Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்.

ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார்.

அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும்.

“இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது” என்றார்.

உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் விதம் பற்றி மெரென்சிகே விளக்கினார்.

அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1419267

  • Replies 54
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை

  • goshan_che
    goshan_che

    ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம்

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம்  இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரெண்டு வருடம் பழைய ரி கொண்டிசன் ஹொண்டா வெசல்ஸ் £ 63,000 🤯.

அதை விட திறமான ஹொண்டா எச் ஆர் வி, புது ஷேப், 2 வருடம், 5 ஆயிரம் மைலுக்குள், £23,000க்கு கீழே வாங்கலாம் யூகேயில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இரெண்டு வருடம் பழைய ரி கொண்டிசன் ஹொண்டா வெசல்ஸ் £ 63,000 🤯.

அதை விட திறமான ஹொண்டா எச் ஆர் வி, புது ஷேப், 2 வருடம், 5 ஆயிரம் மைலுக்குள், £23,000க்கு கீழே வாங்கலாம் யூகேயில்.

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி!

நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1419302

😂 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது.

இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன.

இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro  என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.]

இந்த கோடி என்பது என்ன பத்து மில்லியனா? அல்லது ஒரு மில்லியனா? ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு விளக்கம் தருகின்றார்கள்.
உண்மையான சரியான எண்ணிக்கை இலங்கை 5 மில்லியன் ரூபாவிற்கு புதிய   Toyota Yaris  (Hybrid) வெளிநாட்டில் வாங்க முடியும் என்கின்றார் அதை புதிதாக வாங்கியவர்.

On 2/2/2025 at 15:18, goshan_che said:

மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது.

இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன.

இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro  என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars

நல்லதொரு ஆலோசனை.  ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவர்  இலங்கை காணெளி ஒன்றை அனுப்பி இருந்தார் அதில் இலங்கை சிறிய கார் கொம்பனி கார் பாகங்கள் தயாரிக்கும் கொம்பனி என்று நினைக்கிறேன்   மின்சார  கார் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அரசிடம் அனுமதிபெற்று எதிர்காலத்தில் தாங்கள் கார்கள் உற்பத்தி  செய்ய போவதாகவும் சொன்னார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கோடி என்பது என்ன பத்து மில்லியனா? அல்லது ஒரு மில்லியனா? ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு விளக்கம் தருகின்றார்கள்.

ஒரு இலட்சம் = 100,000 Rs

ஒரு கோடி = 100 இலட்சம்.

ஒரு மில்லியன் = 10 இலட்சம்.

ஒரு கோடி = 10 மில்லியன்

ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs

ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம் = 10 மில்லியன்.

கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை 5 மில்லியன் ரூபாவிற்கு புதிய   Toyota Yaris  (Hybrid) வெளிநாட்டில் வாங்க முடியும் என்கின்றார் அதை புதிதாக வாங்கியவர்.

இல்லை. இலங்கை காசு 5 மில்லியன் எண்டால் அண்ணளவாக £13,000.

யூகேயில் ஒரு யாரிஸ் £23,000 க்கு மேல்தான்.

ஜப்பானில் கூட ஒரு யாரிஸ் கார் brand new இந்த விலைக்கு வாங்க முடியாது என நினைக்கிறேன்.

இந்தியாவில் இந்திய சந்தைக்கென தயாரிக்கப்படும் டொயோட்டா கிலன்சா 700,000 இந்திய ரூபாய் (£7000, 2.6 மில்லியன் இலங்கை ரூபாய்).

https://www.toyotabharat.com/pricelist/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்லதொரு ஆலோசனை.  ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவர்  இலங்கை காணெளி ஒன்றை அனுப்பி இருந்தார் அதில் இலங்கை சிறிய கார் கொம்பனி கார் பாகங்கள் தயாரிக்கும் கொம்பனி என்று நினைக்கிறேன்   மின்சார  கார் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அரசிடம் அனுமதிபெற்று எதிர்காலத்தில் தாங்கள் கார்கள் உற்பத்தி  செய்ய போவதாகவும் சொன்னார்கள்

ரணில் காலத்தில் குருநாகலவில் VW ஒரு அசெம்பிள் பண்ணும் ஆலை உருவாக்கியே விட்டது என்றார்கள்.

அது அப்படியே போய்விட்டது.

மிக வினோதமான வாகனசந்தை இலங்கையுடையது. 1988 ஆம் ஆண்டு டொயோட்டா டொல்பின் வான் வாங்கும் காசுக்கு இலண்டனில் 2025 புத்தம் புது Dacia Jogger 7 seater வாங்கலாம்.

வாகன விலைகளை இந்த சைட்டில் போய் பாருங்கள்.

https://riyasewana.com

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 22:18, goshan_che said:

மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது.

இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன.

இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro  என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars

எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம் 
இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கையின் வாகனச்சந்தை நீங்கள் கூறியது போலவே மிக வினோதமானது. 

2 hours ago, goshan_che said:

ரணில் காலத்தில் குருநாகலவில் VW ஒரு அசெம்பிள் பண்ணும் ஆலை உருவாக்கியே விட்டது என்றார்கள்.

உது பச்சை உருட்டு, உந்த தேர்தல் நெருங்கும்போது போது மன்னார் கடற்படுக்கை எரிவாயு மற்றும் நீல இலங்கை வெளிநாட்டுக்கடனை  அடைக்கக்கூடிய மாணிக்கக்கற்கள் வெளியே வருவது போல.
https://srilanka.factcrescendo.com/english/misleading-images-about-the-volkswagen-factory-in-kuliyapitiya/

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்லதொரு ஆலோசனை.  ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவர்  இலங்கை காணெளி ஒன்றை அனுப்பி இருந்தார் அதில் இலங்கை சிறிய கார் கொம்பனி கார் பாகங்கள் தயாரிக்கும் கொம்பனி என்று நினைக்கிறேன்   மின்சார  கார் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அரசிடம் அனுமதிபெற்று எதிர்காலத்தில் தாங்கள் கார்கள் உற்பத்தி  செய்ய போவதாகவும் சொன்னார்கள்

இலங்கையில் தற்போது Bajaj மற்றும் TVS கம்பெனிகள் இந்தியாவில் இருந்து முக்கிய பாகங்களை தருவித்து 
மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் பண்ணுகிறார்கள். டயர் மற்றும் இருப்பினாலான உதிரிப்பகங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன. அப்படி அசெம்பிள் செய்யும் மோட்டார்சைக்கிள்களையே இலங்கையில் 7 லட்சத்திற்கு குறைய விற்கமுடியவில்லை. 
Micro வினால் அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களை தற்போதைய நிலவரப்படி 1.5 கோடிக்கு குறைய விற்கவே முடியாது. Micro assembled  வாகனங்கள் ஏற்கனவே இலங்கையில் தலையிடிக்கு புகழ் பெற்றவை.

BYD மிகவிரைவில் இலங்கைக்குள் பாயத்தயாராக இருக்கிறார்கள் போல 
இம்முறை ஊர் போயிருந்தபோது விற்பனை சேவை நிலையங்களுக்கு கேள்வி கோரிய விளம்பரம் கண்ணில்பட்டது. முழுவெடுப்புடன் இறங்கினால் ஒரு கலக்கு கலக்கலாம், இவர்களுடைய BYD ATTO 3 சிங்கையில் சக்கை போடு போடுகிறது. 0% down payment இல் தருகிறார்கள்          

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

BYD மிகவிரைவில் இலங்கைக்குள் பாயத்தயாராக இருக்கிறார்கள் போல 
இம்முறை ஊர் போயிருந்தபோது விற்பனை சேவை நிலையங்களுக்கு கேள்வி கோரிய விளம்பரம் கண்ணில்பட்டது. முழுவெடுப்புடன் இறங்கினால் ஒரு கலக்கு கலக்கலாம், இவர்களுடைய BYD ATTO 3 சிங்கையில் சக்கை போடு போடுகிறது. 0% down payment இல் தருகிறார்கள்          

தகவல்களுக்கு நன்றி.

BYD இங்கேயும் முழு வீச்சில் இறங்கியுள்ளார்கள். 0% உம் உண்டு.

ஆனால் எனக்கு ஷேப் பிடிக்கவில்லை.

JAECOO என ஒண்டு புதுசா வருது. டெஸ்ட் டிரைவ் கேட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஒரு கோடி = 100 இலட்சம்.

👍

நன்றி
இப்படி ஒரு விளக்கம் இல்லாமை தான் பிரச்சனை.தமிழ் தேசியம் போன்று சொல்லுகிறார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

நன்றி
இப்படி ஒரு விளக்கம் இல்லாமை தான் பிரச்சனை.தமிழ் தேசியம் போன்று சொல்லுகிறார்கள் 😂

🤣 சிரிக்க வைத்த உதாரணம்.

காணி அளவீடு பற்றி கேட்டால் தலை சுத்தும்.

1 பரப்பு =1.2 லாட்சம் ஆ?

அல்லது

1 பரப்பு = 1 லாட்சம் ஆ?

பல பேரிடம் கேட்டு விட்டேன். 

ஆளுக்கு ஒரு கதை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣

🤣....................

களத்தில் ஒரே ஒரு கணக்கு வாத்தியார் தான்................. அது யார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேலே இருக்கும் கோஷானின் பதிவிற்கு சிரித்து வைத்திருக்கும் அடுத்தவர் யார் என்று பார்க்கவேண்டும்............🤣.

6 hours ago, goshan_che said:

ஆனால் எனக்கு ஷேப் பிடிக்கவில்லை.

கோஷானுக்கு எப்படியான ஷேப் பிடிக்கும்?

On 2/2/2025 at 15:18, goshan_che said:

மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது.

சென்ற வருடம் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையான கார்களில் முதல் இடத்தில் உள்ளது Dacia. 
12 ஆயிரம் ஈரோவிற்கு வாங்கலாம்.
https://www.dacia.fr/gamme-vehicules/sandero.html

BYD ஐரோப்பிய வரிக் கெடுபிடிகளால் கொஞ்சம் அடக்கமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 சிரிக்க வைத்த உதாரணம்.

காணி அளவீடு பற்றி கேட்டால் தலை சுத்தும்.

1 பரப்பு =1.2 லாட்சம் ஆ?

அல்லது

1 பரப்பு = 1 லாட்சம் ஆ?

பல பேரிடம் கேட்டு விட்டேன். 

ஆளுக்கு ஒரு கதை.

இரண்டு விலையிலும் விற்கலாம் வாங்கலாம்.

சீனாவிலிருந்து மின்சார வண்டிகள் மிகவும் மலிவான விலைக்கு விற்கிறார்களாமே?

ஏன் இலங்கை அதை கொள்வனவு செய்யவில்லை.

இந்திய வாகனங்களை இறக்கி விற்காதவரை சந்தோசமே.

32 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய வாகனங்களை இறக்கி விற்காதவரை சந்தோசமே.

https://www.volza.com/p/vehicle/export/export-from-india/cod-sri-lanka/

மின் உற்பத்தி, பெற்றோலிய வழங்கல் போன்ற பாரிய வர்த்தகங்கள் போலவே இந்தியாவை மீறி இலங்கையில் கார் உற்பத்தி செய்வது அல்லது இறக்குமதி செய்வது கடினம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கோஷானுக்கு எப்படியான ஷேப் பிடிக்கும்?

க்ளூ தந்திருக்கிறாரே மேலே? VW தான், அதிலும் பழைய VW Beetle ஆக இருக்கும் என ஊகிக்கிறேன்😂! நான் சொல்வது தவறாக இருக்கலாம் (வசி "ரச்"😎)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

கோஷானுக்கு எப்படியான ஷேப் பிடிக்கும்?

பத்மினி மாரி…

Fiat Padmin வேற ஏதும் நினைக்க வேண்டாம்🤣.

பிகு

எனகு long wheel base saloon அல்லது convertible - இலண்டன் வந்ததும் வாங்க பட்ட சத்தியங்களில் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட மாட்டேன். இதுதான் அடுத்த தெரிவு. 

6 hours ago, இணையவன் said:

சென்ற வருடம் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையான கார்களில் முதல் இடத்தில் உள்ளது Dacia. 
12 ஆயிரம் ஈரோவிற்கு வாங்கலாம்.
https://www.dacia.fr/gamme-vehicules/sandero.html

BYD ஐரோப்பிய வரிக் கெடுபிடிகளால் கொஞ்சம் அடக்கமாக உள்ளது.

ஓம் என் மகனின் நண்பனின் தாய் ஒரு Sandreo வச்சிருக்கிறா…மிகவும் basic ஆனால் நகர்புற ஓட்டத்துக்கு நல்லாகத்தான் போகுது. 

Jogger Extreme கொஞ்சம் வசதியாயும், விலை குறைவாயும் தெரிகிறது. 7 சீட்கள் வேறு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டு விலையிலும் விற்கலாம் வாங்கலாம்.

விளங்கவில்லை அண்ணை.

நான் சொல்வது இலட்சம் அல்ல, லாட்சம். காணி அளவிடும் அலகு.

6 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய வாகனங்களை இறக்கி விற்காதவரை சந்தோசமே.

இலங்கையில் ஓடும் கன, மத்திய ரக வாகனங்கள் பலதும் இந்தியந்தான்.

கார்கள் ஜப்பான் ஆதிக்கம் கூட. ஆனால் அதிலும் இப்போ இந்தியன் ஹொண்டா, இந்தியன் டொயோட்டா இறங்குது.

வான் - இன்றுவரை ஜப்பாந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

க்ளூ தந்திருக்கிறாரே மேலே? VW தான், அதிலும் பழைய VW Beetle ஆக இருக்கும் என ஊகிக்கிறேன்😂! நான் சொல்வது தவறாக இருக்கலாம் (வசி "ரச்"😎)

ஸ்கெண்டிநேவியன், ஜேர்மன், பிரிட்டிஷ்… இந்த ஒழுங்கில்தான் என் விருப்பம்.

இத்தாலியன் சிலதில் மனம் போவது உண்மைதான்…ஆனால் நம்பிக்கை, உதரவாதம் இல்லை….அல்லது எமக்கு கட்டுபடியாகாது 🤣.

இன்னும் காரை பற்றித்தான் கதைக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இன்னும் காரை பற்றித்தான் கதைக்கிறன்🤣

இங்கு ஒரு ஐந்தாறு வருடங்கள் முன் வரை கூட எம்மவர்கள் எவரும் அமெரிக்கன் கார்களை வாங்கவேமாட்டார்கள். நீண்டகால நம்பிக்கை இன்மை, மிகக்குறைந்த மீள்விலை, அதிக பெட்ரோல் செலவு இப்படி பலப்பல காரணங்கள். பொதுவாக எம்மவர்கள் ஜப்பான் தயாரிப்புகளை வாங்குவார்கள். வருமானம் அதிகமானால் ஜேர்மன் தயாரிப்புகள் தான், அது ஒரு அந்தஸ்து போல......... முன்னர் கொரியாவின் தயாரிப்புகளையும் பலரும் வாங்குவதில்லை. ஆனால் இப்பொழுது அவை மிகவும் தரமும், வசதியும் உள்ளவை என்று அவைகளையும் வாங்குகின்றனர்.

டெஸ்லா வந்த பின் வாங்குகின்றார்கள், ஆனால் அது வேற கணக்கு. நான் இன்னமும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு காசு கொடுக்க மனம் இல்லை.

நான், முடிந்தவரை, அமெரிக்கன் வாகனங்களையே வாங்கிக் கொண்டிருக்கின்றேன். அமெரிக்க தேசியம் பேசி, அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣.

2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் பின், அமெரிக்கா தெருவில் நின்றது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. வீடுகளை விட்டு விட்டு மக்கள் போய்க் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வாகன தயாரிப்புகளின் தலைநகரான Detroit இல் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

அப்பொழுது தொலைக்காட்சியில் விவரணப் படம் ஒன்று ஒரு நாள் போனது. வாகனத் தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலையை விட்டு நிற்பாட்டியிருப்பதால், அந்த நகரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு குடும்பத்தலைவி வீட்டில் எதுவுமே இல்லை, மேசையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட இல்லை என்று சொன்னார். அவர் கண்களில் ஒரு ஆறு உடைத்து ஓட தயாராக இருந்தது. வேலை எதுவும் தங்களுக்கு இங்கே இல்லை என்று சொன்னார். இலவச உணவு கொடுக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொன்ன போது, அவர் அடக்கமுடியாமல் அழுதார்.

பின்னர், மிகக் குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அரசு இந்தப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. அவர்கள் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்தார்கள். அது ஒரு புரட்சி, ஆனால் இங்கு வாழும் எம் மக்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு விடயம் நடந்ததையே எங்களில் பலர் அறியார்கள். அந்த நிறுவனங்களும், அந்த மக்களும் மீண்டு வந்தார்கள்.        

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

விளங்கவில்லை அண்ணை.

நான் சொல்வது இலட்சம் அல்ல, லாட்சம். காணி அளவிடும் அலகு.

ஓஓஓ நான் தான் தவறாக எடுத்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

சென்ற வருடம் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையான கார்களில் முதல் இடத்தில் உள்ளது Dacia. 
12 ஆயிரம் ஈரோவிற்கு வாங்கலாம்.

சிறப்பு
4 மில்லியன் இலங்கை ரூபாய்க்குள் வருகின்றது  brand new கார்
10 மில்லியனுக்கு குறைவாக இலங்கையில் வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அழ வேண்டியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரசோதரன் said:

இங்கு ஒரு ஐந்தாறு வருடங்கள் முன் வரை கூட எம்மவர்கள் எவரும் அமெரிக்கன் கார்களை வாங்கவேமாட்டார்கள். நீண்டகால நம்பிக்கை இன்மை, மிகக்குறைந்த மீள்விலை, அதிக பெட்ரோல் செலவு இப்படி பலப்பல காரணங்கள். பொதுவாக எம்மவர்கள் ஜப்பான் தயாரிப்புகளை வாங்குவார்கள். வருமானம் அதிகமானால் ஜேர்மன் தயாரிப்புகள் தான், அது ஒரு அந்தஸ்து போல......... முன்னர் கொரியாவின் தயாரிப்புகளையும் பலரும் வாங்குவதில்லை. ஆனால் இப்பொழுது அவை மிகவும் தரமும், வசதியும் உள்ளவை என்று அவைகளையும் வாங்குகின்றனர்.

டெஸ்லா வந்த பின் வாங்குகின்றார்கள், ஆனால் அது வேற கணக்கு. நான் இன்னமும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு காசு கொடுக்க மனம் இல்லை.

நான், முடிந்தவரை, அமெரிக்கன் வாகனங்களையே வாங்கிக் கொண்டிருக்கின்றேன். அமெரிக்க தேசியம் பேசி, அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣.

2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் பின், அமெரிக்கா தெருவில் நின்றது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. வீடுகளை விட்டு விட்டு மக்கள் போய்க் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வாகன தயாரிப்புகளின் தலைநகரான Detroit இல் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

அப்பொழுது தொலைக்காட்சியில் விவரணப் படம் ஒன்று ஒரு நாள் போனது. வாகனத் தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலையை விட்டு நிற்பாட்டியிருப்பதால், அந்த நகரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு குடும்பத்தலைவி வீட்டில் எதுவுமே இல்லை, மேசையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட இல்லை என்று சொன்னார். அவர் கண்களில் ஒரு ஆறு உடைத்து ஓட தயாராக இருந்தது. வேலை எதுவும் தங்களுக்கு இங்கே இல்லை என்று சொன்னார். இலவச உணவு கொடுக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொன்ன போது, அவர் அடக்கமுடியாமல் அழுதார்.

பின்னர், மிகக் குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அரசு இந்தப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. அவர்கள் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்தார்கள். அது ஒரு புரட்சி, ஆனால் இங்கு வாழும் எம் மக்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு விடயம் நடந்ததையே எங்களில் பலர் அறியார்கள். அந்த நிறுவனங்களும், அந்த மக்களும் மீண்டு வந்தார்கள்.        

இந்த முறை மாத்தும் போது டெஸ்லாவில் மனம் போய், மொடல் 3 டெஸ்ட் டிரைவும் செய்து பார்த்தேன், ஆனால் வாங்கிற காசுக்கு உள்ளே ஒன்றும் இல்லை. சரியான minimalistic, அத்தோடு  இன்னும் எலக்டிரிக் பெற்றோல் போல் இலகுவாக வரவில்லை.

கூடவே ஒவ்வொரு வருடமும் போன் பட்டரி போல் பேட்டரி ஸ்டோரேஜ் 4% ஆல் குறையுமாம்.

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிறப்பு
4 மில்லியன் இலங்கை ரூபாய்க்குள் வருகின்றது  brand new கார்
10 மில்லியனுக்கு குறைவாக இலங்கையில் வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அழ வேண்டியது இல்லை.

இந்த 4 மில்லியன் இலங்கை ரூபாய் - ஐரோப்பாவில் அந்த காரின் விலை.

இதை இலங்கைக்கு கொண்டு போய் வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் கட்டி முடிய சிம்பிளாக 10 மில்லியன் தாண்டும்.

இதை ஒத்த Wagon R ஒரு கோடிக்கு போகும் என்கிறது மேலே செய்தி.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.