Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இலங்கையில் நிற்கும் ஆறு மாதங்களில் கணவருடன் ஒருமாதம் போக மிகுதி என் தங்கையின் வீட்டிலேயே சித்தியுடன் நிற்பதாக ஏற்பாடு. டாய்லெட்டுடன் உள்ள அறையை எனக்காக ஒதுக்கியிருப்பதாக சித்தி சொல்ல அதைப் போய் பார்க்கிறேன். டாய்லெட் முழுதும் கால்சியம் படிந்து பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. கணவரும் பார்த்துவிட்டு அப்ப என் தங்கை வீட்டிலேயே தங்கு. அங்கு எல்லாம் சுத்தமாகத்தானே இருக்கு என்கிறார். நான் வளர்ந்த வீட்டில் இ

இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kavi arunasalam said:

இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது

இது மறு பதிப்புத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2025 at 14:06, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவிலில ரோட்டுக்கரை ஒரு பரப்பு ஒரு கோடி தொடக்கம் ஒண்டரைக் கொடிவரை போகுது . உள்ளுக்குள் இடத்துக்கேற்ற விலை. 50 தொடக்கம் 60, 65 கூடப் போகுது

ஒ…அப்ப 2024 இதே நேரத்தோடு ஒப்பிட அதிக விலை கூடவில்லை.

தகவலுக்கு நன்றி.

1 hour ago, Kavi arunasalam said:

இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது

மாட்டிகினினாவு ஒத்தரு…

அவவ காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣

56 minutes ago, நந்தன் said:

இது மறு பதிப்புத்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

இல்லை 67 வயதில் 65 ஆக. இருந்தது பாராளுமன்றம் 67 வயதில் பென்சன். கொடுப்பது என்று தீர்மானம் செய்தது .....67 -65=2 வருடங்கள். =24 மாதங்கள்

2022 ஆண்டில் ஆரம்பித்து

1,..65 ஆண்டுகள் ஒரு மாதம் பென்சனுக்கு விண்ணப்பிக்கலாம்

2,....65 ஆண்டுகள் இரண்டு மாதம் விண்ணப்பிக்கலாம்

3,...65வயது மூன்று மாதம். விண்ணப்பிக்கலாம்

4, ...

இப்படியாக ஒவ்வொரு மாதமாக கூட்டி. இப்போது 67 வயதில் பென்சனுக்கு விண்ணப்பிக்க முடியும் இப்போது 70 வயதில் பென்சன். கொடுப்பது பற்றி அரசியல் கட்சிகள் உரையாடல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் 80 வயதில் பென்சன். கொடுத்தால் கூட நான் கவலைப்பட போவதில்லை 🤣🤣

ஆமாம் நல்ல இலக்கம்

எனக்கு இன்னும் பத்து வருடம் இருக்கு. நான் யேர்மனியில் வேலை செய்தது 16 ஆண்டுகள்தான். அங்கே குழந்தை பெற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் முதலே பென்சன் எடுக்கலாம் என்று ஒரு சட்டமும் இருக்கு. ஆனால் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்குத்தான் அந்த மூன்று ஆண்டுகள் கணக்கு.

9 hours ago, suvy said:

65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂

உண்மைதான் அண்ணா. வருங்காலத்தில் பென்ஷன் 80 வயதுக்கு என்று கொண்டுவருவார்கள்.

2 hours ago, Kavi arunasalam said:

இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது

முன்னரும் சிறு பகுதி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் அண்ணா. எனக்கு நினைவில்லை. இப்ப முழுவதும் எழுதுவதால் அதுக்கும் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂

உண்மை அது தான் பென்சன் கொடுக்காமல் விடுவாதறக்காக. வயதை கூட்டிக்கொணடு போகிறார்கள் குமாரசாமி அண்ணை,.....இல்லை இல்லை தம்பி பென்சன். எடுப்பாரே தெரியவில்லை 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

இது மறு பதிப்புத்தான்

உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன்.

1 hour ago, goshan_che said:

ஒ…அப்ப 2024 இதே நேரத்தோடு ஒப்பிட அதிக விலை கூடவில்லை.

தகவலுக்கு நன்றி.

மாட்டிகினினாவு ஒத்தரு…

அவவ காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣

உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.

இதைப் பார்த்தால் தமபி. குமாரசாமி ஒரு கோடி தரமாட்டார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...cool

2446083ab2e758176a34c5f4848296aa.gif

"உயிருடன் விலகாத நட்பு, சில பொருளுடன் உறவாட கெடும்." சாமியார் புத்திசாலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இதைப் பார்த்தால் தமபி. குமாரசாமி ஒரு கோடி தரமாட்டார் 🤣

எனக்கு இப்பவே மறதி நோய் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகமாய் இருக்கு அண்ணா 🙂

5 minutes ago, satan said:

"உயிருடன் விலகாத நட்பு, சில பொருளுடன் உறவாட கெடும்." சாமியார் புத்திசாலி.

🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு இப்பவே மறதி நோய் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகமாய் இருக்கு அண்ணா

என்ன இப்படி பொதுவில போட்டு உடைக்கிறீர்கள்? நீங்கள் வந்துவிட்டது போல் உணர்ந்தாலும், வந்து விட்டது என்றே முடிவு கட்டுமுலகமிது!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன்.

உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.

உண்மை..இங்கே எழுதிய விடையங்கள் ஏற்கனவே உங்களாலயே எழுதபட்டு விட்டது அக்கா..இந்திய பயண அனுபவத்தோடு என்று நினைக்கிறேன்..பறவா இல்லை விடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

மாட்டிகினினாவு ஒத்தரு…

அவவ காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣

அவ ஒண்டும் இல்லாததை பொல்லாததை பில்டப்பண்ணி எழுதேல்லையே......உள்ளதை திருப்பி எழுதியிருக்கிறார் அவ்வளவுதான்....😂

பணிச்சுமைகளுக்கு மத்தியில் எழுதுவதை பாராட்டணும்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Kandiah57 said:

உண்மை அது தான் பென்சன் கொடுக்காமல் விடுவாதறக்காக. வயதை கூட்டிக்கொணடு போகிறார்கள் குமாரசாமி அண்ணை,.....இல்லை இல்லை தம்பி பென்சன். எடுப்பாரே தெரியவில்லை 🤣

30 minutes ago, Kandiah57 said:

இதைப் பார்த்தால் தமபி. குமாரசாமி ஒரு கோடி தரமாட்டார் 🤣

திருப்பியும் திருப்பியும் சொல்லுறன் உங்களுக்கு "தம்பி பாப்பா" கிடைத்து விட்டதாய் நினைச்சு சந்தோசப்பட வேண்டாம் கந்தையர் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

என்ன இப்படி பொதுவில போட்டு உடைக்கிறீர்கள்? நீங்கள் வந்துவிட்டது போல் உணர்ந்தாலும், வந்து விட்டது என்றே முடிவு கட்டுமுலகமிது!

மற்றவை நினைச்சால் நினைச்சிட்டுப் போகட்டும் 😃

1 hour ago, யாயினி said:

உண்மை..இங்கே எழுதிய விடையங்கள் ஏற்கனவே உங்களாலயே எழுதபட்டு விட்டது அக்கா..இந்திய பயண அனுபவத்தோடு என்று நினைக்கிறேன்..பறவா இல்லை விடுங்கோ.

நன்றி யாயினி.

58 minutes ago, குமாரசாமி said:

அவ ஒண்டும் இல்லாததை பொல்லாததை பில்டப்பண்ணி எழுதேல்லையே......உள்ளதை திருப்பி எழுதியிருக்கிறார் அவ்வளவுதான்....😂

பணிச்சுமைகளுக்கு மத்தியில் எழுதுவதை பாராட்டணும்.🙂

நன்றி குசா. எழுதினதை திருப்ப எழுதி நேரத்தை விரயம் செய்திட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றவை நினைச்சால் நினைச்சிட்டுப் போகட்டும் 😃

நன்றி யாயினி.

நன்றி குசா. எழுதினதை திருப்ப எழுதி நேரத்தை விரயம் செய்திட்டன்.

புதிதாய் ஒரு தொடர் எழுதும்போது அதோடு சேர்ந்து வரும் விடயங்களை எழுதுவதுதான் சிறப்பு , அது முன்பு எழுதி இருந்தாலும் கூட பரவாயில்லை ........ இனி நீங்கள் அந்த வீட்டில் வாழும் செய்தியைத்தான் எழுதப் போகிறீர்கள் .......... விமர்சனங்கள் நல்லதே , அதற்காக நீங்கள் உங்கள் எண்ணத்தில் தொடராக வருவதை அப்படியே எழுதுங்கள் ..........! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

மிக்க நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன்.

உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.

முன்பு நீங்கள் எழுதியதை வாசிக்க எனக்கு கிடைக்கவில்லை, இப்போ கிடைத்திருக்கிறது. வாங்கிய வீட்டுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல். ஊரில் நடக்கும் விடயங்களை பார்த்தால்நெஞ்சு பக்கு பக்கென்று அடிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

திருப்பியும் திருப்பியும் சொல்லுறன் உங்களுக்கு "தம்பி பாப்பா" கிடைத்து விட்டதாய் நினைச்சு சந்தோசப்பட வேண்டாம் கந்தையர் 😎

சரி அண்ணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன்.

வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது.

ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன  நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன.

ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன்.

சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன்.

அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு.

புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை.

அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அவருக்கு 4000.

அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன்.

“இந்தப் பலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி”

“ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்”

“இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு”

“மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே”

“மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை”

நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன்.

"பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே”

“உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்”

அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை.

“இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை”

“ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது”

“கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ”

“மரத்தை எங்கையம்மா போடுறது”  

“வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்”

“நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே”

“எப்பிடிக் கொண்டு போவியள்”

“லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்”

“கொண்டுபோய் என்ன செய்வியள்? லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே விறகுகள் வாங்கிப்போடலாமே”

“இப்ப விறகு சரியான விலையம்மா”

“பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்”   

எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று.

பலாமரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு

லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது.

“ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார்.

கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிட்டியள் அக்கா என்கிறார்.

எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன்.

ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பலாமரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால  கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பலக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.              

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

முன்பு நீங்கள் எழுதியதை வாசிக்க எனக்கு கிடைக்கவில்லை, இப்போ கிடைத்திருக்கிறது. வாங்கிய வீட்டுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல். ஊரில் நடக்கும் விடயங்களை பார்த்தால்நெஞ்சு பக்கு பக்கென்று அடிக்குது. 

எழுதத்தானே போறன் 😂

  • கருத்துக்கள உறவுகள்

சரி..சில எழுத்துப் பிழைகளை திரித்தினால் நன்று..பலாமரம்(எப்போதும் பாலா மரமாக வருகிறது)கவனத்தில் எடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

சரி..சில எழுத்துப் பிழைகளை திரித்தினால் நன்று..பலாமரம்(எப்போதும் பாலா மரமாக வருகிறது)கவனத்தில் எடுங்கள்.

நன்றி யாயினி. பிழைகளைத் திருத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை  கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

பயமாய் கிடக்கு.

நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். காணி சொந்தக்காரரி. போனால் போகட்டும் போட. என்று எம.ஜி ஆர் லெவலில் இருக்கும் போது 🤣

10 hours ago, யாயினி said:

சரி..சில எழுத்துப் பிழைகளை திரித்தினால் நன்று..பலாமரம்(எப்போதும் பாலா மரமாக வருகிறது)கவனத்தில் எடுங்கள்.

அவர. லண்டனில் தமிழ் பாடசாலைகளில் தமிழ் படிப்பிக்கிறார். தமிழ் பள்ளி விழாவில் பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்த படங்களை பார்த்து உள்ளேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை  கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு.

புலம்பெயர்ந்த பலரும் சரியான ஏமாளிக்களாகத்தான் இருக்கிறோம்.

8 hours ago, Kandiah57 said:

நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். காணி சொந்தக்காரரி. போனால் போகட்டும் போட. என்று எம.ஜி ஆர் லெவலில் இருக்கும் போது 🤣

அவர. லண்டனில் தமிழ் பாடசாலைகளில் தமிழ் படிப்பிக்கிறார். தமிழ் பள்ளி விழாவில் பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்த படங்களை பார்த்து உள்ளேன்

கணனியில் எழுதும்போது அச்சொட்டாக சொற்கள் வாராதுதானே. எத்தனை என்று திருத்துவது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.