Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!

தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.

அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டுமென விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது.

இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஐனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது.

ஆக மொத்தத்திலர தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை.

எமது கட்சியின் யாப்பிற்கமைய தான்  இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம்.

இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

எனவே தமிழரசை பிளவெபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.

மாற்றான சிந்தனையில் பொறுப்பான அனுகுமுறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனாலும் aஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.

https://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியை-இல்லாம/

  • கருத்துக்கள உறவுகள்

ம். ஏற்கெனவே உடைந்த கட்சியை உடைக்க வேறொருவரா?  இவர்களே போதும் கட்சியை உடைக்க,  வேறு யாரும் வரத்தேவையில்லை. யாரோ  உடைத்ததாக கூறி தேர்தல் காலத்தில் அனுதாபம் தேடப்பார்க்கிறார்கள். சுமந்திரனைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ? நான் உங்களை சொல்லவில்லை என்பதற்காக அவர் பெயரை தன்னோடு சேர்த்து சொல்கிறார். எந்த நேர்காணலிலும் சுமந்திரன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார், தலையாட்டி சிவஞானம்.    

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை உடைக்க கட்சியில் உள்ளவர்களே போதுமானது. வெளியில் இருந்து யாரும் வரத்தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியையும் உடைக்கப் பலராலும் முயற்சி செய்தும் முடியவில்லை.

ஐயா காப்பாற்றி வைத்திருக்கின்றார்

அப்படியே இதையும் நீங்கள் வைத்திருங்கள்

கிழக்கில் தமிழரசின் பா ஊக்களில் இருவர் அடுத்த பாராளு மன்றத் தேர்தலில் கட்சி மாற வாய்ப்பு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஏற்கெனவே... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி எல்லாவற்றையும், உடைத்து விட்டார்.

அதில் உடைக்க இனி ஒன்றும் இல்லை என்பது சிவஞானத்துக்கு புரியவில்லை. தோல்வி பயத்தில்... புசத்திக் கொண்டு திரியிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஆக மொத்தத்திலர தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

இவரது கதையைப் பார்த்தால் வெளியில் இருந்து வேறு யாரோ தமிழரசை உடைப்பது போல அல்லவா இருக்கிறது.

நீண்டகால அனுபவம் உள்ளவர் சிவஞானம்.

இவர்களோடு உள்ளவர்களே முதுகில் சொருகுகிறார்கள் என்று எப்போது கண்டுகொள்ளப் போகிறார்.

சைக்கிளும் மாம்பழமும் ஒன்று சேர முயற்சி நடக்கிறது.

கடந்த தேர்தலில் மரணஅடி வாங்கியும் இன்னமும் பிரிந்து போவதையே செய்து கொண்டிருக்காமல்

எல்லோரும் ஒன்றாகாவிட்டால் உள்ளூராட்சி சபைகளையும் என்பிபி வசமே போகும்.

பணத்தை வாரி இறைப்பதாக சொல்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்?

கடந்த தேர்தலில் சைக்கிளில் பயணித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டோடியது போல பலதும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்?

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் அடி மட்டத்தில் ஆதரவு இல்லை .

முன்பெல்லாம் ஒரு ஊர் என்றால் வட்டாரத்திற்கு ஒரு தலைவர் அவருக்கு கீழே ஆயிரம் தொண்டர்கள் என இருப்பார்கள்

இப்போது கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்து அவர் மூலம் வாக்குக்களை சேகரிக்கும் முறையைப் பின்பற்றி எல்லோரும் மூக்குடைபடுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்?

கடந்த தேர்தலில் சைக்கிளில் பயணித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டோடியது போல பலதும் நடக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன் சிவஞானம்....

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழரசு கட்சியில் ஆட்கள் இல்லை என்றும், இளைஞர்களை கட்சியில் வந்து இணையும் படியும், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவர்கள் செய்யும்... செயலுக்கு, எவராவது வேலை மினைக்கெட்டு அங்கு போவார்களா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே...அருவெறுப்பாக உள்ளது. முதலில்... தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

கடைசியில்... ஆனந்தசங்கரி, ஒரு பிரயோசனமும் இல்லாமல் வைத்திருக்கும்... தமிழர் விடுதலை கூட்டணியும் உதயசூரியன் சின்னமும் மாதிரி... தமிழரசு கட்சியை செல்லாக் காசு ஆக்கப் போகின்றார்கள். இதற்கு முழுக் காரணமும் சுமந்திரனையே சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் அடி மட்டத்தில் ஆதரவு இல்லை .

உண்மை தான் வாத்தியார்.

அதனாலேயே தமிழ் கட்சிகள் என்று எழுதினேன்.

28 minutes ago, தமிழ் சிறி said:

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழரசு கட்சியில் ஆட்கள் இல்லை என்றும், இளைஞர்களை கட்சியில் வந்து இணையும் படியும், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தாழப்போகும் கப்பலில் இருந்து தப்புவதற்கே முயற்சி செய்வார்கள்.

யாராவது அந்தக் கப்பலில் போய் ஏறுவார்களா?

இப்போது அததான் நடைபெறுகிறது.

நாய் இறந்த பினபு தான் உண்ணி கழரும்

இது இறக்க முதலே விலகுகிறார்கள்.

31 minutes ago, தமிழ் சிறி said:

கடைசியில்... ஆனந்தசங்கரி, ஒரு பிரயோசனமும் இல்லாமல் வைத்திருக்கும்... தமிழர் விடுதலை கூட்டணியும் உதயசூரியன் சின்னமும் மாதிரி... தமிழரசு கட்சியை செல்லாக் காசு ஆக்கப் போகின்றார்கள். இதற்கு முழுக் காரணமும் சுமந்திரனையே சேரும்.

இவர்களைப் பொறுத்த மட்டில் மிகப்பெரிய வெற்றி.

இவர்கள் களமிறக்கப்பட்டதே இதுக்காகத் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சைக்கிளும் மாம்பழமும் ஒன்று சேர முயற்சி நடக்கிறது.

images?q=tbn:ANd9GcSoFYYICrnNtxs6ZE9shI5 images?q=tbn:ANd9GcRKjm7VZ3wZPs662sLDiEt

கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.

தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kunalan Karunagaran

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

TNA.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீமுடன் தமிழரசு கட்சி இணைந்து கொழும்பு , கண்டி போன்ற பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கக்கீம் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

கக்கீமுடன் தமிழரசு கட்சி இணைந்து கொழும்பு , கண்டி போன்ற பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கக்கீம் தெரிவித்துள்ளார்.

இது மலையக தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்கும் வேலையில்… சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சியின் கீழ்த்தரமான செயல்பாடு.

ஒற்றுமையை வலியுறுத்தும் நேரத்தில்… இது வேண்டத்தகாத வேலை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

கக்கீமுடன் தமிழரசு கட்சி இணைந்து கொழும்பு , கண்டி போன்ற பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கக்கீம் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு கொடுத்த வேலையை சரிவர செய்கிறார்.

அதே மாதிரி கக்கீமுக்கு கொடுத்த வேலையை அவர் செய்வார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.