Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

ஜடேஜாவும், நூர் அஹமட்டும் மூன்று ஓவர் மட்டுமே போட்டுள்ளனர்! வாழ்க CSK கப்டன்சி.

அல்லது மேட்ச் பிக்ஸிங்கோ தெரியவில்லை!

சென்னையில் 6 பந்து வீச்சாளர்கள். இவர்களில் Khaleel Ahamed பவர் பிளே ஓவர்களில் சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். பெரும் பாலும் இவர் முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்கள் வீசுவார். மற்றைய 3 ஓவர்களில் ஜடேஜா, பதிரானா போன்றவர்கள் ப ந்து வீசுவதில்லை . முன்பு வீசி பல ஓட்டங்களை விட்டு கொடுத்திருக்கிறார்கள். பதிரானா இறுதி ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடிய death bowler. முன்பு மேற்கிந்தியா வீரர் பிராவோ சென்னை அணியின் death blower ஆக இருந்தார். பதிரனவுடன் பெரும்பாலும் கடைசி ஓவர்கள் வேகப்பந்து விச்சளார்கள்தான் பந்து வீசுவார்கள். சுழல் பந்து /மெதுவாக வீசுபவர்கள் வீச்சாளர்கள் வீசினால் எதிரணி வீரர்கள் பல ஓட்டங்கள் பெறுவார்கள். ( பங்களூர் அணியின் கருணால் பாண்டியா சில போட்டிகளுக்கு வீசி இருக்கிறார்.இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் இரண்டு 6 ஒட்டங்களும், 1 நான்கு ஓட்டமும் பெற்றார். ரித்து சிங் (KKR) நேற்று கடைசி ஓவரில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 4,4,6 என ஓட்டங்கள் பெற்றார்). khaleel அஹமத் மிகுதியாக இருந்த 4 வது ஓவரையும் இறுதி ஓவர்களில் வீசினார்

சென்னையின் Khaleel Ahamed பவர் பிளேயில் 3 ஓவர்கள் போட மிகுதி 3 ஓவர்களில் 2 ஓவர்கள் முகேஷ் சவுத்திரி வீசினார் . அவருடைய 2 வது ஓவரில் அதிக ஓட்டங்களை எதிர் அணியினர் எடுத்ததினாலே அஸ்வினை 6 ஓவருக்கு அழைக்கப்பட்டார். (பவர் பிளே ஓவரில் சுழல் பந்து வீச்சாளர்களில் முன்பு இலங்கை வீரர் திக்சனா பந்து வீசுபவர். அஸ்வினும் வேறு அணியில் இருந்தபோதும், முன்பு சென்னைக்காக விளையாடியபோதும் வீசியிருக்கிறார். அத்துடன் பவர் பிளே ஓவர்களில் ஜடேஜா, பத்திரான போன்றவர்கள் பந்துவீசுவதில்லை.)

6 ஓவரில் அஸ்வின் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கினார். பவர் பிளே முடிந்த 8 வது ஓவரில் அஸ்வின் 2 விக்கேற்றுக்களை பெற்றார் .

kahaleel ahamed, பத்திரனா தலா 4 ஓவர்கள் எல்லபோட்டிகளிலும் வீசுவார்கள். ஆக இவர்களின் 8 ஓவர்கள் பவர் பிளே, இறுதி ஓவர்களில் உபயோகிக்கப்படும். 2 ஓவர்கள் மகேஷ் சவுத்திரி வீசியதினால் மிகுதி 10 ஓவர்களில்தான் சென்னை அணி, சுழல் பந்து வீச்சாளர்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் அஸ்வின் 4 ஓவர் வீசியதால் மற்றைய இருவருக்கும் தலா 3 ஓவர்கள் வழ்ங்கப்பட்டது . முன்பு சென்னை அணியில் தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா என இருந்தபோதும் ஒரு முறையும் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

சென்னை அணியில்தான் பிரபல்யமான 3 சுழல் பந்து விச்சளார்கள் இருக்கிறார்கள். மற்றைய அணியில் அதிக பட்சம் 2 பிரபல்யமான சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

Edited by கந்தப்பு

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

சென்னையில் 6 பந்து வீச்சாளர்கள். இவர்களில் Khaleel Ahamed பவர் பிளே ஓவர்களில் சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். பெரும் பாலும் இவர் முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்கள் வீசுவார். மற்றைய 3 ஓவர்களில் ஜடேஜா, பதிரானா போன்றவர்கள் ப ந்து வீசுவதில்லை . முன்பு வீசி பல ஓட்டங்களை விட்டு கொடுத்திருக்கிறார்கள். பதிரானா இறுதி ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடிய death bowler. முன்பு மேற்கிந்தியா வீரர் பிராவோ சென்னை அணியின் death blower ஆக இருந்தார். பதிரனவுடன் பெரும்பாலும் கடைசி ஓவர்கள் வேகப்பந்து விச்சளார்கள்தான் பந்து வீசுவார்கள். சுழல் பந்து /மெதுவாக வீசுபவர்கள் வீச்சாளர்கள் வீசினால் எதிரணி வீரர்கள் பல ஓட்டங்கள் பெறுவார்கள். ( பங்களூர் அணியின் கருணால் பாண்டியா சில போட்டிகளுக்கு வீசி இருக்கிறார்.இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் இரண்டு 6 ஒட்டங்களும், 1 நான்கு ஓட்டமும் பெற்றார். ரித்து சிங் (KKR) நேற்று கடைசி ஓவரில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 4,4,6 என ஓட்டங்கள் பெற்றார்). khaleel அஹமத் மிகுதியாக இருந்த 4 வது ஓவரையும் இறுதி ஓவர்களில் வீசினார்

சென்னையின் Khaleel Ahamed பவர் பிளேயில் 3 ஓவர்கள் போட மிகுதி 3 ஓவர்களில் 2 ஓவர்கள் முகேஷ் சவுத்திரி வீசினார் . அவருடைய 2 வது ஓவரில் அதிக ஓட்டங்களை எதிர் அணியினர் எடுத்ததினாலே அஸ்வினை 6 ஓவருக்கு அழைக்கப்பட்டார். (பவர் பிளே ஓவரில் சுழல் பந்து வீச்சாளர்களில் முன்பு இலங்கை வீரர் திக்சனா பந்து வீசுபவர். அஸ்வினும் வேறு அணியில் இருந்தபோதும், முன்பு சென்னைக்காக விளையாடியபோதும் வீசியிருக்கிறார். அத்துடன் பவர் பிளே ஓவர்களில் ஜடேஜா, பத்திரான போன்றவர்கள் பந்துவீசுவதில்லை.)

6 ஓவரில் அஸ்வின் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கினார். பவர் பிளே முடிந்த 8 வது ஓவரில் அஸ்வின் 2 விக்கேற்றுக்களை பெற்றார் .

kahaleel ahamed, பத்திரனா தலா 4 ஓவர்கள் எல்லபோட்டிகளிலும் வீசுவார்கள். ஆக இவர்களின் 8 ஓவர்கள் பவர் பிளே, இறுதி ஓவர்களில் உபயோகிக்கப்படும். 2 ஓவர்கள் மகேஷ் சவுத்திரி வீசியதினால் மிகுதி 10 ஓவர்களில்தான் சென்னை அணி, சுழல் பந்து வீச்சாளர்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் அஸ்வின் 4 ஓவர் வீசியதால் மற்றைய இருவருக்கும் தலா 3 ஓவர்கள் வழ்ங்கப்பட்டது . முன்பு சென்னை அணியில் தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா என இருந்தபோதும் ஒரு முறையும் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

சென்னை அணியில்தான் பிரபல்யமான 3 சுழல் பந்து விச்சளார்கள் இருக்கிறார்கள். மற்றைய அணியில் அதிக பட்சம் 2 பிரபல்யமான சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

கந்தப்பு நான் சொன்னது நேற்றய போட்டியில் மிகைத்திறம்பட பந்துவீசிய ஜடேஜாவிற்கும் வலதுகை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய நூர் அகமடிற்கும் ஏன் நான்கு ஓவர்களும் பந்துவீச கொடுக்கவில்லையென்றுதான்! அத்துடன் அஸ்ஹவினுக்கு தொடர்ந்து ஒவர்களை போடக்கொடுத்ததும் தவறு! மற்றய கப்டன்கள் எப்படி பந்துவீச்சாளர்களை கையாளுகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்!

சென்னை அணியின் திட்டமிடல் குறைபாடாக சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் அஸ்வினை பவர் பிளேயில் பயன்படுத்துவது, புதிய பந்து ஆடுகள்த்தில் அதிகமாக திரும்பாத வழுக்கி செல்லும் நிலை காணப்படும்.

பொதுவாக சுழல்பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பந்து வீசுவதனை விரும்புவதில்லை என கருதுகிறேன், பவர் பிளேயில் இலகுவாக எதிர்பார்க்க கூடியவாறாக வழமையாக பந்து வீசும் முறையினை பயன்படுத்தி களத்தடுப்பில் இருக்கும் கட்டுப்பாட்டினை பயன்படுத்தி அதிகமாக ஓட்டமெடுக்க அஸ்வினின் பந்து வீச்சு இலகுவாக இருக்கும்.

தீக்சனா, நரேன், வருண் போன்றவர்களின் மாயாலால பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பவர் பிளேயில் துடுப்பாட்டக்காரர்கள் எதிர்பார்க்க கூடியவாறு இல்லாமல் இருக்கும் தன்மை மற்றும் கிடையாக வீசுவதால் (flat) அடித்தாட முடியாதநிலையும் காணப்படும் அதனால் விக்கெட் எடுப்பதுடன் ஓட்டங்களையும் கட்டுப்படுத்தலாம்.

ஜடேயாவின் பந்துவிசும் முறை பவர் பிளேயில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காமல் வீசலாம் ஆனால் விக்கெட் எடுக்க முடியாது ஆனால் அவரது பந்து வீச்சில் எந்த எதிர்பாரா விடயமும் அஸ்வினின் பந்து வீச்சு போல இருக்காது ஆனால் அஸ்வினை தொடர்ந்து பயன்படுத்துவது அவரது பந்து வீச்சினால் ஓட்டங்கள் அதிகம் எடுக்கும் போது மட்டையாளர்கள் வலிந்து தவறு செய்யும் நிலை உருவாகி விக்கெட் எடுக்கலாம் எனும் நோக்கமாக இருக்கலாம்.

இரண்டு பந்து வீச்சாளரிகளின் பந்து வீச்சும் வேறுபட்டது ஜடேயாவின் பந்து வீச்சு கிடையாக தாழ்வாக புதிய பந்தில் வேகமாக வரும் ஆனால் அஸ்வின் பந்து வீச்சு மெதுவாக உயர்ந்து வரும் அது துடுப்பாட்டக்காரர்களுக்கு பந்தினை தூக்கி அடிக்க இலகுவாக இருக்கும்.

பத்திரானாவை பவர்பிளேயில் பாவிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பத்திரனாவின் பந்து வீசும் முறையால் பந்து ஆரம்ப ஓவர்களில் காணப்படும் சுவிங் ஆகும் (no seam up) தன்மை குறைவாக இருப்பதால் அவரது பந்து வீச்சினை பவர் பிளேயிற்கு வெளியே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அவரது பந்து வீச்சின் அளவுகளை கணிப்பது சிரமமாக இருப்பதால் பவர் பிளேயில் கூட அவரை சிறப்பாக பயன்படுத்தலாம், ஆனால் அவரது பந்து வீச்சு ஒரு போது கட்டுப்பாடாக இருப்பதில்லை எனும் குறைபாடு உள்ளது.

ஆனால் தற்போது சென்னை அணி கொடைவள்ளல்களாக பவர்பிளேயில் இருப்பதால் அதுவும் ஒரு தோல்விக்கான காரணியாக உள்ள நிலையில் பத்திரானாவை பவர் பிளேயில் பயன்படுத்துவது ஒரு நல்ல மாற்று திட்டமாக இருக்கலாம்.

சென்னை அணி தனது சுழலை நம்பி களமிறங்கினாலும் சுழலை முழுமையாக பயன்படுத்துவதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் போது எழுந்தமானமாக பயன்படுத்தாமல் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப எதிரணி வீரர்களுக்கு ஏற்ப பயன்படுத்தினால் அவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள்.

அணித்தலமையிடம் எப்போதும் ஒரு திட்டமிருக்கும் ஆனால் சென்னை அணியில் அவ்வாறான திட்டத்துடன் போட்டிக்கு செல்வதில்லை என முன்னால் சென்னை அணி வீரர் ராயுடு ஒரு பேட்டியில் தெரிவித்தார், அப்போது தோனி அணித்தலைவராக செயற்பட்டார், அவர் கள சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுவதால் வலிந்து ஒரு ஒரு திட்டமிடலுடன் சென்று களநிலை மாறுபாடு அணியினை குழப்பலாம் என நினைத்து அதனை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் தற்போதய சென்னை அணியிடம் எந்த தெரிவுமில்லாமல் ஒரு குழப்பகரமான நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு புதிய ஆட்டக்காரர்கள் எனும் நிலை காணப்படுகிறது, சென்னை அணியில் இப்படியான குழப்ப நிலை வீரர்களை பாதிக்க ஆரம்பித்து விட்டது, மிக சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் கூட சாதாரண சுழல் பந்து வீச்சாளர்கள் கொண்ட எதிரணியினரை விட மோசமாக செயற்படுகிறார்கள், இதே நிலைதான் துடுப்பாட்டத்திலும் காணப்படுகிறது.

உண்மையில் சென்னை அணி ஒன்றும் மோசமான வீரர்களை கொண்ட அணியல்ல.

50 minutes ago, Eppothum Thamizhan said:

கந்தப்பு நான் சொன்னது நேற்றய போட்டியில் மிகைத்திறம்பட பந்துவீசிய ஜடேஜாவிற்கும் வலதுகை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய நூர் அகமடிற்கும் ஏன் நான்கு ஓவர்களும் பந்துவீச கொடுக்கவில்லையென்றுதான்! அத்துடன் அஸ்ஹவினுக்கு தொடர்ந்து ஒவர்களை போடக்கொடுத்ததும் தவறு! மற்றய கப்டன்கள் எப்படி பந்துவீச்சாளர்களை கையாளுகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்!

அஸ்வினும் சிறந்த பந்துவிச்சாளர்தான், ஆனால் நீங்கள் கூறிய பந்து வீச்சாளரகளை கையாழும் முறையாலேயே அவரரது பந்து வீச்சு சோபை இழந்து காணப்படுகிறது, அஸ்வினுக்கு போட்டி தொடர்பான புரிதல் அதிகம், அவர் அணித்தலைமைக்கு ஒரு தெரிவாக இருக்கலாம், ஆனால் இளம் வீரரான ருத்துராஜை நீண்ட கால நோக்கில் தயார்படுத்துகிறார்கள் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் ஒரு பந்து வீச்சாளரோ அல்லது துடுப்பாட்டக்காரரோ அல்லது அணிதலைமையோ சோபை இழந்து காணப்படும் போது இலங்கைஉடன் ஒரு போட்டித்தொடருக்கு போனால் அவர்களது ஆட்டம் வழமைக்கு திரும்பும், ஐ பி எல்லி சென்னை அணி தற்போது இலங்கை அணியின் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது போல தெரிகிறது.🤣

ரியான் பராக் அணித்தலையில் குழறுபடிகளுடனிருந்தவர் சென்னையுடனான போட்டியின் பின் சிறப்பாக செயல்படுகிறார், ஆர்ச்சர், ரான, தீக்சனா, கசரங்க , ரானா என ஒரே அணியிலே பலர் தமது சோவை இழந்து கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியுடன் ஒரே ஒரு போட்டியில் விளையாடி அனைவரையும் வளமைக்கு கொண்டு வந்த சென்னை அணியினர். 🤣

இன்றைய போட்டியில் ராயஸ்தான் அணி வென்றால் அந்த புகழ் சென்னைக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

Pitch and conditions

Ahmedabad offers a choice of surfaces - black soil, which makes the pitch slower and lower, and red soil, which offers pace and bounce. All that considered though, batters have scored runs at a rate of 9.76 per over, which puts this ground behind only Hyderabad (10.16) in terms of high-scoring venues this IPL.

கிரிக் இன்போ தளத்தின் ஆடுகள கணிப்பின் படி இது ஒரு கறுப்பு மண் கொண்ட ஆடுகளம், அதனால் பவர் பிளேயில் அடித்தாடுவார்கள் என கருதப்படுகிறது, பந்து மென்மையான பந்து இலகுவாக மட்டைக்கு வராது.

அதிக ஒட்டங்களை எடுக்க கூடிய ஆடுகளம் என கிரிகிபோவில் குறிப்பிடப்பட்டுள்ளது, முதலாவதாக துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கும், மைதான ஈரலிப்பு இருந்தால் இரண்டாவது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்வார்கள், மெதுவான ஆடுகளம் மேலும் மெதுவாகும் நேரம் செல்ல செல்ல.

சுழல் ஆதிக்கம் காணப்படும்.

இன்றைய போட்டியில் ரபாடா இசாந்திற்கு பதிலாக விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை புதன் 09 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

GT எதிர் RR

18 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • வாத்தியார்

  • சுவி

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ox_1f402.gif

மறுபடியும் கூட்டா?இன்று இந்த குழு வெற்றி பெற்றால் சுவியர் நந்தனும்உச்சிக்குப் போய் விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

489495661_1225095496291080_4728151670986

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புலவர் said:

மறுபடியும் கூட்டா?இன்று இந்த குழு வெற்றி பெற்றால் சுவியர் நந்தனும்உச்சிக்குப் போய் விடுவார்கள்

குஜராத் அணி தொடராக சிறப்பாக செயல்படுவர், ராஜஸ்தான் அணி எப்படி இவர்களால் இப்படி சொதப்பமுடிகிறது என்பதனை கணிக்கவே முடியாத அணி, ராஜஸ்தான் அணி வெல்ல சுவியும், நந்தனும் நேரடியாக களத்தில் இறங்கினாலேயே வாய்ப்புள்ளது🤣 (நகைசுவகைக்காக கூறியது கோவிக்க வேண்டாம்).

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2025 at 11:58, கந்தப்பு said:

தம்பி சின்னப்பிள்ளை மாதிரி கோவிக்காமல் வந்து எழுதுங்கள். நீங்களும் கேட்டதினால்தான் இப்போட்டியில் கலந்து கொண்டேன். வீட்டில வாங்கி வைக்க இடமெல்லாத அளவுக்கு முட்டைகள் வாங்கி குவிக்கிறேன் 😀

உங்க‌ளை ம‌ட்டும் அல்ல‌ இன்னும் ப‌ல‌ரை தொலைபேசி மூல‌ம் தொட‌ர்வு கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்க‌ என்று கேட்டு இருந்தேன் அவ‌ர்க‌ளும் என‌து அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌வை...................

வெறும‌ன‌ 13, 16 பேர் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் போட்டியில் ப‌ம்ப‌ல் இருக்காது அத‌னால் கூடுத‌ல் உற‌வுக‌ளை நான் தான் இத‌ற்க்குள் கூட்டி வ‌ந்தேன்,

இந்த‌ எளிய‌ பிள்ளைய‌ ம‌ன்னித்துக் கொள்ளுங்கோ...............இனி நான் யாரையும் அழைத்து வ‌ர‌ மாட்டேன் ம‌ற்றும் யாழ் ஊடாக‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் அழைப்பும் கொடுக்க‌ மாட்டேன்....................

நான் 14வ‌ருட‌மாய் விளையாட்டு திரியில் எப்ப‌டி எழுதி வ‌ந்தேனோ அப்ப‌டி தான் இப்ப‌ வ‌ரை எழுதுகிறேன்....................நேற்று வ‌ந்த‌வ‌ர் அது ச‌ரி இல்லை இது ச‌ரி இல்லை என்று ச‌ட்ட‌ம் போடும் போது , இது என‌க்கான‌ இட‌ம் இல்லை என‌ நினைத்து நானாக‌வே ஒதுங்கி நான்...................ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி தெரியாட்டி ப‌ல‌ விளையாட்டு போட்டி திரிக‌ள் யாழில் அப்ப‌டியே அழியாம‌ இருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள‌ட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை எப்ப‌டி எழுதி இருக்கிறார்க‌ள் என்று......................உங்க‌ளுக்கு ஒன்றை நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா 2012ம் ஆண்டு யாழில் நான் தான் முத‌ல் எழுதின‌து , அப்பாகிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அவ‌ர்க‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் என‌

அப்ப‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ம்ப‌லுக்கு என்னை பார்த்து ந‌க்க‌ல் அடிச்சின‌ம் த‌ம்பி உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று😁👍.................அப்பாகிஸ்தான் அணி அப்போது சின்ன‌ அணி இப்போது பெரிய‌ அணிக‌ளை வென்று ப‌ல‌மான‌ அணியா வ‌ள‌ந்து விட்ட‌து என‌து க‌ணிப்பு பிழைக்க‌ வில்லை......................

அதே கால‌ப் ப‌குதியில் நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியில் நான் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் , என‌து முக‌வ‌ரிக்கு நீங்க‌ள் அனுப்பி வைச்ச‌ ப‌ரிசு கிடைச்ச‌தையும் இந்த‌ திரியில் நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா......................

ம‌ன‌ம் இட‌ம் கொடுத்தால் 2026 T20 உல‌க‌ கிண்ண‌ போட்டியில் ச‌ந்திப்போம் இதே மன‌ நிலையில் இருந்தால் சும்மா பார்வையாள‌ரா இருப்பேன்👍..............................

On 7/4/2025 at 12:33, சுவைப்பிரியன் said:

பையா அவசரப்பட வேண்டாம்.அவருக்கு என்ன பிரச்சனையோ ஆனாலும் அவரும் நகைச்சுவை பேர்வழி தானே.உதுகளை எல்லாம் பெரிசு படுத்தமல் தொடரந்து வாங்கோ.இல்லாட்டால் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.அந்தப் பழி உங்களுக்கு தேவையா.

நேர‌த்துக்கு நேர‌ம் வ‌டிவாய் சாப்பிடுங்கோ

சுவை அண்ணா.................

உங்க‌ட‌ அன்புக்கு ந‌ன்றி

நான் இனி இந்த‌ திரிக்குள் எழுத‌ மாட்டேன் , இது சும்மா பொழுது போக்கு திரி ஆனால் , ம‌ன‌ உளைச்ச‌ல் ஏற்ப்ப‌ட்டால் எல்லாமே என‌க்கு வெறுத்துப் போய் விடும்😞☹️.........................

Take care Anna👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2025 at 20:40, கிருபன் said:

கிரிக்கெட் போட்டியில் 19 போட்டிகளில் 10 புள்ளிகளுக்கு

21 போட்டி….8 புள்ளிகள்….🤣

நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣.

யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட….

தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

கந்தப்பு நான் சொன்னது நேற்றய போட்டியில் மிகைத்திறம்பட பந்துவீசிய ஜடேஜாவிற்கும் வலதுகை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய நூர் அகமடிற்கும் ஏன் நான்கு ஓவர்களும் பந்துவீச கொடுக்கவில்லையென்றுதான்! அத்துடன் அஸ்ஹவினுக்கு தொடர்ந்து ஒவர்களை போடக்கொடுத்ததும் தவறு! மற்றய கப்டன்கள் எப்படி பந்துவீச்சாளர்களை கையாளுகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்!

பவர் பிளே முடிந்தபின்பு 7 ஓவரில் ஜடேஜா 6 ஓட்டங்களை வழங்கினார். 8 ஓவரில் அஸ்வின் 2 ஒட்டங்கள் மட்டும் குடுத்து 2 விக்கெட்டுக்கள் எடுத்தார். 9 வது ஓவரில் ஜடேஜா 6 ஒட்டங்களும் 10 வது ஓவரில் அஸ்வின் 5 ஓட்டங்களையும் கொடுத்தார் . 11 ஓவரில் நூர் அகமத் 14 ஓட்டங்களை குடுத்தார்

பவர் பிளே முடிந்தபின்பு ஜடேஜா 2 ஓவரில் 12 ஆட்டங்களையும், அஸ்வின் 2 ஓவரில் 7 ஓட்டங்களையும் (2 விக்கெட்கள் ), நூர் அகமத் 1 ஓவரில் 14 ஒட்டங்களையும் குடுத்ததினால் சிலவேளை அஸ்வினுக்கு 12 வது ஓவரும் வழங்கியிருக்கலாம். 12 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தினை அடித்து ஆடிய ஆர்யாவின் பந்தினை முகேஷ் சவுத்திரி பிடித்தாலும் தவறுதலாக காலால் எல்லைக்கோட்டில் தொட்டுவிட்டார். தொடாவிட்டால் ஆர்யா ஆட்டமிழந்து இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை ம‌ட்டும் அல்ல‌ இன்னும் ப‌ல‌ரை தொலைபேசி மூல‌ம் தொட‌ர்வு கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்க‌ என்று கேட்டு இருந்தேன் அவ‌ர்க‌ளும் என‌து அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌வை...................

வெறும‌ன‌ 13, 16 பேர் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் போட்டியில் ப‌ம்ப‌ல் இருக்காது அத‌னால் கூடுத‌ல் உற‌வுக‌ளை நான் தான் இத‌ற்க்குள் கூட்டி வ‌ந்தேன்,

இந்த‌ எளிய‌ பிள்ளைய‌ ம‌ன்னித்துக் கொள்ளுங்கோ...............இனி நான் யாரையும் அழைத்து வ‌ர‌ மாட்டேன் ம‌ற்றும் யாழ் ஊடாக‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் அழைப்பும் கொடுக்க‌ மாட்டேன்....................

நான் 14வ‌ருட‌மாய் விளையாட்டு திரியில் எப்ப‌டி எழுதி வ‌ந்தேனோ அப்ப‌டி தான் இப்ப‌ வ‌ரை எழுதுகிறேன்....................நேற்று வ‌ந்த‌வ‌ர் அது ச‌ரி இல்லை இது ச‌ரி இல்லை என்று ச‌ட்ட‌ம் போடும் போது , இது என‌க்கான‌ இட‌ம் இல்லை என‌ நினைத்து நானாக‌வே ஒதுங்கி நான்...................ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி தெரியாட்டி ப‌ல‌ விளையாட்டு போட்டி திரிக‌ள் யாழில் அப்ப‌டியே அழியாம‌ இருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள‌ட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை எப்ப‌டி எழுதி இருக்கிறார்க‌ள் என்று......................உங்க‌ளுக்கு ஒன்றை நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா 2012ம் ஆண்டு யாழில் நான் தான் முத‌ல் எழுதின‌து , அப்பாகிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அவ‌ர்க‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் என‌

அப்ப‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ம்ப‌லுக்கு என்னை பார்த்து ந‌க்க‌ல் அடிச்சின‌ம் த‌ம்பி உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று😁👍.................அப்பாகிஸ்தான் அணி அப்போது சின்ன‌ அணி இப்போது பெரிய‌ அணிக‌ளை வென்று ப‌ல‌மான‌ அணியா வ‌ள‌ந்து விட்ட‌து என‌து க‌ணிப்பு பிழைக்க‌ வில்லை......................

அதே கால‌ப் ப‌குதியில் நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியில் நான் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் , என‌து முக‌வ‌ரிக்கு நீங்க‌ள் அனுப்பி வைச்ச‌ ப‌ரிசு கிடைச்ச‌தையும் இந்த‌ திரியில் நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா......................

ம‌ன‌ம் இட‌ம் கொடுத்தால் 2026 T20 உல‌க‌ கிண்ண‌ போட்டியில் ச‌ந்திப்போம் இதே மன‌ நிலையில் இருந்தால் சும்மா பார்வையாள‌ரா இருப்பேன்👍..............................

நேர‌த்துக்கு நேர‌ம் வ‌டிவாய் சாப்பிடுங்கோ

சுவை அண்ணா.................

உங்க‌ட‌ அன்புக்கு ந‌ன்றி

நான் இனி இந்த‌ திரிக்குள் எழுத‌ மாட்டேன் , இது சும்மா பொழுது போக்கு திரி ஆனால் , ம‌ன‌ உளைச்ச‌ல் ஏற்ப்ப‌ட்டால் எல்லாமே என‌க்கு வெறுத்துப் போய் விடும்😞☹️.........................

Take care Anna👍.....................

வீரப்பையன் - நான் நகைச்சுவைக்காகவே எழுதினேன். நீங்கள் அழைத்தினால்தான் போட்டியில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டது மகிழ்ச்சி. போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அடுத்தமுறையும் கட்டாயம் கூப்பிடுங்கோ. நிச்சயம் கலந்து கொள்வேன். நீங்கள் கருத்துகள் எழுதுவதினால்தான் இந்த திரி கலகலப்பாக இருக்கிறது.

1 hour ago, goshan_che said:

21 போட்டி….8 புள்ளிகள்….🤣

நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣.

யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட….

தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.

அவர் 8 புள்ளிகளுடன் இருப்பதினால்தான் 10 புள்ளிகளுடன் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

நேற்று வ‌ந்த‌வ‌ர் அது ச‌ரி இல்லை இது ச‌ரி இல்லை என்று ச‌ட்ட‌ம் போடும் போது , இது என‌க்கான‌ இட‌ம் இல்லை என‌ நினைத்து நானாக‌வே ஒதுங்கி

பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார்.

நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார்.

வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார்.

இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும்.

எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள்.

2 hours ago, goshan_che said:

21 போட்டி….8 புள்ளிகள்….🤣

நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣.

யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட….

தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.

நீங்க தான் கட்டத்தையே தாங்க கூடிய ஆளாச்சே.

டோன் வொறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார்.

நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார்.

வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார்.

இதை நண்பர்களிடம் தானே

39 minutes ago, கந்தப்பு said:

வீரப்பையன் - நான் நகைச்சுவைக்காகவே எழுதினேன். நீங்கள் அழைத்தினால்தான் போட்டியில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டது மகிழ்ச்சி. போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அடுத்தமுறையும் கட்டாயம் கூப்பிடுங்கோ. நிச்சயம் கலந்து கொள்வேன். நீங்கள் கருத்துகள் எழுதுவதினால்தான் இந்த திரி கலகலப்பாக இருக்கிறது.

அவர் 8 புள்ளிகளுடன் இருப்பதினால்தான் 10 புள்ளிகளுடன் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன் 😀

வெற்றி தோல்விய‌ ப‌ற்றி நான் ஒரு போதும் க‌வ‌லைப் ப‌ட்ட‌து கிடையாது

யாழ்க‌ள‌ போட்டியில் ப‌ல‌ வெற்றிய‌ பெற்று விட்டேன் அதே போதும்................

நான் வ‌ழ‌மை போல் தொட‌ர்ந்து எழுதும் போது என் மீது தேவை இல்லாம‌ க‌ல் எறிந்தால் அது ம‌னத‌ள‌வில் பாதிக்கும்😞...........................

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார்.

நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார்.

வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார்.

இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும்.

எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள்.

ச‌க‌ க‌ள‌ உற‌வுக‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதினேனா அல்ல‌து கெட்ட‌ வார்த்தை பாவிச்சேனா

நான் அப்ப‌டி என்ன‌ த‌வ‌றாக‌ எழுதி விட்டேன் என்று க‌டுப்பாகினார் அத‌ற்க்கான‌ விள‌க்க‌த்தை உங்க‌ளால் த‌ர‌ முடியுமா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................

நான் அந்த‌க் கால‌ம் தொட்டு எழுதுவ‌து போல் தான் எழுதி கொண்டு இருந்தேன்........................க‌ட‌ந்த‌ கால‌ ஜ‌பிஎல் திரிக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டி திரிகளில் இந்தியாவை எப்ப‌டி எல்லாம் க‌ண்ட‌ மேனிக்கு க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்போம்...................

வ‌ட‌ நாட்டான் என்று சொல்வ‌து த‌வறா , அல்ல‌து SRH அணி ஓன‌ர்க‌ள் கொச் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து பிழையா........................

நான் த‌மிழ‌ன் எப்ப‌வும் என‌து ஆத‌ர‌வு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு தான் , அது ஒருத‌ருக்கு பிடிக்காட்டி என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது.....................

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ போட்டிக‌ள் அத‌ற்க்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்க‌ளில் அள‌வுக்கு அதிக‌மாய் சிரிச்சோம் ப‌ம்ப‌ல் அடிச்சோம் மிம்ஸ் செய்து ந‌க்க‌ல் நையாண்டி செய்து பொழுதை க‌ழித்தோம்

இப்போது ?☹️😞...................................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இன்றைய போட்டியில் ரபாடா இசாந்திற்கு பதிலாக விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரபாடா தென்னாப்பிரிக்காவுக்கு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சென்றதாக செய்திகளில் படித்தேன். திரும்பி வந்திட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

மறுபடியும் கூட்டா?இன்று இந்த குழு வெற்றி பெற்றால் சுவியர் நந்தனும்உச்சிக்குப் போய் விடுவார்கள்

சாத்தியமே இல்ல புலவர்.

வெல்லுறம் முட்டைக் கோப்பியை கொடுக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார்.

நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார்.

வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார்.

இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும்.

எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள்.

நீங்க தான் கட்டத்தையே தாங்க கூடிய ஆளாச்சே.

டோன் வொறி

நீங்க வேற. இது விளையாட்டுத்தானே. ஏறுவதும் இறங்குவதும் சகஜம்தானே.

பிள்ளைகள்தான் எனது ஆசான்கள். எது சரி என்று எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்தைய நாடுகளில் எப்படி எப்படி எல்லாம் நாம் வாழ வேண்டும் என்பதிலும், விடயங்களை அணுக வேண்டும் என்பதிலும், அவர்கள்தான் எனக்கு வழிகாட்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

சாத்தியமே இல்ல புலவர்.

வெல்லுறம் முட்டைக் கோப்பியை கொடுக்கிறம்.

அதே என்று எழுதத்தான் ஆசை! ஆனால் என்ர ராசி அப்படியாய் இருக்கிறதே! அட்டமத்து சனி முடிஞ்சுது எண்டாங்கள்! ஆனால் விவேக் சொன்னமாதிரி continue ஆகுதே சிவகாமி!!

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் ஃபமிலிக்கு இன்றைக்கு நாள் அவ்வளவாக இல்லை போல............ ஷாருக்கானுக்கு நல்ல நாள்................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ச‌க‌ க‌ள‌ உற‌வுக‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதினேனா அல்ல‌து கெட்ட‌ வார்த்தை பாவிச்சேனா

நான் அப்ப‌டி என்ன‌ த‌வ‌றாக‌ எழுதி விட்டேன் என்று க‌டுப்பாகினார் அத‌ற்க்கான‌ விள‌க்க‌த்தை உங்க‌ளால் த‌ர‌ முடியுமா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................

நான் அந்த‌க் கால‌ம் தொட்டு எழுதுவ‌து போல் தான் எழுதி கொண்டு இருந்தேன்........................க‌ட‌ந்த‌ கால‌ ஜ‌பிஎல் திரிக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டி திரிகளில் இந்தியாவை எப்ப‌டி எல்லாம் க‌ண்ட‌ மேனிக்கு க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்போம்...................

வ‌ட‌ நாட்டான் என்று சொல்வ‌து த‌வறா , அல்ல‌து SRH அணி ஓன‌ர்க‌ள் கொச் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து பிழையா........................

நான் த‌மிழ‌ன் எப்ப‌வும் என‌து ஆத‌ர‌வு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு தான் , அது ஒருத‌ருக்கு பிடிக்காட்டி என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது.....................

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ போட்டிக‌ள் அத‌ற்க்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்க‌ளில் அள‌வுக்கு அதிக‌மாய் சிரிச்சோம் ப‌ம்ப‌ல் அடிச்சோம் மிம்ஸ் செய்து ந‌க்க‌ல் நையாண்டி செய்து பொழுதை க‌ழித்தோம்

இப்போது ?☹️😞...................................

எனக்கு உடன்பாடில்லா விடயத்தைச் சுட்டிக்காட்டினேன். தவறாகச் சொல்ல நினைக்கவில்லை. எல்லோரும் சமமே, ஒன்றாகவே உழளுகின்றார்கள் என்று நினைத்தேன். பார்க்கும் பொருள் ஒன்றே ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வைதானே.

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

23rd Match (N), Ahmedabad, April 09, 2025, Indian Premier League

RR chose to field

Gujarat Titans FlagGujarat Titans (20 ov) 217/6

Current RR: 10.85 • Last 5 ov (RR): 72/4 (14.40)

Rajasthan Royals FlagRajasthan Royals

Win Probability: GT 73.46% • RR 26.54%

  • கருத்துக்கள உறவுகள்

217 நல்ல ஓட்ட எண்ணிக்கை. ராஜஸ்த்தானின் ஆரம்ப வீரர்கள்தான் இதுவரை போட்டிகளை வென்று கொடுத்தார்கள். நடுவில் வரும் வீரர்களுக்கு ஆட சந்தர்ப்பம் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. இன்று தெரியும் அந்த அணியின் நடுவீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று.

கலைத்துப் பிடிப்பார்களா. இதோ சில நொடிகளில்.......

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே சென்னை, மும்பை என்றால் கலைத்து பிடிக்கின்றோம் என்று ஓட ஆரம்பித்து, எப்படியும் இடையில் களைத்துப் போய், சரி அடுத்த போட்டியில் பார்ப்போம் என்று விட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விக்கட் விழுந்தப் பிறகும், சாம்சனும் பராக்கும் திருப்பி அடிக்கத் தொடங்கி விட்டினம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.