Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Deshabandu-Tennakoon-SDIG-L.jpg?resize=6

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1423573

  • Replies 51
  • Views 2.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னகோன், அரகலய போராட்டத்தின் போது... மகிந்த, கோத்தாவின் அடியாட்களுக்கு காலிமுகத்திடலில் அரகலய உண்ணாவிரத போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தச் சொல்லி கட்டளை

  • satan
    satan

    ஞானசார தேரரின் நிலையை பாத்தீங்களா? அதனால மற்றைய மொட்டையள் அடக்கிக்கொண்டு இருக்குதுகள். ஒன்று புதுசா கிளம்புது, நாளடைவில் அடங்கும். ஞானசார தேரர் மற்றைய அரசியல் தலைவர்கள் போல் இவரிடமும் போனவர், இனவாதத்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    பாதாள உலக கோஷ்டிகள்... தாம் செய்யும் செயலை கண்டு கொள்ளாமல் இருக்க, 200,300 போத்தல் என்று ரொக்கமாக கொடுத்திருப்பார்கள். இவ்வளவு வீட்டில் இருப்பில் இருந்தது என்றால், குடித்து முடித்தது.... இன்னும் எத்

  • கருத்துக்கள உறவுகள்

தென்னகோன் இன்று சரணடைவார்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை.

இந்நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ள நிலையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் சரணடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/315702

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-81.jpg?resize=750%2C375&ssl=

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேஷபந்து தென்னகோனை கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்புடைய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக சிஐடிக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்கான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1424260

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481695340_1053569050141400_3366166785717

481477094_1053540866810885_8043413912205

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளை  யார் உருவாக்கினார்களோ, பயன்படுத்தினார்களோ அவர்களே அவர்களின்  செயலுக்கும் பொறுப்பானவர்கள். அங்கேதான் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும். நாட்டை சுற்றுவதை விட இவர்களின் வீட்டையும் ஒருக்கா சுற்றி நோட்டமிடலாம், தப்பில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

குற்றவாளிகளை  யார் உருவாக்கினார்களோ, பயன்படுத்தினார்களோ அவர்களே அவர்களின்  செயலுக்கும் பொறுப்பானவர்கள். அங்கேதான் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும். நாட்டை சுற்றுவதை விட இவர்களின் வீட்டையும் ஒருக்கா சுற்றி நோட்டமிடலாம், தப்பில்லை.

GAFiN9sXYAEYmS-.png

இந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னகோன், அரகலய போராட்டத்தின் போது... மகிந்த, கோத்தாவின் அடியாட்களுக்கு காலிமுகத்திடலில் அரகலய உண்ணாவிரத போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தச் சொல்லி கட்டளையிட்ட காணொளி இணையத்தில் வந்ததைப் பார்த்த சிங்களவர்கள் பொது இடத்தில் நடந்து போன இவரின் மண்டையை உடைத்து அனுப்பியவர்கள்.

இவர்... கோத்தா, மகிந்த பின் ரணிலின் சட்டத்திற்கு மாறான கட்டளைகளை உடனுக்குடன் செயல்படுத்தியதால் அவர்களின் அன்புக்கு உரியவராக எப்போதும் இருந்தார்.

இப்போ.... கிரிமினல் போல்... ஒழித்து திரிய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார்.

காலம் விசித்திரமானது. அது எப்பவாவது திருப்பி அடிக்க காத்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈

அரகலய போராட்டத்தின் போது, அப்போதைய பொலிஸ் மா அதிபர் தென்னகோன்

போராட்டக்காரர்களிடம் சணல் அடி வாங்கும், கண்கொள்ளா காட்சி. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்துவை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேஷபந்து தென்னகோனை கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்புடைய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக சிஐடிக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்கான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/315767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481950122_1054404356724536_6921086594817

482085210_1054406606724311_4297738971988

482127874_1053764533455185_6214018925981

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த குடும்பத்தை கைது செய்ய வெளிக்கிட்டால், இந்த பொலிசுகள், இராணுவத்தினர் ஏதாவது கலகம் செய்து நாட்டில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி அனுராவை கைது செய்யலாம், கொலையும் செய்யலாம்.  மஹிந்தவோ அல்லது அவர் சார்ந்த கட்சிக்காரரே செவ்வந்தி, இப்படியான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சந்தர்ப்பத்தை பார்த்திருக்கிறார்களோ யாரறிவார்? ஏதோ ஒரு அசம்பாவிதம் நிறைவேற காத்திருப்பதுபோல் தெரிகிறது. தமிழரை பருவத்திற்கு பருவம் அறுவடை செய்ததெல்லாம் இப்போ ஒரேயடியாக அவர்களுக்கெதிராகவே திரும்பலாம். போலீஸ் மா அதிபரும் அனுராவுக்கு எதிராக செயற்படுவதுபோல் தெரிகிறது. ஊழலுக்குள் நீந்தின அரசியல் வாதிகள், காவற்துறையினர், அரச உத்தியோகஸ்தர்களை அவ்வளவு இலகுவில் கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது. தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை, ஏற்க தயாராகவுள்ளேன் என்று நாமல் சொன்னதன் பின்னணி என்ன? ஏன் அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை? சுமந்திரன் பாராளுமன்றம் போவேன் என்றும், அதற்காக கொடுத்த  காரணம்  போலுள்ளது. பல சந்தேகமான சமிக்கைகள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

மஹிந்த குடும்பத்தை கைது செய்ய வெளிக்கிட்டால், இந்த பொலிசுகள், இராணுவத்தினர் ஏதாவது கலகம் செய்து நாட்டில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி அனுராவை கைது செய்யலாம், கொலையும் செய்யலாம்.

இந்திய தூதுவர் எல்லோரையும் சுற்றிசுற்றி சந்திக்கிறார்.

ரணிலை அடிக்கடி இந்தியாவுக்கு கூப்பிட்டு ஏதேதோ குசுகுசுக்கிறார்கள்.

அதானியின் தோல்வி இந்திய அரசின் தோல்வி.

வைத்துச் செய்ய காத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய தூதுவர் எல்லோரையும் சுற்றிசுற்றி சந்திக்கிறார்.

ரணிலை அடிக்கடி இந்தியாவுக்கு கூப்பிட்டு ஏதேதோ குசுகுசுக்கிறார்கள்.

அதானியின் தோல்வி இந்திய அரசின் தோல்வி.

வைத்துச் செய்ய காத்திருப்பார்கள்.

இலங்கையில் அமைதி, சமாதானம் நிலவினால்; அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அஞ்சுகிறார்கள். அதைவிட அனுர, சீனாவுடன் நெருங்குகிறார் என்பது வேறு பயம். அனுரவுக்கும் இது தெரியாததல்ல. தமிழரின் பிரச்சனையை தீர்த்துவிட்டால், நம் நாடு சமாதானமாக முன்னேறும். இந்தசகுனிக்கு வேறு வேலையில்லை இங்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

. தமிழரின் பிரச்சனையை தீர்த்துவிட்டால், நம் நாடு சமாதானமாக முன்னேறும். இந்தசகுனிக்கு வேறு வேலையில்லை இங்கு. 

வலதுசாரி சிங்களவர்கள் ,பெளத்த துறவிகள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள் ....இவர்களுடன் சேர்ந்து ஏனையவர்களும் சகுனி ஆட்டம் ஆடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரரின் நிலையை பாத்தீங்களா? அதனால மற்றைய மொட்டையள் அடக்கிக்கொண்டு இருக்குதுகள். ஒன்று புதுசா கிளம்புது, நாளடைவில் அடங்கும். ஞானசார தேரர் மற்றைய அரசியல் தலைவர்கள் போல் இவரிடமும் போனவர், இனவாதத்திற்கு இடமில்லை என்றதனால், தான் யாரோடு இருந்து, யாருக்காக ஆட்டம் போட்டாரோ, அவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னக்கோன், இந்தபதவிக்கு தகுதியற்றவர், இவரை நியமிக்க வேண்டாமென பல எதிர்ப்புக்குரல்கள் எழும்பின. ஆனால் அவை எவற்றையும் காதில் வாங்காமல் இவரை இந்தப் பதவிக்கு நியமித்தவர் மாண்புமிகு ரணில் எனும் தந்திரி. கோத்தபாய நாட்டுக்கு திரும்பி வந்தபோது தலைவராக இருந்த நீங்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்ட போது, அவரில் எந்த தப்பும் காணவில்லை என்று இந்த நபர் குறிப்பிட்டார். போர்குற்றவாளியான சல்வேந்திர சில்வாவுக்கு ஏன் பதவி வழங்கினீர்கள் என்று கேட்டபோது, விசாரணை செய்ததில் அவர் குற்றவாளியல்ல என்று கூறினார். அப்போ; தமிழருக்கெதிரான  போரில் கொலைகளில், கொள்ளைகளில் இவருக்கும் பங்குண்டு. ஓடி ஒளியும் குற்றவாளிகளில் குற்றமில்லை என நற்சான்று அளித்து பதவி வழங்கியிருக்கிறார் என்றால், அவர்களின் தலைவர் யார்? அது அமெரிக்கா குற்றம் சாட்டியது, புலம்பெயர்ந்தோர் குற்றம்சாட்டியது என்று அலட்சியம் செய்தவர், நாட்டு, விசேடமாக சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் குற்றம் சாட்டிய போதும் விடாப்பிடியாக இவரை ஏன் ரணில் நியமித்தார்? அப்போ, தென்னக்கோன் செய்த குற்றங்களில் ரணிலுக்கு பங்குண்டு அல்லது ரணிலுக்காகவே இந்த குற்றங்களை இழைத்தாரா தென்னக்கோன்? ஊழல்வாதிகள் ஊழலை ஒழிக்க முடியுமா? குற்றவாளிகள் குற்றத்தை ஒழிக்க முடியுமா, தண்டிக்க முடியுமா? முதலில் அவர்களின் தலைவரை கைது செய்து தண்டியுங்கள், அங்கே சோதனைகளை ஆரம்பியுங்கள்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Deshabandu-thennakoon-.jpg?resize=750%2C

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481991230_10036256979768392_785321662420

முன்னாள் போலீஸ் மா அதிபரை இலங்கை போலீசார் தேடிய போது... 😂

Prashanthan Navaratnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

deshabandu-tennakoon.jpg?resize=650%2C36

அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் இவ்வாறு ஆறு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்றும் பிரதி அமைசச்ர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424591

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

482326642_1056935413138097_6374924993373

481514009_1056322876532684_8781762588747

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

deshabandu-tennakoon.jpg?resize=650%2C36

நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தம்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1424639

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

483816578_1057811856383786_1932949041755

484009728_1057799893051649_8647260952602

484066316_1057799506385021_8249773275121

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட இடத்தில் கைது செய்ய உத்தரவு

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அறிக்கையை தாக்கல் செய்து, சந்தேக நபரான ஐ.ஜி.பி-யைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது.

வெலிகம பெலேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன், பத்து இடங்களில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதலாக, மேலும் 18 இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/315898

  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்து தென்னக்கோனின் இரகசிய கலந்துரையாடலில் தமிழர் ஒருவரும்

சாணக்கியன் பாரளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ஒருவரை சந்திக்க இருந்தார் என்பவர் பிள்ளையான் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484330865_1062779845886987_2180280779241

485357924_1062817399216565_5545869211885

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமா அதிபர் வீட்டில் மறைந்திருக்கிறாரோ தெரியவில்லை. தேசபந்து தென்னகோனை கைது செய்ய வேண்டாமென உத்தரவிட்டிருக்கிறார் சட்டமா அதிபர். சட்டத்திற்கு முரணான உத்தரவுகளை வைக்கிறார் சட்டமா அதிபர். இவர் முன்னைய அரசுகளின் காவலன் போல் தெரிகிறது. இவரை முதல் கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வளவு நாளாக அவரை கைது செய்ய முடியவில்லையா பொலிஸாரால்? அல்லது கைது செய்ய மறுக்கிறார்களா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.