Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்

Jan 24, 2025
ldYbDWuk-FotoJet-37.jpg

நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 பேர் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,”பல்வேறு பொறுப்புகளில் ஒரு இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, நமக்கு மட்டுமல்ல தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து சிறப்பான முடிவெடுத்து திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். உங்களை நான் திமுக தலைமை கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்னிடத்தில் வந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் நம்முடைய கட்சியில் இணைய காத்திருக்கிறார்கள். அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று நான் சொன்னேன்.

திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ஆம் ஆண்டு திமுகவை அண்ணா தொடங்கினார். அதற்கு பிறகு 1957-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நாம் ஈடுபட்டோம். ஆனால், இன்றைக்கு சில பேர் கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. 

நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் அநாதை நிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்தக் கட்சி தலைவர் என்று சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் தயாராக இல்லை. அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. 

இந்த மேடையில் நான் உள்பட உதயநிதி, துரைமுருகன் ஆகியோர் மாற்றுக் கட்சியினர் என்று தான் சொன்னோம். அந்த கட்சியின் பெயரைக் கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சி பெயரை சொல்கிறோம். உண்மையிலேயே தமிழர்களுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால் அவர்கள் பெயரை சொல்லலாம். வேஷம் போடுபவர்களுக்கு அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதற்காக நாங்கள் பயப்படப்பட்டோம். நீங்கள் இப்படி தரக்குறைவாக பேச பேச தான் திராவிட மாடல் அரசு வளர்ந்து வருகிறது. அதனால் தான் உங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

https://minnambalam.com/political-news/mk-stalin-criticized-seeman-in-anna-arivalayam/

பெரியார் சிலை பரிசு… திமுகவில் இணைந்த 3,000 நாம் தமிழர் கட்சியினர்!

Jan 24, 2025
SSAVtUaN-FotoJet-7-4.jpg

நாம் தமிழர் கட்சியில் இருந்து 3,000 பேர் விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜனவரி 24) திமுகவில் இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, திமுக துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொண்டனர். 

Screenshot-2025-01-24-112626-1.jpg

அந்தவகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் திமுகவில் இன்று இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், நெல்லை கண்ணன், சுப்பையா பாண்டியன், கலியபெருமாள், நாமக்கல் வினோத், நாகூர் கனி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என 30 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அண்ணா அறிவாயலம் கலைஞர் அரங்கிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு புத்தகம், சால்வை, பெரியார் சிலைகள் வழங்கி நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கெளரவித்தார்.

https://minnambalam.com/political-news/ntk-cadres-gifts-mk-stalin-to-periyar-statue-joined-dmk/

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பேச்சு, கலைஞர் சாகும் வரைக்கும் சீமான் பெயரை சொல்லவே இல்லை. தகுதி இல்லாதவர்களுக்கு நாமே அடையாளம் வழங்கி விடக்கூடாது என்பதால் அவர் அதனைச் செய்யவில்லை. 

இன்றும் ப. சிதம்பரம் போன்ற பழுத்த அரசியல் தலைவர்கள் சீமான் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மாடு பட்டிகளில் கால்நடைகளை எண்ணிப்பார்ப்பது போல... சரியாக 3000 தானா? நம்பலாமா? இது தமிழ் நாட்டின் இன்னும் ஒரு அரசியல் சர்க்கஸ் என்று கடந்து போவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், நெல்லை கண்ணன், சுப்பையா பாண்டியன், கலியபெருமாள், நாமக்கல் வினோத், நாகூர் கனி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என 30 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.

செக்ஸ் சைக்கோ சீமான் கட்சியில் இது வழமைதானே?

இவர்களுக்கு அண்ணன் கொடுக்கும் பெயர் பிசிறு.

தாம் ஏமாற்றபடுகிறோம் என்பதை ஒரு பேட்ஜ் உணர்ந்து வெளியேற….

அண்ணன் அடுத்த 18-28 வயதுள்ள பேட்ஜுக்கு மூளையை கழுவி யூஸ் பண்ண ஆரம்பிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 21:40, goshan_che said:

செக்ஸ் சைக்கோ சீமான் கட்சியில் இது வழமைதானே?

அதற்காக செக்ஸ் தந்தை பெரியாரின் சிலையையா கொடுப்பார்கள்?

திமுகவில் இருந்தது யாரும் வெளியேறியதே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அதற்காக செக்ஸ் தந்தை பெரியாரின் சிலையையா கொடுப்பார்கள்?

திமுகவில் இருந்தது யாரும் வெளியேறியதே இல்லையா?

தந்தை பெரியாரின் வாரிசுதான் சங்கி சைமன், அதான் தந்தை எட்டடி பாய்ந்தால் சங்கி பதினாறு அடி பாய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, செவ்வியன் said:

தந்தை பெரியாரின் வாரிசுதான் சங்கி சைமன், அதான் தந்தை எட்டடி பாய்ந்தால் சங்கி பதினாறு அடி பாய்கிறது.

சீமான் ஒன்றும் பேத்திவயது பெண்ணை காதலிக்கவோ மணமுடிக்கவோ இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

சீமான் ஒன்றும் பேத்திவயது பெண்ணை காதலிக்கவோ மணமுடிக்கவோ இல்லையே!

ஈவேரா கன்னடர் பேத்தி வயது பெண்ணை மணந்தார், சங்கி சைமன் மலையாளி மகள் வயது பெண்ணை மணந்தார், அதான் எட்டடிக்கும் பதினாரடிக்கும் உள்ள வேறுபாடு. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, செவ்வியன் said:

தந்தை பெரியாரின் வாரிசுதான் சங்கி சைமன், அதான் தந்தை எட்டடி பாய்ந்தால் சங்கி பதினாறு அடி பாய்கிறது.

பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லி கட்சி ஆரம்பித்து இன்று அவரை ஒழிப்பதே தனது வேலை என்று அறிவித்தவர் சீமான். ஜேவிபி கட்சியில் முன்பு தான் இருந்து வந்ததால்  ஜேவிபி பெரும்பான்மை பெறுவதற்காக கடைசியாக நடைபெற்ற தேர்தலில்  தான்  போட்டிட மாட்டேன் என்று அறிவித்தவர் விமல் வீரவன்ச. இந்த இலங்கை  சிங்களவருக்கு உள்ள நேர்மை கூட திராவிடரான சீமனுக்கு இல்லை 😟

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 12:41, பகிடி said:

சரியான பேச்சு, கலைஞர் சாகும் வரைக்கும் சீமான் பெயரை சொல்லவே இல்லை. தகுதி இல்லாதவர்களுக்கு நாமே அடையாளம் வழங்கி விடக்கூடாது என்பதால் அவர் அதனைச் செய்யவில்லை. 

இன்றும் ப. சிதம்பரம் போன்ற பழுத்த அரசியல் தலைவர்கள் சீமான் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை 

இந்த‌ சாக்க‌டைக்கு க‌ருநாதி ம‌க‌ன் என்ர‌ அந்தேஸ்ச‌ த‌விற‌ த‌மிழ் நாட்டை ஆள‌ என்ன‌ த‌குதி இருக்கு

த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ர்க‌ளில் இவ‌ரை மாதிரி ஏமாளி கோமாளி முத‌ல‌மைச்ச‌ர‌ யாரும் பார்த்து ஒருக்க‌ மாட்டின‌ம்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து வெறும் 37பேர்க‌ள் தான் இணைந்தார்க‌ள் இவ‌ர் முன்

மீதாம் பர‌ம்ப‌ரை திமுக்கா கொத்த‌டிமைக‌ள்..................

இவ‌ர்க‌ள் சீமானின் பெய‌ரை சொல்லாம‌ தான் சீமான் 35ல‌ச்ச‌ ம‌க்க‌ளின் ஓட்டை பெற்றார்

இவ‌ர்கள் ம‌க்க‌ளுக்கு காசை கொடுத்து ஓட்டை வாங்கி வென்று விட்டு இது பெரியார் ம‌ன் இது திராவிட‌ மாட‌ல் என்று பீத்துற‌து..........இவ‌ர்க‌ள் செய்வ‌து சாக்க‌டை அரசிய‌ல்................

10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌து ஊழ‌ல் செய்ய‌ முடிய‌ வில்லையே என‌ ஊழ‌ல் ப‌சியோட‌ இருந்த‌ கொள்ளைக் கூட்ட‌ம் தான் இவ‌ர்க‌ள்................ஊட‌க‌த்தை ச‌ந்திக்க‌ துணிவில்லா முத‌ல‌மைச்ச‌ர்

காம‌க் கொடுர‌ங்க‌ளை க‌ட்சியில் வைத்து கொண்டு போலி பெண்ணிய‌ம் சொறியார் ப‌ற்றி பேசும் போலிக‌ள் இவ‌ர்க‌ள்....................

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லி கட்சி ஆரம்பித்து இன்று அவரை ஒழிப்பதே தனது வேலை என்று அறிவித்தவர் சீமான். ஜேவிபி கட்சியில் முன்பு தான் இருந்து வந்ததால்  ஜேவிபி பெரும்பான்மை பெறுவதற்காக கடைசியாக நடைபெற்ற தேர்தலில்  தான்  போட்டிட மாட்டேன் என்று அறிவித்தவர் விமல் வீரவன்ச. இந்த இலங்கை  சிங்களவருக்கு உள்ள நேர்மை கூட திராவிடரான சீமனுக்கு இல்லை 😟

பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பெரியாரியவாதிகள் இவ்வளவு நாள் பாம்புக்கு பால் வார்த்துவிட்டு இப்போ அந்த பாம்புக்கு விஷமிருக்கு, கொத்துது என்று புலம்புகிறார்கள்.

Let them dance to their own tunes.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ சாக்க‌டைக்கு க‌ருநாதி ம‌க‌ன் என்ர‌ அந்தேஸ்ச‌ த‌விற‌ த‌மிழ் நாட்டை ஆள‌ என்ன‌ த‌குதி இருக்கு

த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ர்க‌ளில் இவ‌ரை மாதிரி ஏமாளி கோமாளி முத‌ல‌மைச்ச‌ர‌ யாரும் பார்த்து ஒருக்க‌ மாட்டின‌ம்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து வெறும் 37பேர்க‌ள் தான் இணைந்தார்க‌ள் இவ‌ர் முன்

மீதாம் பர‌ம்ப‌ரை திமுக்கா கொத்த‌டிமைக‌ள்..................

இவ‌ர்க‌ள் சீமானின் பெய‌ரை சொல்லாம‌ தான் சீமான் 35ல‌ச்ச‌ ம‌க்க‌ளின் ஓட்டை பெற்றார்

இவ‌ர்கள் ம‌க்க‌ளுக்கு காசை கொடுத்து ஓட்டை வாங்கி வென்று விட்டு இது பெரியார் ம‌ன் இது திராவிட‌ மாட‌ல் என்று பீத்துற‌து..........இவ‌ர்க‌ள் செய்வ‌து சாக்க‌டை அரசிய‌ல்................

10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌து ஊழ‌ல் செய்ய‌ முடிய‌ வில்லையே என‌ ஊழ‌ல் ப‌சியோட‌ இருந்த‌ கொள்ளைக் கூட்ட‌ம் தான் இவ‌ர்க‌ள்................ஊட‌க‌த்தை ச‌ந்திக்க‌ துணிவில்லா முத‌ல‌மைச்ச‌ர்

காம‌க் கொடுர‌ங்க‌ளை க‌ட்சியில் வைத்து கொண்டு போலி பெண்ணிய‌ம் சொறியார் ப‌ற்றி பேசும் போலிக‌ள் இவ‌ர்க‌ள்....................

உங்கள் கருத்தில் நீங்கள் கருணாநிதி மகன் என்ற அந்தஸ்தை தவிர என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் கருணாநிதி ஒரு அந்தஸ்து உள்ளவர் என்பதை ஏற்கிறீர்கள் என்று பொருள்.

எதை வைத்து இவரை ஏமாளி கோமாளி எங்கிறீர்கள்? இவர் ஏமாளி கோமாளி என்றால் எப்படி முதலமைச்சர் ஆனார்? எப்படி கட்சிக்கு தலைவராக நீடிக்க முடிகின்றது. அப்படியானால் இவர் கொஞ்சம் புத்திசாலி என்று பொருள் 

மக்கள் எல்லோரும் காசு கொடுத்தால்த் தான் வாக்குப் போடுவார்கள் என்றால் மக்கள் பணக்காரக் கட்சி பிஜேபி க்கு அல்லவா வாக்குப் போட்டு இருக்க வேண்டும்? ஆகவே வாக்குப் போட்டவர்களில் பெரும்பான்மை காசு கொடுத்தாலும் கொடுக்காமல் விட்டாலும் இவர்களுக்கு வாக்குப் போடும் என்று பொருள் 

கட்சி என்பது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. அதற்கும் தனி மனித ஒழுக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? 

தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவரை தரக்குறைவாக பேச உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்கள் குற்றசாட்டுக்கள் பிழை என்பதையே மக்கள் தீர்ப்பு காட்டுகின்றது 

அடுத்த தேர்தலில் சீமானுக்கு வாக்குகள் குறையும். விஜய் சீமானை விட வாக்குகள் அதிகம் வாங்குவார். 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ சாக்க‌டைக்கு க‌ருநாதி ம‌க‌ன் என்ர‌ அந்தேஸ்ச‌ த‌விற‌ த‌மிழ் நாட்டை ஆள‌ என்ன‌ த‌குதி இருக்கு

நேற்று தான் கற்றறிந்த பெரியவர் சங்கி சைமன் 35 லட்ச வாக்குகளை பெற்றிருக்கிறார் அவரை திட்டுவது ஓட்டுப் போட்ட இளைஞர்களை கேவலப்படுத்துவது போல என்று எனக்கு அறிவுரை வழங்கினார். இன்று தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் வீரப்பையனுக்கு என்ன அறிவுரை கூறப்போகிறாரோ...

34 minutes ago, வீரப் பையன்26 said:

காம‌க் கொடுர‌ங்க‌ளை க‌ட்சியில் வைத்து கொண்டு போலி பெண்ணிய‌ம் சொறியார் ப‌ற்றி பேசும் போலிக‌ள் இவ‌ர்க‌ள்....................

தவறாக நினைத்து விட்டீர்கள், சங்கி சைமன் திமுகவில் இல்லை, அவர் போட்டியாக ஒரு காமக் கொடூர கட்சியை நடத்தி திமுகவிற்கு கடும் போட்டியாக இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செவ்வியன் said:

நேற்று தான் கற்றறிந்த பெரியவர் சங்கி சைமன் 35 லட்ச வாக்குகளை பெற்றிருக்கிறார் அவரை திட்டுவது ஓட்டுப் போட்ட இளைஞர்களை கேவலப்படுத்துவது போல என்று எனக்கு அறிவுரை வழங்கினார். இன்று தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் வீரப்பையனுக்கு என்ன அறிவுரை கூறப்போகிறாரோ...

காசை கொடுத்து ஓட்டை வாங்கி ஜெயிச்ச‌வ‌ன் எல்லாம் முத‌ல‌மைச்ச‌ரா.................முத‌ல் தேர்த‌ல‌ நேர்மைய‌ எதிர் கொள்ள‌ க‌ற்றுக் கொடுங்கோ உங்க‌டை ஆட்க‌ளுக்கு😁👍.................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

காசை கொடுத்து ஓட்டை வாங்கி ஜெயிச்ச‌வ‌ன் எல்லாம் முத‌ல‌மைச்ச‌ரா.................முத‌ல் தேர்த‌ல‌ நேர்மைய‌ எதிர் கொள்ள‌ க‌ற்றுக் கொடுங்கோ உங்க‌டை 

என்ன செய்ய தமிழ்நாட்டு மக்கள் வாயால் வடை சுடும் சங்கி சைமனுக்கு பதில் காசு கொடுக்கும் கட்சியே மேல்னு ஓட்ட போடினம். 

நம்ம சங்கி சைமனுக்கு வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமில்லை. மக்களும் திருந்தப் போவதில்லை , இந்த சங்கியும் திருந்தப்போவதில்லை.

தமிழ்நாட்டுன் கதி அதோ கதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகிடி said:

உங்கள் கருத்தில் நீங்கள் கருணாநிதி மகன் என்ற அந்தஸ்தை தவிர என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் கருணாநிதி ஒரு அந்தஸ்து உள்ளவர் என்பதை ஏற்கிறீர்கள் என்று பொருள்.

எதை வைத்து இவரை ஏமாளி கோமாளி எங்கிறீர்கள்? இவர் ஏமாளி கோமாளி என்றால் எப்படி முதலமைச்சர் ஆனார்? எப்படி கட்சிக்கு தலைவராக நீடிக்க முடிகின்றது. அப்படியானால் இவர் கொஞ்சம் புத்திசாலி என்று பொருள் 

மக்கள் எல்லோரும் காசு கொடுத்தால்த் தான் வாக்குப் போடுவார்கள் என்றால் மக்கள் பணக்காரக் கட்சி பிஜேபி க்கு அல்லவா வாக்குப் போட்டு இருக்க வேண்டும்? ஆகவே வாக்குப் போட்டவர்களில் பெரும்பான்மை காசு கொடுத்தாலும் கொடுக்காமல் விட்டாலும் இவர்களுக்கு வாக்குப் போடும் என்று பொருள் 

கட்சி என்பது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. அதற்கும் தனி மனித ஒழுக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? 

தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவரை தரக்குறைவாக பேச உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்கள் குற்றசாட்டுக்கள் பிழை என்பதையே மக்கள் தீர்ப்பு காட்டுகின்றது 

அடுத்த தேர்தலில் சீமானுக்கு வாக்குகள் குறையும். விஜய் சீமானை விட வாக்குகள் அதிகம் வாங்குவார். 

க‌ருணாநிதி பெரிய‌ அர‌சிய‌ல் ஆசான் கிடையாது

எம் ஜீ ஆரிட‌ம் தோல்வி 

ஜெய‌ல‌லிதாவிட‌ம் தோல்வி

ஸ்டாலின‌ விட‌ க‌ருணாநிதி அர‌சில‌லில் ப‌ர‌பாயில்லை

இவ‌ருக்கு துண்ட‌றிக்கை பார்த்தும் ஒழுங்காய் ப‌டிக்க‌த் தெரியாது

ஸ்டாலின் காமெடி என்று இணைய‌த்தில் அடிச்சு பாருங்கோ இவ‌ரின் காமெடிக‌ள் எவ‌ள‌வு இருக்கு என்று என்று தெரியும்...........2500 ஓட‌ 500 கூட்டினால் 5000ரூபாய் இவ‌ருக்கு க‌ண‌க்கு பாட‌ம் சொல்லி கொடுத்த‌ வாத்தியாருக்கு பிடிச்சு செவிட்டை பொத்தி இர‌ண்டு போட்டு இருந்தால் ஸ்டாலின் க‌ண‌க்கை ச‌ரியா சொல்லி இருப்பார் லொள்😁👍...................

3 minutes ago, செவ்வியன் said:

என்ன செய்ய தமிழ்நாட்டு மக்கள் வாயால் வடை சுடும் சங்கி சைமனுக்கு பதில் காசு கொடுக்கும் கட்சியே மேல்னு ஓட்ட போடினம். 

நம்ம சங்கி சைமனுக்கு வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமில்லை. மக்களும் திருந்தப் போவதில்லை , இந்த சங்கியும் திருந்தப்போவதில்லை.

தமிழ்நாட்டுன் கதி அதோ கதி தான்.

சீமான் ச‌ங்கி என்றால் த‌மிழ் நாட்டுக்கு அந்த‌ ச‌ங்கிய‌லை வ‌ள‌த்து விட்ட‌து நீங்க‌ள் சிங்சாக் அடிக்கும் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் தான்...............................முத‌ல் அவ‌ர்க‌ளை விம‌ர்சியுங்கோ 

சீமானின் வ‌ள‌ர்ச்சி உங்க‌ளுக்கு எங்கையோ சுடுது அது தான் ர‌த்த‌ கொதிப்பில் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் உற‌வே கூள் ட‌வுன்😁😂👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

தமிழினத்துக்கு எதிரான திருடர்களையும் அடிப்போம் , தமிழின அழிவில் பிழைப்பை நடத்தும் சங்கி சைமனின் ராம் தமிழர் வகையறாக்களையும் மிதிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செவ்வியன் said:

தமிழினத்துக்கு எதிரான திருடர்களையும் அடிப்போம் , தமிழின அழிவில் பிழைப்பை நடத்தும் சங்கி சைமனின் ராம் தமிழர் வகையறாக்களையும் மிதிப்போம்

ச‌ரி மோதிப் பாப்போம்

ஆனால் அவ‌தூற‌ கையில் எடுக்க‌ கூடாது👍....................

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 14:48, vanangaamudi said:

ஆடு மாடு பட்டிகளில் கால்நடைகளை எண்ணிப்பார்ப்பது போல... சரியாக 3000 தானா? நம்பலாமா? இது தமிழ் நாட்டின் இன்னும் ஒரு அரசியல் சர்க்கஸ் என்று கடந்து போவோம்.

நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் பத்திரம் வழங்குவது வழமை என்றும் அது திமுகவில் சேர்ந்த ஆட்களிடம் இல்லை என்றும் வாசித்தேன். பார்க்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வியன் செவ்வனே செய்வதால்…

எனக்கு நேரம் மிச்சம்.

நன்றி செவ்வியன்.

பிகு

யார் எழுதுகிறார் என்பதை கிட்டதட்ட கண்டு பிடித்தே விட்டேன்.

ஆனால் இது நல்லதுக்குத்தான்.

சீமானின் டவுசர கழட்டனும் அதை நேர்மையாக கழட்டினானும் போலியாக கழட்டினாலும் - டிரவுசர் கழண்டா போதும்.

It’s a win-win situation for me 🤣.

பிகு

AI வந்தாலும் கோஷானை கொப்பி அடிக்க முடியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, செவ்வியன் said:

நேற்று தான் கற்றறிந்த பெரியவர் சங்கி சைமன் 35 லட்ச வாக்குகளை பெற்றிருக்கிறார் அவரை திட்டுவது ஓட்டுப் போட்ட இளைஞர்களை கேவலப்படுத்துவது போல என்று எனக்கு அறிவுரை வழங்கினார். இன்று தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் வீரப்பையனுக்கு என்ன அறிவுரை கூறப்போகிறாரோ...

😂

நீங்கள் விசுகு அய்யாவை சொல்கின்றீர்கள் அவர் சீமானின் பாதுகாப்பு தூண்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சீமானை ஆதரிக்க முக்கிய காரணம் தமிழ்  தேசியமும் அவரது சமூக நலன்களுமே. அதை மேடைக்கு மேடை உரக்க கூறிவருகின்றார்.
அது மட்டுமல்லாமல்  பொது இணைய வெளிகளில் தலைவர் படத்தை இணைத்தால் சில நிமிடங்களிலேயே அகற்றப்படும் நிலை இருக்கும் போது ......மேடைக்கு மேடை தலைவர் பிரபாரகரனின் படத்தையும் விடுதலைப்புலிகளின் கொள்கையையும் காவித்திரிபவர் சீமான் மட்டுமே. சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்பினால் எத்தனையோ கொள்கைகளை முன்னிறுத்தலாம்.

இப்படி நாலா பக்கமும் அடிவாங்கி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் சீமானுக்கு  தேவையில்லாத வேலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான் சீமானை ஆதரிக்க முக்கிய காரணம் தமிழ்  தேசியமும் அவரது சமூக நலன்களுமே. அதை மேடைக்கு மேடை உரக்க கூறிவருகின்றார்.
அது மட்டுமல்லாமல்  பொது இணைய வெளிகளில் தலைவர் படத்தை இணைத்தால் சில நிமிடங்களிலேயே அகற்றப்படும் நிலை இருக்கும் போது ......மேடைக்கு மேடை தலைவர் பிரபாரகரனின் படத்தையும் விடுதலைப்புலிகளின் கொள்கையையும் காவித்திரிபவர் சீமான் மட்டுமே. சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்பினால் எத்தனையோ கொள்கைகளை முன்னிறுத்தலாம்.

இப்படி நாலா பக்கமும் அடிவாங்கி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் சீமானுக்கு  தேவையில்லாத வேலைதான்.

அருமையா சொன்னீங்க‌ள் தாத்தா🙏👍............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.