Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??

அப்படியாயின் எந்த சிங்கள அரசியல் தலைவரிடமும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும், யாரும் போயிருக்க கூடாது.

எமக்கு ஒரு பிரச்சனை இருந்தால்தான், தீர்வு தேவைப்படும்.

பிரச்சனையை என்பதை எமக்கு தருபவர்கள் உடன் பேசித்தான் தீர்வை எட்ட முடியும்.

இல்லை என்றால் பலம் மூலம் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை எமக்கு இருக்க வேண்டும். இந்த முறைக்கு தீர்வு திட்டம் தேவையில்லை. பலம் மட்டும் போதும்.

நீலன் பலம் மூலம் அன்றி, பேச்சின் மூலம் ஒரு தீர்வை அடைய முயலின் - அவர் தீர்வு திட்டத்தை எமக்கு பிரச்சனை தரும் சந்திரிக்காவிடம்தான் கொடுக்க வேண்டும்.

இதைத்தான் புலிகளும் பின்னாளில் செய்தனர். ரணில் மட்டும் திறமா? ஆனால் அவரிடம் புலிகள் சமாதான ஒப்பந்தமே செய்தனர்.

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ??

இதை முன்பே எழுத நினைத்தேன். ஆனால் பல வயது போன உறுப்பினர்களின் மன புண்படும் என நினைத்து தவிர்த்தேன். இப்போ நீங்களாகவே கேட்பதால் எழுதுகிறேன்.

அமெரிக்காவில் டிரம்பின் தேர்வின் பின், கோமாளி செலன்ஸ்கி எப்படி எல்லாம் வளைந்து கொடுத்து, நிலை மாறி, மாறி, முதுகு வளைந்து, அவமானப்பட்டு, தன் நாட்டின், தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் நலனை முடிந்தளவு உறுதி செய்ய முனைகிறார் என்பதை கடந்த 6 மாதத்தில் கண்டிருப்பீர்கள்.

நலிந்த தரப்பொன்றின் தலைமக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பு இது.

உலகின் முடிவு எப்படியும் அமையலாம், அது அவரவர் சுயநலம் சார்ந்து அமையும், ஆனால் அவர்களின் சுயநலத்தை எம் நலனோடு இணைக்க, கொஞ்சம் கெட்டிக்காரத்தனமும், நிறைய humility யும் தேவைப்படும்.

இவை இல்லாவிடில், எமக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இல்லை எனில் - முறிக்கப்படுவோம். பட்டோம்.

7 hours ago, விசுகு said:

குறிக்கு தெரிந்தது கொக்கின் கழுத்து மட்டுமே.

மக்களின் அனுமதியின்றி களத்தில் நின்றவர்களுக்கே தெரியாது இதில் இடையே புகுந்து நான் அவனது கூட்டாளி இவன் என்னுடன் இருந்தவன் படித்தவன் ஏன் படைத்தவன் என்பதெல்லாம் எடுபடாது. தன்னில் ஒருவரை கொடுத்தாவது அவனை அகற்றவேண்டும் என்ற முடிவை புரிந்தவனுக்கு அவன் எவ்வளவு ஆபத்தானவன் என்பது புரியும். டொட்.

பூமரங் கேள்விபட்டிருப்பீர்கள் அண்ணை. நீலன் மீது வைத்த குறி ஒரு பூமரங்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதைத்தான் புலிகளும் பின்னாளில் செய்தனர். ரணில் மட்டும் திறமா? ஆனால் அவரிடம் புலிகள் சமாதான ஒப்பந்தமே செய்தனர்.

அந்த நேரம்புலிகளின் கை ஓங்கி இருந்தது.எனவே எமக்கு சார்பாக தேவையானதை வற்புறுத்த முடியும் என புலிகள் நினைத்து இருக்கலாம்.

சந்திரிக்கா காலத்தில் அப்படி இல்லை. மாறாக பொருளாதார தடையை போட்டு மக்களை கொன்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அந்த நேரம்புலிகளின் கை ஓங்கி இருந்தது.எனவே எமக்கு சார்பாக தேவையானதை வற்புறுத்த முடியும் என புலிகள் நினைத்து இருக்கலாம்.

சந்திரிக்கா காலத்தில் அப்படி இல்லை. மாறாக பொருளாதார தடையை போட்டு மக்களை கொன்றார்.

நீலன் கொல்லப்பட்ட சமயம், புலிகள், ஜெயசிக்குறு எதிர்சமர், ஓயாத அலைகள் இரெண்டு, முல்லைதீவு, கிளிநொச்சி தலைமையக கைப்பற்றல்லல் என அவர்களின் மிக பலமான புள்ளிக்கு அருகில் இருந்தார்கள்.

ஜூலை 99 இல் நீலன் கொல்லப்பட, நவம்பர் 99 இல் ஆனயிறவை மீட்டு, முகமாலை வரை எல்லையை நகர்த்திய ஓயாத அலைகள் மூன்று ஆரம்பித்தது.

ஆகவே நீலன் கொல்லப்பட்ட போது கூட புலிகள் மிக பலமான நிலையிலேயே இருந்தனர்.

பொருளாதார தடை - ரணிலுடன் பேச தொடங்கும் முன்பும் அதே பொருளாதார தடை இருந்தது. இராணுவமும், பாதுகாப்பு அமைச்சும் அப்போதும் சந்திரிகாவிடமே இருந்தது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக,

ரணிலிடம் புலிகள் “நம்பி” சமாதானபேச்சுவார்த்தையை (சந்திரிக்கா முப்படை தளபதியாக இருக்கும் போதே) ஆரம்பித்தது சரி என்றால், அதே சந்திரிக்கா - 1995 இல் சமாதான புறாவாக நம்பப்பட்ட சமயத்தில் அவருடன் சேர்ந்து ஏதோ ஒரு வழியில் தமிழருக்கு ஒரு கெளரவமான தீர்வை பெற்று விடலாம் என நீலன் முயன்றிருப்பின் - அது தவறாக, மரண தண்டனைக்குரிய குற்றமாக இருக்க முடியாது.

ஒரே வித்தியாசம் புலிகளுக்கு நோர்வே உத்தரவாதம் இருந்தது (அல்லது அவ்வாறு இருப்பதாக புலிகள் நம்பினர்).

ஆனால் இதே போல் ஒரு உத்தரவாதம் நீலனுக்கு உலகின் அப்போதைய ஒரே சுப்பர் பவரிடம் இருந்தும் கிடைத்திருக்கலாம்.

நீலனை சுப்பர் பவர் ஏமாற்றி விடும் எனவே அதை தடுக்க அவரை கொன்றோம் என்பது உங்கள் வாதம் எனில். புலிகளை நோர்வேயும் ஏமாற்றியது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கியமான கேள்வி?

யாரும் பதில் சொல்ல விழையலாம்.

ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள்.

டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள்.

இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள்.

இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது.

இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர்.

இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன.

நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம்.

அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை.

நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

te1.jpg

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா  

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். 2005 ஆம் ஆண்டின் ஒரு பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது சிறியளவு ஆதரவே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே இவரது கட்சிக்கு தமிழர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன. 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது இவரது கட்சிக் கொள்கையின் நகல் என்றும் நவரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

நவரட்ணம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதியன்று ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பனில் பிறந்தார். இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 58 ஆண்டுகளாக சட்டத்தரணியாக இருந்தார், 1963 முதல் 1970 ஆம் ஆண்டு வரையில் ஊர்காவற்றுறை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

தந்தை செல்வா தலைமையில் 1949 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது திரு நவரட்ணம் மற்றும் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன் ஆகியோர் அக்கட்சியின் கூட்டு செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் 1970 ஆம் ஆண்டில் தனிக் கட்சி உருவாக்கித் தேர்தலில் நின்றபோது அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குள் நவரட்ணம் அவர்களின் அரசியலை அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஆதரித்தன.

1991 ஆம் ஆண்டில் இவர் கனடா, மொன்றியலில் இருந்த காலகட்டத்தில் “தமிழ்  இனத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் ” (“The Fall and Rise of The Tamil Nation” என்ற நூலை எழுதினார். இதன் இரண்டாம் பதிப்பு 1995 இல் வெளிவந்தது. தமிழர் இறைமை என்பது பேரம் பேச முடியாதது என்பது இந்நூலின் முக்கிய கருவாகும்.

2005 ஆம் ஆண்டு பேட்டியின்போது, சுதந்திரத்தின் ஒருதலைப் பட்சமான பிரேரணையை ஈழத் தமிழர்கள் முன்மொழிய வேண்டும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். சிறி லங்கா என்பது இலங்கை அல்ல. 1972 ஆம் ஆண்டு சட்டத்துடன் வந்த சிறி லங்கா என்பது சட்டவிரோதமானது. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அனைத்து அரசியலமைப்புக்களும் தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன என்றார் அவர்.

மேலும் அவரது கருத்துக்கள் சில வருமாறு:

ஒஸ்லோவில் எதுவுமே நடக்கப் போவதில்லை. பிரபாகரன் வஞ்சிக்கப்படுவார் என்று நான் எண்ணவில்லை. இடைக்கால சுயாட்சி அமைப்பால் சிலவற்றை சாதிக்கலாம் என்று விடுதலைப் புலிகள் எண்ணியிருக்கலாம். ஆனால் இதன்மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதே எனது கருத்தாகும். சில குறுக்குவழிகள் இருக்கக்கூடும் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன? ஆனால் ஒன்றுகூட அமுலுக்கு வரவில்லை. புலிகள் இப்போது ஒரு வரிசையில் செல்கிறார்கள். எனக்கு இதுபற்றி பெரிதாக விளங்கவில்லை. ஆனால் எதுவும் சாதகமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுவதிலும் அர்த்தமில்லை. அவை அனைத்துமே தமிழர்களை ஏமாற்றவே உள்ளன. நாங்கள் சமஷ்டி ஆட்சியைக் கேட்டோம். ஆனால் இதுகுறித்து நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி கண்டன. ஆகவேதான் நான் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தேன்.

உடனிருக்க வேண்டிய தேவை இருப்பின், சிங்கள் மற்றும் தமிழ் இன நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கூட்டுக்குழு போன்ற தொடர்ச்சியான சூழ்ச்சிப் பொறிகள் எவையும் இருக்கக்கூடாது. இந்தியா அல்லது பிற நாடுகள் எவையுமே எங்களது அபிலாஷைகள் குறித்து எமக்கு கட்டளையிடக்கூடாது. நாங்களே எங்கள் தேவைகளைக் கவனிக்க வேண்டும்.

இந்தியா பற்றிக் கூறியுள்ள நவரட்ணம் அவர்கள், இரண்டு இந்தியாக்கள் உள்ளன. புதுடில்லி இந்தியாவிலிருந்து வேறுபட்டது. புதுடில்லிக்கு தனது நண்பர்கள் யார் என்பது தெரியாது. தமிழர்களை அடிமைப்படுத்தி தனக்கு நன்மைகளை அடையலாம் என அது நினைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எனது இரத்தம் கொதிக்கிறது.

சர்வதேச சமூகத்துக்கும் சிங்கள அரசியல் போக்கு குறித்து அவ்வளவாகத் தெரியாது. அண்மையிலேயே அவை ஓரளவுக்கு உணரத் தொடங்கியுள்ளன. சர்வதேசம் கடந்த கால வரலாற்றை உற்றுக்கவனிக்க வேண்டும். ஆனால் உலகை ஏமாற்றக் கூடிய அளவுக்கு சில தமிழர்கள் சிங்கள அரசாங்கத்துடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது சிங்களத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

இப்போக்கு திருச்செல்வத்துடன் தொடங்கியது. சந்திரிக்காவுடன் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் காட்டினார். கதிர்காமர் தன்னை ஒரு மனிதராகப் பார்க்கும்படியும், ஒரு தமிழராக முத்திரை குற்ற வேண்டாம் என்றும் உலகுக்குக் கூறினார். இவர் ஊர்காவற்றுறை, மண்கும்பானில் பிறந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தமையனாரான ராஜன் கதிர்காமர் ஒருதடவை இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.

ராஜன் கதிர்காமர் வித்தியாசமாக யோசித்தார். இவர் யாழ்ப்பாணத் தீவுகள் ஏழையும் சூழவுள்ள கடலை ஆழப்படுத்தி அங்கு ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை உருவாக்க எண்ணினார். இவர் ஒரு தமிழராக உணர்ந்து செயற்பட்டார்.

நீலன் திருச்செல்வத்தின் தந்தையாரான திருச்செல்வம் 1965 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் தாம் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று, டட்லி சேனாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய உடனுமே தமிழர்கள் ஏமாற்றப்படத் தொடங்கிவிட்டனர் என்று நான் நம்புகிறேன். இது 1968 இல் உறுதிப்படுத்தப்பட்டது.

திருச்செல்வம் திருகோணமலையை விட்டுக்கொடுத்தார். அமிர்தலிங்கம் சேருவவிலவை விட்டுக்கொடுத்தார். இவர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கலுக்கு உதவி செய்தார்கள்.

செல்வநாயகம் உட்பட சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் எவருமே 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை.

சேர் பொன் ராமநாதன் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தார். ஆனால் அவரது சொந்த மருமகன் மகாதேவாவோ அல்லது அவரது மருமகன் நடேசபிள்ளையோ இதை உணர்ந்து கொள்ளவில்லை. பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் இந்த வரிசை அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு தமிழர்களாகியமை பிரச்சனையாகியது.

இதன்மூலம் ஏதாவது ஒன்று சாத்தியமில்லை என்றால் அதைப்பற்றி மறந்துவிட வேண்டும் என்று இந்த அரசியல் தலைவர்களில் சிலர் தமிழர்களுக்கு புத்திமதி கூறினர். தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக இவர்கள் இவ்வாறு கூறினர்.

பிரபாகரனின் அரசியலில் இதுபோன்ற ஒத்துழைப்பு அநீதிகள் இடம்பெறவில்லை.

சமாதானப் பேச்சுக்களின் போர்வையில் இழுப்பதே சிங்கள தலைவர்களின் தந்திரமாகும். பிரபாகரனின் காலத்தின் பிறகு அல்லது அவருக்கு வயதானவுடன் தமது விருப்புக்களுக்கு உடன்படச் செய்வதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினர். வயதானவுடன் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்த பொன்னம்பலம் மற்றும் சுந்தரலிங்கம் போலவே அவர்கள் பிரபாகரனையும் எண்ணினர். ‘எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாகரன் இருக்க முடியும். இவருக்குப் பின்னர் ஒரு பிரபாகரன் வரமாட்டார்’ என்பதே சிங்களத்தின் வாதம் என்றார் நவரட்ணம் அவர்கள்.

Tamil Heritage
No image preview

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட...

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா   2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். 2005 ஆம் […]
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் பங்களிப்புடன் செய்யப்பட்ட சுனாமிக் கட்டடைமப்பை ஜேவிபியுடன் சேர்ந்து சந்திரிகா முடக்கினார். சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை ரணில் பாராளுமன்றத்தில் கொளுத்தினார். புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இடைக்காலவரைபை விவாதத்துக்கு எடுக்க முன்னரே ரணில்அரசாங்கததைக்கலைத்து பேச்சுவார்ததையைக் குழப்பினார். இதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் எவற்றையுமே மாறிமாறி சிங்களத்தலைவர்கள் குழப்பினர். இந்த சிங்கள அரசாங்கத்தோடு 3 ஆம்தரப்பு அழுத்தம் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு குறைந்த பட்ச தீர்வையும் பெறமுடியாது.போர்க்குற்ற விசாரணை இன அழிப்புக்கு எதிரான 3ஆம்தரப்பின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிகள் அதை விட 3 ஆம்தரப்புக்கு அனகூலமான பூகோள அரசியல்~சூழ்நிலைகள் இந்த அழுத்தைக் கொடுப்பதற்கு உதவும். அதற்கு முதல் தமிழர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த குரலில் பேசவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4575.jpg?resize=1200%2C550&ssl=1

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் இதைப்போன்ற வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும், மதகுருக்களும் பங்குபற்றியிருந்தார்கள். அந்த சந்திப்பின் முடிவில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பிறகெதுவும் நடக்கவில்லை. அது நடந்து மூன்று ஆண்டுகளின் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சந்திப்பு நடந்திருக்கிறது. முன்னைய சந்திப்பின் விரிந்த வடிவம் இது. இதில் முடிவுகள் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

முதலில் அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதன் பின் மதகுருமார்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.  மதிய இடைவேளைக்குப்பின் அரசியற்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சுமாராக எட்டு மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளே பங்குபற்ற அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. எனவே, கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கு பற்றிய ஒரு சந்திப்பாகவே அது முடிந்தது. அதில் கருத்துத் தெரிவித்த விமர்சகர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்ளைச் சேர்ந்தவர்கள் போன்றோர்களை விடவும் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களே அதிகம் காட்டமாக இருந்தன. தமது தலைமையை நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காலை 9.30 மணியிலிருந்து பி.ப 5.30 மணி வரையிலும் தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் சம்பந்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக மிக நீண்டநேரம் அவரால் ஆசனத்தில் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. ஆசனத்தின் ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்தவாறு ஒரு கையால் முகத்தைத் தாங்கியபடி ஒன்றில் அரைக்கண்களைத் திறந்தபடி அல்லது முழுவதுமாக கண்களை மூடியபடி எல்லாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

முடிவில் அவர் பதில் சொன்னார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அநேகமாக நேரடியாகப் பதில் சொல்லவில்லை. பெருமளவிற்கு மறைமுகமாகவே பதில் வந்தது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு ஏதோ ஒரு பதில் சொல்லப்பட்டது. அவர் பதில் கூறியபின் அந்த பதில்களின் அடிப்படையில் அவரைக் கேள்வி கேட்பதற்கு ஏற்பாடுகள் இருக்கவில்லை. நேரமும் போதவில்லை. தவிர இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் பதிலைச் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுவதே வழமை என்று அவரது கட்சிக்காரர்கள் சொன்னார்கள். இப்படியாக அவருடைய பதில்களை வைத்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு சூழல் இல்லையென்றால் அது முற்றுப் பெறாத விவாதமாகவே அமையும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற எல்லாக் கூட்டங்களிலும் இறுதியிலும் இறுதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எழுந்து போகும் ஒரு நிலமைதான் தொடர்ந்து வருகிறது. இதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலும் நடந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் முழு அளவிலான விவாதங்களாக மாற்றப்படாதவரை அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விளைவுகளைத் தரப்போவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விமர்சனங்களில் உண்மை உண்டு. அதேசமயம் இது போன்ற சந்திப்புக்கள் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்தக் கூடியவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அச்சந்திப்பின் விளைவாக பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் விடக்கூடும். ஆனால், அந்தச் சந்திப்பின் முடிவில் சம்பந்தர் தெரிவித்த கருத்துக்களுக்கூடாக கூட்டமைப்பின் எதிர்கால வழிவரைபடமானது ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சம்பந்தர் தெரிவித்தவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இலங்கைத் தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எந்த ஒரு யாப்பும் தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படவில்லை. ஆனால், இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு யாப்பை உருவாக்கத்தக்க நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சாசனப்பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. யாப்புக்கான வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பும் பங்கேற்கிறது. வழிகாட்டல் குழுவின் கீழ் உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கூட்டமைப்பு பங்குபற்றுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் புதிய யாப்பானது வரவிருக்கும் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு முன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கூறியிருக்கின்றார். ஆனால், நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் அதைவிட வேகமாக அதாவது நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே புதிய யாப்பானது முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அப்படியொரு பெரும்பான்மை ஜெயவர்த்தனவிடம் இருந்தது. சந்திரிக்காவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்திருந்தால் அவருடைய தீர்வுப்பொதி நடைமுறைக்கு வந்திருக்கும். அதன்பின் மஹிந்தவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்தது. இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அப்படியொரு பெரும்பான்மையைப் பெறுவதாக இருந்தால் ஆறு வாக்குகள் தேவை. கூட்டமைப்பிடம் பதினாறு வாக்குகள் உண்டு.

ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்பு ஒப்புக் கொண்டிருந்தன. அதன்படி இந்த ஆண்டின் முடிவு வரையிலும் இத்தேசிய அரசாங்கத்தை அவர்கள் பாதுகாப்பார்கள். இத்தேசிய அரசாங்கத்தை கூட்டமைப்பும் ஆதரித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் புதிய யாப்புக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறலாம். அதன்பின் அடுத்த ஆண்டில் அந்த யாப்புக்கு பொது மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டி இருக்கும். அதற்காக ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டி வரும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றால் புதிய யாப்பு நடைமுறைக்கு வரும். அதாவது, இனப் பிரச்சினைக்குரிய ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும்.

சம்பந்தர் மறைமுகமாக வெளிப்படுத்திய கூட்டமைப்பின் வழி வரைபடம் இதுதான். இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. அதை அவருடைய பேச்சின் தொடர்ச்சிக்கூடாகவும் அவர் தனது பதிலைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிய போக்கிற்கூடாகவும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது என்பதே சரி. அவர் சமஷ்டி பற்றிய உலகளாவிய உதாரணங்களை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்து முடிவில் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி என்ற பொருள்பட ஓர் ஆங்கில வார்த்தையைப் பிரயோகித்தார். (Unitary Federalism) அப்படியொரு முறைமை ஒஸ்ரியாவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதை ஏற்கனவே சில மாதங்களிற்கு முன் ரணில் விக்ரமசிங்க கூறி விட்டார். அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து போன மகாத்மாகாந்தியின் பேரனும் இதே தொனிப்பட – ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி உணர்வுள்ள ஒரு தீர்வு ஒன்றைப்பற்றி – குறிப்பிட்டிருந்தார்.

தமது தீர்வுப் பொதியை தமிழ் மக்களின் முன் வைத்து அதை அவர்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாகவும் சம்பந்தர் தெரிவித்தார். அத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பை எதிர்த்து ராஜபக்‌ஷ அணியினர் விரைவில் போராட்டமொன்றை நடத்த இருப்பதாகவும், அதை அவர்கள் குழப்பப்போவதாகவும், ஆனால் தமிழர்கள் அதை குழப்பக்கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சந்திரிக்காவையும், மைத்திரியையும், ரணிலையும் அவர் நம்புகிறார் என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. “நாங்கள் முழுநாட்டுக்குமான மாற்றத்தைத்தான் கொண்டு வந்தோம். வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல” என்று கூறிய அவர், இந்த அரசாங்கத்தை அதாவது ஆட்சி மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நிகழ்ந்து வரும் பௌத்த மயமாக்கல் சிங்கள மயமாக்கல் போன்றவற்றையாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான தரப்புகளும் படைக்கட்டமைப்புக்குள் மஹிந்தவுக்கு ஆதரவாக காணப்படும் அணியும்தான் மேற்கண்டவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்கள் எல்லாரும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் சம்பந்தர் தனது பதிலில் கூறினார்.

இது ஏறக்குறைய இவ்வாண்டு ஜெனிவாவில் காணப்பட்ட ஒரு நிலைமைதான். இந்த அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அதை பலவீனப்படுத்தக்கூடாது என்றும் சில மேற்கத்தைய நாட்டு பிரதிநிதிகள் தமிழ் தரப்பிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது, இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் நகர்வுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற மறைமுகச் செய்தி அதில் உண்டு. மன்னாரில் வைத்து சம்பந்தரும் அதைத்தான் சொன்னார். அதாவது, மஹிந்த செய்வதைப் போல தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று தொனிப்பட.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்து நாம் பின்வருமாறு ஒரு முடிவுக்கு வரலாம். மஹிந்த குழப்பா விட்டால் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று வருமாண்டு அமுலுக்கு வரும். அதற்குரிய வாக்கெடுப்பில் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூட்டமைப்பு கேட்கப்போகிறது. மஹிந்தவை மறுபடியும் ஒருமுறை தோற்கடிப்பதாக நம்பிக்கொண்டு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். ஆனால், இங்குள்ள முக்கியமான கேள்வி என்னவெனில், தமிழ் மக்கள் ஒரு தீர்வுக்காக வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? என்பதுதான். ஒரு தீர்வுக்காக வாக்களிப்பது நடைமுறையில் மஹிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதுதான் என்று காட்டப்படப்போகிறது.

வரப்போகும் தீர்வு எத்தகையது என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாக சம்பந்தர் கூறுகிறார். யாப்பு விவகாரங்கள் பெருமளவுக்கு சிக்கலானவை. சாதாரண வாக்காளர்கள் அவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்பதில் கூட அந்த வார்த்தைகளை அவற்றுக்கான அரசறிவியல் பெறுமானங்களோடு சாதாரண வாக்காளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பதற்கில்லை. சாதாரண வாக்காளர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான விவகாரங்களால் தான் தூண்டப்படுகிறார்கள். அறிவுபூர்வமான விவகாரங்களால் தூண்டப்படும் வாக்காளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது யாப்பு போன்ற அறிவுபூர்வமான விவகாரங்களை விடவும் மஹிந்த எதிர்ப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களே அதிகம் எடுபடும். எனவே, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி அல்லது சிலசமயம் ஒற்றையாட்சிக்குள் “தமிழரசு” என்ற விதமாக வார்த்தைகளை வைத்து விளையாடும் பொழுது எத்தனை விகிதமான சாதாரண வாக்காளர்கள் அந்த சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளப்போகிறார்கள். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி பற்றியே கூறப்பட்டுள்ளது. அந்தச் சமஷ்டிக்கும் வரப்போகும் சமஷ்டி என்று சொல்லப்படும் ஏதோ ஒன்றுக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள்? அதிலும் குறிப்பாக மிகக் குறுகிய கால அவகாசத்துள் தீர்வுப் பொதியை முன்வைத்து விளக்கமளித்துவிட்டு வாக்களிக்குமாறு கேட்கப்படும் பொழுது சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள்?

இங்கு கால அவகாசம் என்பது ஒரு முக்கியமான அம்சம். யாப்புருவாக்கத்தில் சாதாரண சனங்களின் கருத்துக்களைப் பெறப் போவதாக சொல்லிக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவானது மிகக் குறுகிய காலமே செயற்பட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பல தசாப்தகால பிரச்சினை ஒன்றுக்கான தீர்வை சில மாதங்களுக்குள் விவாதித்து முடிவெடுப்பது எப்படி? நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் தீர்வுப் பொதியை அல்லது புதிய யாப்பை சாதாரண தமிழ் மக்கள் முன்னிலையில் வைத்து விவாதிப்பதற்கான கால அவகாசம் மிகக் குறைவானதாகவே தெரிகிறது. ஏனெனில், சம்பந்தர் கூறுவது போல இப்போதுள்ள தேசிய அரசாங்கத்திற்கான உடன்படிக்கை முடிவுறும் காலமும் புதிய யாப்புக்கான வாக்கெடுப்புக் காலமும் ஏறக்குறைய நெருங்கிய இடைவெளிக்குள் வருகின்றன. எனவே, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியா? அல்லது ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாகவும், பரவலாகவும் நடத்தப்படுமா? அல்லது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சியில் வருவது போல “மற்ற வாழைப்பழம் எங்கே?” என்று கேட்டால் அதாவது “நீங்கள் வாக்குறுதி அளித்த சமஷ்டி எங்கே?” என்று கேட்டால் “அதாண்ணே இது” என்று கூறப்போகிறார்களா?

அந்த நகைச்சுவைக் காட்சியில் செந்தில் திரும்பத் திரும்ப அப்பிடிச் சொல்லும் போது ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுண்டமணி அழத் தொடங்கி விடுவார். வருமாண்டில் சில சமயம் தீர்வற்ற தீர்வு ஒன்றுக்கு விரும்பி வாக்களித்து விட்டு அதன்பின் தமிழ் மக்களின் நிலையும் கவுண்டமணியின் நிலைமையைப் போலாகிவிடுமா?

நிலாந்தன் எழுதிய இக்கட்டுரை ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முதலில் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Maatram
No image preview

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊ…
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை முன்பே எழுத நினைத்தேன். ஆனால் பல வயது போன உறுப்பினர்களின் மன புண்படும் என நினைத்து தவிர்த்தேன். இப்போ நீங்களாகவே கேட்பதால் எழுதுகிறேன்.

அமெரிக்காவில் டிரம்பின் தேர்வின் பின், கோமாளி செலன்ஸ்கி எப்படி எல்லாம் வளைந்து கொடுத்து, நிலை மாறி, மாறி, முதுகு வளைந்து, அவமானப்பட்டு, தன் நாட்டின், தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் நலனை முடிந்தளவு உறுதி செய்ய முனைகிறார் என்பதை கடந்த 6 மாதத்தில் கண்டிருப்பீர்கள்.

நலிந்த தரப்பொன்றின் தலைமக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பு இது.

உலகின் முடிவு எப்படியும் அமையலாம், அது அவரவர் சுயநலம் சார்ந்து அமையும், ஆனால் அவர்களின் சுயநலத்தை எம் நலனோடு இணைக்க, கொஞ்சம் கெட்டிக்காரத்தனமும், நிறைய humility யும் தேவைப்படும்.

இவை இல்லாவிடில், எமக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இல்லை எனில் - முறிக்கப்படுவோம். பட்டோம்.

பூமரங் கேள்விபட்டிருப்பீர்கள் அண்ணை. நீலன் மீது வைத்த குறி ஒரு பூமரங்.

இது தங்கள் நிலைப்பாடு.

புலிகள் தம்மால் இலங்கை அரசை இராணுவத்தை வென்று தமது நிலத்தை எம் மக்கள் ஆளும் நிலையை கொண்டு வரமுடியும் என்று முழுமையாக நம்பினார்கள். அந்த பலமும் தியாகமும் கட்டமைப்புக்களும் அவர்களிடம் இருந்தன. எனவே நீலன் கொண்டு வர விரும்பியது அவர்களை பொறுத்தவரை தேவையற்ற ஆணி.

இதற்கு சாட்சியாக யாழ் களத்தில் உள்ள தலைவருடன் இருந்த எவரும் இங்கே நீலனுக்கான இந்த கட்டுரையில் எந்த கரிசனையும் காட்டவில்லை. இதை தான் நான் முதலிலேயே எழுதிவிட்டேன் கழுத்து மட்டுமே தெரிந்த குறி என்று.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ??

அல்லது அன்றாடும் இறக்கும் பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கும் முடிவாக இருக்குமோ?

தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது.

அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை.

குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள்.

குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள்.

ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள்.

புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

புலிகள் தம்மால் இலங்கை அரசை இராணுவத்தை வென்று தமது நிலத்தை எம் மக்கள் ஆளும் நிலையை கொண்டு வரமுடியும் என்று முழுமையாக நம்பினார்கள்

மாற்றுகருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

அந்த பலமும் தியாகமும் கட்டமைப்புக்களும் அவர்களிடம் இருந்தன.

தியாகம் -ஆம். கட்டமைப்பு - ஆம்.

பலம் - நிச்சயமாக இல்லை.

போரில் வேறு ஒரு நாடு புலிகளுக்கு பலமாக பின்னுக்கு வராத வரை - அவர்களுக்கு அவர்கள் உரிமை கோரிய நிலத்தை முழுகையாக கைப்பற்றி, பாதுகாக்கும் பலம் இருக்கவில்லை என்பதே கள யதார்த்தம்.

மேற்கு நாடுகள் அதிகம் தலையிடாத 2000 க்கு முந்திய காலத்தில், புலிகள் இராணுவ சமநிலைக்கு அருகான ஒரு நிலையை எட்டி இருந்த போது கூட வவுனியா, மன்னார், அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் சகலதும் அரச கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதுவும் கூட தலைவர் இருக்கும் வரை மட்டும்தான். உண்மையில் இலங்கை இறுதி போரை இவ்வளவு கடன்பட்டு நடத்தி இருக்கவே தேவையில்லை.

இன்னும் ஒரு 15 வருடம் இவ்வாறு கடத்தி இருந்தால் தலைவருக்கு பின் எல்லாமும் விரைவாக உடைந்து போயிருக்கும்.

எமது இராணுவ பலம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் ஆயுட்கால உழைப்பு. ஆனால் அவர் இல்லாமல் போனதும் அந்த பலத்துக்கு என்ன நடந்திருக்கும் என்பதை 2009 பின்னான நிக்ழவுகள் காட்டுகிறன.

1 hour ago, விசுகு said:

வே நீலன் கொண்டு வர விரும்பியது அவர்களை பொறுத்தவரை தேவையற்ற ஆணி.

ஆனால் அதே ஆணியைத்தான் அவர்கள் நீலனை சுட்டு மூன்று வருடங்களில் ஒஸ்லோவில் கேட்டார்கள்.

நீலன் தனக்கு முடிந்த வரையில் முயலட்டும், நாம் எமகு வழியில் உறுதியாக இருப்போம், முயல்வோம் - நாம் வென்றால் தமிழருக்கு பெரு வெற்றி, நீலன் வென்றால் தமிழருக்கு சிறு வெற்றி என்ற அணுகுமுறையை ஏன் எடுக்கவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

அமெரிக்காவில் டிரம்பின் தேர்வின் பின், கோமாளி செலன்ஸ்கி எப்படி எல்லாம் வளைந்து கொடுத்து, நிலை மாறி, மாறி, முதுகு வளைந்து, அவமானப்பட்டு, தன் நாட்டின், தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் நலனை முடிந்தளவு உறுதி செய்ய முனைகிறார் என்பதை கடந்த 6 மாதத்தில் கண்டிருப்பீர்கள்.

நலிந்த தரப்பொன்றின் தலைமக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பு இது.

ஈழ தமிழினத்தின் நியாயமான போராட்டத்திற்கு யார்? எந்த நாடு வெளிப்படையாக உதவியது என்பதை கூற முடியுமா? உதாரணத்திற்கு இந்தியா எமது விடுதலைப்போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு/அங்கீகாரம் வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் பரிந்துரையின் படியேதான் இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை தடை செய்தார்கள்? விடுதலைப்புலிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செய்த பாவங்கள் என்ன? இந்த கூட்டு அரசியல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

நிற்க....

கோமாளி செலென்ஸ்கி வளைந்து நெளிந்து தம் அரசியல் நலனை முன்னெடுப்பதாக கூறுகின்றீர்கள். இப்படி...எப்படியெல்லாம் உங்களால் சிந்திக்க முடிகின்றது?

ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து இராச்சியங்களும் செலென்ஸ்கியின் பின்னால் நின்று உரம் கொடுப்பது உலகறிந்த விடயமல்லவா? அப்படியிருக்கும் போது ஈழப்பிரச்சனையும் உக்ரேன் பிரச்சனையும் ஒரே தராசில் வைப்பது ஒத்தே வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதற்கு சாட்சியாக யாழ் களத்தில் உள்ள தலைவருடன் இருந்த எவரும் இங்கே நீலனுக்கான இந்த கட்டுரையில் எந்த கரிசனையும் காட்டவில்லை

நீலன் செத்து சுண்ணாம்பாகிவிட்டார். யாரும் அவருக்கு கரிசனை காட்டி எந்த பயனுமில்லை. இங்கே எழுதுபவர்கள் நோக்கமும் அது அல்ல.

அரசியல் படுகொலைகளால் நாம் ஒரு இனமாக 5% நன்மை அடைந்தால். 95 சதவீதம் அடைந்தது தீமை.

அதிலும் ரஜீவ், அமிர்தலிங்கம், கதிர்காமர், நீலன் இந்த கொலைகள் எமது இனத்துக்கு தந்த பிரதி கூல பின் விழைவுகள், மிக மோசமானவை. எனவே அதை பற்றிய திரியில் அதை சிலாகிக்கிறோம்.

கேள்விகளுக்கு பதில் சொன்னால் உண்மையை ஒத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் கூட சிலர் மெளனமாக இருக்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஈழ தமிழினத்தின் நியாயமான போராட்டத்திற்கு யார்? எந்த நாடு வெளிப்படையாக உதவியது என்பதை கூற முடியுமா? உதாரணத்திற்கு இந்தியா எமது விடுதலைப்போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு/அங்கீகாரம் வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் பரிந்துரையின் படியேதான் இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை தடை செய்தார்கள்? விடுதலைப்புலிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செய்த பாவங்கள் என்ன? இந்த கூட்டு அரசியல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

நிற்க....

கோமாளி செலென்ஸ்கி வளைந்து நெளிந்து தம் அரசியல் நலனை முன்னெடுப்பதாக கூறுகின்றீர்கள். இப்படி...எப்படியெல்லாம் உங்களால் சிந்திக்க முடிகின்றது?

ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து இராச்சியங்களும் செலென்ஸ்கியின் பின்னால் நின்று உரம் கொடுப்பது உலகறிந்த விடயமல்லவா? அப்படியிருக்கும் போது ஈழப்பிரச்சனையும் உக்ரேன் பிரச்சனையும் ஒரே தராசில் வைப்பது ஒத்தே வராது.

ஒரே தராசில் வைக்கவில்லை.

ஆனால் முன்பே இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்….

வெள்ளை மாளிகைக்கு செலன்ஸ்கி போகும் முன்பே எழுதினேன்…

அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என.

சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும்.

ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.

இதை செலன்ஸ்கி உணர்ந்து, மிக மோசமான தனிப்பட்ட அவமானத்யும் தாங்கி கொண்டு, நயமாக செயல்படுகிறார் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சந்திரிகா எப்படி பட்ட ஏமாற்றுகாரி, சிங்களவர் எப்படி எம்மை ஏமாற்றினர், என கட்டுரைகள் இணைத்த, கருத்து எழுதிய நுணா, புலவர் கவனத்துக்கு.

இதை நான் மறுக்கவில்லை. ஒரு பள்ளி மாணவனாக சூப்பர் திட்டம் ஒன்றை நீலனும் பீரிசும் முன் வைத்து விட்டார்கள் என குதித்த பல பெருசுகளுக்கு - இதை மிக விரைவில் பெளத்த பீடம் அடித்து நூக்கும் என கூறினேன். அப்படியே நடந்தது.

ஆனால் இதை எப்படி சிங்களம் எந்த ஒரு நியாயமான தீர்வையும் எமக்கு தாரது என்பதை காட்டும் உதாரணமாக அல்லவா புலிகள் பாவித்திருக்க வேண்டும்.

ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்க பங்களித்தார் என்பது மட்டுமே அவரை கொல்லும் அளவுக்கு மோசமான செயலா?

குறிப்பாக அதே தீர்வை நாம் மூன்று வருடங்களின் பின் ஏற்புடையது என சொல்லிய போது.

நீலன் 1995 இல் இருந்த நிலைப்பாட்டுக்கு நாம் 2003 இல் வந்தோம் எனில், அந்த நிலைப்பாட்டுக்காக, 1999 இல் நீலனை நாம் கொலை செய்தது பிழை என்பதை, 2003 இலாவது ஒத்துகொள்ள வேண்டாமா?

அட்லீஸ்ட் 2025 இலாவது?

பிகு

நீலனின் அப்பா டட்லியோடு போனார், அம்மா இட்லி போட்டார் என்பதெல்லாம் “சேப்பில்லை, சேப்பிலை” - தீர்வு திட்ட தயாரிப்பில் ஈடுபட்டார் என்பதை தவிர நீலன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றசாட்டுகள் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.

இதை செலன்ஸ்கி உணர்ந்து, மிக மோசமான தனிப்பட்ட அவமானத்யும் தாங்கி கொண்டு, நயமாக செயல்படுகிறார் என நான் நினைக்கிறேன்.

சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம்.

ஐரோப்பிய ஒன்றியம் டொனால்ட் ரம்பை எதிர்க்கின்றது. அமெரிக்காவை அல்ல. இதன் படி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ரம்பிற்காக கைவிட தாயாரில்லை. எவ்விலை கொடுத்தாவது உக்ரேனை தன் வசம் வைத்திருக்கு ஐரோப்பிய ஒன்றியம் போராடும்.அதற்கு பிரிட்டிஸ் ராச்சியமும் மிண்டு கொடுக்கும். இதை ரம்ப் அவர்கள் நன்றே தெரிந்து வைத்திருப்பார்.

எனவே உக்ரேனுக்கு பின் பலம் உக்ரமாக இருக்கின்றது. ஈழத்தவர்க்கு பின் பலம் புலம்பெயர்ந்ததவர்களை தவிர ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது.

அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை.

குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள்.

குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள்.

ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள்.

புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.

என்ன அண்ணை மேடை ஏறி பேசும் அரசியல்வாதி போல்..

யுத்தம் முடிந்த பின் என்ன செய்தீர்கள்…

குறை சொல்லும் வாய்கள் நிறை சொல்லுமா..

என இறங்கி விட்டீர்கள்?

இங்கே ஒரு கட்டுரை நீலன் செய்த “பாதகங்கள்” குறித்து வெளியாகி உள்ளது…

அதை பற்றி அலசி கொண்டிருக்கிறோம்.

புலிகள் போனதுடன் எல்லாமும் போச்சு. இது நம் ல்லோருக்கும் தெரிந்ததுதானே.

நீங்களே கூட இந்தியா புலிகள் விடயத்தில் செய்தது அவர்கள் பார்வையில் சரிதான் என எழுதவில்லையா?

ஆகவே - புலிகள் செய்த அரசியல் படுகொலைகள், குறிப்பாக இந்தியா, அமேரிக்காவை நேரடியாக சவாலுக்கு உட்படுத்திய கொலைகளை செய்தது சரிதான் என 2025 இல் கூட எழுதும் போது - அதை கேள்விக்கு உள்ளாக்குவது தப்பில்லையே.

உதாரணமாக புளொட் மோகனை, ரசாக்கை, இப்படி பலரை போட்டதையா கேள்வி கேட்கிறோம்? இவர்கள் இராணுவ இலக்குகள். பதமநாபா கூட்டாளிகள் கூட இதே லிஸ்டில் சேரலாம்.

யாழ் மேயர் சரோஜினியை, செஞசோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை போட்டது கூட, ஈழதமிழரை தாண்டி வெளியே தாக்கம் ஏற்படுத்தாதவை.

ஆனால் அமிர், ரஜீவ், நீலன், கதிர்காமர் கொலைகள் அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம்.

ஐரோப்பிய ஒன்றியம் டொனால்ட் ரம்பை எதிர்க்கின்றது. அமெரிக்காவை அல்ல. இதன் படி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ரம்பிற்காக கைவிட தாயாரில்லை. எவ்விலை கொடுத்தாவது உக்ரேனை தன் வசம் வைத்திருக்கு ஐரோப்பிய ஒன்றியம் போராடும்.அதற்கு பிரிட்டிஸ் ராச்சியமும் மிண்டு கொடுக்கும். இதை ரம்ப் அவர்கள் நன்றே தெரிந்து வைத்திருப்பார்.

எனவே உக்ரேனுக்கு பின் பலம் உக்ரமாக இருக்கின்றது. ஈழத்தவர்க்கு பின் பலம் புலம்பெயர்ந்ததவர்களை தவிர ஏதுமில்லை.

இதில் மறுக்க ஏதும் இல்லை.

ஆகவேதான் நான் ஒரே தராசில் நிறுக்கவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன்.

நான் சொன்னது இதைத்தான் 👇


அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என.

சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும்.

ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இங்கே நான் எழுதிய முதலாவது அரசியல் கட்டுரைக்கு இத்தனை உறவுகள் வந்து கருத்திடுவார்கள் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. எனது கட்டுரையையும் மதித்து கருத்தெழுதிய அத்தனை உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முதலில்... இது கட்டுரை அல்ல... நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிருபன் ஐயன் (நீலனை ஏன் கொன்றார்கள் புலிகள்) மற்றும் ஜஸ்ரின் ஐயன் (சந்திரிக்கா மாமி கொண்டுவந்த பொதி எப்படிப்பட்டது) ஆகியோருக்கு எழுதிய இரு கருத்துக்களை தொகுத்து, ஒன்றாக்கி, சும்மா கட்டுரையாக்குவமே என்று ஆக்கினேன்... 😀😀

அமோக வரேற்பு கிடைத்துள்ளது... அதுவும் இரு பக்கத்திற்கு... 🤣

எனக்கு பொங்கல் வைத்தது கூட கணக்கில்லை.. இத்தனை பேர் கருத்தெழுதியதே கணக்கு... 🤣


  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஒரு முக்கியமான கேள்வி?

யாரும் பதில் சொல்ல விழையலாம்.

ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள்.

டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள்.

இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள்.

இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது.

இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர்.

இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன.

நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம்.

அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை.

நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?

நீலன் யார்?? சந்திரிக்காவின். நண்பன் இவர் தமிழர்கள் சர்பாக. புலிகள் சர்பாக. பேச்சுவார்த்தை நடத்த முடியாது ....இவரின் கருத்தும் சந்திரிக்காவின். கருத்தும் ஒன்று தான் ஒரே கருத்துகள் கொண்டோருக்கு பேச்சுவார்த்தை தேவையில்லை

இவர் சந்திரிக்கா சர்பாக. புலிகளிடம் கதைத்திருக்க முடியும் . தான் தமிழன் என்பதை வைத்து தமிழரின் உரிமைக்காக போராட்டங்களை நடத்திய அமைப்பை அவமானப்படுத்தி விட்டார் மேலும் தீர்வு வரைய முதல். சத்திரிக்காவை கேட்டிருக்கணும் உன்னுடைய. அப்பனின். தீர்வை நடைமுறையில் கொண்டு வரலாம்” என்று கேட்டாரா இல்லை ......அவர் கேட்க மாட்டார். ஏனென்றால் இலங்கையில் ஒரு சமாதனத்திட்டத்தை வரைந்து அமுல் செய்வது அவர்கள் நோக்கம் இல்லை ......அவர்களின் நோக்கம்

1,..புலிகள் மேலும் பலம் பெறக்கூடாது

2,.. தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். என்று உலக நாடுகளை நம்ப வைத்தல்

புலிகள் ரணில் உடன் விரும்பி ஒப்பந்தம் செய்யவில்லை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தான் செய்தார்கள் ......புலிகளிற்கு ரணில் பற்றி தெரியும் ஆகையினால் தான் அவரை ஐனதிபதியாக. ஒத்துழைக்கவில்லை தேர்தலை பஸ்கரித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஆனால் அமிர், ரஜீவ், நீலன், கதிர்காமர் கொலைகள் அப்படியா?

இவர்கள் உயிர் உடன் இருந்து இருந்தால் புலிகளை அழித்து இருக்க மாட்டார்களா ??? புலிகளின். நோக்கம் மனிதர்களை கொல்வது இல்லை ஆனால் புலிகளை அழிக்க நினைப்பவர்கள் கொல்லப்படுவது உண்டு காட்டி கொடுத்த எத்தனையோ பேரை சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். நான் சிலதுகளை நேரில் பார்த்து உள்ளேன் கம்பங்களில். உடல் கட்டி இருக்கும் கீழே ஒரு. துண்டில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதி இருப்பார்கள் மேல் சொல்லப்படுபவர்கள் தான் கொன்றது பிழையா??? இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு இயக்கத்துக்கு விரோதமாகச் செய்ல்பட்டவர்கள் வயது பதவி பணம் போன்ற எந்தவொரு வித்தியாசம் இன்றி கொல்லப்பட்டுள்ளார்கள் இது தெரிந்தும்  விடுதலை போருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும் ????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நீலன் யார்?? சந்திரிக்காவின். நண்பன் இவர் தமிழர்கள் சர்பாக. புலிகள் சர்பாக. பேச்சுவார்த்தை நடத்த முடியாது ....இவரின் கருத்தும் சந்திரிக்காவின். கருத்தும் ஒன்று தான் ஒரே கருத்துகள் கொண்டோருக்கு பேச்சுவார்த்தை தேவையில்லை

சந்திரிக்காவின் அல்லது ஏனைய சிங்கள தலைவர்களின் நண்பர் என்பதால் மட்டும் ஒருவர் தமிழர்களுக்கான அரசியலை செய்யும் வாய்ப்பை இழப்பதாக இருக்க முடியாது.

அப்படிபார்த்தால் புலிகள் சம்பந்தர், குமார் பொன்னம்பலத்தையும் கூட அரசியல் செய்ய விட்டிருக்க கூடாது.

நீலன் எப்போது தமிழர் தரப்பு பிரதிநிதியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்?

மங்கள முனசிங்க தெரிவுக்குழு என அதற்கு முன்னர் யூ என் பி காலத்தில் இழுபட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், ஆட்சி மாற்றத்தின் பின் உருவான அடுத்த கட்ட நிலையே இந்த நீலன் சம்பந்தபட்ட தீர்வு திட்ட நகல் தயாரிப்பு.

இந்த தீர்வு திட்ட நகல் அடிப்படையில் இலங்கை பேசுவது என்றால் கூட - புலிகளுடந்தான் பேசி இருக்க வேண்டும். ஏன் என்றால் பிரச்சனையின் இரெண்டில் ஒரு தரப்பு புலிகள்தான். நீலன் அல்ல.

3 hours ago, Kandiah57 said:

தான் தமிழன் என்பதை வைத்து தமிழரின் உரிமைக்காக போராட்டங்களை நடத்திய அமைப்பை அவமானப்படுத்தி விட்டார்

இப்படி நீலன் செய்ததற்கான ஆதாரம் தருவீர்களா?

அல்லது ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க பங்களிப்பதே புலிகள் அமைப்பை அவமானப்படுத்துவதற்கு சமன் என்கிறீர்களா?

3 hours ago, Kandiah57 said:

சத்திரிக்காவை கேட்டிருக்கணும் உன்னுடைய. அப்பனின். தீர்வை நடைமுறையில் கொண்டு வரலாம்” என்று கேட்டாரா இல்லை ......அவர் கேட்க மாட்டார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் தமிழர்களுக்கு தருவதாக சொன்ன உரிமைகளை விட, பல மடங்கு காத்திரமான உரிமைகளை நீலன் தயாரித்த திட்டம் இலங்கையின் மாகாண அலகுகளுக்கு வழங்க உத்தேசித்தது.

அந்த நிலையில் பண்டா-செல்வாவை மட்டும் தந்தால் போதும் என முடித்திருந்தால் அதுதான் இனத்துரோகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அவர்களின் நோக்கம்

1,..புலிகள் மேலும் பலம் பெறக்கூடாது

2,.. தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். என்று உலக நாடுகளை நம்ப வைத்தல்

இதுவே நோக்கம் எனில் - அதை அவர்களை போட்டு தள்ளி நாம் வென்று விடலாம் என நினைப்பது அறிவார்ந்த செயலா?

நீலன் இப்படிதான் கபட எண்ணத்தில் செயல்படுகிறார் என சந்தேகித்தால் அவரை அவர் பாணியில் அல்லவா டீல் செய்திருக்க வேண்டும்.

அவரை போட்டு தள்ளியதால்

  1. புலிகள் மேலும் பலம் பெற்றார்களா? அல்லது பலம் பெறுவதுக்கான தடைகள் விலகியதா? இல்லை - மேலும் பலவீனப்பட்டே போனார்கள்.

  2. இதை நாமும் பயன்படுத்தி - இலங்கை அரசு அமைத்த குழுவே பிரேரித்த முதலாவது நகலை ஏற்க நாம் தயார் ஆனால் அதை கூட பேரினவாதிகள் தரவில்லை என நீலனை கொல்லாமல் பிரச்சாரம் செய்திருக்க முடியாதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.