Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் ஒரு மநகூ அவசரமாக தேவைப்படுகின்றது. மநகூ என்றால் மக்கள் நலக் கூட்டணி.

கடைசியாக இப்படியான ஒரு கூட்டணியை விஜய்காந்த் தலமையில் வைகோ உருவாக்கி இருந்தார்.

விஜய்காந்த்- கேள்விபட்டனான் கம்யுனிச கட்சியும் அவருடன் கூட்டு அவர் நல்லவர் வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் ஒரு மநகூ அவசரமாக தேவைப்படுகின்றது. மநகூ என்றால் மக்கள் நலக் கூட்டணி.

கடைசியாக இப்படியான ஒரு கூட்டணியை விஜய்காந்த் தலமையில் வைகோ உருவாக்கி இருந்தார். அத்துடன் அரசியலில் விஜய்காந்த் விலாசமே இல்லாமல் போனார். வைகோவின் அரசியல் சாணக்கியம் மீண்டும் ஒரு முறை அடிவாங்கியது. இந்த வாரம் அவரது மகன் துரை வைகோ விவகாரத்தில் அந்த சாணக்கியம் மீண்டும் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றது.

அதிமுக - பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை இந்த தடவை வாரி இறைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் இறுதி முயற்சி. திமுகவிற்கு எவ்வளவு தடைகள் ஒன்றிய அரசால் வந்தாலும், செந்தில் பாலாஜி முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டாலும், திமுகவும் சளைக்காமல் பணத்தை கொட்டும்.

'ஆட்சியில் பங்கு...............' என்ற கோஷத்துடன் வந்த விஜய்யும், 'வென்றால் முயற்சி, தோற்றால் பயிற்சி...............' என்று இவ்வளவு நாளும் சொல்லிக் கொண்டிருந்த சீமானும் இந்த இரு கூட்டணிகளின் முன்னும் ஒன்றுமேயில்லை. நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கும், ஆனால் தொகுதிகளுக்கு பூத் ஏஜண்டுகள் கூட போதியளவில் கிடைக்கமாட்டார்கள். விஜய்க்கு 234 வேட்பாளர்கள் கிடைப்பதே சிரமம். இந்த இருவரிடமும் தேர்தலை சமமாக எதிர்கொள்ளும் வசதி வாய்ப்புகளும் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்தால், இன்னும் சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்தால், மீண்டும் ஒரு மநகூ உருவாகும்.

அப்படி ஒன்று உருவாகினால், தேர்தல் முடிய இருவரும் விலாசம் இல்லாமல் போகவும் கூடும். அப்படி ஒரு கூட்டணி உருவாகாமல் விட்டாலும், இவர்கள் இருவரும் பெரிதாக எந்த தாக்கத்தையும் 2026ம் ஆண்டில் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எப்படிப் பார்த்தாலும், ஆகக் குறைந்தது 234 வேட்பாளர்களுக்கு வைப்புப்பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை.

அதற்கு மேலேயும் இவர்களின் ஒவ்வொரு வேட்பாளரும் கைகளில் கொஞ்ச பணம் வைத்திருக்க வேண்டும் போல........... தேர்தல் முடிந்த பின் கட்சித் தலைமை சொல்வதைச் செய்ய.................

1 hour ago, ரசோதரன் said:

நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கும், ஆனால் தொகுதிகளுக்கு பூத் ஏஜண்டுகள் கூட போதியளவில் கிடைக்கமாட்டார்கள்.

எப்படி வாக்கு வீதம் மட்டும் ஏறிக்கொண்டு போகிறார்கள் என்பது ஐபிஎல் முடிவு மாதிரி உள்ளதாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாக்கு லஞ்சத்திற்கும், கொள்கையற்ற வாக்களிப்புகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவர் சீமான் கட்சியை எதிர்க்கின்றார் என்றால் அவர் மாற்றுக்கட்சியை ஆதரிக்கின்றார் என்பதே பொருள் படும்.

நீங்கள் எளிய பிள்ளை சீமானின் பக்தர் என்பதால் இப்படியான ஒரு எளிய ஆனால் பிழையான சமன்பாட்டை போடுவதாக படுகிறது.

நான் தமிழ் நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால் சீமானை எதிர்கிறேன். இதற்கான காரணங்கள் இங்கே பலதடவை தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

ஆனால இங்கே கேள்வி நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதல்ல.

கேள்வி கீழ்கண்டதுதான்.

  1. நான் சீமானை எதிர்கிறேன்

  2. நீங்கள் சீமான் கட்சி வளர்கிறது, அதை பார்து என் போன்றோர் படபடப்புக்கு ஆளாகிறனர் என்றீர்கள்.

  3. அப்படி சீமான் கட்சி வளரவில்லை. 2026 இல் சீமான் தனியாக கேட்டால் 12% கூட எடுக்க மாட்டார். இல்லை என பந்தயம் கட்ட தயரா?

  4. ஒன்றில் பந்தயம் கட்ட வேண்டும். அல்லது சீமான் கட்சி வளரவில்லை என ஒத்துகொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இல்லை என பந்தயம் கட்ட தயரா?

ஆமாம் நான் பந்தயம் கட்டுகிறேன். ....சீமான் 2026 இல். தமிழக வெற்றி கழகமும்.

போட்டி இடுமாயின். நாம் தமிழர் 5 வீதத்துகுள். தான் எடுப்பார்கள் ஆனால் தனித். தனியாக கூட்டணி இல்லாமல் போட்டி போட வேண்டும் அது சரி என்ன தருவீர்கள்???

சும்மா ஐம்பது நூறுக்கு நான் பந்தயம் பிடிபபதிலலை ....நீங்கள் தரவில்லையென்றால் இன்னொருவர் தரவேண்டும் ஆகவே பிணை அவசியமாகும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

கேள்வி கீழ்கண்டதுதான்.

  1. நான் சீமானை எதிர்கிறேன்

  2. நீங்கள் சீமான் கட்சி வளர்கிறது, அதை பார்து என் போன்றோர் படபடப்புக்கு ஆளாகிறனர் என்றீர்கள்.

  3. அப்படி சீமான் கட்சி வளரவில்லை. 2026 இல் சீமான் தனியாக கேட்டால் 12% கூட எடுக்க மாட்டார். இல்லை என பந்தயம் கட்ட தயரா?

  4. ஒன்றில் பந்தயம் கட்ட வேண்டும். அல்லது சீமான் கட்சி வளரவில்லை என ஒத்துகொள்ள வேண்டும்.

1- நானும் தான். எனக்கு சீமான் ஒரு துரும்பு மட்டுமே.

2- நாம் தமிழர் கட்சி வளர்வது நிதர்சனம். ஆனால் பதட்டம் என்ற தொப்பியை நீங்கள் ஏன் தூக்கி உங்கள் தலையில் சொருகுகிறீர்கள். அது தமிழ்த்தேசியம் வளர்வதை விரும்பாதவர்களுக்கான தொப்பி.

3- நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தலில் எத்தனை வீதம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் பல என்பது உங்களுக்கு தெரியும். எனவே உங்கள் பந்தயத்தை வெறும் பொறியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது.

4- அதை தேர்தலின் பின்னர் பேசலாம். ஒன்றும் அவசரமில்லை. அதுவரை ஏன் அதற்கும் பின்னரும் நான் இங்கே எழுதணும் இல்லையா அது பற்றி பேச.....? நன்றி இசை.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஆமாம் நான் பந்தயம் கட்டுகிறேன். ....சீமான் 2026 இல். தமிழக வெற்றி கழகமும்.

போட்டி இடுமாயின். நாம் தமிழர் 5 வீதத்துகுள். தான் எடுப்பார்கள் ஆனால் தனித். தனியாக கூட்டணி இல்லாமல் போட்டி போட வேண்டும் அது சரி என்ன தருவீர்கள்???

நானும் அதையேதான் சொல்கிறேன்.

ஒரே விடயத்தை சொல்லும் நீங்களும் நானும் பந்தயம் கட்டினால் அது IPl match fixing போல் ஆகிவிடும்🤣.

சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.

32 minutes ago, விசுகு said:

1- நானும் தான். எனக்கு சீமான் ஒரு துரும்பு மட்டுமே.

2- நாம் தமிழர் கட்சி வளர்வது நிதர்சனம். ஆனால் பதட்டம் என்ற தொப்பியை நீங்கள் ஏன் தூக்கி உங்கள் தலையில் சொருகுகிறீர்கள். அது தமிழ்த்தேசியம் வளர்வதை விரும்பாதவர்களுக்கான தொப்பி.

3- நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தலில் எத்தனை வீதம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் பல என்பது உங்களுக்கு தெரியும். எனவே உங்கள் பந்தயத்தை வெறும் பொறியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது.

4- அதை தேர்தலின் பின்னர் பேசலாம். ஒன்றும் அவசரமில்லை. அதுவரை ஏன் அதற்கும் பின்னரும் நான் இங்கே எழுதணும் இல்லையா அது பற்றி பேச.....? நன்றி இசை.

இந்த விளக்கம் எதுவும் தேவையில்லை அண்ணை. இசையை போல பெரிய பந்தயம் எதுவும் கூட கட்ட தேவையில்லை.

வெறும் 1 ஈரோதான் பந்தயம்.

கேள்வி கீழே:

சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.

நம்ம நிலமை. அர்ச்சுனாவைப். போல போச்சு” எனது விண்ணப்பம். சமர்ப்பிக்கும் முன்பே நிராகரித்து விட்டார்கள் 🤣. அருச்சுனாவுக்கு தங்கம் இருந்தது நான் தனியாக எதுவும் செய்ய முடியாது எனவே உங்கள் வாதம் எற்றுக்கொண்டேன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

எப்படி வாக்கு வீதம் மட்டும் ஏறிக்கொண்டு போகிறார்கள் என்பது ஐபிஎல் முடிவு மாதிரி உள்ளதாக்கும்?

ஈரோடு கிழக்கில் ஏறினதை விடவா இனி ஏறப் போகுது. அங்கேயே வைப்புப்பணம் போனது. அந்த தேர்தலில் நாதக ஒரேயொரு எதிர்த்தரப்பாக போட்டியிட்டே இது தான் எல்லை என்று ஆகியது.

பெரிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளும் பெரும்பாலான வழமையான தங்களின் வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்வார்கள். தவெகவிற்கு வாக்களிக்கப் போகின்றவர்களில் அதிகமானோர் நாதகவின் ஒரு பகுதியினரே.

ஒரு மாற்றம், அதுவும் தீவிரமான மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இளைஞர்கள் இவர்கள். இன்றைய அதிகாரத் தரப்பை விரும்பாதவர்களாகவும், எதிர்ப்பவர்களாகவும் இருப்பவர்கள் இவர்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்கள் விஜய்யிடம் காண்கின்றார்கள்.

இளைஞர்கள் என்றும் இளைஞர்களாகவே இருப்பதும் இல்லை. அவர்கள் குடும்பஸ்தர்கள் ஆகின்றனர். அவர்களின் அரசியலும் மாறுகின்றது.

நாதக தனிய நின்றால் ஒரு ஐந்து வீதம் கிடைக்கலாம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

ஈரோடு கிழக்கில் ஏறினதை விடவா இனி ஏறப் போகுது. அங்கேயே வைப்புப்பணம் போனது. அந்த தேர்தலில் நாதக ஒரேயொரு எதிர்த்தரப்பாக போட்டியிட்டே இது தான் எல்லை என்று ஆகியது.

பெரிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளும் பெரும்பாலான வழமையான தங்களின் வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்வார்கள். தவெகவிற்கு வாக்களிக்கப் போகின்றவர்களில் அதிகமானோர் நாதகவின் ஒரு பகுதியினரே.

ஒரு மாற்றம், அதுவும் தீவிரமான மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இளைஞர்கள் இவர்கள். இன்றைய அதிகாரத் தரப்பை விரும்பாதவர்களாகவும், எதிர்ப்பவர்களகவும் இருப்பவர்கள் இவர்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்கள் விஜய்யிடம் காண்கின்றார்கள்.

இளைஞர்கள் என்றும் இளைஞர்களாகவே இருப்பதும் இல்லை. அவர்கள் குடும்பஸ்தர்கள் ஆகின்றனர். அவர்களின் அரசியலும் மாறுகின்றது.

நாதக தனிய நின்றால் ஒரு ஐந்து வீதம் கிடைக்கலாம்.

கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

அருமையான கருத்துகள் இதை நானும் ஆமோதிக்கிறேன்.

21 minutes ago, விசுகு said:

கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

விசுகர் நான் உங்களுடன் அடிபட. விரும்பவில்லை ஏதோ உங்கள் விரும்பம்போல் செல்லுங்கள்‘ 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம்,.....உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

நீங்கள் சொல்வது மிகவும் சரியான ஒன்றே, விசுகு ஐயா.

ஆனால் இந்த வளர்ச்சி இப்படியே நீண்டு போய் இவர்கள் இன்னும் வளரப் போவதில்லை என்பது தான் என் அபிப்பிராயம். அத்துடன் இவர்கள் ஒரு மாற்றுச்சக்தியாக வந்தது போல, இவர்களுக்கே மாற்றாக இன்னும் ஒருவர் இப்பொழுது வந்துவிட்டார்.

மாற்றம் ஒன்று தேவை என்று பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்காத வரை மாற்றுச்சக்திகள் எங்கும் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

சீமான் சில விடயங்களில் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறார்

1 - கூட்டு இல்லை என்பது

2- இரட்டை இலைக்கும் சூரியனுக்கும் மாற்று இல்லை என்று இனி சொல்ல வாய்ப்பில்லை

3- ஆரம்பத்தில் இருந்த விஜய் இன்று இல்லை (ஆடம்பரம் மற்றும் வெற்றியை தேடிய கோடி கொடுப்பனவுகளால் பத்தோடு பதினொன்றியாகியாச்சு.) எனவே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு வேறு இது வேறு.

4- தமிழ் தேசியம் என்பது கட்சி ரீதியாக கட்டி எழுப்பி இளம் தலைமுறை எழுந்தாச்சு. இதை இனி சீமானாலும் கட்டுப்படுத்த முடியாது.

5- இரட்டை இலைக்கும் சூரியனுக்குமான வாக்குகள் தேய்மானமும் இளம் தலைமுறை நாம் தமிழர் வாக்குகள் வளர்பிறை தன்மையும் கொண்டவை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.

சரி என்னுடைய கருத்தும் அது தான் தமிழ் நாட்டில் சீமான் தலைமையில் அவரது கட்சசி வளர்ந்தே வருகின்றது .

அடுத்த சட்டசபைத் தேர்தலில் (2026) சீமானின் நா த க 12 விழுக்காடு வாக்குகளுக்கு மேலே👍 பெற்று

உங்கள் பந்தயத்திற்கு நான் ரெடி

தோற்றால் அதாவது சீமான் 12 விழுக்காடு வாக்குக்களை பெறாவிட்டால் நான் இந்தக் களத்தில் நீங்கள் சொல்லும் ஒத்தை யூரோவை நன்கொடையாக அளிக்கின்றேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

12 விழுக்காடுகளுக்கு மேலே பெற்று.......ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கூட இருக்கலாம்

ஒரு வரி விடுபட்டுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் சட்ட மன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்த திரியில் மூழ்கி எழுந்தால் போதும் போல இருக்கிறது. எனக்கு சட்ட மன்ற தேர்தலுக்கு மற்ற தேர்தலுக்குமே (பெயர் தெரியவில்லை நாடுளுமன்ற தேர்தல்?) வித்தியாசம் தெரியவில்லை.

பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ? தேர்தல் எப்போது?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாத்தியார் said:

சரி என்னுடைய கருத்தும் அது தான் தமிழ் நாட்டில் சீமான் தலைமையில் அவரது கட்சசி வளர்ந்தே வருகின்றது .

அடுத்த சட்டசபைத் தேர்தலில் (2026) சீமானின் நா த க 12 விழுக்காடு வாக்குகளுக்கு மேலே👍 பெற்று

உங்கள் பந்தயத்திற்கு நான் ரெடி

தோற்றால் அதாவது சீமான் 12 விழுக்காடு வாக்குக்களை பெறாவிட்டால் நான் இந்தக் களத்தில் நீங்கள் சொல்லும் ஒத்தை யூரோவை நன்கொடையாக அளிக்கின்றேன். 🙏

பந்தயத்திற்கு வந்தமைக்கு நன்றி.

Put your money where your mouth is என்பார்கள். சீமானின் தீவிர பக்தர்களுக்கு கூட இல்லாத தைரியம், தன்னம்பிகை, அவர் மீது விமர்சன பார்வை கொண்ட உங்களுக்கு உள்ளது. அதற்கு ஒரு சலூட்.

சீமானின் நாதக தனித்து நின்று - என்பதுதான் பந்தயத்தின் மிக முக்கியமான சரத்து.

அதை ஏற்கிறீர்களா?

கூட்டணி வைத்தால் - கணிப்புகள் சகலதுமே பிழைக்கும்.

வாக்கு வங்கி வளர்சி, தேய்ச்சி எதையும் கணிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

யாழ்கள் சட்ட மன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்த திரியில் மூழ்கி எழுந்தால் போதும் போல இருக்கிறது. எனக்கு சட்ட மன்ற தேர்தலுக்கு மற்ற தேர்தலுக்குமே (பெயர் தெரியவில்லை நாடுளுமன்ற தேர்தல்?) வித்தியாசம் தெரியவில்லை.

பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ? தேர்தல் எப்போது?

2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்ற/பாராளுமன்ற/லோக்சபா தேர்தல் என்று மற்றைய நாடளாவிய பொதுத் தேர்தலை குறிப்பிடுகின்றனர். மத்திய அரசுக்கான தேர்தல்.

ராஜ்யசபா என்று ஒன்றும் அங்கே இருக்கின்றது. ஆனால் அதன் பிரதிநிதிகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிந்து எடுக்கப்படுவதில்லை. மாநிலப் பிரதிநிதித்துவமும், இன்னும் சில வழிமுறைகளிலும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இளையராஜா இருக்கின்றார். சச்சின் இருந்தார்.............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடைக்கு குறைந்தது 10000 ரூபா என்று பார்த்தாலும் 243 பாடைக்கும் ஏறத்தாள 2.3 மில்லியன் ரூபா தேவைப்படும். அதற்கு புலம் பெயர் நாடுகளில் திரள் நிதி வசூலிக்கப்பட்டால் அதற்கு பங்களிக்க நான் தயார். தமிழ் நாடு மக்களின் நன்மைகருதி முக்கியமாக பிரதான பாடைக்கு நான் பங்களிக்கத் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சீமானின் நாதக தனித்து நின்று - என்பதுதான் பந்தயத்தின் மிக முக்கியமான சரத்து.

அதை ஏற்கிறீர்களா?

கூட்டணி வைத்தால் - கணிப்புகள் சகலதுமே பிழைக்கும்.

வாக்கு வங்கி வளர்சி, தேய்ச்சி எதையும் கணிக்க முடியாது

நிச்சயமாக சீமான் கூட்டணி அமைத்தால்

இந்தப்பந்தயம் செல்லாது

கூட்டணி அமைக்காமல் தனியாக இதுவரை தேர்தல்களை சந்தித்தது போல சந்திக்க வேண்டும்

நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றேன்🤜🤛

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நிச்சயமாக சீமான் கூட்டணி அமைத்தால்

இந்தப்பந்தயம் செல்லாது

கூட்டணி அமைக்காமல் தனியாக இதுவரை தேர்தல்களை சந்தித்தது போல சந்திக்க வேண்டும்

நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றேன்🤜🤛

நன்றி🙏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ?

உறவை கொஞ்ச நாட்களாக காணவில்லை

களநிலவரங்களை அவதானிப்பதா 😄 தமிழ்நாட்டு தேர்தல் களத்திலே நின்று தீவிர பிரசாரம் செய்து கொண்டிருப்பார் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.