Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்

  • Replies 78
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமி

  • goshan_che
    goshan_che

    கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்

சில விசேட சூழ்நிலைகளில் இப்படி அதிகாரிகளால் ஆட்சி செய்யும் முறை நடந்திருக்கிறது. 20 ஆண்டுகள் முன்னர், பெல்ஜியத்தில் ஆட்சி பெரும்பான்மையில்லாமல் கவிழ்ந்து விட்டது. புதிதாக ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் பல மாதங்கள் "காபந்து பிரதமர்- caretaker PM" ஆட்சி செய்தார். அந்த வேளையில், குடிமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகளை அமல் படுத்தி அன்றாட நிர்வாகத்தை அரச அதிகாரிகள் நடத்தினார்கள். "ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகள்/சட்டங்கள்" - இது தான் முக்கியமான பொயின்ற்: புதிதாக கொள்கைகளைச், சட்டங்களை அதிகாரிகள் இயற்றவில்லை. இருக்கும் சட்டங்களை அமல் படுத்தினர்.

கடஞ்சா தன் கருத்திற்கு இந்திய யாப்பை சாட்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த யாப்பிலேயே இருப்பதன் படி, நிர்வாக அதிகாரிகள் "கொள்கைகளை அமல்படுத்துவோர்" என்று தான் இருக்கிறது. "கொள்கைகளை இயற்றுவோர் - policy makers" அல்லது அரசியல் தலைமையின் கொள்கைகளை தடம்/வழி மாற்றுவோர் என்று குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

இப்போ பங்களாதேசில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலமையில் அமைந்ததுள்ள இடைக்கால அரசும் இப்படி பட்ட ஒரு technocratic அரசாங்கம் என சொல்லலாம்.

இதோடு தொடர்புடைய ஒரு விடயம். பிரித்தானிய அரச சேவையில் இதை - purdah என்பார்கள். நமக்கு நன்கு தெரிந்த “மூடியநிலை” என்ற அர்த்தம் தரும் “பர்தா” என்ற அரேபிய சொல்லில் இருந்து வருகிறது.

தேர்தல் அறிவித்த நாள்- அடுத்த அரசு பதவி ஏற்கும் நாள் வரையான காலம் - பேர்டா காலம்.

இந்த காலத்தில் ஆளும் கட்சியோ, அதிகாரிகளோ எந்த புது திட்ட அறிவிப்பையும் வெளியிடக்கூடாது. புது நல திட்டங்களை தொடங்க கூடாது.

ஏதாவது புதிதாக செய்ய போவதாயின் அதை தமது தேர்தல் அறிக்கையில்தான் ஆளும் கட்சி சொல்ல வேண்டும்.

இதே நடைமுறை இந்தியாவிலும் உண்டு. தேர்தல் அறிவிக்க முன் மாநில, மத்திய அரசுகள் அவசர அவசரமாக நல திட்டங்களை அறிவிப்பதும், எதிர் கட்சிகள் புலம்புவதும் எப்போதும் நடக்கும்.

இதுவும் கூட திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே/கட்சிகளே என ஐயம் திரிபற காட்டி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் கல்விதுறை பற்றி தமிழ் நாட்டில் கல்வி பயின்று தற்போது ரஷயாவில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ரஷ்ய மாணவன. கூறுகிறார்.

https://www.facebook.com/share/r/19UDy8gUjK/?mibextid=wwXIfr

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

தமிழ் நாட்டின் கல்விதுறை பற்றி தமிழ் நாட்டில் கல்வி பயின்று தற்போது ரஷயாவில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ரஷ்ய மாணவன. கூறுகிறார்.

https://www.facebook.com/share/r/19UDy8gUjK/?mibextid=wwXIfr

தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் ஒரு ரஷ்யன் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுகின்றது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் இல்லை, விளாடிமிர் புடின் ஆட்சி முடிடிவுக்கு வரும் நாளில் தான் நாங்களும் உக்ரைன் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று ரஷ்ய மாணவர்கள் இளைஞர்கள் சொல்வதில் உள்ள உண்மைகளயும் நம்புகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் இல்லை, விளாடிமிர் புடின் ஆட்சி முடிடிவுக்கு வரும் நாளில் தான் நாங்களும் உக்ரைன் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று ரஷ்ய மாணவர்கள் இளைஞர்கள் சொல்வதில் உள்ள உண்மைகளயும் நம்புகின்றோம்.

இப்படி ரஷ்யா மாணவர்கள் சொன்னார்களா??? நான் நினைத்தேன் ரஷ்யார்கள். அனைவரும் புட்டினின் ஆதவளார்கள. என்று ஆதாரம் உண்டா?? 🤣🤣🤣🤣🤣🤣

8 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் ஒரு ரஷ்யன் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுகின்றது 🤣

அனைத்து விடயங்களிலும். புட்டினும். அவரது ஆதரவளார்களும் சொல்வது எல்லாம் உண்மை அவர்கள் வாழ்க்கையில் பொய் பேசுவது இல்லை,......போர் என்ன மாதிரி முடிப்பாரா. ??? வரி மன்னர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் நினைத்தேன் ரஷ்யார்கள். அனைவரும் புட்டினின் ஆதவளார்கள. என்று ஆதாரம் உண்டா?? 🤣🤣🤣🤣🤣🤣

அனைவரும் புட்டினின் ஆதவளார்கள் என்று ரஷ்ய செய்திகள் இந்திய யுரியுப்பர்கள் சொல்வதை நீங்கள் நம்பிவிட்டீர்கள்.

99.90 வீதமானவர்கள் மட்டுமே புட்டினின் ஆதவளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

புட்டினுக்கு தேர்தலில் 87.28 வீதமானவர்கள் தானே வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் மிகுதி 12.62 வீதமானவர்களும் எங்கள் தலைவர் வென்றுவிடுவார் என்று வாக்களிக்க சென்றுவிடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

என்ன பகிடியா. ???? புட்டின். ரஷ்யாவை ஆள வேண்டும் என்று புட்டின் தீர்மானிக்கிறாரா?? அல்லது ரஷ்யா மக்கள் தீர்மானிக்கிறார்களா ???

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 01:54, Justin said:

இது எந்த நாட்டிலும் இருக்கக் கூடிய சாதாரண நிலை, ஓரளவு செய்தி வாசிக்கும் எவருக்கும் புரியக் கூடிய உண்மை.

ஆனால், "திராவிட மொடல் காரணமாக பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை" என்று நிறுவ "சீரமைப்பு" , "போக்கு" என்பன இரு வேறு விடயங்கள் என குத்தி முறியும் நிலைக்கு வந்திருக்கிறார் கடஞ்சா! அவரது தியரியின் மிகப்பெரிய ஓட்டை, இதே IAS அதிகாரிகள் செயலில் இருக்கும் பீகாரில் ஏன் தமிழகம் போல வளர்ச்சி இல்லை? என்பதற்கான பதிலில் இருக்கிறது.

இதையெல்லாம் சீரியசாக அணுகுவது நேர விரயம்

(உங்களை போன்றோருக்கு சொல்வது தான் நேரம் வீண். (ஏனெனில்,உணர்வு அடிப்படையில் பார்ப்பது))

ஆயினும், மற்றவர்கள் இதை உணர்வு இன்றி, ஆய்வி நிலையில் பார்க்கப்பட வேண்டும், புரியப்பட்ட வேண்டும் என்பதால்.

நிச்சயமாக , திராவிட மாடல் தான் என்றால்,கேரளாவில், கம்யூனிஸ்ட் எவ்வாறு வளந்தார்கள்? வெளிப்டையான, எதிர்மாறு.

திராவிடத்தை கைவிட்டா, அல்லது எதிர்க்கும் போக்கு கொண்ட, மற்ற தென்மாநிலங்கல் எவ்வாறு வளர்ந்தன?

பொதுவாக, வடக்கு, மத்தி மாநிலங்களை விட, அபிவிருத்தி சுட்டி தென்மாநிலங்களில் கூட, ஏன்?

ஆகவே, எதோ ஒரு பொதுவான சமூக,பொருளாதார அமைப்பு இழை ஓடி உள்ளது இந்த தென்மாநிலங்களிலும், வேறான (அமைப்பு பிரச்சனைகள்) வடக்கு, மத்தி மாநிலங்களில்,ஏனெனில்,ஒரே மத்திய கொள்கை கீழ் இருப்பதால்.

(எனவே திரவிட மாடல் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை)

பிகார் போன்ற வடக்கு, மத்தி மாநிலங்களில் இருப்பது, அமைப்பு அடிப்படையிலான பொருளாதார,சமூக அமைப்பு பிரச்சனை, முக்கியமாக காணி உரிமை பரம்பலில், மற்றும் கல்வியை மதிக்காமை (அதனால் கல்வி அறிவு வளராமையும்) போன்ற பிரச்சனைகளும். இதை தென்மாநினலன்கள் 60/ 70/ 80 ளில் சீரமைப்பு செய்தன.

அதனால் தான் , 1991 தாராளமயா சாய்வு கொள்கைகள், பிகார் போன்ற மாநிலங்களில் அவ்வளவு மாற்றத்தை கொண்டுவரவில்லை,

அரசியல் கட்சிகளும் (அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்), அப்படி முழுமையாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும் வளர்த்தியை கொண்டுவந்து இருக்க முடியாது.

ஆயினும், பொருளாதார வளர்த்தியில் குறுக்கு பாதை இல்லை.

இப்போது, பிகார் அந்த சீரமைப்பை கையில் எடுத்து இருக்கிறது. ஆயினும், இவை சந்ததிகள் காலம் செல்லும் விளைவு தெரிய.

(ஆனால், மத்திய கொள்கை அளவில் ,அவற்றின் பிகார் போன்ற மாநிலங்களில் அமைப்பு சரி, ஏனெனில் புனல் போன்ற (பொருளாதார) கொள்கை அமைப்பு இருப்பதால், மத்தியில் தளர்வு, தாராள மய சாய்வு, மாநிலங்களில் அதை விட இறுக்கம்)

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2025 at 22:51, goshan_che said:

உங்களுக்கு நான் என்ன எழுதபோகிறேன் என்பது புரிந்து ஒரு சடையல்

தேவை இல்லை.

நீங்கள் சொல்லும் அடிப்படை, மேற்கு, இந்திய அரசு சனநாயகம், பொருளாதாரம் எல்லாம் பெரும் போக்கில் ஒரே தன்மை உள்ளவை என்ற அடிப்படையில்.

பெயர்களை வைத்து முடிவுக்கு வருவது,

உங்கள் புரிதல் அவ்வளவு தான், முன்பே சொல்லியது போல மேலோட்டமான புரிதல்.

அது தான் ias (அல்லது அதன் ஒப்பான மற்ற சேவைகளின் இன் இந்த அதிகாரம்), வெளியில் தெரியாத அதிகாரம்.

(அனால், அதன் பொறுப்பு சொல்வது, அரசியல்வாதிகளிடம்.)

நேரு அணிசேரா கொள்கையை உருவாக்கினார் என்றால், 1991 சோவியத் அகன்று, 30 வருடம் கடந்த பின்பும் இந்தியா அரசின் கொள்கையில் மற்றம் இல்லை.

அனால், பொருளாதார கொள்கை (போக்கு) மாற்றப்படுகிறது, 1991 இல்.

ஏன்?

இது தான் உங்களின் மேலோட்டமான புரிதல்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நேரு அணிசேரா கொள்கையை உருவாக்கினார் என்றால், 1991 சோவியத் அகன்று, 30 வருடம் கடந்த பின்பும் இந்தியா அரசின் கொள்கையில் மற்றம் இல்லை.

அனால், பொருளாதார கொள்கை (போக்கு) மாற்றப்படுகிறது, 1991 இல்.

1991 இல் பொருளாதார கொள்கை கம்யூனிசத்தில் இருந்து அல்ல. மூடிய சந்தை பொருளாதாரத்தில் இருந்து திறந்த சந்தை பொருளாதாரமாகவே மாறியது.

ஆனால் சர்வதேச அரசியல் கொள்கை - பொருளாதார கொள்கை போல அன்றி படிபடியாக மாறி வருகிறது.

நேரு காலத்து அணி சேரா கொள்கை இப்போ இல்லை. இப்போ இருப்பது நாமும் ஒரு அணிதான் என முந்தள்ளும் மோடி-ஜெய்சங்கர் கொள்கை நிலை.

மேற்கு, இந்தியா மட்டும் அல்ல.

சீனா போன்ற நாடுகளில் கூட ஷி காலத்தில் இப்போ இருக்கும் கொள்கை அல்ல மாவோ காலத்தில்.

ஆகவே அரசியல்வாதிகள், தலைவர்கள்தான் கொள்கையை முடிவு செய்வார்கள்.

இது இங்கே திரியில் பலரும் சொல்லி உள்ள ஒரு விடயம்.

நீங்கள் பழைய பாணியில் முயலின் மூன்றரைக்காலில் தொங்குகிறீர்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2025 at 22:53, goshan_che said:

நீங்கள் பழைய பாணியில் முயலின் மூன்றரைக்காலில் தொங்குகிறீர்கள்

சொல்லுவது நடைமுறை யதார்த்தம் (இதில் இந்திய அரசை பொறுத்தவரை). பொத்தாம் பொதுவானா தியரி அல்ல.

மன்மோகன்சிங் கொண்டு வந்ததே அந்த அதிகார பீட அதிகாரம் பாவிக்கப்பட்டதால்.

மன்மோகன்சிங் தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த அரசியல்வாதியாக அல்ல அந்த கொள்கை மாற்றீடு செய்தது (செய்து இருக்கவும் முடியாது என்பதும், ஏனெனில் தேர்தலில் அது இல்லை).

(அந்தஅதிகார பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, தேர்தலால் அல்லது மந்திரிகள் கொண்டுவரும் கொள்கைகளை நிராகரிக்க, மாற்ற, மாற்றீடு செய்ய, அல்லது அதிகார பீடமே கொள்கையை வகுக்க.)

(முன்பு சொன்னது போல மன்மோகன்சிங் இருந்தது வசதி)

சுருக்கமாக இந்திய அரச தனித்துவம். வெளியே தெரியாத அதிகாரம்.

(மற்றது, இப்படி நடப்பது குறைவு, ஏனெனில், அரசியாதிகள் / மந்திரிகள் கொண்டுவரும் கொள்கை பொதுவாக அந்த அந்த அதிகார பீட கொள்கை சிந்தனையோடு ஒத்து போவது. அப்படி நடந்தாலும் வெளியில் வராது. அந்த அதிகாரபீடம் கிட்டத்தட்ட கொள்கை காவலர்கள் என்று சொலலாம்.)

On 16/4/2025 at 14:55, Justin said:

கடஞ்சா தன் கருத்திற்கு இந்திய யாப்பை சாட்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த யாப்பிலேயே இருப்பதன் படி, நிர்வாக அதிகாரிகள் "கொள்கைகளை அமல்படுத்துவோர்" என்று தான் இருக்கிறது. "கொள்கைகளை இயற்றுவோர் - policy makers" அல்லது அரசியல் தலைமையின் கொள்கைகளை தடம்/வழி மாற்றுவோர் என்று குறிப்பிடவில்லை.

ஒரு சரத்தை மட்டும் முடிவுக்கு (எந்த யாப்பிலும் ) முடிவுக்கு வருவது சரியான முறையா என்பதை சொல்லுங்கள் யாப்பில் சற்று சிறப்பு தேர்த்தி உங்களுக்கு இருந்தால்; இல்லாவிட்டால் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

மற்றது யாப்பில் மொழியால், தொனியால் வரும் அதிகாரங்கள்.

மற்றது எந்த (சிறப்பு) அதிகார பீடத்தின் உருவெடுக்கும் வரலாற்று பாரம்பரியமும்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

சொல்லுவது நடைமுறை யதார்த்தம் (இதில் இந்திய அரசை பொறுத்தவரை). பொத்தாம் பொதுவானா தியரி அல்ல.

அறவே இல்லை.

இதில் தியரி, நடைமுறை வேறுபாடு ஏதும் இல்லை.

தேர்தல் அரசியல் மூலம் வந்தாரோ, இல்லை நியமன எம்பியாக ராஜ்யசபா மூலம் வந்தாரோ மன்மோகன் ஒரு அரசியல்வாதிதான். ஐ ஏ எஸ் அதிகாரி அல்ல.

நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் பொருளாதாரத்தை திறப்பது என்ற கொள்கை முடிவை எடுத்து, தேர்தலில் வென்றதும் அதை நடைமுறைபடுத்கியது.

அதற்கு தக்க பொருளாதார வல்லுனர் என்பதால் சிங் உள்ளே - நியமன அரசியல்வாதியாக கொண்டு வரப்பட்டார்.

ஆகவே இங்கு கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் காரிய கமிட்டி எனும் அரசியல்வாதிகள் கூட்டு + ராவ் + சிங்.

புலிகள் மூலம் ரஜீவை வெளிநாட்டு (சி ஐ ஏ) உளவு அமைப்பு சந்திரசாமி மூலம் கொலை செய்ததே - ரஜீவ் அவர்கள் விரும்பிய வகையில் இந்திய பொருளாதாரத்தை திறக்க உடன்படமாட்டார் என்பதாலேயே எனும் ஒரு சதி கோட்பாடு கூட உண்டு.

ரஜீவை அகற்றி விட்டு அந்த இடத்துக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போதே அவர்களுடன் நெருங்கிய ராவ், கேம்பிரிட்ஜில் படித்த சிங்கை கொண்டு வந்து சி ஐ ஏ காரியம் சாதித்தது என்பார்கள்.

இந்தியாவின் பொருளாதார கொள்கையை ஐ ஏ ஏஸ் அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில் - ரஜீவை கொண்டிருக்க தேவையே இல்லை ( இந்த சதி கோட்பாடு உண்மை எனில்).

ஆனால் உண்மையில் இந்த சதிகோட்பாடு எதுவும் தேவையில்லை. நீங்கள் ஒரு சதி கோட்பாட்டில் உழலும் நபர் என்பதால் அதை சொல்லியாவது புரியவைக்க முயல்கிறேன்.

மிக அப்பட்டமான உண்மை - எந்த நாட்டிலும், அது ஒரு அதிகாரிகள் குழாமால் ஆளப்படும் technocracy யாக இல்லாதவிடத்து, கொள்கை முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே.

இதை ஏற்கனவே பல உதாரணங்களோடு விளங்கபடுத்தியாயிற்று.

ஆனால் வழமை போலவே உங்கள் குறை புரிதலை அல்லது தவறான வியாக்கியானத்தை நடைமுறை என நிறுவ முயல்வது மட்டுமே உங்கள் அந்தரிப்பாக இருக்கிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அறவே இல்லை.

தெரியாவிட்டால் விடுங்கள்.

இது இந்தியா அரசை பற்றியது, எங்கு சென்றாலும் அதுக்கு ஒப்புமை காண முடியாது.

அங்கு சென்று, இங்கு சென்று, சதிக்கதை என்று ... தவறாக திரிக்க தேவை இல்லை. தான் திரிப்பதை மற்றவர்கள் செய்தது என்று சொல்வது

சீனாவை பற்றி மேற்கு ஊடகங்கள் சொல்லுவதை பிரதி செய்வது.

சீனாவின் பார்வையில் எல்லோருமே அதிகாரிகள் அந்ததந்த தரத்தில். சீனாவை பற்றி தெரியாமல் கதைப்பது வசதிக்காக. அதன் அடிப்படை அமைப்பே திறமையான பணியாளர்களை, ஊழியர்களை selective - elective ஆக பொறுப்புக்கு கொண்டு வருவது.

காங்கிரஸ் தேர்தலில் ல்லியது சீர்த்திருத்தம். தாராளம் என்பதோ திறந்த என்பதோ (இதுவல்ல இப்போதைய பொருளாதரமும்) என்றோ காங்கிரஸ் சொல்லவில்லை.

(இப்போதைய பொருளாதாரம் தாராளம் உள்ள, மூடிய அமைப்பு சாய்ந்த பொருளாதாரம்)

காங்கிரஸ் முதல் கட்டத்தில் (ராஜீவ் இருக்கும் பொது நடந்த தொகுதிகளில்) முற்றாக அடிபட்டு போய்விட்டது (உண்மையில் என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், பொருளாதாரம் முக்கிய காரணம்)

ராஜீவுக்கு (இறப்பின்) பின் நடந்ததில் கணிசமான வெற்றி பெற்றது.

1991 காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கம்.

(1991 மறக்க முடியாது சில காரணகளுக்காக)

ஆம், காங்கிரஸ் பொருளியல் வல்லுனரை உள்ளுக்கு கொண்டு வந்தது, சுமுகமாக நடப்பதற்கு.

அனால். அவருக்கு அதிகாரம் இல்லை தேர்தலில் சொன்னதை தலைகீழாக மாற்றுவதற்கு. அதுவும் சிறுபான்மை அரசாங்கத்தில்.

(அனால், இதில் சிறுபான்மை / பெரும்பான்மை அரசாங்கம் என்பது 2ம் பட்சம். பெரிய கொள்கை மற்றம் அல்லது மாற்றீடு என்பதே பிரச்சனை).

அந்த நிலையில், அதிகாரா பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவே பாவிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாது தான்.

மாறாக, எந்த அரசியல்வாதி/ மந்திரி கொள்கை வந்தாலும், அந்த அதிகார பீட இணக்கம் இல்லாமல் வரமுடியாது. திருத்தம், மாற்றம், மாற்றீடு செய்ப்படும். உதவியா வழங்கப்படும், யாப்பு அப்படியான நிலையில் வைத்து இருக்கிறது மந்திரிகளை.

ஆனால், மேற்கு சொல்வது என்ன இந்திய அரசை பற்றி - complex democracy.

ராஜதந்திரத்தில், அரச கலையில் complex என்பதன் அர்த்தம் தெரியாத கதை.

இந்தியாவுக்கு (சீனாவுக்கும்) பொத்தாம் பொதுவான ஒப்புமை, அது தவறான ஒப்புமை என்று கூட புரியாமல்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான பதிவு

முதலில் இந்திய ஜனநாயகத்தையும், மேற்கு ஜனநாயகத்தையும் ஒப்பிடுவது பொருத்தமும் அல்ல, தவறும் கூட.

ஏனெனில் மேற்கு சனநாத்துக்கும், இந்திய சனநாயகத்துக்கும் உள்ள பாரிய வேறுபாடு, மக்கள் ஒரே தன்மை இல்லை, வேறுபாடுகள் இரத்த களரிக்கு இடடு செல்லும் நிலைமை, (பொதுவாக இப்பொது நிலம்கீழ் சென்று விட்டது, அனால், அவ்வப்போது மேல் வருகிறது)

அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரபலமாக பெரிய தொகை மக்கள் விரும்புவதை கொண்டுவரலாம், அது அரச, தேசிய நலனுக்கு பாதகமாக இருந்தாலும்.

முக்கியமாக அமைச்சர் கொண்ட வருவது தனிப்பட்ட (அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்).

ஆனால் அதிகார பீடம் இணக்கம் , நிராகரிபு, மாற்றம், மாற்றீடு போன்றவை குழு முடிவு. எனவே முடிவு எந்த ஒரு பக்க மக்களுக்கு சாதகம், வேறு பக்க மக்களுக்கு பாதகம் ஆக இருப்பதத்திற்கு வாய்ப்புகள் மிக குறைவு.

அத்துடன் அரச சேவை பயிற்றுவிக்கப்படும் விதமும். இந்தியா அரச சேவைக்கு எடுபடும் போதே அரைவாசி - முக்கால் வாசி பேதங்கள் அகன்று விடும், வெளிவரும் போது இந்தியா அரச, தேசிய நலன் மட்டுமுமே அந்த அதிகார பீடத்தின் மூச்சு, மனம், மதியாக இருக்கும். வரலாற்று காரணம் காலனித்துவ (பிரித்தானிய கொண்டுவந்த) சேவையில் தொடங்குகிறது. (விதிவிலக்குகள் இருக்கலாம்)

அது போல, அந்த அதிகார பீடமும் அதிகாரத்தை துர்பிரோயோகம் செய்யாமல் இருக்க, அதிபர் ஒழுக்காற்று மற்றும் நீக்குவதை செய்யலாம்.

மந்திரிகள், பிரதமர், அதிபர் இலாகா ஊடாக அதன் அப்படியான செயற்பட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

வற்றை கருத்தில் கொண்டும் அம்பேத்கார் வடிவமைத்தது யாப்பை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

முயலுக்கு மூணேகால் கால்தான்.

சந்தேகமேயில்லை.

இத்துணை நீட்டி முழக்கி உள்ளீர்கள் - பாவமாக இருப்பதால் இரெண்டு சிரிப்புகுறி இலவசம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2025 at 05:37, goshan_che said:

முயலுக்கு மூணேகால் கால்தான்.

சந்தேகமேயில்லை.

இத்துணை நீட்டி முழக்கி உள்ளீர்கள் - பாவமாக இருப்பதால் இரெண்டு சிரிப்புகுறி இலவசம்.

நான் ஒருவரிடமும் எதுவும் எதிர்பார்ர்ப்பது இல்லை. இங்கு மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொல்லியதும் நீங்கள் தான்.

ஒவ்வொரு அரசுக்கும் தனித்துவ தன்மை இருப்பது கூட புரியாது / தெரியாமல், புடிச்ச பிள்ளையார்களாக இருக்கும் அந்த அரசுக்களை (இந்தியா, சீன) பற்றி புரிவதை விலத்தி அல்லது தவிர்த்து, பொத்தாம் பொதுவான தியரியை வகுத்து, மேற்கு அரசுகளை மையமாக வைத்து உலகம் சுற்றி, அன்றைய மார்கிரெட் தட்சர் சொன்னது என்று சொல்லி, ஆனால் இன்றைய மேற்கு ராஜதந்திரிகள் (அரசியல்வாதிகல் சூட்சுமமாக) சொல்லுவதையும் ம் தவிர்த்து ... (எனக்காக) காலில்லா முயல் பிடித்தது நீங்கள்; ஓடாது.

(வாதம் என்று சொன்னாலே எப்போதோ உங்களின் கதை அடிபட்டு போய்விட்டது).

இந்த விடயத்தில், இந்தியா, சீன பற்றி உள்ளதை, யதார்த்தத்தை நான் சொன்னால் போதும், அதுவே நான் சொல்லியது. தேவையான அளவு விபரங்கள் (அக்கறை உள்ள எவரரின் மேலதிக தேடுதலுக்கு)

விடயத்தில், எவ்வாறாயினும் இவை யாப்பால் உருவாகிய, இருக்கும் யதார்த்த அரசு / அரசாங்க நடைமுறைகள், இயங்கு முறைகள் இந்தியாவுக்கு, சீனாவுக்கு (அதுவும் 2 யாப்புகள் வழியாக, அரச அமைப்பு யாப்பு, cpc யாப்பு, இவை இரண்டுமே சீன அரசை / அரசாங்கத்தை நியாயாதிக்கபடுத்தி இயக்குகிறது).

மற்றது இது பொதுவாக அக்கறை உள்ளவர்களுக்கு பதிவது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புரியாமல் நாங்கள் சு.க, ஐ.தே.க, ம.வி.மு என்று தேர்தல் நேரம் இலங்கையில் அடிபாடு! பா.ஜ.க, காங்கிரஸ் என்று இந்தியாவில் அடிபாடு! பிறகு "பச்சைச் தமிழ் கட்சி, மஞ்சள் தமிழ் கட்சி" என்று தமிழ் நாட்டில் புடுங்குப் பாடு!

எல்லாமே ephemeral காகங்கள், "பனம் பழம்" சும்மா எழுந்தமானமாக விழுந்து கொண்டிருக்குது🤣😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

மன்னிக்கவும்…..

சிரிப்புகுறி தருவேன் என்பதை நம்பி மீண்டும் மீண்டும் கோமாளித்தனம் செய்வதை ஊக்குவிக்க கூடாது என்பதால் இன்றைக்கு சிரிப்புகுறி நிவாரணம் கட்🤣.

3 hours ago, Justin said:

இதெல்லாம் புரியாமல் நாங்கள் சு.க, ஐ.தே.க, ம.வி.மு என்று தேர்தல் நேரம் இலங்கையில் அடிபாடு! பா.ஜ.க, காங்கிரஸ் என்று இந்தியாவில் அடிபாடு! பிறகு "பச்சைச் தமிழ் கட்சி, மஞ்சள் தமிழ் கட்சி" என்று தமிழ் நாட்டில் புடுங்குப் பாடு!

எல்லாமே ephemeral காகங்கள், "பனம் பழம்" சும்மா எழுந்தமானமாக விழுந்து கொண்டிருக்குது🤣😂!

இந்த லப்பர் பந்தை மிக இலகுவாக திருப்பி அடிக்கலாம்.

தமிழ் நாடு வளர்ந்தமைக்கு திராவிட கொள்கைக்கு/ கட்சிகளுக்கு credit குடுக்க விரும்பாமல் இப்படி கற்பனாவாத கதைகள் எழுதுபவர்கள்தான்….

Wait for it …டாஸ்மார்க் இதர கொள்கைகளால்…திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் எழுதுவார்கள் 🤣.

தமிழ்நாட்டு பொருளாதாரம் வாழ்ந்தால் -ஐ ஏ எஸ் அதிகாரிகளால்,

அதுவே

வீழ்ந்தால் - திராவிட கட்சி அரசியல்வாதிகளால் 🤣🤣🤣

இதைதான் தாம் ஒரு அரசியல் முடிவில் இருந்து கொண்டு அதற்கு ஏற்ப வியாக்கியானம் எழுதுவது என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில், அரசியவாகி / மந்திரி கொண்டுவரும் கொள்கை , மற்றும் முடிவுகளை, அவர்கள் விரும்பிய மாதிரி கொண்டுவர, செயற்றப்படுத்த முடியாமல் போவதை, பிரச்சனை வரும் பொது அருமையாக காணலாம். (ஏனெனில், அந்த அதிகாரம் வெளியில் தெரியாமல் பிரோயோகிக்க படுவது)

மிகவும் அரிய, மிகுந்த உணர்த்திறனான சந்தர்ப்பங்கள், இதை ஓரளவு வெளிப்படையாக காண்பதற்கு.

ஈழத்தமிழர் (குறிப்பாக புலிகள்)ஆதரவாளர் George Fernades (தனித்த சந்திப்புகளில் தமிழருக்கு அரசு என்பதுடன் இணங்கியதாக) அதிகாரத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் கொள்கையை மாற்ற முடியவில்லை.

ஆனல், George Fernades, ஒரு பேச்சில் சொல்லி இருந்தார், ஒரு குடும்பம் இந்தியாவின் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்று (எந்த குடும்பம் என்று எல்லாருக்கும் தெரியும்).

அப்போது அந்த குடும்பம் பதவியி இல்லை.

அந்த குடும்பம் பற்றி அக்கறை உள்ள வேறு ஏதோ அதிகார பீடம் (முன்பு சொன்னது போல இந்த அதிகார பிரயோகம் வெளியில் தெரிவதில்லை), George Fernades ஐ தடுத்து , அப்படியே Fernades அடங்கிவிட்டார்.

(George Fernades வெளியில் இருந்து அடங்கி இருந்த்த்தால் சொல்லாம் மிரட்டப்பட்டார் என்று. ஆனால், பாதுகாப்பு அமைச்சராக அடங்குவது என்பது உரிய அதிகாரத்தால் மாத்திரமே முடியும்.)

(ஆனால், George Fernades தான் புலிகளில் ஓயாத அலைகள் நடவடிக்கை ஆயத்தப்படுத்தலில் இந்திய கடற்படை பார்த்தும் பாராமல் இருப்பதை வசதிப்படுத்தினார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. அனல், அது கொள்கை அல்ல, அமைத்திடம் இருக்கும் தந்திரோபாய அதிகாரம்.)

இப்படி சுப்பிரமணிய சாமியும் ஓர் பேட்டியில் உணர்ச்சி வசப்பட்டு, வாய் தவறி, இதை போன்ற ஒரு கருத்தை சொல்லி இருந்தார்,

அவரரிடம் கேட்கப்பட்டது, (அந்த குறிப்பிட்ட ஈழத்தமிழர் விடயத்தில், அது இப்பொது எனக்கு நினைவில் இல்லை, அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயம்) இந்தியாவில் அதிகாரத்தில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் கொண்டுவந்தால் செய்யலாம் தானே என்று.

அதற்கு சுப்பிரமணிய சாமி சொன்னது அப்படி கொண்டு வந்தாலும் நாங்கள் தடுப்போம், அதற்கு அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில்.

அந்த பேட்டியை எடுத்த நிருபர், முதல் கேட்ட கேள்வி, நீங்கள் (சுரப்பிரமணிய சாமி) சொல்லும் அந்த "நாங்கள்" யார் என்று சுப்பிரமணிய சாமியிடம். அதை சமாளித்து , ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார்.

(னவே பகிரங்க அதிகார பீடங்களை விட வேறு எதாவது அதிகார அமைப்பு இருக்கிறதா கொள்கை ஆக்குதல் , முடிவு எடுப்பதில் என்ற கேள்வியும் இருக்கிறது. (ஏனெனில் யாப்பு மந்திரி / அரசியல்வாதி மட்டும் தான் அன்றி அதிகார தரப்பின் சம்மதமும் வேண்டும் என்ற கருத்து பட இருப்பது, அதுவும் சூட்சுமமாக இருப்பது. அதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாப்பு சொல்லவில்லை))

எமது யுத்தத்தில் அமெரிக்காவால் வெளியில் தெரிந்தது, அதிகாரிகள் கொள்கை ஆக்குகிறார்கள், முடிவு எடுக்கிறார்கள் என்று.

இதில் வேடிக்கை, மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அதிகாரிகள் (நாராயணண், மேனன்) , முடிவுகள், கொள்கைகள் பற்றி மக்களால் தேர்ந்த்து எடுக்கப்பட்ட மாநில அரசியல் தலைமையான கருணாநிதிக்கு எதிர்க்காமல் போகுமாறு வலியறுத்தியது. கிட்டத்தட்ட அவர்கள் சொல்லியது, fall in line or else என்பது.

இதன் (அதிகார) தாக்கம், விளைவு புரியாததே, பொத்தாம் பொதுவாக கதைப்பது. எதை கதைக்கிறோம், ஒப்பிடுகிறோம் என்று தெரியாமல்.

(அனால், மத்திய அரசியல் தலைமையும், அதிகார பீடமும் ஒரே முடிவில் இருந்தன)

(இங்கே பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் இந்தியாவை, அதன் அதிகார அமைப்பை பற்றி அறியாமல், சும்மா கதைப்பது.)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா….லுலுலுலா…

  • கருத்துக்கள உறவுகள்

கோரஸ் எதிர்பார்த்தவர்கள், விடயம் இல்லாமல், குயிலாக மாறிவிட்டனர்.

முதல் இருந்தே அது தானே. காலை எழும்பி பொதுவாக கூவுவது, முதலில் வேறு தொனி. இப்போது உரிய குயில் தொனி.

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன என்ன செய்பது… எல்லா தர்க்கமும் உடைந்து போனா…சம்பந்தமே இல்லாமல் பத்தி பத்தியாக நான்சென்சை எழுதி தப்பிக்கும் திறமை எம்மிடம் இல்லையே😀.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2025 at 05:45, Kadancha said:

இந்தியாவில், அரசியவாகி / மந்திரி கொண்டுவரும் கொள்கை , மற்றும் முடிவுகளை, அவர்கள் விரும்பிய மாதிரி கொண்டுவர, செயற்றப்படுத்த முடியாமல் போவதை, பிரச்சனை வரும் பொது அருமையாக காணலாம். (ஏனெனில், அந்த அதிகாரம் வெளியில் தெரியாமல் பிரோயோகிக்க படுவது)

மிகவும் அரிய, மிகுந்த உணர்த்திறனான சந்தர்ப்பங்கள், இதை ஓரளவு வெளிப்படையாக காண்பதற்கு.

ஈழத்தமிழர் (குறிப்பாக புலிகள்)ஆதரவாளர் George Fernades (தனித்த சந்திப்புகளில் தமிழருக்கு அரசு என்பதுடன் இணங்கியதாக) அதிகாரத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் கொள்கையை மாற்ற முடியவில்லை.

ஆனல், George Fernades, ஒரு பேச்சில் சொல்லி இருந்தார், ஒரு குடும்பம் இந்தியாவின் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்று (எந்த குடும்பம் என்று எல்லாருக்கும் தெரியும்).

அப்போது அந்த குடும்பம் பதவியி இல்லை.

அந்த குடும்பம் பற்றி அக்கறை உள்ள வேறு ஏதோ அதிகார பீடம் (முன்பு சொன்னது போல இந்த அதிகார பிரயோகம் வெளியில் தெரிவதில்லை), George Fernades ஐ தடுத்து , அப்படியே Fernades அடங்கிவிட்டார்.

(George Fernades வெளியில் இருந்து அடங்கி இருந்த்த்தால் சொல்லாம் மிரட்டப்பட்டார் என்று. ஆனால், பாதுகாப்பு அமைச்சராக அடங்குவது என்பது உரிய அதிகாரத்தால் மாத்திரமே முடியும்.)

(ஆனால், George Fernades தான் புலிகளில் ஓயாத அலைகள் நடவடிக்கை ஆயத்தப்படுத்தலில் இந்திய கடற்படை பார்த்தும் பாராமல் இருப்பதை வசதிப்படுத்தினார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. அனல், அது கொள்கை அல்ல, அமைத்திடம் இருக்கும் தந்திரோபாய அதிகாரம்.)

இப்படி சுப்பிரமணிய சாமியும் ஓர் பேட்டியில் உணர்ச்சி வசப்பட்டு, வாய் தவறி, இதை போன்ற ஒரு கருத்தை சொல்லி இருந்தார்,

அவரரிடம் கேட்கப்பட்டது, (அந்த குறிப்பிட்ட ஈழத்தமிழர் விடயத்தில், அது இப்பொது எனக்கு நினைவில் இல்லை, அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயம்) இந்தியாவில் அதிகாரத்தில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் கொண்டுவந்தால் செய்யலாம் தானே என்று.

அதற்கு சுப்பிரமணிய சாமி சொன்னது அப்படி கொண்டு வந்தாலும் நாங்கள் தடுப்போம், அதற்கு அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில்.

அந்த பேட்டியை எடுத்த நிருபர், முதல் கேட்ட கேள்வி, நீங்கள் (சுரப்பிரமணிய சாமி) சொல்லும் அந்த "நாங்கள்" யார் என்று சுப்பிரமணிய சாமியிடம். அதை சமாளித்து , ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார்.

(னவே பகிரங்க அதிகார பீடங்களை விட வேறு எதாவது அதிகார அமைப்பு இருக்கிறதா கொள்கை ஆக்குதல் , முடிவு எடுப்பதில் என்ற கேள்வியும் இருக்கிறது. (ஏனெனில் யாப்பு மந்திரி / அரசியல்வாதி மட்டும் தான் அன்றி அதிகார தரப்பின் சம்மதமும் வேண்டும் என்ற கருத்து பட இருப்பது, அதுவும் சூட்சுமமாக இருப்பது. அதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாப்பு சொல்லவில்லை))

எமது யுத்தத்தில் அமெரிக்காவால் வெளியில் தெரிந்தது, அதிகாரிகள் கொள்கை ஆக்குகிறார்கள், முடிவு எடுக்கிறார்கள் என்று.

இதில் வேடிக்கை, மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அதிகாரிகள் (நாராயணண், மேனன்) , முடிவுகள், கொள்கைகள் பற்றி மக்களால் தேர்ந்த்து எடுக்கப்பட்ட மாநில அரசியல் தலைமையான கருணாநிதிக்கு எதிர்க்காமல் போகுமாறு வலியறுத்தியது. கிட்டத்தட்ட அவர்கள் சொல்லியது, fall in line or else என்பது.

இதன் (அதிகார) தாக்கம், விளைவு புரியாததே, பொத்தாம் பொதுவாக கதைப்பது. எதை கதைக்கிறோம், ஒப்பிடுகிறோம் என்று தெரியாமல்.

(அனால், மத்திய அரசியல் தலைமையும், அதிகார பீடமும் ஒரே முடிவில் இருந்தன)

(இங்கே பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் இந்தியாவை, அதன் அதிகார அமைப்பை பற்றி அறியாமல், சும்மா கதைப்பது.)

நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும் அப்படியே literal ஆக எடுத்துக் கொள்ளும் ஒருவர் போல தெரிகிறது. உதாரணமாக, "நாங்கள்"- The Royal We 😎 என்று சாமி தன்னைத் தான் குறித்திருப்பார் என நான் ஊகிக்கிறேன். நீங்கள், அதற்கு ஒரு சதி வேலை அர்த்தம் கொடுத்து, வியாக்கியானம் செய்து ...மூளை காய்கிற உரையாடல் தான் அனேகமாக உங்களுடன் செய்ய வேண்டியிருக்கிறது ஐயா! (மனக்குரல்: ஐயோ சாவடிக்கிறாங்களே!!😂)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.