Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

485742453_9611784935547606_1744802964346

படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி.

ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உணர்த்தி அது கதையோட்டத்தில் கலக்கும் போது அடல்ட் காமெடியாக நன்றாகவே வொர்க்கவுட் ஆகிவிடுகிறது.

ஒன்றுமில்லை, இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கக்கூடிய குடும்ப உறுப்பினரில் மருமகள்களும் உண்டு. ஒரு மருமகள் வீட்டிற்கு வந்து மாமனாரின் இறப்பிற்கு முதலில் வருந்தி, பிறகு அவரது விறைத்த ஆண்குறியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து..... இந்தப் பிரச்சனையை மூடிமறைக்கும் பொறுப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்று சாந்தமானதும்... அருகில் நிற்கும் கணவனை ஏற இறங்க ஒரே ஒரு பார்வை பார்ப்பார். "இவருக்கு புள்ளையா பொறந்துட்டு நீயும் தான் இருக்கியே தெண்டமா" என்பது போலான பார்வை. Chandini Tamilarasan பிரம்மாதப்படுத்தி இருப்பார்.

மருமகள் 1 : என் புருஷன் குச்சியை வச்சு குழந்தைகளை அடிக்க மட்டும்தான் லாயக்கு

மருமகள் 2 : இந்த பால் கூட கொஞ்சம் லேட்டா பொங்கும். ஆனா என் புருஷன்!

இப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல ஏகப்பட்ட காட்சிகள் படத்தினுள் உண்டு, மீண்டும் சொல்கிறேன் இது அடல்ட் காமெடி. குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. பெரியவர்கள் ரசித்துச் சிரிக்க ஏற்ற படம். நிச்சயம் முகம் சுழிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை அல்ல. சென்சிபிலாகவே இருக்கும்.

இளங்கோ ராம் திறமையான இயக்குனர், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக கட்டமைத்து இருக்கிறார்.

திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Karthik 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன் சிரித்தேன் இன்னும் நினைத்து நினைத்து சிரிக்கிறேன் . .......... bp , பிரசருகெல்லாம் சிறந்த மருந்து ........ (லாஜிக் பார்க்கக் கூடாது )...........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

பார்த்தேன் சிரித்தேன் இன்னும் நினைத்து நினைத்து சிரிக்கிறேன் . .......... bp , பிரசருகெல்லாம் சிறந்த மருந்து ........ (லாஜிக் பார்க்கக் கூடாது )...........! 😂

சுவியர்... மேலே விமர்சனம் எழுதியவரின் வரிகளையே வாசித்து விழுந்து விழுந்து சிரித்தேன். animiertes-gefuehl-smilies-bild-0119.gif

அப்போ... படம் பயங்கர சிரிப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். animiertes-gefuehl-smilies-bild-0234.gif

செத்த வீட்டிலும்... அந்த மருமகள்கள், தங்கள் கணவனை சாட்டோடு, சாட்டாக குத்திக் காட்டுவதன் மூலம் ரொம்ப பாதிக்கப் பட்டுள்ளார்கள் போலுள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசயம்...? 🤔

இந்தப் பக்கம்.... @ஈழப்பிரியன் , @விசுகு, @நிழலி, @Kandiah57, @குமாரசாமி, @alvayan, @putthan, @நந்தன் ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂

அல்லது... வயது மூப்பு அடைந்து விட்டார்களா. 🤣

50 minutes ago, தமிழ் சிறி said:

என்ன விசயம்...? 🤔

இந்தப் பக்கம்..@நிழலி,

ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂

On 26/3/2025 at 12:01, தமிழ் சிறி said:

ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர்.

நான் இதை வாசித்த பிறகு, இனி சாகும் போது கூட 'இப்படியாகிவிடுமோ' என்று பயத்தில் சாகவேண்டி இருக்கப் போவது என்று யோசனையுடன் இருக்கின்றன். நிம்மதியா சாகக் கூட விட மாட்டார்கள் போல கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்ன விசயம்...? 🤔

இந்தப் பக்கம்.... @ஈழப்பிரியன் , @விசுகு, @நிழலி, @Kandiah57, @குமாரசாமி, @alvayan, @putthan, @நந்தன் ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂

அல்லது... வயது மூப்பு அடைந்து விட்டார்களா. 🤣

பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்?

இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன்.

படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.

நோ.. நோ ..திருந்தவில்லை...இப்பவும் இன்னும் துடிப்புடன்...உந்த படம் ரி.வி பெட்டிக்கு வந்துவிட்டதா என்று மனிசியை கேட்டபடியே இருக்கின்றேன்...கமராக் கொப்பிதான் வந்திருக்காம்....இப்ப தோனியை 2 பேரும் சேர்ந்து ரசிக்கப் போற ம்..எப்ப்டியும் இரவுக்கு உந்தபடத்தை பார்ப்பம்😆

முதலில் வயதுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை இரத்தம் ஆணுறுப்புக்கு பாயும் அல்லது ஒடும் எனில் 150. வயதிலும் அது எழிச்சி அடையும்

ஆகவே வயோதிபர்கள். இது பற்றி கதைக்கக்கூடாது என்பது அறியாமை ஆகும். வயோதிபர்கள். தான் இதில் அனுபவசாலிகள். அனுபவம் ஒரு செயலை அல்லது தொழிலை பிழைகளின்றி சரியாக செய்ய உதவும்

நான் படம் பார்க்கவில்லை பார்க்கப் போவதில்லை

குறிப்பு,....நீங்கள் ஒரு வயோதிபர். மனைவியின் அனுமதியை பெற்று வேறு ஒரு இளம் பெண்ணுடன். அனுபவித்து பாருங்கள் எப்படி என்று தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரேயொரு முறை மட்டும் சும்மா படங்களை பார்த்து காலத்தை போக்க வேண்டாம் 🙏

39 minutes ago, alvayan said:

நோ.. நோ ..திருந்தவில்லை...இப்பவும் இன்னும் துடிப்புடன்...உந்த படம் ரி.வி பெட்டிக்கு வந்துவிட்டதா என்று மனிசியை கேட்டபடியே இருக்கின்றேன்...கமராக் கொப்பிதான் வந்திருக்காம்....இப்ப தோனியை 2 பேரும் சேர்ந்து ரசிக்கப் போற ம்..எப்ப்டியும் இரவுக்கு உந்தபடத்தை பார்ப்பம்😆

மீண்டும் ஒருமுறை அப்பா ஆக. வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

கந்தையர் வாழ்க்கை வாழ்வதற்கே....எப்பவும் என்னமும் நடக்கலாம்....வாழும்வரை சந்தோசமாக இருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்?

இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன்.

படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.

அடுத்த படத்தை குச்சி எண்டு எடுங்கோ அண்ணர் கட்டாயம் பார்ப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் இதை வாசித்த பிறகு, இனி சாகும் போது கூட 'இப்படியாகிவிடுமோ' என்று பயத்தில் சாகவேண்டி இருக்கப் போவது என்று யோசனையுடன் இருக்கின்றன். நிம்மதியா சாகக் கூட விட மாட்டார்கள் போல கிடக்கு...

படத்தில்... நகைச்சுவைக்காக இந்த விடயத்தை எடுத்துள்ளார்கள்.

நீங்கள் பயப்படாதேங்கோ நிழலி. 😂

3 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்?

இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன்.

படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.

நான் சாதாரணமாக படம் பார்ப்பது குறைவு.

ஆனால்... இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்த்தவுடன், கட்டாயம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அத்துடன் அது... இலங்கை படம். ஆசையை தூண்டி விட்டுள்ளது. 🙂

3 hours ago, alvayan said:

நோ.. நோ ..திருந்தவில்லை...இப்பவும் இன்னும் துடிப்புடன்...உந்த படம் ரி.வி பெட்டிக்கு வந்துவிட்டதா என்று மனிசியை கேட்டபடியே இருக்கின்றேன்...கமராக் கொப்பிதான் வந்திருக்காம்....இப்ப தோனியை 2 பேரும் சேர்ந்து ரசிக்கப் போற ம்..எப்ப்டியும் இரவுக்கு உந்தபடத்தை பார்ப்பம்😆

அல்வாயன், இன்று படம் பார்த்தால்... கட்டாயம் உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்... இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்த்தவுடன், கட்டாயம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அத்துடன் அது... இலங்கை படம். ஆசையை தூண்டி விட்டுள்ளது. 🙂

ஏன் ..இலங்கையென்றால் ..ஏதும் விசேசமோ...அப்ப நாங்களும் விசேசமானவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

முதலில் வயதுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை இரத்தம் ஆணுறுப்புக்கு பாயும் அல்லது ஒடும் எனில் 150. வயதிலும் அது எழிச்சி அடையும்

ஆகவே வயோதிபர்கள். இது பற்றி கதைக்கக்கூடாது என்பது அறியாமை ஆகும். வயோதிபர்கள். தான் இதில் அனுபவசாலிகள். அனுபவம் ஒரு செயலை அல்லது தொழிலை பிழைகளின்றி சரியாக செய்ய உதவும்

நான் படம் பார்க்கவில்லை பார்க்கப் போவதில்லை

குறிப்பு,....நீங்கள் ஒரு வயோதிபர். மனைவியின் அனுமதியை பெற்று வேறு ஒரு இளம் பெண்ணுடன். அனுபவித்து பாருங்கள் எப்படி என்று தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரேயொரு முறை மட்டும் சும்மா படங்களை பார்த்து காலத்தை போக்க வேண்டாம் 🙏

மீண்டும் ஒருமுறை அப்பா ஆக. வாழ்த்துக்கள் 🙏

இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

ஏன் ..இலங்கையென்றால் ..ஏதும் விசேசமோ...அப்ப நாங்களும் விசேசமானவர்கள்

இலங்கை என்றால்... திரையில் பேசும் மொழி உச்சரிப்புகள், படப்பிடிப்பு நடத்திய இடங்கள், உடை அலங்காரங்கள், இசை... என்று ஒரு சில விடயங்களை உன்னிப்பாக கவனிக்க ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை என்றால்... திரையில் பேசும் மொழி உச்சரிப்புகள், படப்பிடிப்பு நடத்திய இடங்கள், உடை அலங்காரங்கள், இசை... என்று ஒரு சில விடயங்களை உன்னிப்பாக கவனிக்க ஆசை.

இருந்த இடம் ...பார்த்த இடம் ..பழகிய இடம் ...பார்த்த முகங்கள்... பேசியமொழி...

இங்கு நான் திரிகளில்..எழுதுவதில் ..சுவராசியம் இருக்க வேண்டுமென்பதற்காகவே..சில சொற்பதங்களச் சேர்ப்பது.. அவ்வளவே

வே

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

என்ன விசயம்...? 🤔

இந்தப் பக்கம்.... @ஈழப்பிரியன் , @விசுகு, @நிழலி, @Kandiah57, @குமாரசாமி, @alvayan, @putthan, @நந்தன் ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂

அல்லது... வயது மூப்பு அடைந்து விட்டார்களா. 🤣

செத்த கிளிக்கு ஏன்டா கூடு...என்ற வடிவேலின் தத்துவத்துக்கு ஏற்ற வகையில்

இதை ஏன் பார்ப்பான் ஏன் அவதிப்படுவான்

இத்திரைப்படம் பற்றி மாற்று கருத்துடன் ஒர் விமர்சனம் பார்த்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂

அந்த நுனியில் ஒரு கொட்டானால். அடியுங்கள். 🤣🙏

சும்மா பகிடிக்கு உண்மையில் அடித்து போட வேண்டாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.