நான் பூசி மெழுகும் வகை..............🤣.

அடிப்படையே கருணாநிதி மீதான அந்தக் கோபம் தான். இது எங்களில் பலருக்கும் அணையாமல் அப்படியே இருக்கின்றது. அந்தக் கோபம் வேறு இடங்களுக்கு ஆதரவாக மாறிவிடுகின்றது............... 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஊர்க்காவலன் said:

மலத்துடன் ஒப்பிடத்தக்க சொல்கிறார்கள். ஆனால் நான் தேடிய வரையில் ஆதாரம் அகப்படவில்லை. இருந்தால் இணைத்துவிடுங்கள். ஜெர்மனில் ஒரு பெரியாரிஸ்ட் திருவள்ளுவருக்கு சிலைவைத்துள்ளார். அவரிடம் கருத்துக்கேட்கலாம் 😁

திருக்குறளில் பல பிற்போக்கு கருத்துகளும் உள்ளன.

ஒரு சின்ன உதாரணம்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதை விட ஆணாதிக்க கருத்தை காட்ட முடியாது.

பிகு

திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

6 hours ago, வீரப் பையன்26 said:

ஆதார‌ங்க‌ள் ப‌ல‌ த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் வைச்சு இருக்கிறாங்க‌ள்

ப‌ழைய‌ செய்தி பேப்ப‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ள் ப‌ல‌ மாரிதாஸ்சிட‌ம் உள்ள‌து................ 

பெரியாரை அதிக‌ம் தூக்கி பிடிக்கும் வீர‌ம‌ணியிட‌ம் முழு ஆதார‌மும் இருக்கு...................வீர‌ ம‌ணிய‌ பிடிச்சு இர‌ண்டு ஊமைக் குத்து விட்டால் எல்லா உண்மைக‌ளையும் அவ‌ரே க‌க்குவார் ஹா ஹா😁........................ 

உலகில் பொதுவாக ஒரு நடைமுறை இருக்கு தம்பி…ஆங்கிலத்தில் burden of proof என்பார்கள்.

ஒரு விடயத்தை உள்ளது என சொல்பவர்தான் அதை நிறுவ வேண்டும்.

நாம் ஒரு விசயத்தை சொல்லி விட்டு…

ஆதாரம் கேட்டால்…

வீரமணியிடம் இருக்கு…

கலாபவன் மணியிடம் இருக்கு….

காண்டாமணியிடம் இருக்கு…

கு…..

குட்டி மணியிடம் இருக்கு எண்டு செக்ஸ் சைக்கோ சீமான் போல் பேய்கதை கதைக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஊர்க்காவலன் said:

ஆதாரம் கேட்டல் அவர்களிடம் இருக்கிறது இவர்களிடம் இறக்கிறது என்று சொல்வது தான் இங்கே பிரச்சனையே. சரி அவர்களிடம் ரகசியமாக இருந்தது உங்களிற்கு எப்படி தெரியவந்தது?  
 
கலாபவன் மணி ஆதாரத்தை பையனுக்கு மட்டும் காட்டி இருப்பார் என நினைக்கிறேன்🤣.

6 hours ago, Eppothum Thamizhan said:

அதில் ஒன்றுகூட புலிகளின் அதிகாரபூர்வமான வெளியீடல்லவே!

சிவப்பு மையில், வெள்ளை பக்ரவுண்டில், “விடுதலைபுலிகள்”….

எல்லாமும் மறந்து போயிட்டா எ.பொ.த?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

திருக்குறளில் பல பிற்போக்கு கருத்துகளும் உள்ளன.

ஒரு சின்ன உதாரணம்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதை விட ஆணாதிக்க கருத்தை காட்ட முடியாது.

பிகு

திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

உலகில் பொதுவாக ஒரு நடைமுறை இருக்கு தம்பி…ஆங்கிலத்தில் burden of proof என்பார்கள்.

ஒரு விடயத்தை உள்ளது என சொல்பவர்தான் அதை நிறுவ வேண்டும்.

நாம் ஒரு விசயத்தை சொல்லி விட்டு…

ஆதாரம் கேட்டால்…

வீரமணியிடம் இருக்கு…

கலாபவன் மணியிடம் இருக்கு….

காண்டாமணியிடம் இருக்கு…

கு…..

குட்டி மணியிடம் இருக்கு எண்டு செக்ஸ் சைக்கோ சீமான் போல் பேய்கதை கதைக்க கூடாது.

த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே ஈவேராவின் கோம‌ன‌த்தை உருவி போட்டு விட்ட‌வ‌ங்க‌ள் அப்ப‌ எல்லாம் அமைதியாக‌ இருந்து விட்டு சீமான் சொல்லும் போது ம‌ட்டும் சீமானின் வீட்டை முற்றுகை இடுகின‌ம் ஹா ஹா

சீமான் சொல்வ‌தை கேட்டு இதுக்கை எழுத‌ வில்லை ப‌ல‌ ஆராச்சிக்கு பிற‌க்கு தான் எழுதுகிறேன்..................நீங்க‌ள் எத‌ற்கெடுத்தாலும் சீமான் சீமான் என‌ புல‌ம்புவ‌து புரிய‌ வில்லை..............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் அனைத்தும் "தமிழ் ஈழ" என்ற பெயருடன் தான் ஆரம்பித்து இயங்கினார்கள் தவிர திராவிட ஈழ விடுதலை புலிகள் என்றோ.. திராவிட மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றோ திராவிட ஈழ விடுதலை இயக்கம் என்றோ ஆரம்பித்து செயல் படவில்லையே ஏன்? 

Just wondering!! 😏

எலோன் மஸ்குகள் எக்கசக்கமாக பெருகிவிட்டார்களடா சாமி🤣

11 minutes ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே ஈவேராவின் கோம‌ன‌த்தை உருவி போட்டு விட்ட‌வ‌ங்க‌ள் அப்ப‌ எல்லாம் அமைதியாக‌ இருந்து விட்டு சீமான் சொல்லும் போது ம‌ட்டும் சீமானின் வீட்டை முற்றுகை இடுகின‌ம் ஹா ஹா

சீமான் சொல்வ‌தை கேட்டு இதுக்கை எழுத‌ வில்லை ப‌ல‌ ஆராச்சிக்கு பிற‌க்கு தான் எழுதுகிறேன்..................நீங்க‌ள் எத‌ற்கெடுத்தாலும் சீமான் சீமான் என‌ புல‌ம்புவ‌து புரிய‌ வில்லை..............................

தம்பி லிங்கனாவது தெருவிளக்கில் …

நீங்கள் விளக்கே இல்லாமல் செய்த ஆராய்ச்சி கருத்து எண்டால் கனதி இருக்கும்.

3 hours ago, Sasi_varnam said:

நான் நாறிய என்று எழுதியது  "சீமானிசம்".. "சாமானிசம்" எல்லாத்தையும் தான். சக கருத்தாளர்களை ஒரு "பக்கட்டுக்குள்" Bucket போட்டு வாதாட வராதீர்கள். படித்த உங்களுக்கு அழகல்ல. I don't give a flying F about Seeman or Periyaar.  Thank You!! 

Then why the F are you in this thread 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

மாறுபட ஏதும் இல்லை…

ஆனால்…

தமிழ்நாட்டு அரசியலுக்குள் எம்மை இழுத்து…அங்கே ஒரு சாரரை எம் எதிரிகளாக்க சதி செய்யும் சீமான் போன்ற விஷ ஜந்துகளை பாராமுகமாக இருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

நன்றி ரசோதரன் உங்களை போல விரிவாக பந்தியை எழுதவில்லை. ஆனாலும் நீங்கள் எழுதிய அடிப்படை புரிதல் இருந்தது. தேவையில்லாத ஆணிகளை தேடித் தேடி சரிநிகர் பார்க்கும் தேவையில் நான் இல்லை. நமது தலைவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் கொள்கைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சிவனே என்று அதை கவனிக்கலாம் என்பதையே உள்ளுணர்வு சொல்கிறது.

நீங்கள் வாசிப்பவற்றில், அறிந்து கொள்வதில் சிலவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்வமாக வாசிப்போர் பலர் இங்கு உள்ளனர். 

கருத்துப் பரிமாற்றம் என்று வரும் போது, சில வேளைகளில், சில சங்கடங்கள் வந்து விடுவது உண்டு தான்.......... மனதில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.............🙏.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

நன்றி ரசோதரன் உங்களை போல விரிவாக பந்தியை எழுதவில்லை. ஆனாலும் நீங்கள் எழுதிய அடிப்படை புரிதல் இருந்தது. தேவையில்லாத ஆணிகளை தேடித் தேடி சரிநிகர் பார்க்கும் தேவையில் நான் இல்லை. நமது தலைவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் கொள்கைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சிவனே என்று அதை கவனிக்கலாம் என்பதையே உள்ளுணர்வு சொல்கிறது.

தலைவர் காட்டிச் சென்ற வழி, தமிழ்நாட்டில் எமக்கு அனைவரும் தேவை எவரும் எதிரி இல்லை.

இதை முறிப்பவர்களை ஆதரித்தபடி அவரின் கொள்கையை தொடர்வோம் என்பது மாய்மாலம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டு அரசியலுக்குள் எம்மை இழுத்து…அங்கே ஒரு சாரரை எம் எதிரிகளாக்க சதி செய்யும் சீமான் போன்ற விஷ ஜந்துகளை பாராமுகமாக இருக்க கூடாது.

இதில் மாற்றுக்கருத்து கிடையாது, கோஷான். எங்களின் வழியில் அவருக்கான எதிர்ப்பை நாங்கள் காட்டவே வேண்டும். அவர் ஒரு போலி, அவர் செய்யும் அரசியல் வெறும் பிழைப்புவாதம் என்று தான் நானும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

ஆனால் நீங்கள் அடிக்கும் அடி அணுகுண்டு போடுவது போல........... புல்லுப் பூண்டுகள் கூட தப்பாது போலத் தெரியுது...........🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

நான் உடைக்க…நீங்கள்…மெழுக🤣

#Good cop bad cop🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை

அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும்.

அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள்.

ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள்.

சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான்.

அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும்.

ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன்.

அந்த ஒரு செயலுக்காகவே அவரைப்  போற்றுகிறேன்.

எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள்.

எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது.

அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான்.

அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது.

இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள்.

இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை, கட்டுரையாளர் பற்றி….

1. திருமாவேலன் விகடனிலேயே பெரியார் கருத்தை எழுதும் அளவுக்கு பெரியாரிஸ்ட் என்பது பலர் அறிந்ததுதான். அதோடு இப்போ கலைஞர் டிவியில் வேறு இருக்கிறார்.

2. புலிகள் பெரியாரிஸ்ட்டுகளோ, திராவிட கொள்கையினரோ அல்ல. அவர்களுக்கு தூய தமிழ் தேசியம் ஏன் தமிழக்கத்தில் சரிவராது என்ற புரிதல் இருந்தது. அதே போல் இலங்கையில் ஏன் தமிழ் தேசியம் தேவை என்ற புரிதலும் இருந்தது.

3 . புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்திகள். ஆனால் “திராவிட புலிகள்” அல்ல.

4. ஆனால் இப்படி எழுதும் தேவை ஏன் வந்தது? சீமான் புலிகள் திராவிட எதிரிகள் என நிறுவ முயன்றதால்.

5. புலிகளை, தலைவரை முன்னிறுத்தி சீமான் திராவிட கொள்கையை, பெரியாரை தாக்கும் போது…. தமிழ் நாட்டின் திராவிட கொள்கையாளருக்கு…சீமானை எதிர்க்க இரெண்டு வழிகள் மட்டுமே உள்ளது. அவையாவன:

அ. பிரபாகரனின் பெர்னிச்சரை உடைத்தல் - புலிகள் மீதோ, ஈழதமிழர் மீதோ அதிகம் பாசம் இல்லாத திமுகவினர் இதை செய்கிறனர். மீம்ஸ் முதல், உருவ கேலி, புலிகள் ஆட்சேர்ப்பு என பலதை கையில் எடுத்து புலிகளை, தலைவரை பற்றி ஒரு மோசமான விம்பத்தை உருவாக்கி அதன் மூலம் சீமானை தாக்குவது இவர்கள் பாணி.

நீங்கள் பெரியாரை அடித்தால்…நாங்கள் பிரபாகரனை அடிப்போம் என்பது இவர்கள் வாதம்.

இதில் சம்பந்தமே இல்லாமல் அடி வாங்குவது தமிழ்நாட்டில் தலைவரின், புலிகளின் இமேஜ்தான்.

ஆ. பிரபாகரனும் பெரியாரிஸ்ட்தான் - இப்படி சம்பந்தமே இல்லாமல் புலிகளை, திராவிட கொள்கையின் எதிரிகளா நிறுத்தி, அதன் மூலம் புலிகளையும், திராவிட அமைப்புகளையும் ஒரே கல்லில் அடிக்கும் பிஜேபி கூலி சீமான் என கண்டு கொண்ட, புலிகள் மீது பாசமுள்ள, திராவிட கொள்கை உள்ளோர் கண்டுபிடித்த உத்திதான், இப்படி புலிகளை அடிக்காமல் அவர்களும் நம்மவரே என அணைத்து சீமானை மட்டும் அடிக்கும் உத்தி.

கட்டுரையில் திருமாவேலன் செய்வது இதைத்தான்.

புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்கி என்ற உண்மையை, “திராவிட புலிகள்” என பெருபித்து காட்டி, புலிகளை தாக்காமல் சீமானின் பிஜேபி போட்டு கொடுத்த நச்சு வியூகத்தை உடைக்க முயல்கிறார்கள்.

@Eppothum Thamizhan @Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி .

கொஞ்சம் நான் மேலே எழுதியதை யோசித்து,  பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் என்ற குறளையும் பொருளுணர்ந்து பாருங்கள். 

பிகு

நான் மேலே எழுதியது சீமானுக்கு நேர்ந்துவிட்டவர்களுக்கானது அல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தம்பி இயக்கத்துக்கு ஆள்சேர்த்துகுடுத்ததுக்கு 2006 ஆம் ஆண்டு இயக்கம் எனக்கு ஒரு புது லுமாலா சைக்கிள் தந்தது😁.. ஆனா அதில மண்டைய கழுவி சேர்த்த ஒரு பொடியன் 2009 ல வீரச்சாவு.. ஊர்ப்பொடியந்தான்.. அதை இனைச்சா இண்டு வரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல.. ஏன் இந்த பாவம் செய்தன் எண்டு இண்டு வரைக்கும் யோசிப்பன்..😢 அவன் தமையன் 5 பேர் எல்லாரும் பொறியியலாளர் எக்கவுண்டன் ஆகி லண்டன் கனடா எண்டு செட்டில்.. தகப்பன் மட்டும் ஊரில தனிய இருந்து போனவருசம் செத்துப்போனார்.. அந்த வீடு இப்ப இருண்டுபோய் கிடக்கு யாரும் இல்லாமல்.. அந்த வீட்ட கடக்கும்போதெல்லாம் துயரமும் குற்ற உணர்ச்சியும் நெஞ்சை அடைக்கும்.. அவன் கடைசிப்பொடியன்.. அவன் இருந்திருந்தால் தகப்பனை பாத்திருப்பான் ஊரில இருந்திருப்பான்.. சில தப்புக்கள் வாழ்நாளில் மீண்டு வரமுடியாத பாவச்செயல்கள்..😢😢

வாசிச்ச எனக்கே மனசு கேட்கவில்லை, வாழும் உங்களின் தவிப்பு எப்படி இருக்கும்.

தவறை உணர்ந்ததே பெரிய விசயம்தான் தல, மருக வேண்டாம்.

தான் செய்தது கறுமம் என்பதை கூட உணராமல் - நாந்தான் ஆளை கொண்டு போய் சேர்த்து விட்டேன் - இருக்கிறாரரோ இல்லையோ என தெரியாது என யாழில் எழுதிய வெளிநாட்டில் பேரப்பிள்ளை கண்ட தாத்தாக்கள் மத்தியில் நீ ஒரு படி மேலதான் தல❤️.

பிகு

நான் எவரையும் சேர்த்து விடவில்லை. ஆனால் சைக்கிள் டைனமோவில் மாறி மாறி உழக்கி நானும் ஒருவனும் தாயக பாடல்கள் கேட்போம். அவன் போய் சேர்ந்து, ஆகாய கடல் வழி சமரில் காவியமும் ஆகிப்போனான். நான் பேடி போல ஓடி வந்துவிட்டேன். 

#நெஞ்சில் ஓர் முள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஆனால் நீங்கள் அடிக்கும் அடி அணுகுண்டு போடுவது போல........... புல்லுப் பூண்டுகள் கூட தப்பாது போலத் தெரியுது...........🤣.  

என்ன‌ குருநாதா கோஷானா நீங்க‌ள் ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கீழ‌ இருந்து வெட்டுர‌ மாதிரி தெரியுது ஹா ஹா😁....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ குருநாதா கோஷானா நீங்க‌ள் ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கீழ‌ இருந்து வெட்டுர‌ மாதிரி தெரியுது ஹா ஹா😁....................

பையன் சார், உங்களுக்கும் கோஷானுக்கும் இடையில் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தில் நாங்கள் சில அப்பாவிகள் இடையில் வந்து மாட்டுபட்டு விட்டோமோ.......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

திருக்குறளில் பல பிற்போக்கு கருத்துகளும் உள்ளன.

ஒரு சின்ன உதாரணம்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதை விட ஆணாதிக்க கருத்தை காட்ட முடியாது.

பிகு

திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

உலகில் பொதுவாக ஒரு நடைமுறை இருக்கு தம்பி…ஆங்கிலத்தில் burden of proof என்பார்கள்.

ஒரு விடயத்தை உள்ளது என சொல்பவர்தான் அதை நிறுவ வேண்டும்.

நாம் ஒரு விசயத்தை சொல்லி விட்டு…

ஆதாரம் கேட்டால்…

வீரமணியிடம் இருக்கு…

கலாபவன் மணியிடம் இருக்கு….

காண்டாமணியிடம் இருக்கு…

கு…..

குட்டி மணியிடம் இருக்கு எண்டு செக்ஸ் சைக்கோ சீமான் போல் பேய்கதை கதைக்க கூடாது.

கோசான்,

நாளைக்கு வெள்ளிக்கிழமை, திரி வேறு நன்றாக போகிறது. நீங்கள் ஏதோ கு.. என்று எழுததொடங்கிவிட்டு, மறந்துபோய் விட்டுவிட்டீர்கள், அது என்னது?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ குருநாதா கோஷானா நீங்க‌ள் ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கீழ‌ இருந்து வெட்டுர‌ மாதிரி தெரியுது ஹா ஹா😁....................

பையன்…பப்பா மரத்தில் ஏத்தி விட்டால் பாரம் தாங்காமல் அது தானாகவே ஏறியவருடன் முறிந்து விழும்….

வெட்ட எல்லாம் தேவையில்லை🤣.

தமிழின வரலாற்றில் பப்பாவில் ஏத்திவிட்டு மரத்தையும் வெட்டிய முதல் தமிழன் நீங்கள்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும்.

அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள்.

ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள்.

சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான்.

அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும்.

ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன்.

அந்த ஒரு செயலுக்காகவே அவரைப்  போற்றுகிறேன்.

எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள்.

எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது.

அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான்.

அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது.

இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள்.

இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.

அண்ணா, நாங்கள் பலர், நீங்களும் நானும் உட்பட, தலைவர் மேல் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் ஒன்றே தான். அதே போலவே எம் மக்களுக்கு யாராவது ஏதாவது சிறு நன்மைகள் ஆவது செய்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும், தவிப்பும் கூட.

ஒரு சாதாரண  traffic violation நடந்த பொழுது வந்த பதிவைப் பார்த்தோம். அதில் ஏன் தலைவர் பெயர் வர வேண்டும், அது தலைவருக்கு காட்டும் மரியாதையா.......... அது எம் தலைவருக்கு ஒரு இழிவல்லவா.

இதையே தான் சீமானும் செய்கின்றார். வெறும் தன்னலம் கருதி தலைவர் பெயரை மேடை மேடையாக விற்கின்றார்.

இங்கு களத்தில் ஒரு நண்பரின் உரையாடல் நாகாரீகம் இல்லை என்று தெரிந்தால், கள மட்டுறுத்துனர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அவரை கட்டுப்படுத்துகின்றனர். இதுவே தான் பாடசாலைகளில் நடக்கின்றது, விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றது. ஆனால், பொதுவெளியில் தரக்குறைவாக தொடர்ந்து உரையாடியும், நடந்தும் கொள்ளும் இந்த இருவரையும் நாங்கள் ஏன் கண்டிக்கின்றோம் இல்லை. இதை ஒரு சமூகமாக நாங்கள் கண்டிக்கவேண்டும். இவர்கள் இருவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு உதாரணங்களே இல்லை.

இவர்களால் ஏதாவது தொடர் நன்மைகள் எங்கள் சமூகத்திற்கு ஆகியிருக்கின்றதா............ இவர்களால் உண்மையான பிரச்சனைகள் புதைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, இவர்கள் இருவரும் மட்டும் தானே அதன் மேல் நிற்கின்றார்கள்.

யாழ் மருத்துவமனையில் 180 தற்காலிக பணியாளர்களின் கதி இனி என்ன............... 

யாழ் மருத்துவமனையில் சத்யன் இப்போதும் பணிப்பாளராக இல்லையா.............

மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டங்கள் இனி நடக்காதா...................

சூரிய மின்சார இணைப்பு கொடுப்பதில் இனி ஊழல் நடக்காதா..............

இதுவே தான் ஒவ்வொன்றின் கதியும். எல்லாமே ஒரு நாடகம் போல நடந்து முடிந்து கொண்டிருக்கின்றது. சீமானின் செயல்களும் இப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நீர்வேலியான் said:

கோசான்,

நாளைக்கு வெள்ளிக்கிழமை, திரி வேறு நன்றாக போகிறது. நீங்கள் ஏதோ கு.. என்று எழுததொடங்கிவிட்டு, மறந்துபோய் விட்டுவிட்டீர்கள், அது என்னது?

குட்டி மணி…கீழே…..

எழுதி இருக்கிறேன் கவனிக்கவில்லையா🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், உங்களுக்கும் கோஷானுக்கும் இடையில் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தில் நாங்கள் சில அப்பாவிகள் இடையில் வந்து மாட்டுபட்டு விட்டோமோ.......................🤣.

நான் அடிக்க…பையன் ஓட…

பையன் ஓட…நான் அடிக்க…

இது நாங்கள் எப்போதும் செய்வதுதான்🤣

8 minutes ago, ரசோதரன் said:

அண்ணா, நாங்கள் பலர், நீங்களும் நானும் உட்பட, தலைவர் மேல் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் ஒன்றே தான். அதே போலவே எம் மக்களுக்கு யாராவது ஏதாவது சிறு நன்மைகள் ஆவது செய்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும், தவிப்பும் கூட.

ஒரு சாதாரண  traffic violation நடந்த பொழுது வந்த பதிவைப் பார்த்தோம். அதில் ஏன் தலைவர் பெயர் வர வேண்டும், அது தலைவருக்கு காட்டும் மரியாதையா.......... அது எம் தலைவருக்கு ஒரு இழிவல்லவா.

இதையே தான் சீமானும் செய்கின்றார். வெறும் தன்னலம் கருதி தலைவர் பெயரை மேடை மேடையாக விற்கின்றார்.

இங்கு களத்தில் ஒரு நண்பரின் உரையாடல் நாகாரீகம் இல்லை என்று தெரிந்தால், கள மட்டுறுத்துனர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அவரை கட்டுப்படுத்துகின்றனர். இதுவே தான் பாடசாலைகளில் நடக்கின்றது, விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றது. ஆனால், பொதுவெளியில் தரக்குறைவாக தொடர்ந்து உரையாடியும், நடந்தும் கொள்ளும் இந்த இருவரையும் நாங்கள் ஏன் கண்டிக்கின்றோம் இல்லை. இதை ஒரு சமூகமாக நாங்கள் கண்டிக்கவேண்டும். இவர்கள் இருவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு உதாரணங்களே இல்லை.

இவர்களால் ஏதாவது தொடர் நன்மைகள் எங்கள் சமூகத்திற்கு ஆகியிருக்கின்றதா............ இவர்களால் உண்மையான பிரச்சனைகள் புதைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, இவர்கள் இருவரும் மட்டும் தானே அதன் மேல் நிற்கின்றார்கள்.

யாழ் மருத்துவமனையில் 180 தற்காலிக பணியாளர்களின் கதி இனி என்ன............... 

யாழ் மருத்துவமனையில் சத்யன் இப்போதும் பணிப்பாளராக இல்லையா.............

மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டங்கள் இனி நடக்காதா...................

சூரிய மின்சார இணைப்பு கொடுப்பதில் இனி ஊழல் நடக்காதா..............

இதுவே தான் ஒவ்வொன்றின் கதியும். எல்லாமே ஒரு நாடகம் போல நடந்து முடிந்து கொண்டிருக்கின்றது. சீமானின் செயல்களும் இப்படியே.

நான் ஜோக்கடிச்சு கொண்டு நிக்கிறன்.

முத்து மாலை போல் ஒரு பதிவு🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தலைவர் காட்டிச் சென்ற வழி, தமிழ்நாட்டில் எமக்கு அனைவரும் தேவை எவரும் எதிரி இல்லை. - Agreed 

இதை முறிப்பவர்களை ஆதரித்தபடி அவரின் கொள்கையை தொடர்வோம் என்பது மாய்மாலம். Your Opinion 👎

நிறைய எழுதுவதாலோ என்னவோ உங்களுக்கு மற்றவர்கள் சிந்தனைகள், எழுத்துக்கள்  குறித்து தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அதிகமாக கிடைத்து விடுகிறது. 
உங்களுக்கு இருக்கும் சிந்தனை தெளிவு இன்னும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் வாதாடுகின்றீர்கள். 
மேலதிகமாக பேச ஒன்றும் இல்லை. 
ஒரு ஆத்தலான திரியில நாங்க பேசலாம் அதுவரை    
அப்பிட (சீமான் + பெரியார்) நெவ கிளுநத் பான்சூன்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.