Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-264.jpg?resize=750%2C375&ssl

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையின் போது, சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளின் மேசையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டிலேயே மிகவும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்த சம்பவம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

நேபாளத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி நாடு திரும்பியதும் கட்டுநாயக்க கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதாள உலக நபர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ganemulla-sanjeewa.jpg?ssl=1

GkIEm7BaAAAzjMd?format=jpg&name=large

https://athavannews.com/2025/1422063

  • Replies 81
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

  • goshan_che
    goshan_che

    பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-266.jpg?resize=750%2C375&ssl

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை!

கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி போன்று வேடமணிந்து வந்த சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் அரச ஆரம்ப கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1422076

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8133.jpeg.aec1b82453facbae9dbc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

gun-2.jpg?resize=750%2C375&ssl=1

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டுள்ளார்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, செப்டம்பர் 13, 2023 அன்று, கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, சந்தேக நபர் இன்று காலை புஸ்ஸா சிறைச்சாலையிலிருந்து கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அத்துடன் கணேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் முக்கிய போட்டியாளராவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

WhatsApp-Image-2025-02-19-at-11.33.14.jp

https://athavannews.com/2025/1422082

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-269.jpg?resize=750%2C375&ssl

நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: துப்பாக்கியை மறைக்க சட்டப் புத்தகத்தை பயன்படுத்திய சந்தேக நபர்!

கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து ஆயுதத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ஆயுதம் கொண்டு வருவதற்கு சந்தேக நபர் சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு வந்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தெரிவித்தார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற பிரதி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகலவை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

Sunil-Watagala.jpg

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை மற்றும் அதன் விளைவாக பொது பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Court-shooting-Ganemulla-Sanjeewa.jpg

https://athavannews.com/2025/1422102

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480312217_1061479795992072_3334059375076

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சினிமாவில் வருவது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

480312217_1061479795992072_3334059375076

எனது பக்கத்து வீட்டு குடும்ப நண்பர் ஊர்போய் கிளிநொச்சியில் நிற்கிறார்.

இரவு கதைக்கும்போது கிளிநொச்சி சந்தைக்குள் நின்றபோது

இரண்டு போக்குவரத்து பொலிசார் பாய்ந்து விழுந்து ஓடி ஒருவரைப் பிடித்துக் கொண்டு ஓடினார்களாம்.

என்ன பிரச்சனை என்று கேட்டால் நிற்பாட்டாமல் ஓடிவந்து வியாபாரி போல சந்தைக்குள் ஒழிந்திருக்கிறார்.

மேலே உள்ள மீம்சும் இரவு கதைத்ததும் ஒத்துப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது பக்கத்து வீட்டு குடும்ப நண்பர் ஊர்போய் கிளிநொச்சியில் நிற்கிறார்.

இரவு கதைக்கும்போது கிளிநொச்சி சந்தைக்குள் நின்றபோது

இரண்டு போக்குவரத்து பொலிசார் பாய்ந்து விழுந்து ஓடி ஒருவரைப் பிடித்துக் கொண்டு ஓடினார்களாம்.

என்ன பிரச்சனை என்று கேட்டால் நிற்பாட்டாமல் ஓடிவந்து வியாபாரி போல சந்தைக்குள் ஒழிந்திருக்கிறார்.

மேலே உள்ள மீம்சும் இரவு கதைத்ததும் ஒத்துப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் கைது

19 FEB, 2025 | 06:40 PM

image

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் உயிரிழந்துள்ளார். 

சட்டத்தரணி வேடத்தில் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் கைது

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா,அனுரா

இரு தரப்புக்குமே சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 07:32 - 0     - 140

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்ததுடன், அவர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். 

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். R

Tamilmirror Online || கொலை செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481076325_1039195204910520_1524932899006

துப்பாக்கிதாரி 34 வயது “அஸ்மான் சரிப்தீன்” என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் புத்தளம், பாலாவி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்.com

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

481076325_1039195204910520_1524932899006

துப்பாக்கிதாரி 34 வயது “அஸ்மான் சரிப்தீன்” என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் புத்தளம், பாலாவி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்.com

பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

அவர் வைத்தியர். இவர் வக்கீல். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர் வைத்தியர். இவர் வக்கீல். 😂 🤣

உண்மை தான் ஆனால் அவரிடம் வக்கீல் இலுமுண்டு மேலும் படிப்படியாக அரசியல்வாதியாக. வளர்த்து வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தோழரின்ட படை துரத்தி பிடிச்சிடுது....முன்பு இருந்த அரசுகளின் சதி ...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8133.jpeg.aec1b82453facbae9dbc

இவதான் 1948 இலேயே வெளியேறி விட்டாவே.

3 hours ago, குமாரசாமி said:

பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

கொஞ்சம் பொறுங்கோ…

அது சுமந்திரந்தானாம் எண்டு ஒருவர் தமிழ்வின் இணைப்போடு வருவார்🤣

2 hours ago, தமிழ் சிறி said:

அவர் வைத்தியர். இவர் வக்கீல். 😂 🤣

சில வேளை அஸ்மான் சரிப்தீனின் தங்கம் வைத்தியராய் இருக்க கூடும் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இவதான் 1948 இலேயே வெளியேறி விட்டாவே.

கொஞ்சம் பொறுங்கோ…

🤣

என்ன இப்படி சொல்லி போட்டியல் ,அனுரா தோழர் 2024 மீண்டும் அழைத்து வந்துவிட்டாரே அவரை..அதுவும் மலையகத்திலும் வடக்கிலும் குடியேறி விட்டார் .

3 hours ago, goshan_che said:

🤣

சில வேளை அஸ்மான் சரிப்தீனின் தங்கம் வைத்தியராய் இருக்க கூடும் 🤣

அப்ப துப்பாக்கியை சட்ட புத்தகத்தில் கடத்தியவர் வைத்தியரா?😂

  • கருத்துக்கள உறவுகள்

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது

20 FEB, 2025 | 11:26 AM

image

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் வேன் சாரதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான வேன் சாரதி புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாார். 

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50133d43-8c88-4bb3-9bea-8910c615f5d1.jpg

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்றைய தினம்  (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக்  குழுவைச் சேர்ந்த  கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ’ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் குற்ற கும்பலைச் சேர்ந்த மூவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டுபாய் மற்றும் பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோரே குறித்த கொலை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் மிகவும் பலம் பொருந்திய பாதுகாப்பான இடமான நீதிமன்ற வளாகத்தில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, நீதித்துறை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1422198

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

90ef1f75-8118-4e19-a729-c799f6dd456b.jpg

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த  துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணையும்  கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 72 மணித்தியாலங்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தககது.

https://athavannews.com/2025/1422228

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-284.jpg?resize=750%2C375&ssl

நீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரம்

பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி
வயது: 25
தே.அ.அ.இல: 995892480v
முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்:

பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727
கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735

சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Athavan News
No image preview

நீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதும...

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-286.jpg?resize=750%2C375&ssl

கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை.

இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

GkIP5RgXgAAFGw3?format=jpg&name=large

பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைதான பிரதான சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

குறித்த நபர் சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய ஆயுதத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்து நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு சென்றதாகவும் கண்டறியப்பட்டது.

GkI4H3GWMAEh07r?format=jpg&name=medium

இதனிடையே, இன்று (20) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

https://athavannews.com/2025/1422247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480559837_1042752984556340_2640191676251

480732986_1042723911225914_7619933154153

480570045_1042723424559296_5363619113729

480562238_1042747157890256_2696381132986

480796085_1042725254559113_6674583763753

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.