Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah)  வீட்டில் யாழ் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

காட்சிப்படுத்தப்பட்ட பதாகை 

மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மேற்குறித்த பதாகை தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை! | Mavai Death Police Inquiry On Mavai S House

இதன்போது, அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவையின் குடும்பத்தாரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டிற்கமையவே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இந்நிலையில், இது குறித்து உறுதிபடுத்துவதற்கு, கே.கே. எஸ் பொலிஸாரை தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் தமக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியாது என தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பதாகை விவகாரம் குறித்து இன்று காலை தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, மேற்குறிப்பிட்ட தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர், செய்த முறைப்பாட்டின் போது, குறிப்பாக இந்த பதாகை காட்சிபடுத்தப்பட்டிருந்ததனால், தமக்கு உயிரச்சுறுத்தல், இருந்தமையாலேயே இறுதி வணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/mavai-death-police-inquiry-on-mavai-s-house-1738844183

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் தனது குள்ளநரி ஆட்டத்தை; தொடக்கிவிட்டார்.மாவைக்கு மன உளைச்சலைக் கொடுத்து  இறுதிக்காலங்களில் அவரது நிம்மதியைக் குலைத்தது மட்டுமல்லாமல் அவர் இறப்புக்குப் பின்னரும்  சுமத்திரன் விட்டபாடில்லை. தமிழருக்கட்சிதை; தலைவர் ஆவதுதான் அவர் குறிக்கோள். இப்படி நரிவேலை செய்து அவர் தலைவராகும் போது தமிழரகு;கட்சிக்கு என்று எந்த ஆதரவாளர்களும் இருக்கமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர், செய்த முறைப்பாட்டின் போது, குறிப்பாக இந்த பதாகை காட்சிபடுத்தப்பட்டிருந்ததனால், தமக்கு உயிரச்சுறுத்தல், இருந்தமையாலேயே இறுதி வணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது அவரேதான் சுமத்திரன் எனும் குள்ள நரி .

36 minutes ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டிற்கமையவே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுவும் அந்த சுமத்திரன் தான் இதுக்கெல்லாம் கேஸ் போட என்று வெளிகிடுவம் என்றும் சொல்வார்கள் போடுங்க அப்ப தெரியும் 😃

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களாலும் தமிழ்மக்களாலும் நிராகரிக்கப்பட்டவர், கட்சியின் முக்கியஸ்தர் என தன்னைத்தானே கூறிக்கொள்கிறார். மாவை உயிரோடு இருக்கும்போது அவருக்கு குழிபறித்தவர், மரண சடங்கிற்கு போக முடியவில்லையாம். முடியாவிட்டால் வீட்டில் இருக்க வேண்டியதுதானே, இவர் வரவில்லையென்று யார் அழுதார் அங்கே. அல்லது இவர் வரவில்லையென்று செய்யவேண்டிய காரியங்கள் நடைபெறாமல் கார்த்திருக்கின்றனவா இவருக்காக? தம்மை முன்னிலைப்படுத்த இப்படியான கோணல் மாணல் வேலை செய்து தன்னை பிரபல்யப்படுத்துறது இவரது வழமையான செயல். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அனுரவைப் பிடித்தும் ..காரியம் கைகூடவில்லை...ஆமா அந்த பதகை வைத்தது மாவைதான் என்று சொல்லிவிட்டால்...கேஸ் முடிந்தது..😆

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் உடல் தகனம் செய்யப் பட்ட இடத்தில் வைக்கப் பட்ட பதாகைக்கு, மாவை வீட்டார் எப்படி பொறுப்பேற்க முடியும். ஊரில் ஒரு செத்தவீடு நடந்தால்… அவரின் நெருங்கிய உறவுகள் உடல்  தகனம் செய்யும் தருணத்தில்தான் சுடலைக்கு செல்வார்கள். அப்படியிருக்க முன்பே அந்தப் பதாகை ஒட்டப் பட்டதற்கு மாவை வீட்டாரை ஏன் விசாரிக்க வேண்டும்.

மாவையின் இறுதிச் சடங்கில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டவர்கள். அதில் சுத்துமாத்து  சுமந்திரன் கோஷ்டியின் செய்கைகளைப் பிடிக்காதவர்களும் ஆயிரக் கணக்கில் இருந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் பதாகை மூலம் தமது அதிருப்தியை வெளியிட்டு இருக்கலாம். ஜனநாயக முறைப்படி சிலர் தமது அதிருப்தியை தெரிவிப்பது இவர்களுக்கு ஏன் கடுப்பாகுது. 🧐

பதாகையில்,  தமிழரசு கட்சியில்….  குழப்பம் விளைவிக்கும் சுமந்திரன் கும்பலின் பெயரைத்தானே அம்பலப் படுத்தி உள்ளார்கள். நல்ல விடயம்தானே. 👍🏽 💪

இதுக்கே…. கதறினால், உள்ளூராட்சி தேர்தலுடன் இன்னும் நிறைய பதாகை வர இருக்கு என்று ஊரில் சொல்கிறார்கள். அப்போ… என்ன செய்யப் போகிறார்கள். நல்லாய் கதறட்டும். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது பார் சிறியின் அடிப்பொடிகளால் காவித்திரிய படும் பொய் செய்தி போல் தெரிகிறது….

படத்தை போட்டு தன்னும், பதாகை வைப்பது என்ன பொலிஸ் தேடும் விடயமா?

பொலிஸ் வேறு விடயமாக போயிருக்க கூடும்.

இதை பற்றி பொலிசோ, மாவை குடும்பமோ ஏதும் சொல்லி உள்ளதா? 

பிகு

மாவையின் பிணத்தை வைத்து பார் சிறி கூட்டமும், பொன்னம்பலவானேர்சர்களும் பிண அரசியல் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை

07 FEB, 2025 | 08:20 PM
image

(எம்.நியூட்டன்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் 'மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின்  துரோகிகள்' என்னும் தலைப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அப்பதாகை காட்சிப்படுத்தப்பட்டமையின் காரணமாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தன்னால் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முடியாது போனதாகவும், ஆகவே குறித்த பதாகையை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சி.வி.கே.சிவஞானத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பதாகையில், சுமந்திரன், சேயோன், பீற்றர் இளஞ்செழியன், சாணக்கியன், ரஞ்சினி, கலையரசன், சத்தியலிங்கம், சயந்தன், குலநாயகம், துரைராஜசிங்கம், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராசா, கமலேஸ்வரன், இரத்தினவேல், கண்ணதாசன், சேனாதிராசா, பரஞ்சோதி, செல்வராசா ஆகியோரின் பெயர்களே காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206084

  • கருத்துக்கள உறவுகள்

கடைசில பிண அரசியல் செய்ய வெளிக்கிட்டாங்க வெளங்கிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அப்ப சிவிகே கொம்பிளைண்ட் கொடுத்துள்ளார்.

செத்த வீட்டில் அப்படி ஒரு பதாகை வைத்தவன் அரை கிறுக்கன் எண்டால்…

இந்த சீவிகே முழு கிறுக்கர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்ப சிவிகே கொம்பிளைண்ட் கொடுத்துள்ளார்.

செத்த வீட்டில் அப்படி ஒரு பதாகை வைத்தவன் அரை கிறுக்கன் எண்டால்…

இந்த சீவிகே முழு கிறுக்கர் 🤣

சி.வி.கே. க்கு…. கொம்பிளைண்ட் கொடுக்கச் சொல்லி,
“கீ” கொடுத்து விட்டவர் மகா கிறுக்கர். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

சி.வி.கே. க்கு…. கொம்பிளைண்ட் கொடுக்கச் சொல்லி,
“கீ” கொடுத்து விட்டவர் மகா கிறுக்கர். 😂 🤣

இல்லை இல்லை அவர் phd.

பனியன் ஒவ் த ஹையஸ்ட் டிகிரி.

Paniyan of the highest degree🤣.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

இந்நிலையில், இது குறித்து உறுதிபடுத்துவதற்கு, கே.கே. எஸ் பொலிஸாரை தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் தமக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியாது என தெரிவித்துள்ளனர். 

லங்காசிறி ...அதையும் சொல்லுது இதையும் சொல்லுது ....

மாவையின் இளம் வயதில் அவரை கைது செய்ய பொலிசார் வீடு சென்றனர் ...இறந்த பின்பும் பொலிசார் வீடு செல்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இல்லை இல்லை அவர் phd.

பனியன் ஒவ் த ஹையஸ்ட் டிகிரி.

Paniyan of the highest degree🤣.

தமிழ் அரசியல்வாதியின்... phd. பட்டத்தின் விளக்கம் அருமை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.