Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள்.

கிருபனுக்கு முதல் கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்தினார்.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபனுக்கு முதல் கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்தினார்.

ஓ அப்பிடி வேற நடந்திருக்கா. அந்த வரலாறு தெரியாமப் போச்சே.

இதெல்லாம் ஒரு ஜென் நிலை. எவ்வளவு உழைப்பு. ஒவ்வொருநாளும் புள்ளிகளை அறிவிக்க வேணும். அன்ளைய போட்டியைப் பற்றி சாராம்சம் ஒன்று எழுதுகிறார் கிருபன். பிறகு அடுத்த நாள் தெரிவுகள். அதிலேயும் கீழ ஒரு கார்ட்டூன் போடுவார். அதைச் சழைக்காமல் ஒவ்வொரு நாளும் செய்கிறார். அன்றைக்கெல்லாம் கேம்பிறிச் போட்டு வந்து அதைச் செய்தார். அவ்வளவு தூரம் ஓடி களைத்திருப்பார். ஆனாலும் விடவில்லையே. ஜென் நிலை இல்லாமல் வேற என்ன.

கந்தப்புவும் அதைச் செய்தார் என்று நினைக்கும் போது..... பணிவன்புடன்.

ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂

கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ !

494737209_1465933354368795_5203469295205

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது .

Fortune India
No image preview

IPL suspended indefinitely amid India-Pakistan tensions a...

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

முடிச்சிவிட்டீங்க போங்க 🤣

பாக்கிஸ்தானை இந்தியா முடிந்த வகையில் எல்லாம் கிரிகெட்டில் ஒதுக்கியது.

பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஐ பி எல்லை நிறுத்தி விட்டது.

பிகு

போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣.

பிரேக்கிங் நியூஸ் - ரிபப்லிக் டீவி

கோஷான் முதலாம் இடத்தில் இருக்கும் புள்ளி பட்டியல் வெளியானது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கந்தப்பு said:

பாகிஸ்தானில் நடக்கும் PSL தொடர்தான் துபாய்க்கு மாற்றப்படுகிறது. (லாகூர் போன்ற இடங்கள் காஷ்மீருக்கு கிட்ட இருப்பதினால் ). இந்தியா தாக்கிய ட்ரோன் ராவல்பிண்டி மைதானத்தில் விழுந்ததினால் கராச்சி பெஷாவர் இடையிலான போட்டி பிற்போடப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்கள்.

ஐபிஎல் தொடர் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும். டெல்லி பஞ்சாப் போட்டி நடைபெற்ற தர்மசாலா என்ற இடம் காஷ்மீர், பாகிஸ்தான் அருகில் இருப்பதினால் பாகிஸ்தானின் தாக்குதல் நடக்கும் என்பதினால் நேற்றைய போட்டி இடை நிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் நடைபெறவுள்ள மும்பாய் பஞ்சாப் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மற்ற நாட்டு வாரியங்களுக்கு ஐபிஎல்இல் அவர்களது வீரர்கள் விளையாடுவதால் BCCI மூலம் குறிப்பிட்ட நிதி கிடைக்கிறது

Screenshot-20250509-111503-Chrome.jpg

1 hour ago, கந்தப்பு said:

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது .

Fortune India
No image preview

IPL suspended indefinitely amid India-Pakistan tensions a...

இதை நான் நேற்று முன் கூட்டிய சொன்னேன் ந‌ட‌ந்து விட்ட‌து

வெளி நாட்டு வீர‌ர்க‌ள் நாடு திரும்ப‌ ச‌ரி...................மீத‌ம் இருக்கும் போட்டிக‌ள் டுபாயில் ந‌ட‌க்க‌ கூடும்.....................

பாக்கின்ட‌ ஒரு அடியோட‌ இந்தியா இப்ப‌டி க‌தி க‌ல‌ங்கி போச்சு.......................

குரைக்கிர‌ நாய் க‌டிக்காது என்ப‌து இந்தியாவுக்கு ந‌ன்றாக‌ பொருந்தும்.....................................

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா போட்டிய‌ சேர்த்து 17 போட்டி தான் இருக்கு...............இர‌ண்டு கிழ‌மையும் இர‌ண்டு நாளில் முடிந்து இருக்கும்........................பெரும்பாலும் போட்டிக‌ள் டுபாயில் தான் ந‌ட‌க்க‌ கூடும் அல்ல‌து தென் ஆபிரிக்காவில் கூட‌ ந‌ட‌த்த‌க் கூடும்................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது .

Fortune India
No image preview

IPL suspended indefinitely amid India-Pakistan tensions a...

இப்பொழுது ஒரு கிழமை மட்டும் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

Sportstar
No image preview

IPL 2025 LIVE — BCCI suspends IPL for one week as tension...

As tensions remain escalated between India and Pakistan, tournaments in both countries, namely the Indian Premier League and the Pakistan Super League look to have been affected.
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கந்தப்பு said:

டெஸ்ட் உல‌க‌ ச‌ம்பிய‌ன் போட்டி தொட‌ங்க‌ ஒரு மாத‌ம் இருக்கு அத‌ற்க்குள் ஜ‌பிஎல்ல‌ முடிக்க‌னும் இல்லையேன் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌ கூடும் மீண்டும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்த‌.............................

ஒரு நாளுக்கு இர‌ண்டு போட்டி ப‌டி வைச்சு இருந்தால் இன் நேர‌ம் ஜ‌பிஎல் போட்டி முடிந்து இருக்கும்..........................நாட‌க‌ தொட‌ர் போல் இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிச்சு இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்துகின‌ம்..............................

4 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபனுக்கு முதல் கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்தினார்.

அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில்..................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள

4 hours ago, கந்தப்பு said:

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது .

Fortune India
No image preview

IPL suspended indefinitely amid India-Pakistan tensions a...

நல்லதாய்ப் போச்சு.இனி கூட்டனி வைக்காமல் தனியத்தான் களமிறங்கிறது.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂

கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ !

கர்ணன் இல்லாமல் பிதாமகர் பீஷ்மர் தலைமைதாங்கிப் போரிட்டு மாண்ட முதல் பத்து நாள் (முதலாவது நாள் போர் முன்னைய செந்நாவேங்கை நாவலில்) போரினை விபரிக்கும் “திசைதேர் வெள்ளம்” நாவலோடு செப் 11 இல் வெண்முரசு தொடரை நிறுத்திவைத்துவிட்டேன்.

வழமையாக 50-60 நாளில் 100 அத்தியாயங்கள் படிப்பேன். ஆனால் போரின் ருசியில் 11 நாளிலேயே பீஷ்மரின் போரின் விபரிப்பைப் படித்தேன். விதம்விதமாக கொல்வதையும், கொல்லப்படுவதையும் விடாது ஆர்வத்துடன் படித்து கொல்லும் வெறி வந்துவிட்டது! எட்டு மாதங்களாக வேறு புத்தகங்களைப் படிக்கின்றேன்!

ஆசான் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார்! அது பற்றற்ற உணர்வு நிலையில்தான் இயலும்!

திரும்பவும் வெண்முரசு படிக்க ஆரம்பிக்கவேண்டும்

7 hours ago, செம்பாட்டான் said:

இதெல்லாம் ஒரு ஜென் நிலை. எவ்வளவு உழைப்பு. ஒவ்வொருநாளும் புள்ளிகளை அறிவிக்க வேணும். அன்ளைய போட்டியைப் பற்றி சாராம்சம் ஒன்று எழுதுகிறார் கிருபன். பிறகு அடுத்த நாள் தெரிவுகள். அதிலேயும் கீழ ஒரு கார்ட்டூன் போடுவார். அதைச் சழைக்காமல் ஒவ்வொரு நாளும் செய்கிறார்.

இது standard operating procedure! எதிர்காலத்தில் automate பண்ணவேண்டும்😃

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, வீரப் பையன்26 said:

அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில்..................................

ஓ அது வேறையா. அப்ப அந்த அரவிந்தன் எங்கே. ஒரு ஆள் எத்தனை கணக்கு வச்சிருக்கீங்க.

3 hours ago, வீரப் பையன்26 said:

டெஸ்ட் உல‌க‌ ச‌ம்பிய‌ன் போட்டி தொட‌ங்க‌ ஒரு மாத‌ம் இருக்கு அத‌ற்க்குள் ஜ‌பிஎல்ல‌ முடிக்க‌னும் இல்லையேன் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌ கூடும் மீண்டும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்த‌.............................

ஒரு நாளுக்கு இர‌ண்டு போட்டி ப‌டி வைச்சு இருந்தால் இன் நேர‌ம் ஜ‌பிஎல் போட்டி முடிந்து இருக்கும்..........................நாட‌க‌ தொட‌ர் போல் இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிச்சு இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்துகின‌ம்..............................

அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில்..................................

கனக்க இருக்கு. ஆனி மாதம் இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் போகுது. ஜந்து டெஸ்ட் கொண்ட தொடர். IPLஅ இந்த மாதத்துக்குள் முடித்தால்தான் நல்லது. இல்லாவிட்டால் புரட்டாசி மாதம் தான் நடத்த முடியும். நீங்கள் சொன்ன மாதிரி வேறு நாட்டில் தொடர்வினமோ தெரியல. இலங்கையில கூட வைக்கலாம்.

IPL போட்டிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று என்று வைத்தாலே வெகு சீக்கிரமாக முடித்து விடலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை. அவர்கள் உண்மையிலேயே இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

கர்ணன் இல்லாமல் பிதாமகர் பீஷ்மர் தலைமைதாங்கிப் போரிட்டு மாண்ட முதல் பத்து நாள் (முதலாவது நாள் போர் முன்னைய செந்நாவேங்கை நாவலில்) போரினை விபரிக்கும் “திசைதேர் வெள்ளம்” நாவலோடு செப் 11 இல் வெண்முரசு தொடரை நிறுத்திவைத்துவிட்டேன்.

வழமையாக 50-60 நாளில் 100 அத்தியாயங்கள் படிப்பேன். ஆனால் போரின் ருசியில் 11 நாளிலேயே பீஷ்மரின் போரின் விபரிப்பைப் படித்தேன். விதம்விதமாக கொல்வதையும், கொல்லப்படுவதையும் விடாது ஆர்வத்துடன் படித்து கொல்லும் வெறி வந்துவிட்டது! எட்டு மாதங்களாக வேறு புத்தகங்களைப் படிக்கின்றேன்!

ஆசான் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார்! அது பற்றற்ற உணர்வு நிலையில்தான் இயலும்!

திரும்பவும் வெண்முரசு படிக்க ஆரம்பிக்கவேண்டும்

இது standard operating procedure! எதிர்காலத்தில் automate பண்ணவேண்டும்😃

எனக்கு மகாபாரத்திலே பிடித்ததே போர்தான். சின்ன வயதில், முதன் முதலில் படித்த போதே, அந்த வெறி தொற்றிக்கொண்டது. பிறகு வெண்முரசு தொடங்கவே அதற்காக எவ்வளவு ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் எழுத எழுத ஒவ்வொருநாளும் விடாமல் போர் அத்தியாயங்களை வாசித்தேன். வெண்முரசை நித்தம் வாசித்ததால், அவர் முடிக்கும் போதே முடித்துவிட்டேன். இடையில் பல அத்தியாயங்கள் வாசிக்காமல் விட்டதுண்டு. இப்போ புத்தகமாக வாங்கி வாசிக்க விருப்பம். திரும்பத் தொடங்கவேணும். விட்டதெல்லாவற்றையும் வாசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செம்பாட்டான் said:

ஆ .....தெய்வமே நீங்கள் கிருபரைவிட கில்லாடியாய் இருக்கிறீர்கள் ........ நான் வாசிக்கத் தொடங்கி "நீலம் 8" ல் நிக்கிறேன் அதன் பின் கனகாலம் வாசிக்கவில்லை . ........... இனி ஆரம்பிக்க வேண்டும் . ....... !

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

ஆ .....தெய்வமே நீங்கள் கிருபரைவிட கில்லாடியாய் இருக்கிறீர்கள் ........ நான் வாசிக்கத் தொடங்கி "நீலம் 8" ல் நிக்கிறேன் அதன் பின் கனகாலம் வாசிக்கவில்லை . ........... இனி ஆரம்பிக்க வேண்டும் . ....... !

தொடருங்கள். நீலம் சிறிய புத்தகம். ஆனால் கனக்க தத்துவங்கள். சிலவேளை வாசிக்க சிரமமாக அல்லது சலிப்பாக இருக்கலாம். நீலம் வெகுவாக சிலாகிக்கப் பட்ட புத்தகம் கூட. ரசிகர்களின் விருப்பமான, fan favorite, புத்தகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தம்

09 MAY, 2025 | 05:34 PM

image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் 2025 கிரிக்கெட் போட்டிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

'சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பங்குதாரர்களுடனும் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்த பின்னர் புதிய அட்டவணை  மற்றும்  மைதானங்கள் தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்' என சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download.png

'பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்களது வீரர்கள் தொடர்பாக வெளியிட்ட கரிசணை மற்றும் உணர்வுகளையும் ஒளிபரப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு ஐபிஎல் ஆளுநர் பேரவை சகல முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் நமது ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலை ஆகியவற்றின்மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முழு நம்பிக்கை வைத்துள்ளது. அத்துடன் அனைத்து பங்குதார்களினதும் கூட்டு நலனுக்காக செயல்படுவது விவேகமானது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது'  என  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், சைக்கியா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோரிடையே நடைபெற்ற கலந்துரையாடலின்  பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தம் தொடர்பாக சகல அணிகளினதும் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே இந்திய நேரப்படி இந்த அறிக்கை பிற்பகல் 2.40 மணி அளவில் வெளியிடப்பட்டது.

அணிகள் ஏற்கனவே கலைந்து செல்லத் தொடங்கியுள்ளதுடன் வீரர்களும் அதிகாரிகளும் அடுத்து கிடைக்கக்கூடிய முதலாவது விமானங்களில் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ளேயும் பயணிக்க தயாராகிவிட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்வது பொருத்தமல்ல என அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையில் தரம்சாலாவில் வியாழக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்த  இன்றைய தினம்  தீர்மானிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/214307

  • கருத்துக்கள உறவுகள்

496090530_562199503602629_10544477324712

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂

கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ !

494737209_1465933354368795_5203469295205

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

இந்த‌ப் ப‌ட‌த்தில் இருக்கும் பிள்ளை

இந்தியா ம‌க‌ளிர் அணிக்காக‌ விளையாடுகிற‌வா

சின்ன‌ வ‌ய‌து தான் இவாக்கும் ஆனால் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து போடுவா..................ந‌ல்லா பில்டிங்கும் செய்வா.................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ப் ப‌ட‌த்தில் இருக்கும் பிள்ளை

இந்தியா ம‌க‌ளிர் அணிக்காக‌ விளையாடுகிற‌வா

சின்ன‌ வ‌ய‌து தான் இவாக்கும் ஆனால் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து போடுவா..................ந‌ல்லா பில்டிங்கும் செய்வா.................................

பையா ......... அத்தான் சுழல் பந்துல போல்டாகிக் கொண்டிருக்கிறார் போல .......... 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣.

போட்டியில் வெற்றி பெற்ற செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂

இப்படிக்கு இயங்குமாரன் 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

பையா ......... அத்தான் சுழல் பந்துல போல்டாகிக் கொண்டிருக்கிறார் போல .......... 😂

இல்லை அண்ணா

இவ‌ர் அவுட் ஆகின‌து கூட‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்தில்...................இரண்டு மைச்சில் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு வெளிய‌ போன‌வ‌ர்......................சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ரியாக‌ அடிக்கிறார்

வேக‌ப் ப‌ந்து இவ‌ரின் பொல்லை ப‌த‌ம் பார்க்குது...........................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂

கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ !

494737209_1465933354368795_5203469295205

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

இது தான் இவான்ட‌ கிரிக்கேட் விப‌ர‌ம்................இவ‌ருக்கு 14வ‌ய‌து இவாக்கு 22வ‌ய‌து........................

சின்ன‌ன் சிறுசுக‌ள் ந‌ல்லா இருக்க‌ட்டும் த‌லைவ‌ரே🙏🥰❤️....................................

Screenshot-20250509-232803-ESPNCricinfo.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂

கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ !

494737209_1465933354368795_5203469295205

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

உங்க‌ளுக்காக‌ இவான்ட‌ பில்டிங்

ம‌ற்றும் ப‌ந்து வீச்சை யூடுப்பில் தேடி எடுத்தேன்...................நான் ம‌க‌ளிர் கிரிக்கேட்டை கூட‌ விட்டு வைக்க‌ மாட்டேன் பார்த்து ர‌சிப்ப‌துண்டு

சில‌ செக்க‌ன் காணொளி

பாருங்கோ இந்த‌ பிள்ளையின் பில்டிங் எப்ப‌டி என்று..................

மெல்லிய‌ பிள்ளை அழ‌கான‌ முக‌ம் , சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா போடுவா த‌லைவ‌ரே

இதுவ‌ரை இந்தியா ம‌க‌ளிர் ஒரு உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை

அதிக‌ம் உல‌க‌ கோப்பை தூக்கின‌து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்

ஒரு முறை இங்லாந் ம‌க‌ளிர்

ஒரு முறை வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர்

ஒரு முறை நியுசிலாந் ம‌க‌ளிர்..................................

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வாத்தியார் said:

போட்டியில் வெற்றி பெற்ற செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂

இப்படிக்கு இயங்குமாரன் 😜

ஜயகோ. ஞான் பாவமில்லா.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பையா .......... நன்றாக விளையாடுகின்றா ...... சுழல் பந்து போடுவதும் , பீல்டிங்கும் சூப்பர் ......... நல்ல எதிர்காலம் உண்டு .......... ! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.