Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டா சிஆர்ஜே900 என்ற விமானம் மினியாபோலிஸிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து, அதன் கூரையில் வந்து நின்றது. பனிமூட்டம் நிறைந்த ஓடுபாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது, சம்பவத்தை அடுத்து விமானம் புகை மண்டலத்தில் மூழ்கியது.

படுகாயமடைந்த ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் டொராண்டோவில் உள்ள SickKids மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் உட்பட அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கணக்கிடப்பட்டனர், மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை.

விபத்தைத் தொடர்ந்து, டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது, இதனால் விமானம் திசைதிருப்பல் மற்றும் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு மற்றும் சுங்கச் சாவடிகளும் பாதிக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
CP24
No image preview

LIVE UPDATES: One child, two adults critically injured af...

Multiple people have sustained injuries after a plane crash at Toronto Pearson International Airport, paramedics say.
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு விமானம் தலைகீழாக பிரண்டு கிடப்பதைக் காண்கிறேன்.

நம்ம தலைவர ரம் வந்தபின் இதோடு 7வது விமான விபத்து என்றே எண்ணுகிறேன்.

பெரும் பனிப் படலத்துக்குள் ஏன் விமானத்தை இறங்க விட்டார்களோ தெரியவில்லை.

இதை வைத்தே ரம் பெரியதொரு நஸ்டஈடு கோரலாம்.

delta.png?c=16x9&q=w_1280,c_fill

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு விமானம் கவிழும் என்று நினைத்தது கூட இல்லை. பெரிதாக நசியாதது ஆச்சரியம் தான், அதனால் தான் எல்லோரும் தப்பியுள்ளார்கள்.................👍.

இறங்கிய பின், தரையைத் தொட்ட பின், சறுக்கி கவிழ்ந்திருக்குது போல.......... இங்கு வீதிகளில் SUV மற்றும் பெரிய ட்ரக்குகள் எப்பவாவது சறுக்கி கவிழ்வது போல........

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு விமானம் தலைகீழாக பிரண்டு கிடப்பதைக் காண்கிறேன்.

நம்ம தலைவர ரம் வந்தபின் இதோடு 7வது விமான விபத்து என்றே எண்ணுகிறேன்.

பெரும் பனிப் படலத்துக்குள் ஏன் விமானத்தை இறங்க விட்டார்களோ தெரியவில்லை.

இதை வைத்தே ரம் பெரியதொரு நஸ்டஈடு கோரலாம்.

delta.png?c=16x9&q=w_1280,c_fill

Screenshot-20250217-232723-Flightradar24

என‌து கைபேசியில் இருக்கும் ஆப் மூல‌ம் உல‌க‌ அள‌வில் ப‌ற‌க்கும் விமான‌ங்க‌ளை காட்டும்

இப்போது அமெரிக்காவில் ப‌ற‌க்கும் விமான‌ங்க‌ள் இது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-234-750x375.jpg

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்!

டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

இதன் விளைவாக அவசரகால பணியாளர்களின் மீட்பு பணிகளுக்காக பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.

விபத்தின் பின்னர் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் மாலை 5:42 மணிக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் துரதிர்ஷ்வசமான சம்பவத்தினால் 18 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டது.

எனினும், மாலை 07.00 மணியளவில் பியர்சன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 என்று கூறினார்.

விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் இருந்தனர்.

அவர்களில் 22 கனேடியர்கள், ஏனையவர்கள் பன்னாட்டுப் பயணிகள் என்றும் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.

விபத்தின் பின்னர் திங்கட்கிழமை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யப்பட்டன.

புறப்பாடும் வருகையும் மாலை 5 மணிக்குப் பின்னர் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

டெல்டா ஏர் லைன்ஸின் 4819 விமானம், வார இறுதியில் டொராண்டோ பகுதியைத் தாக்கிய குளிர்காலப் புயலைத் தொடர்ந்து வீசும் பனிக்கு மத்தியில் மினியாபோலிஸிலிருந்து வந்தது.

இந்த விமானத்தை அதன் துணை நிறுவனமான எண்டெவர் ஏர் இயக்குவதாக டெல்டா தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.

கனடா போக்குவரத்து ஆணையகம், இது குறித்த விசாரணைகளை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.

விசாரணைக்காக இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், விமான நிலையம் வழியாக பயணிக்கும் எவருக்கும் வரும் நாட்களில் தாமதம் ஏற்படும் என்றும் பிளின்ட் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1421841

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

delta.png?c=16x9&q=w_1280,c_fill

932XJ ( Mesaba Airlines)

இந்த பிளேன் புத்தம் புதிதாக சேர்விசுக்கு வந்தது இப்போதும் ஞாபகமிருக்கிறது.

இந்த பிளேனில் 2008- 2016 வரை பல நாட்கள் வேலை செய்து இருக்கிறேன். இப்போது நான் டெல்ட்டாவுக்கு DELTA மாறிவிட்ட்டேன் இவற்றை காண்பது அரிது .... இப்படி கவுண்டு கிடப்பதை பார்க்க சகிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

932XJ ( Mesaba Airlines)

இந்த பிளேன் புத்தம் புதிதாக சேர்விசுக்கு வந்தது இப்போதும் ஞாபகமிருக்கிறது.

இந்த பிளேனில் 2008- 2016 வரை பல நாட்கள் வேலை செய்து இருக்கிறேன். இப்போது நான் டெல்ட்டாவுக்கு DELTA மாறிவிட்ட்டேன் இவற்றை காண்பது அரிது .... இப்படி கவுண்டு கிடப்பதை பார்க்க சகிக்கவில்லை.

விமானம் தரையிறங்கும் போது வலதுபக்க செட்டை தரையில் முட்டியதால் துடைந்து தலைகீழாக செல்கிறது.

கூடுதலான காற்று தான் காரணம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானம் தரையிறங்கும் போது வலதுபக்க செட்டை தரையில் முட்டியதால் துடைந்து தலைகீழாக செல்கிறது.

கூடுதலான காற்று தான் காரணம் என்கிறார்கள்.

ஆம் 25 MPH இல் கிளியரன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்

பிளேன் ஒடுபாதையை தொடும்போது 35 MPH Crosswind (குறுக்கு) காற்று வீசியிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சு சொல்லுறன் உது யாரோ கொழும்பு-யாழ்பாணம் ரைவர் தான் ஓட்டி இருக்கிறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடிச்சு சொல்லுறன் உது யாரோ கொழும்பு-யாழ்பாணம் ரைவர் தான் ஓட்டி இருக்கிறார்🤣.

இந்திய ஆட்டோ ராவர் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய ஆட்டோ ராவர் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

🤣 இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Maruthankerny said:

ஆம் 25 MPH இல் கிளியரன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்

பிளேன் ஒடுபாதையை தொடும்போது 35 MPH Crosswind (குறுக்கு) காற்று வீசியிருக்கிறது

டெல்ரா கொனக்னசும்(Delta Conection0

அமெரிக்கன் ஈகிளும்(American Eagle) கண்ணில காட்டக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

டெல்ரா கொனக்னசும்(Delta Conection0

அமெரிக்கன் ஈகிளும்(American Eagle) கண்ணில காட்டக் கூடாது.

இருக்கிற பொருளாதார வசதியை வைத்துக்கொண்டு தங்களால் முடிந்ததை செய்கிறார்கள் ........ டெல்டா போல அவர்காளால் பணத்தை இறைக்க முடியுமா?

இந்த பிளேன் வாங்கியபோது இது நோர்த்வெஸ்ட் ஏர்லிங்காக ( Northwest Airlink) இருந்தது ... அப்போது அவர்களிடம் CRJ200 ரக விமானங்கள்தான் இருந்தது இந்த CRJ 900 வாங்குவது பெரிய மைல் கல்லாக இருந்தது .. அதுதான் எனக்கும் இப்போதும் மிகுந்த ஞாபகமாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?

கனடா விமான விபத்து

பட மூலாதாரம்,JOHN NELSON

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலெக்ஸ் ஸ்மித், நதீன் யூசூஃப், ஜார்ஜ் வைட்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 18 பிப்ரவரி 2025, 08:40 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

"பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்தனர்," என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டேபோரா பிலிண்ட் தெரிவித்தார்.

அவசர கால சேவைகளின்படி, ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் இந்த விபத்தில் தீவிரமான காயம் அடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட காட்சிப்பதிவுகளில் விமானம் தலை கீழாக, அதாவது விமானத்தின் மேற்கூரை பனி சூழ்ந்த தரையில் விழுந்துள்ளது. அதன் ஒரு இறக்கை காணாமலும் காட்சியளித்தது.

விபத்துக்குள்ளான விமானம், மினியாபோலிசிலிருந்து கிளம்பிய டெல்டா ஏர் லைன்ஸின் விமானம் என்று டொராண்டோ பியர்சன் விமான நிலையம் தெரிவித்தது. இதில் 4 விமான பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் உட்பட மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர்.

மொத்தமாக பதினெட்டு பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வான் வழி ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமான ஆரஞ், மூன்று வான் வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களையும், இரண்டு தரை வழி ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீவிர காயங்கள் ஏற்பட்டவர்களில் ஒரு குழந்தை, 60களில் உள்ள ஒரு ஆண் மற்றும் தன்னுடைய 40களில் உள்ள பெண் ஒருவர் உள்ளதாக அது தெரிவித்தது.

கனடா விமான விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

விபத்துக்குள்ளான விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் 4819, அதன் துணை நிறுவனமான எண்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை மதியம் 2.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பயணித்தவர்களில் 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சர்வதேச பயணிகள் என்றும் பிலிண்ட் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட உடனே விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாக, விமான நிலையம் தெரிவித்தது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்து குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் இன்னும் சில நாட்களுக்கு விசாரணைக்காக மூடி இருக்கும் என்றும் பயணிகள் விமானங்கள் சில தினங்களுக்கு தாமதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பயணிகள் கூறுவது என்ன?

''எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. அது தலைகீழாகக் கவிழ்ந்தது'' என்கிறார் அதில் பயணித்த ஜான் நெல்சன்.

'' பெரும்பாலோனோர் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் விமானத்திலிருந்து இறக்குகிறோம்'' என விபத்து நடந்த உடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

''தரையிறங்குவதற்கு முன்பு அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை. விமானத்திற்குள் அமர்ந்திருந்தபோது நாங்கள் ஒரு பக்கமாக சாய்ந்தோம், அதன் பிறகு நாங்கள் தலை கீழாக கவிழ்ந்தோம்.", என்று அவர் சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நெல்சனைப் போலவே, ஆஷ்லி ஜூக் என்ற பயணியும் இப்படிப்பட்ட ஒரு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததை அவரால் நம்ப முடியாமல், "கடவுளே, நான் ஒரு விமான விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தேன்!" என்று சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

பயணிகள் விமானத்தில் கூரையில் இருந்து தலைகீழாக தொங்கியபடி இருந்தனர்.

''நாங்கள் வௌவால்கள் போல விமானத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தோம்.'' என்கிறார் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய பீட்டர் கோவ்கோவ்.

"தரையிறங்கிய பின்பு உங்கள் நண்பர்களையும், நெருங்கியவர்களையும் சந்திக்கலாம் என்று ஒரு நிமிடம் ஆவலாக காத்திருப்பீர்கள், மறு நிமிடம் நீங்கள் தலை கீழாக தொங்கியபடி இருப்பீர்கள்", என்று மற்றொரு பயணி பீட் கார்ல்சன் சிபிசி செய்திகளிடம் கூறினார்.

'' சீட் பெல்டை அவிழ்த்து என்னால் இறங்க முடிந்தது. சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது", என்கிறார் நெல்சன்.

பயணிகள் விரைவாக ஒரு குழுவாகச் செயல்பட்டதாக விமானத்தில் பயணித்த கார்ல்சன் கூறினார்.

"நான் பார்த்தது என்னவென்றால், அந்த விமானத்திலிருந்த அனைவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது, ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் இருப்பது என நினைத்துச் செயல்பட்டனர்'' என்கிறார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், கவிழ்ந்த விமானத்திலிருந்து மக்கள் வெளியே வருவதையும், தீயணைப்பு வீரர்கள் அதன் மீது நுரை (foam) தெளிப்பதையும் காட்டுகிறது.

விமானத்தின் கதவுகளிலிருந்து உள்ளே இருந்தவர்களை விமான நிலைய ஊழியர்கள் வெளியே வர உதவி செய்வதையும் காண முடிந்தது.

வேறொரு விமானத்தில் பயணிக்க இருந்த டயான் பெர்ரி தனது உடைமைகளை செக்-இன் செய்யும் வரிசையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போதே இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்ததாக அவர் தெரிவித்தார்.

"நான் அந்த விமான நிலையத்தில்தான் இருந்தேன், ஆனால் வெளியே இப்படி ஒரு விபத்து நடந்ததாக எனக்கு தெரியவில்லை என்பது ஒரு முரணாக இருக்கிறது", என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

இந்த விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பதை இன்னும் நெல்சன் யோசித்துகொண்டிருக்கிறார். "அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலே மன அழுத்தம், பதற்றம், நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. நாங்கள் இன்னும் இங்கே உயிருடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது", என்று அவர் கூறினார்.

பயணி கார்ல்சனும் இவ்வாறே உணர்வதாக கூறினார். "தற்போது உயிருடன் இருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சம்பவத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் வரவில்லை", என்று அவர் கூறினார்.

கனடா விமான விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

முரணான தகவல்கள்

டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை தலைமை அதிகாரி டாட் அய்ட்கென், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், "ஓடுபாதை மிகவும் காய்ந்திருந்தது. விமான ஓட்டத்தின் திசைக்குப் பக்கவாட்டாக காற்று வீசவில்லை," என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் முதலில் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், பக்கவாட்டாக காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளது.

டொராண்டோ பியர்சன் விமான நிலையம் கடந்த சில தினங்களாக வானிலை காரணமாக விமான தாமதங்களை சந்தித்து வருகிறது.

பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ், விமானம் தரையிறங்கியபோது பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்தது.

ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் பயணிகள் விமானமும் ராணுவ விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் இறந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் வான் வழி விபத்துகள் வட அமெரிக்காவில் நான்காக உயர்ந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானம் தரை தட்டும் போது தீப்பிடித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.