Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எங்களுடைய கட்சியில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நான் இருக்கின்றேன்.

சிறீதரன் பதவி விலகினால்...

எங்களுடைய கட்சிக்கு இந்தத் தடவை ஓர் ஆசனம் கிடைத்த காரணத்தினால் மட்டும்தான் நான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கவில்லை.

எமது கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருப்பேன்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம் | Sumanthiran Says About His Parliament Entry

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் முறைமையின்படி எமது கட்சியில் முதலாவது இடத்தைப் பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக பதவி விலகினால், எவரும் எதுவும் சொல்லாமலே நான்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது.

அவ்வாறான தனது பதவி விலகல் தொடர்பில் சிறீதரன் கோடிட்டு காட்டியும் இருக்கின்றார். அதாவது மாகாண சபைத் தேர்தல் வருகின்றது என்றும் அரசியல் குழுக் கூட்டத்தில் அவர் கோடிட்டு காட்டிச் சொல்லியிருந்தார்.

எந்த மறுப்பும் கிடையாது

அது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கானதாகவும் இருக்கலாம். ஆனால், அப்படி அவர் நேரடியாகச் சொல்லவில்லை. மேலும், மாகாண சபைத் தேர்தல் வருகின்றதால் அந்த வேளையில் சில மாற்றங்களும் நிகழலாம் என்றும், சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரலாம் என்றும் சிறீதரன் சொல்லியிருந்தார்.

ஆனால், அதை இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றதென்றல்ல.

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம் | Sumanthiran Says About His Parliament Entry

ஆனால், இப்போது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் ஒரு மாவட்டத்தில் அடுத்த ஸ்தானத்தில் இருக்கின்ற ஒருவருக்கு எந்த வேளையிலும் நாடாளுமன்றத்துக்குச் செல்லுகின்ற ஒரு தேவை ஏற்படலாம்.

அப்படி ஒன்று வந்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கின்றமையால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வது முறையற்றது என்பது எனது நீண்டகால நிலைப்பாடாகும்” எனக் கூறியுள்ளார்.

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து ...சிறியர் எங்கிருந்தாலும் வரவு...(முக்கிய குறிப்பு....சிறிதரன் எம்.பி)

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நாடாளுமன்றத் தேர்தலில் நான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கின்றமையால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வது முறையற்றது என்பது எனது நீண்டகால நிலைப்பாடாகும்” எனக் கூறியுள்ளார்.

தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவே காய் நகர்த்தியவர், இப்போ வேறொரு துருப்பு கிடைத்ததால் கதையை மாற்றுகிறார். சிறிதரனை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வைத்தால், தன்மேலுள்ள விமர்சனம் தடுக்கப்படும், ஏனைய கட்சிகள் தங்களோடு ஒன்றிணைவதில் தடையேதும் இருக்காது என நினைக்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவசர வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தேர்தலில் தனித்து நின்று பின்னர் இணைவோம், கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் பத்திரிகை அறிக்கை மூலம் சக கட்சிகளுக்கு தெரியப்படுத்தியவர், இப்போ மாறி அழைக்கிறார். பின் அவர்களை துரத்த மாட்டார் என்பது என்ன நிட்சயம்? சணம் வாதம், சணம் பித்தம் கொண்ட புத்தியுள்ளவர் இவர். "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." சலன புத்தியுள்ளோரின் சகவாசம் வேண்டாம். 

நான் தேடுவது கள உறவு சிறியரை! அடித்து துரத்திய நாகபாம்பு மீண்டும் படமெடுக்க துடிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் மாகாணசபை முதல்வராக இருந்த போது…

சுமந்திரன்… மாகாணசபையிலுள்ள தனது ஆட்கள் மூலம் குடைச்சல் கொடுத்து, அவரை நிர்வாகம் செய்ய விடாமல், கடைசியில் வடக்கு மாகாண சபையையும் கலைக்க வைத்து, விக்னேஸ்வரனை அரசியல் அனாதை ஆக்கியவர்தான் சுமந்திரன்.

இப்போ…. ஶ்ரீதரனுக்கு, மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வைத்து… சுமந்திரன் பாராளுமன்றம் போவதுடன், ஶ்ரீதரனின் அரசியல் வாழ்க்கையையும் முடிவிற்கு கொண்டுவர சுமந்திரன் செய்யும்… ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் சூழ்ச்சியே இது.

ஶ்ரீதரனை… மக்கள், பாராளுமன்றதுக்குத்தான் தெரிவு செய்தார்களே ஒழிய மாகாணசபைக்கு அல்ல.

வேண்டுமென்றால்…. ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும். அதுதான் முறையான செயல். நெடுகவும் சபை குழப்பி மாதிரி… மற்றவர்கள் இருக்கும் பதவியில் கண் வைத்து குடைச்சல் கொடுப்பதை இனியாவது நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்வதுதான் மனிதருக்கு அழகு.

27 minutes ago, alvayan said:

தயவு செய்து ...சிறியர் எங்கிருந்தாலும் வரவு...(முக்கிய குறிப்பு....சிறிதரன் எம்.பி)

27 minutes ago, satan said:

நான் தேடுவது கள உறவு சிறியரை! அடித்து துரத்திய நாகபாம்பு மீண்டும் படமெடுக்க துடிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வேண்டுமென்றால்…. ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும். அதுதான் முறையான செயல். நெடுகவும் சபை குழப்பி மாதிரி… மற்றவர்கள் இருக்கும் பதவியில் கண் வைத்து குடைச்சல் கொடுப்பதை இனியாவது நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்வதுதான் மனிதருக்கு அழகு.

இங்கு கோட்டு சூட்டு போட்டு வேலை செய்யமுடியாது கண்டியளோ....எனவே...இதற்கு வாத்தி ஶ்ரீ தான் சரி..😀

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் கலைக்கப் பட்ட வடக்கு மாகாணசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்த விடாமல், சுமந்திரன் அழுத்தம் தருவதாக மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருந்தார்.

ஏனென்றால்… அப்போது தேர்தல் நடத்தினால்.. விக்னேஸ்வரன் மீண்டும் பெருமளவிலான வாக்குகளால் தெரிவு செய்யப் படுவார் என்று சுமந்திரன் அஞ்சியதே காரணம் என்று மக்களால் விமர்சிக்கப் பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

இங்கு கோட்டு சூட்டு போட்டு வேலை செய்யமுடியாது கண்டியளோ....எனவே...இதற்கு வாத்தி ஶ்ரீ தான் சரி..😀

அட…. மாகாணசபை முதல்வரின் உடுப்புத்தான், சுமந்திரனை தடுக்குதோ… 😂. நல்ல சாட்டு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஶ்ரீதரனுக்கு, மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வைத்து… சுமந்திரன் பாராளுமன்றம் போவதுடன், ஶ்ரீதரனின் அரசியல் வாழ்க்கையையும் முடிவிற்கு கொண்டுவர சுமந்திரன் செய்யும்… ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் சூழ்ச்சியே இது.

சிறிதரனை கட்சியிலிருந்து துரத்துவதற்கு எத்தனை தந்திரம் செய்கிறார் எதுவும் பலிக்காதுபோல் இருக்கிறது.

4 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும்.

போட்டியிடலாம், யார் வாக்களிப்பது இவருக்கு? அதோடு வீட்டில போய் மோட்டைபாத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவருக்கு தெரியும், எங்கேயாவது நுழைந்து புகுந்து வந்தால் ஒழிய, நேர்வழியாய் வரமுடியாதென்பது. அதனால் சிறிதரனை சுத்துகிறார் செக்கு சுத்துற மாடு மாதிரி. கட்சியை பலாத்காரமாக கையகப்படுத்தினால் போதுமே, அவர் அதிகாரம் செலுத்த ஆட்கள் வேண்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

சிறிதரனை கட்சியிலிருந்து துரத்துவதற்கு எத்தனை தந்திரம் செய்கிறார் எதுவும் பலிக்காதுபோல் இருக்கிறது.

போட்டியிடலாம், யார் வாக்களிப்பது இவருக்கு? அதோடு வீட்டில போய் மோட்டைபாத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவருக்கு தெரியும், எங்கேயாவது நுழைந்து புகுந்து வந்தால் ஒழிய, நேர்வழியாய் வரமுடியாதென்பது. அதனால் சிறிதரனை சுத்துகிறார் செக்கு சுத்துற மாடு மாதிரி. கட்சியை பலாத்காரமாக கையகப்படுத்தினால் போதுமே, அவர் அதிகாரம் செலுத்த ஆட்கள் வேண்டுமே. 

சுமந்திரன்... சுத்துமாத்து செய்பவர் என்று எங்களுக்கே தெரியும் போது..

அவருடன் ஒன்றாக இருக்கும் ஸ்ரீதரனுக்கு தெரியாமல் இருக்குமா?

அதுகும்... அண்மையில், இவர்கள் இந்தியாவுக்கு போகும் போது..

ஸ்ரீதரனுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "பெட்டிசம்" போட்டதாக

சுமந்திரன் மீது சந்தேகப் பார்வை உள்ளது என்று

பத்திரிகைகளே அம்பலத்துக்கு கொண்டு வந்த பின்...

சுமந்திரனை, ஸ்ரீதரன் நம்ப மாட்டார் என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை முதல்வர் order of precedence அடிப்படையில் ஒரு கபினெட் அமைச்சருக்கு நிகரானவர். அதன் பின் மூன்று படி கீழேதேன் பா.உ.

சிறிதரனுக்கு முதலவர் ஆசை இருப்பதாகத்தான் கேள்வி.

சிறி முதல்வர் வேட்பாளர் ஆனால், சும் எம்பி ஆகி விடுவார்.

இல்லை எண்டால் சும் முதல்வர் வேட்பாளர் ஆகி விடுவார்.

சிறிதரனின் நிலைமை டெலிகேட் பொசிசன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இல்லை சும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கட்டுமே. மக்கள் தீர்மானிக்கட்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

சும் இப்போ சேர்ந்து போட்டி என சொன்னது இதனால்தான்.

மாவை இல்லாதவிடத்து கிளிநொச்சி தவிர ஏனைய இடங்களில் பலரை சேர்த்து சும் ஒருவழியா முதலவர் ஆகப்பார்கிறார்.

அப்படி வந்தால் சிறியை விட பதவியில் மேலே போய்விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

சும் மாகாணசபையில் போட்டியிட்டு வெல்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சும் மாகாணசபையில் போட்டியிட்டு வெல்வாரா?

சுமந்திரனுக்கு... கட்டுக்காசும் கிடைக்காது.

👇 சுமந்திரனின் தோல்வி பட்டியல் கீழே... 👇

1) தமிழரசு கட்சி தலைவர் போட்டியில்... தோல்வி.

2) பாராளுமன்ற தேர்தலில் தோல்வி.

3) அடுத்து... மாகாண சபை தேர்தலிலும் தோல்வியுற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளார்.

தோல்வியின் நாயகன் சுமந்திரனுக்கு, மீண்டும் தோல்வியுற... முற்கூட்டிய வாழ்த்துக்கள். 🙃

  • கருத்துக்கள உறவுகள்

481076212_1871996056539964_2469420220868

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை.

- சிறிதரன் எம்.பி. திட்டவட்டம். -

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2025 at 01:30, பெருமாள் said:

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

1 hour ago, தமிழ் சிறி said:

481076212_1871996056539964_2469420220868

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை.

- சிறிதரன் எம்.பி. திட்டவட்டம். -

சுமந்திரனின் பாராளுமன்ற கனவு கலைந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் பாராளுமன்ற கனவு கலைந்தது.

வேறை விளக்கம் கொடுத்தபடி எப்படியும் பாராளுமன்றம் வந்து தமிழரை கருவறுத்து சிங்களத்துக்கு சேவகம் செய்யும் இந்த சுமத்திர ஓணான் .

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2025 at 15:51, alvayan said:

இங்கு கோட்டு சூட்டு போட்டு வேலை செய்யமுடியாது கண்டியளோ....எனவே...இதற்கு வாத்தி ஶ்ரீ தான் சரி..😀

அவரின் ஆடை அலங்காரமெல்லாம் மக்கள் முன் அவரை உயர்ந்தவராக காட்டவில்லையே? உந்த ஆடை அவருக்கு தகுதியற்றது என ஆயிற்று.

On 3/3/2025 at 08:04, goshan_che said:

அப்படி வந்தால் சிறியை விட பதவியில் மேலே போய்விடுவார்.

செய்வாரென்றா நினைக்கிறீர்கள்? அப்படியானால் ஏன் சிறிதரனை அங்கே கலைத்து தான் பாராளுமன்றம் போக முயற்சிக்கிறார்? தானே முதலமைச்சருக்கு போட்டியிடலாமே? அவர் இப்போ தன் நிலைமையை இன்னும் மோசமாக்கி வைத்திருக்கிறார். அவரெல்லாம் தேர்தலில் நின்று வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான்.

14 hours ago, தமிழ் சிறி said:

தோல்வியின் நாயகன் சுமந்திரனுக்கு, மீண்டும் தோல்வியுற... முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

சுமந்திரனுக்கு இப்போ இறங்கு முகம் போலுள்ளது, அவரது எஜமான்கள் வீழ்ந்தது.

2 hours ago, பெருமாள் said:

வேறை விளக்கம் கொடுத்தபடி எப்படியும் பாராளுமன்றம் வந்து தமிழரை கருவறுத்து சிங்களத்துக்கு சேவகம் செய்யும் இந்த சுமத்திர ஓணான் .

கண்டிப்பாக! அதுவரை அவருக்கு உறக்கமில்லை.

அவர் எடுக்கிற முயற்சியெல்லாம் தடக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான்.

வடகிழக்கு தமிழ் மக்களால் வெறுக்க பட்டு அரசியலில் தோல்வியடைந்த சுமத்திரன் ஓணானை அனுரா அரவணைக்க மாட்டார் மாறாக இவரை வெளியில் வைத்து கொண்டு வடகிழக்கில் அவரின் கட்சியை வளர்க்கவே விரும்புவார் அநேகர் மறந்து இருக்க கூடும் எந்தவொரு பதவியிலும் இல்லாத இந்த ஓணான் கடந்த மாதங்களில் சில வெளிநாட்டு தூதுவர்களை தனியே சந்தித்தது அனுராசிங்களத்தை தன்பக்கம் வர வைக்கவே அன்றி வேறு ஒன்றும் கிடையாது. அதன் பின்பே அவருக்குரிய பாதுகாவலர்கள் வழங்கபட்டு முக்குடைபட்டது .துரோகிகளை விட மோசமானவர் இந்த உலகில் இல்லை என்று நம்பினோம் ஆனால் சுமத்திரன் என்ற ஓணான் இருக்குது என்று கடவுள் காட்டி விட்டார் .

நிறம் மாறும் ஓணான் சிலவேளை சுமத்திரன் என்றவரின் கதையை கேட்டால் கட்டாயம் தற்கொலை பண்ணி விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அனுராவுக்கு தேவையானவர்களை அவர் தெரிந்தெடுத்துவிட்டார் மக்களை கொண்டே. மக்களால் நிராகரிக்கப்பட்ட, கட்சியால் நிராகரிக்கப்பட்ட இவரை எதற்கு? இடத்தை அடைத்துப்பிடிக்கவோ? இவருக்குரிய பதிலை அனுர கட்சியை சார்ந்தவர், ஏற்கெனவே ஹக்கீமுக்கு வழங்கியுள்ளார். இவர் அதை நேரடியாக கேட்க விரும்பினால் முயற்சிக்கட்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, satan said:

செய்வாரென்றா நினைக்கிறீர்கள்? அப்படியானால் ஏன் சிறிதரனை அங்கே கலைத்து தான் பாராளுமன்றம் போக முயற்சிக்கிறார்? தானே முதலமைச்சருக்கு போட்டியிடலாமே? அவர் இப்போ தன் நிலைமையை இன்னும் மோசமாக்கி வைத்திருக்கிறார். அவரெல்லாம் தேர்தலில் நின்று வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான்.

ஹிட்லர் போல் இழப்பதற்கு எதுவும் இல்லை சும்முக்கு இப்போ . அது அல்லது இது. எதுவும் ஓக்கே.

சிறிக்கு அதுவும் போய் இதுவும் போககூடும்.

காலம் விசித்திரமானது.

அரசியல் அதை விட விசித்திரமானது.

நேற்று வெற்றி போல தெரிந்தது இன்று தோல்வியாகும்.

நேற்று தோல்வி போல் தெரிந்தது இன்று வெற்றியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் என்பவர் மக்களின் ஆணையை மதித்து சிறிது ஓய்வெடுத்து, தனது செயலை மாற்றி, எல்லோரையும் மதித்து, கட்சியின் கொள்கைகளோடு சேர்ந்து செயற்பட்டிருந்தால்: பின்னாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரோ, மக்களின் ஆணைக்கு சவால் விடுவதுபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை வெளியே தள்ளி, சர்வாதிகாரிபோல் இல்லாத பதவிகளை உருவாக்கி கையகப்படுத்திக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் மாவையர் தோற்றபோது என்ன நடந்தது? அவர்க்கு அறிவிக்காமல், அவரோடு கலந்து பேசாமல், அவருக்கெதிரான கருத்துக்களை ஊடகங்களில் தன்னிச்சையாக பகிரங்கமாக அறிவித்து, சிறிதரனை மாவைக்கெதிராக கொம்பு சீவி அவரை அவமானப்படுத்தவில்லையா? இப்போ இவர் தோற்றபோது எப்படி செயற்படுகிறார்? இதுதான் கட்சியின் கொள்கையா? சட்டத்தரணியின் சமநிலை பேணும் தன்மையா? இவரது சர்வாதிகார செயலெல்லாம் அவரது திறமையில் உள்ள  பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார், ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தான் ஒருபோதுமே மக்களால் தெரிவு செய்யப்படமாட்டேன் என எண்ணுவதினாலேயே குறுக்கு வழிகளை அவசரமாக தேடுகிறார்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

அனுர கட்சியை சார்ந்தவர், ஏற்கெனவே ஹக்கீமுக்கு வழங்கியுள்ளார். இவர் அதை நேரடியாக கேட்க விரும்பினால் முயற்சிக்கட்டும்.

வல்லவர் புத்தி உள்ளவர் ஆளுமை நிறைந்தவர் என்று இவரின் அடிபிடிகள் ஊத்தி தள்ளுவினம் கடைசியில் சுமத்திர நாய் இலிருந்து உன்னிகள் கழண்டு ஓடியே போயிட்டினம் .இப்ப வாயே திறப்பதில்லை 😃

(தேவையில்லாமல் நாய்கள் பற்றி சுமத்து உடன் ஒப்பிட்டதுக்கு நாய்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் )

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இது இயற்கை. அவருக்கே அவரில் நம்பிக்கையில்லாத போது, சிவஞானத்தை வைத்து காரியம் நகர்த்த முயலும்போது, மற்றவர்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது இவரால்? தொடர்ந்து அடாவடி செய்தால், அதற்கு பெயர் அரசியல் ரவுடி. தங்களது அரசியலும் இருண்டு வருவதை காணும் புத்திசாலிகள், சந்தர்ப்பவாதிகள் விலகத்தான் செய்வார்கள். 

ஒரு அன்பான வேண்டுகோள் உங்களிடம். விளங்குமென நினைக்கிறன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.