Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

13bab48c-7bbe-4b09-8ca2-8e2924a7f3d1.jpe

யாழில் மாணவியை வீடியோ எடுத்த யூடியூபர் – விபரங்களை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு  இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகியதைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்

அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு  உதவி செய்வதாக தெரிவித்து  குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.

எனினும் அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் ய கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த யூடியூபர்  அந்த பெண்ணையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார்.

இதன்போது ’18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ ‘உங்கட மகளை கூப்பிடுங்கோ’ என்று சொன்னபடி குறித்த பெண்ணின் அறையின் வாசல் வரை சென்றதுடன் குறித்த பெண்ணை கேலி செய்தும் பேசியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Athavan News
No image preview

யாழில் மாணவியை வீடியோ எடுத்த யூடியூபர் - விபரங்களை கோரியு...

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு  இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான...
  • கருத்துக்கள உறவுகள்

பலே! பலே! வடக்கிலும் பல செந்தமிழன் சீமான் அண்ணாக்கள் இருக்கினம் போலை! இவ்வாறான சீமான் அண்ணாக்களை அர்ச்சுனா எம்பி நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பது வரவேற்கத் தக்கது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வாலி said:

பலே! பலே! வடக்கிலும் பல செந்தமிழன் சீமான் அண்ணாக்கள் இருக்கினம் போலை! இவ்வாறான சீமான் அண்ணாக்களை அர்ச்சுனா எம்பி நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பது வரவேற்கத் தக்கது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்!

இவர செந்தமிழன் என்பதவிட....செந்நிறம் பூசப்பட்ட தமிழன் என்பதே சிறப்பு..☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

பலே! பலே! வடக்கிலும் பல செந்தமிழன் சீமான் அண்ணாக்கள் இருக்கினம் போலை! இவ்வாறான சீமான் அண்ணாக்களை அர்ச்சுனா எம்பி நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பது வரவேற்கத் தக்கது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்!

தெற்கின் செந்நிறகட்சியின் பிரசங்க பீரங்கியாம் ...அர்ஜூனா சொல்கின்றார்...

இவர் கொழும்பு பல்கலைகழக பட்டதாரி...இரண்டு வருடங்களுக்கு முதல் ஒர் வீடியோவில் கூறியிருந்தார் .தெற்கு பல்கலைகழகங்களில் படித்த வடமாகாண இளைஞர்களுக்கு நன்றாகவே ஜெ.வி.பியினர் தங்களது கொள்கை வகுப்புக்க்களை எடுத்துள்ளனர்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

தெற்கின் செந்நிறகட்சியின் பிரசங்க பீரங்கியாம் ...அர்ஜூனா சொல்கின்றார்...

இவர் கொழும்பு பல்கலைகழக பட்டதாரி...இரண்டு வருடங்களுக்கு முதல் ஒர் வீடியோவில் கூறியிருந்தார் .தெற்கு பல்கலைகழகங்களில் படித்த வடமாகாண இளைஞர்களுக்கு நன்றாகவே ஜெ.வி.பியினர் தங்களது கொள்கை வகுப்புக்க்களை எடுத்துள்ளனர்...

இவர் கொள்கை கொண்டவரல்ல...நேரத்திற்கு ஏற்றமாதிரி மாறுவார்...சண்டித்தனமும்..திமிரும்..யாழில் சிவப்பு கூடுவதற்கு..அமைச்சரும்,எம்பிமாரும் காரணம்..அவர்களும் இதையே கையாளுகின்றனர்...வெளியாகவல்ல..அமசடக்காக...

பாருங்கள் இம்முறை..மாவீரர்நாள் எவ்வாறு மழுங்கடிக்கப்படும் என்பதை...இது பாராளு மன்றத்திலேயே அச்சாரம் போட்டாச்சு...அதாவது நவம்பர் 15 முதல் டெசம்பர் 15 வரை...தேசிய வீரர் மாதமாம்...இதி மாவீரர் மழுங்கடிக்கப் படுவர்

இந்தமுறை தலைவர் வீரமரணம் அடைத்து மே 17 ல் பிரகடனம் ...இந்த நாளை மாற்றீடாக்கி மாவ்விரர் எழுச்சிவாரம் மழுங்கடிக்கப்படும்

இதில் விடையம் என்னவென்றால் தில்லு முல்லு செய்யும் யூ டியூப்பர்கள் ..முதலாளிகளல் வெருட்டப்பட்டு பிரச்சரத்திற்கு பயன் ப்படுத்தப்படுகின்றனர்...அதுதான் இந்த யூ டியூபர் கொண்டாடிய சுதந்திரதினம் ..அதில் சம்பந்தர்போல் கொடி அசைத்ததும் இவர்தான்....இவர் வீட்டில் ஒரு15 சனல் இருக்குது...பயப்படவே தேவையில்லை...மற்றும்படி கொள்கை ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

உண்மை இவரிடம் 15 சனலுக்கு மேலாக இருக்கும் ...குடும்பமே சனல் வைத்திருக்கு ...கார்த்திக் என அர்ஜூனா கூறுவது இவரின்ட சகோவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, putthan said:

உண்மை இவரிடம் 15 சனலுக்கு மேலாக இருக்கு ...கார்த்திக் என அர்ஜூனா கூறுவது இவரின்ட சகோவா?

இல்லை அவர் இன்னுமொருவர் ....கொள்(ளை)கையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை...அவர் வன்னிப் பகுதியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, alvayan said:

இல்லை அவர் இன்னுமொருவர் ....கொள்(ளை)கையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை...அவர் வன்னிப் பகுதியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்

நன்றி Alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்

எப்போதும் யாரும் இப்படியான தனி நபர்கள் ஊடாக யாருக்கும் உதவும் நோக்கத்துடன் நிதி உதவிகளை வழங்க வேண்டாம்

நீங்களோ அல்லது உங்களால் முடியாவிட்டால் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஊடாக( ஊர் மன்றங்கள் , கிராம அலுவலககர்கள். உறவினர்கள்கள்) என அந்த உறவிற்கு நேரடியாக செய்வது நல்லது.

ஒருமுறை உதவி செய்தால் அடுத்தமுறை உதவி செய்யும் முன்னர்

ஏற்கனவே செய்த உதவி கிடைத்ததா என உறுதி செய்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

..கார்த்திக் என அர்ஜூனா கூறுவது இவரின்ட சகோவா?

அனுரா வீட்டை கண்டுபிடித்துப்போய், தேநீர் அருந்தி விட்டு புகழ்ந்த நபராக இருக்குமோ?

4 hours ago, putthan said:

இவர் கொழும்பு பல்கலைகழக பட்டதாரி...இரண்டு வருடங்களுக்கு முதல் ஒர் வீடியோவில் கூறியிருந்தார் .தெற்கு பல்கலைகழகங்களில் படித்த வடமாகாண இளைஞர்களுக்கு நன்றாகவே ஜெ.வி.பியினர் தங்களது கொள்கை வகுப்புக்க்களை எடுத்துள்ளனர்...

மண்டை கழுவப்பட்டதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

எப்போதும் யாரும் இப்படியான தனி நபர்கள் ஊடாக யாருக்கும் உதவும் நோக்கத்துடன் நிதி உதவிகளை வழங்க வேண்டாம்

நீங்களோ அல்லது உங்களால் முடியாவிட்டால் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஊடாக( ஊர் மன்றங்கள் , கிராம அலுவலககர்கள். உறவினர்கள்கள்) என அந்த உறவிற்கு நேரடியாக செய்வது நல்லது.

ஒருமுறை உதவி செய்தால் அடுத்தமுறை உதவி செய்யும் முன்னர்

ஏற்கனவே செய்த உதவி கிடைத்ததா என உறுதி செய்துகொள்ளுங்கள்

எந்த நா**** கூட்டம் என்றாலும் இடையில் கொமிசன் பார்குதுகள் ஊருக்கும் போக முடியாது கொடுக்கும் பணத்தையாவது ஒழுங்கா கொடுக்க முடியாது உள்ளோம் .

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.