Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்களுக்கு நன்மை

வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம் | Sri Lanka Will Be Dark Again Ranil Reveal

இந்தியாவின் சக்திவாய்ந்த நபரிடமிருந்து சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கணிப்புக்கு வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு விமர்சனங்கள்

பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், பொருளார ரீதியான அவர்களின் அணுகுமுறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம் | Sri Lanka Will Be Dark Again Ranil Reveal

அரசியல் அனுபவம் அற்ற புதியவர்களால் நாட்டினை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sri-lanka-will-be-dark-again-ranil-reveal-1739543837

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இவர் தனது எதிர்காலத்தை ஒருபோதும் எதிர்வு கூறுவதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தனது எதிர்காலத்தை ஒருபோதும் எதிர்வு கூறுவதில்லையோ?

அந்தளவு ஆற்றல் இவருக்கு இருந்திருந்தால் . ...இவருக்கு ஏன் இந்த நிலைமை வந்திருக்கு ,  ஈழப்பிரியன் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

 

அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

 

 

 

 

 

.

https://tamilwin.com/article/sri-lanka-will-be-dark-again-ranil-reveal-1739543837

அதாவது நான் மீண்டும் சனாதிபதியாவேன் என்பதை அடித்துக் கூறியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவையாவது இவர் தனது அரசியல் பதவிக்காலத்தை அமைதியாக, முழுமையாகவே கழிக்கவில்லையே, அது ஏன்? கணக்கன் கணக்கறிவானாம் தன் கணக்கை தானறியானாம். வெறும் சொல் மட்டுந்தான், அதிலிருந்து வெளிவர வகை தெரியாது.

13 minutes ago, alvayan said:

அதாவது நான் மீண்டும் சனாதிபதியாவேன் என்பதை அடித்துக் கூறியுள்ளார்

அப்படியேதும் அசம்பாவத்தில் இவர் ஜனாதிபதியானாற்தானுண்டு.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு போதும் சிங்கள தமிழ் இனவாத வெறி எந்த காரணம் கொண்டும் அணையாது அந்த இனவாதா வெறி இருக்குமட்டும் ஆயிரம் அனுரா வந்தாலும் இலங்கை தீவில் அமைதியை கொண்டு வர முடியாது என்பது இந்த குள்ள நரிக்கு தெரிந்து இருக்கு அதையே ஆருடம் போல் அடித்து விட்டு இருக்கு அங்கும் இங்கும் தப்பி வந்து கடைசியில் தையிட்டியில் அனுரா அரசு மாட்டு பட்டு இருக்கு அதில் இருந்து எப்படி தப்பி பிழைக்க போகிறார்கள் என்றுதான் பார்க்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்

அனுர அரசு தமிழர்களுக்கு அள்ளி வழங்கும் முஸ்லிம்களுக்கு முக்கி வழங்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு..

முன்னைய எந்த சிங்கள அரசுகளுக்கும் விதிவிலக்கானது அல்ல அனுர அரசு,.. தமிழர்கள் விடயத்தில். (இதனையே அனுர அரசு ஆட்சிக்கு வர முன் இருந்து சொல்லி வாறம்.)

ஆனால் ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் தேவைகளுக்காக சிலதை உருப்படியாகச் செய்வார்கள்.. மற்றைய ஆட்சியாளர்களை விட. அதன் பலன் தமிழர்களுக்கும் பொசியும். வயலில் நெல்லுக்கு பாய்ச்சுவது புற்களுக்கு பொசிவது போல. அவ்வளவும் தான். அதுக்கு மேல கனவு காணாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

இலங்கையில் ஒரு போதும் சிங்கள தமிழ் இனவாத வெறி எந்த காரணம் கொண்டும் அணையாது அந்த இனவாதா வெறி இருக்குமட்டும் ஆயிரம் அனுரா வந்தாலும் இலங்கை தீவில் அமைதியை கொண்டு வர முடியாது என்பது இந்த குள்ள நரிக்கு தெரிந்து இருக்கு அதையே ஆருடம் போல் அடித்து விட்டு இருக்கு அங்கும் இங்கும் தப்பி வந்து கடைசியில் தையிட்டியில் அனுரா அரசு மாட்டு பட்டு இருக்கு அதில் இருந்து எப்படி தப்பி பிழைக்க போகிறார்கள் என்றுதான் பார்க்கணும் .

அனுர அரசுக்கு தமிழரின் ஆதரவு என்பது, எந்த சிங்கள தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் தமிழரை அரவணைக்கவும் அவர்களுக்கு இயலாத காரியம். இரு இனத்தையும் பரம எதிரிகளாக வைத்திருக்குமட்டும் தங்கள் அரசியலுக்கு பாதகமில்லையென்றே நினைத்திருந்தனர். அனுரவோ தமிழர் தன்னை ஆதரிப்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இங்கே சவாலாகப்போவது இந்த விகாரை விவகாரம்.  இங்கே அனுரவின் திறமை வெளிப்படுமானால் சிங்கள மக்களின் எதிர்ப்பை ஊதுவார்கள். அதையும் கடந்து செய்ய முடியும் அனுரவால் ஆனால், அவரும் முயற்சிப்பது போல் தெரிகிறது. அதை நிறைவேற்ற முடியாவிடில் சிங்களம் அனுரவையும் தமிழர் வழங்கிய ஆதரவையும் ஏளனம் செய்யும். அவரை செய்யவும் விடமாட்டார்கள், தடைகளை ஏற்படுத்தி தடுக்கவே செய்வார்கள். தாங்கள் தீர்க்காத பிரச்சனையை யாரும் தீர்க்கக்கூடாது, தடைகளை ஏற்படுத்துவது. அப்போ யார்தான் தீர்ப்பது? யாருக்கும் துணிவு இல்லை. மக்களால் முடியும். இவர்கள் கலவரங்களை ஏற்படுத்த முனையும்போது, எதிர்த்து நிற்கவேண்டும். மக்கள் ஓரளவு சிந்திக்கிறார்கள். ஏற்கெனவே கஜேந்திரன் குமாரின் வீட்டை  முற்றுகையை ஏற்படுத்தவும், தையிட்டிக்கு பெருமெடுப்பில் மக்களை திரட்டி வர முயற்சித்தும் பயனளிக்கவில்லை. ஊழையிட்டு விட்டு அடங்கி விட்டார்கள். இனி அப்படி முயற்சிக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பல ஊழல் மோசடிக்காரரே இதன் பின்னால் உள்ளனர். அவர்களில் ஒருவரை விகாரை பிரச்சனையில் கைது செய்து அவரது ஊழலை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் போதும், மற்றவர்கள் தாங்களாகவே பொறியில் தலைவைக்க விரும்பாமல் விலகுவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இலங்கையில் ஒரு போதும் சிங்கள தமிழ் இனவாத வெறி எந்த காரணம் கொண்டும் அணையாது

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றுதான் வரும். அப்படித்தான் சொல்லவும் வேண்டும். அதுதான் விதி. ஒன்று என்று சொன்னால் கணக்கே பிழைத்துவிடும், வாதியாரிடம் பிரம்படியும் வாங்கவேண்டும்.😳😩

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.