Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில்,  16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும்,  51.6 சதவீதமானோர்  ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும்,  38.4 சதவீதமானோர்  தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று  தெரிவித்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இதேவேளை  8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர்  அதாவது  1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாகவும், எனவே , வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://athavannews.com/2025/1424289

பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் :

  • வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது.

  • வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது

  • தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது

  • ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது)

  • பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது

மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லாம் ஆங்கில சோதனை பாஸ்பண்ணினால்தான் விசா கொடுக்கிறார்கள். விதிவிலக்கு பெற கடும் காரணங்கள் காட்ட வேண்டி வரும்.

ஆனால் பலவருடங்களாக இந்த விதிகள் இறுக முதல் உள்ளே வந்து வாழ்பவர்கள் கூட மொழியை படிக்காமல் இருக்கிறார்கள்.

இதில் பாகிஸ்தானி, பங்களாதேசி, சோமாலியர்தான் அதிகம்.

எங்கட ஆக்கள் தட்டு தடுமாறி பேசும் அளவிலாவது இருப்பார்கள். ஆனால் டாக்டர், சோசல் காசு, இமிகிரேசன், பொலிஸ் என்றால் மொழிபெயர்பாளர் உதவி தேவைப்படும்.

போக, போக இது மாறிவிடும்.

ஆனால் சட்டவிரோத குடியேறிகளை ஆங்கில சோதனைக்கு உட்படுத்த முடியாது. அவர்களாக படித்தால்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉

இதை எங்கடைநிறுவனத்தில் வந்து சொல்லுங்கோ. ஆங்கிலம்நல்லாக் கதைக்கத் தெரிந்தவன் எல்லாம் பெரியாள் என்று சுத்துறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

இதை எங்கடைநிறுவனத்தில் வந்து சொல்லுங்கோ. ஆங்கிலம்நல்லாக் கதைக்கத் தெரிந்தவன் எல்லாம் பெரியாள் என்று சுத்துறாங்கள்

உங்களுக்குப் "பின் கதை" தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் என் நிலைப்பாடு, பரிச்சயமாகும் ஒவ்வொரு மொழியும் ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைப்பது மாதிரி (இப்படி ஏதோ ஒரு நாட்டுப் பழமொழி இருக்கிறது). ஆங்கிலம் உலகின் இணைப்பு மொழியாக இருப்பதால், அதைத் தெரிந்திருப்பது கூடுதல் அனுகூலம் தரும்.

இப்படி யோசியுங்கள்: நீங்கள் வாகன திருத்தகம் நடத்தும் ஒருவரென்றால், உங்களிடம் எல்லா வகையான கழட்டிப் பூட்டும் சாவிகளும் இருக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்து திருத்தகத்தில் கடன் வாங்க வேண்டும் அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே உங்கள் சாவிப் பெட்டகத்தில் இருக்கும் சாவிகளின் எண்ணிக்கை உங்கள் வாகனம் திருத்தும் தொழிலை நிச்சயம் பாதிக்கும். வாழும் நாட்டிலும், செய்யும் தொழிலிலும் புளங்கும் மொழியும் இதே போன்ற ஒரு அத்தியாவசியமான சாவி தான்!

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉

ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அதில் படித்தால் பேசினால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்பதை தமிழ் மக்கள் விளங்கி கொண்டு வந்த காலகட்டத்தில் தமிழ் மொழி காக்கவும் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ்நாட்டில் தோன்றிய கோமன் ஒருவர் தனது மகன்களை ஆங்கில வழி மூலம் கல்வி தனியார் பாடசாலையில் பணம் செலுத்தி படிப்பிப்பதால் தமிழர்களும் தமிழ்நாட்டிலேயே தமிழ் ஒன்றுமே இல்லை ஆங்கிலம் தான் கெத்து ஆங்கில வழி மூலம் கல்வி கற்பதால் யுகே கனடா அவுஸ்ரேலியா அமெரிக்காவில் வாழ்வது போன்ற ஒரு பீலிங்ஸ் வரும் என்று சீரியசாகிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2025 at 07:56, இணையவன் said:

பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் :

  • வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது.

  • வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது

  • தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது

  • ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது)

  • பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது

மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.

இன்னுமொரு 20 வருடத்தில் அந்த தலைமுறை இல்லாமல் போய் பிரான்சில் பிறந்து வளரும் தமிழர்கள்தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். பிரென்ச் மொழி பேச பழகுவது கொஞ்சம் சவாலான விடயம் என்றே எண்ணுகிறேன். உச்சரிப்புகள் கொஞ்சம் கடினம்

AI இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடும் நாங்கள் தமிழில் பேசினாலே போதும் உங்களுக்கு என்ன பாசையில் யாருடைய குரலில் வேண்டுமோ அதை அது பார்த்து கொள்ளும்.

நான் சமாளிக்க கூடிய அளவிற்கு ஸ்பானிஸ் பேசுவேன் சரளமாக ஸ்பானிஸ் விளங்கும். கடந்த ஜனவரி மாதம் பிரேசில் சென்று இருந்தேன் அங்கு போர்துகேஸ் தான் பேசுவார்கள். முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது பின்பு ஸ்மார்ட் போன் மூலம் மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கியதால் பெரும்பாலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் பேசுவதை அது போர்த்துக்கீசில் சொல்லும். மிக இலகுவாக இருந்தது. இன்னமும் வளர்ச்சி அடைந்த பின்பு இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய அனுரகுமாரவின் சீன விஜயத்தில் அவருடன் எந்த மொழி பெயர்பாளரும் இல்லை.

காதில் ஒரு புளூடூத் போல AI powered simultaneous translation device ஐ செருகிகொண்டார்.

சீன பிரதிநிதிகள், ஏனையோர் சீன மொழியில், இவரும் விஜித ஹேரத்தும் சிங்களத்தில், ஒரே மொழி பேசுவது போல் பேசி கொண்டார்கள்.

டீமூவில் ஒண்டை வாங்கிபார்த்தேன். அது ஒரு அப்பை டவுண்ட்லோட் பண்ண சொல்லியது. வேண்டாம் என விட்டு விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 00:56, இணையவன் said:

பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் :

  • வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது.

  • வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது

  • தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது

  • ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது)

  • பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது

மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.

80 களில் வந்த அநேகர் 25/30 வயதை தாண்டியவர்களாக இருந்திருப்பார்கள் அத்துடன் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்திருப்பார்கள் ..இரண்டு வேலை பார்த்து ஊரில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்பி தங்களையும் கவனிக்க வேண்டிய ஒர் இக்கட்டான சுழலில் இருந்திருப்பார்கள் ....ஆகவே அவர்களுக்கு மொழியை அறிந்து கொள்வதை விட பணம் சம்பாதிப்பதிலதான் அதிக ஆர்வமாக இருந்திருக்கும் ...

ஆனால் தங்கள் வாரிசுகளை அந்த நிலையில் வைக்கவில்லை அவர்களை விட பலமடங்கு உச்சத்துக்கு ஏற்றி வைத்துள்ளனர்...மொழி தெரியாமல் தங்கள பிள்ளைகளை கல்வியில் ஒர் நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ள‌னர் ..

இறுதியில் கேட்டு பாருங்கள் 6 தலமுறைக்கு பின்பு தமிழ் பேச தெரியாதாம் ஆனால் ஒர் தமிழ் பாட்டு திரிபடைந்து பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்துள்ளது...இந்த நிலை எமக்கும் ஏற்படும் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.